அடக்கம் – ஒரு பக்க கதை

 

“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’

நிருபர்கள் கேட்டார்கள்.

புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம். “சந்தேகமென்ன? போற்றுதலுக்கு உரியவள் என் மனைவி ராகா! எனக்கு குடும்பக் கவலையே இல்லாதவாறு தொழிலில் அவ்வப்போது ஆலோசனைகள் கூறியும், நான் இடிந்து போகும் சமயங்களிலெல்லாம் தெம்பூட்டியும்… நடுத்தர நிலையிலிருந்த என்னை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு ஆளாக்கியதும் ராகாதான்! அவள்முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. சுடுசொல் கூறிக் கேட்டதில்லை. அவளை மனைவியாக நான் அடைந்ததற்கு நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’

“கட்!’ என்றார் இயக்குநர்.

கேமரா சுழற்றி நின்றது. ராகாவாக நடித்த சுவர்னா தனது நாற்காலியில் வந்து அமர்ந்தாள். பதிபக்தியுள்ள மனைவி வேடங்களென்றாலே, கண்ணை மூடிக்கொண்டு சுவர்ணாவையே திரைப்பட உலகம் நடிக்க வைத்தது.

அதே சமயம் வக்கீலிடம் சுவர்ணாவின் காதல் கணவன் சோகமாகப் புலம்பிக் கொண்டிருந்தான். “ஆமா சார்! இனிமேலும் என்னால தாக்குப்பிடிக்கவே முடியாது. சுவர்ணா என்னை அலட்சியப்படுத்துறது அளவுக்கு மீறிப் போய்ருச்சு. இனிமேலும் ரோஷம் மானம் கெட்டுப் போயி அவகூட நான் இருக்க விரும்பல. என்னைத் திட்டுறதோடு மட்டுமில்லாம, கை ஓங்கியும் விடுறா…விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சார், ப்ளீஸ்!.’

- அன்பிற்கினியவன் (மே 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
அதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசை மேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளி மங்கன் போல சப்பளிந்துபோய் இருந்தது. ஆணா? பெண்ணா? என்றுகூட சரியாகத் தெரியவில்லை. கம்புயூட்டர்களில் ஆண், பெண் பேதம் இருப்பது எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
'என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?' என்கிற வாசகத்தோடு தனது 26-வது தற்கொலைக் கடிதத்தை எழுதி முடித்தான் தட்சணாமூர்த்தி. இந்தச் சமூகத்தின் மீது கருணை காட்டி இத்தனை காலம் வாழ்ந்தது போதும் ...
மேலும் கதையை படிக்க...
ஆகாசத்தின் உத்தரவு
சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த ...
மேலும் கதையை படிக்க...
விஷயம் தெரியுமா உங்களுக்கு? என்படி வந்தாள் செல்லம்மாள். செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை, எந்த நித்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கி விஷயம்தான் இது. காலையில் ரேடியோ கேட்பதுபோல செல்லம்மாவின் செய்தியை ...
மேலும் கதையை படிக்க...
சென்ற ஆண்டு வந்த வத்தலகுண்டு மாமா 'குடிலில் ஒளிரும் விடிவெள்ளி' பற்றி நிறைய செய்திகள் சொன்னாரு இல்ல! நம்ப ஏசு பொறந்தப்ப ஏதோ நட்சத்திரம் வந்துச்சு...அது வால் நட்சத்திரம் அப்டின்னு...ஏதேதோ கேள்விப் பட்டத பத்தி கேட்டப்ப 'தம்பி... ...அடுத்த ஆண்டு வரும் ...
மேலும் கதையை படிக்க...
கம்ப்யூட்டர்
தட்சணின் 26-வது மரணம்!
ஆகாசத்தின் உத்தரவு
கசப்புப் பதனீர்
வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)