அந்த காலத்தில்

 

” தண்ணீர்… யூ மீன் வாட்டர்… தினமும் அரை டம்பலர் குடிப்போமே.. அதுவா ஸ்ரீ…”

ஜூன் 5, 2077

பொருட் கண்காட்சி

தலையில் முடியில்லாமல், மாத்திரை மட்டும் உணவாய் உண்ணும் தலைமுறை. குறைந்தது ஒரு மனிதன் நாற்பது வயது வரை வாழ்ந்தால் அதிசயம். தண்ணீர் என்றால் மிக அதிசயமான ஒன்று. நெல், அரிசி, பயிர் பொன்றவரை யெல்லாம் பொருட்காட்சியில் மட்டும் காணப்பட்டது. கூந்தல் இல்லாத பெண்கள்.அந்த காலத்தில் பெண்களுக்கு இவ்வளவு நிலமான கூந்தல் இருக்குமா? என்று பொருட்காட்சியில் வந்த மனிதர்கள் எல்லாம் வியந்தார்கள்.

கோமதி, ராமன் தம்பதியர்கள் 2007ல் மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் பொருட்காட்சியில் பார்க்கிறார்கள். தமிழே மறந்து விட்ட காலத்தில் தமிழ் பெயரில் தம்பதியர்கள். அவர்களின் குழந்தை சதீஷ் எல்லாம் வியப்பாக பார்த்தான். சதீஷ் தந்தையிடம்

“அப்பா நம்ம யார் தலையில் முடியே இல்லையே… இவ்வளவு நிலமா முடி வச்சிருக்காங்க … இவங்களெல்லாம் யாருப்பா?”

ராமன் : “அவங்கயெல்லாம் அந்த காலத்தில் இருந்தவங்க… சுமார் எழுபது வருஷத்துக்கு முன்னால அப்படி இருந்தாங்க…”

“அம்மா..அம்மா… இங்க பாருங்க…. ஒருதர் படத்தில பார்த்த முப்பது வயசு மாதிரி இருக்கு…ஆனா படத்தில ஐம்பது வயது… போட்டுருக்கு….”

“அந்த காலத்தில நல்ல சாப்பாடு கிடைச்சுது… இப்பொல்லாம் அந்த மாதிரி சாப்பாடு இல்ல…அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்..”

” ஏன் அந்த சாப்பாடு கிடைச்சா நாம்மளும் இந்த படத்தில இருக்குறவங்க மாதிரி இருக்கலாம்ல ?”

“அந்த மாதிரி சாப்பாடு எல்லாம் கிடைக்காது…”

“ஏன் கிடையாது?…”

“அரிசி, நெல், பயிரு இப்படி விளையற இடமெல்லாம் இப்போ வீடுகட்டிடாங்க… நெல்லு விளையனுனா தண்ணீர் வேணும்… அந்த வசதி எல்லாம் இப்போ கிடையாது…”

” தண்ணீர்… யூ மீன் வாட்டர்… தினமும் அரை டம்பலர் குடிப்போமே.. அதுவா ஸ்ரீ…”

“ம்ம்.. அ ந்த காலத்துல தண்ணீருல தான் கார் கழுவுவோம், கழிப்போம்… என் தாத்தா ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பாரு…”

“மை கார்ட்… டு லிட்டர் ஆப் வாட்டர்… இப்போ ஏன் அந்த மாதிரி தண்ணீர் கிடைக்க மாட்டீங்குது…”

” தண்ணீர் வேணும்னா… மழை வரணும்….”

” மழைனா என்ன டாடி…?”

” மழைனா ..வானத்தில் இருந்து தண்ணீர் வரும். நாம் சேர்த்து வச்சு யூஸ் பண்ணுவாங்க..”

” சரி..ஏன் மழை வரமாட்டீங்குது..?”

மாத்திரை சாப்பிடும் தேகம் எப்பொழுது பழது அடையும் என்பது யாருக்கு தெரியும். ராமனால் அதிகம் பேசமுடியவில்லை. கோமதி தன் கணவன் பேச முடியாமல் போனதில் திடுக்கிட்டாள். ஆனால் ராமன் சிரித்துக கொண்டே “ஒன்னுமில்லை” என்றான்

ராமன் கோமதியை சதீஷ் கேள்விக்கு பதில் அளிக்க சொல்லி அமர்ந்தான். கோமதி பதில் அளiத்தால்…

“மழை வரனும்னா… நிறைய மரம் இருக்கனும். இப்போ அந்த மரம் எல்லாம் வெட்டி வீடு, கம்பெனி கட்டியாச்சு. அதனால ஐம்பது வருஷமா மழையே வரல்ல…”

“ஏன் மம்மி.. மரம் வெட்டாமா … நெல், பயிர் விளையர இடத்தில வீடு கட்டாம்மா இருந்திருந்தா…. நாம்மளும் இந்த போட்டோல இருக்குறவங்க மாதிரி இருப்போம் தானே”

“ஆமா.. அந்த காலத்தில இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியல. எல்லாருக்கும் பணம் முக்கியமா போச்சு.”

கோமதி, சதீஷ் பேசிக் கொண்டு இருக்கும் போது ராமனுக்கு மாரடைப்பு வருகிறது. அங்கு இருக்கும் மருத்துவர் சிக்கிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்து விடுகிறான்.

கோமதி, சதீஷ் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.

டாக்டர் : “இந்த காலத்தில முப்பத்தியைந்து வயசு வரை வாழ்றது… ரொம்ப பெரிய விஷயம்… சாவுர வயசு தானே… நடக்க வேண்டியத பாருங்க…”

எழுவது வயது வரை வாழ்ந்த காலங்கள் சென்று நாற்பது வயது வரை வாழ்ந்தால் வியப்பாக இருக்கும் காலம் 2077.

[இந்த 2077ல் நடக்கும் கற்பனை கதையை நாம் நினைத்தால் நிஜமாக மாற்றாமல் கற்பனையாகவே வைத்துக் கொள்ள முடியும்.]

- குகன் [tmguhan@yahoo.co.in] (ஜூன் 2007) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர். மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 ”நீங்க ...
மேலும் கதையை படிக்க...
உலை
திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என் பிறந்த நாள். எழுந்தவுடன் பரிசுகள் கிடைக்குமா... இல்லை, இரவு அப்பா வரும் வரை காத்திருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. இதுவே ...
மேலும் கதையை படிக்க...
காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின் தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது. "தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க ...
மேலும் கதையை படிக்க...
சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நிர்மலமான நீல நிறமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து ...
மேலும் கதையை படிக்க...
திற
குழந்தை
உலை
கனவு கலைந்தது
யானைகள் புல் மேய்வதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)