அடகு – ஒரு பக்க கதை

 

கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக்
கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர்.

நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும்,
கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.

இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு?
பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம்
என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல் அடிப்போரும் உண்டு.

மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம், ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம்
கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?
என்றாள் பாக்கியம்மாள் கோபமாக.

பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும். நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு வழிதான்.

மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே? என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம் வாயடைத்து அமர்ந்தாள்.

- கே.முருகேசன் (ஏப்ரல் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற உறுத்தலும் இல்லாம இல்லை… அம்மா..! சொல்றதைக் கேட்டு நல்லா படிச்சிருந்தா.. இன்னிக்கு இப்படி அல்லாட வேண்டியிருக்குமா..? அம்மாவோட கண்ணீர் புரிய வைக்காததை ...
மேலும் கதையை படிக்க...
‘’என்னடி…எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?’’ ‘’எதைடி சொல்லச் சொல்றே?’’ ‘’எனக்குக் கிடைக்காத அனுபவம் உனக்குக் கிடைச்சிருக்குல்லே? எப்படி இருந்துச்சுன்னூ சொல்லு. நான் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்.’’ ‘’ஒரு மணி நேரம்…ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இதுதான் எனக்கு முதல் தடவைங்கறதுனாலே ஒரு இனம் புரியாத சந்தோசம் இருந்துச்சு.’’ ‘’ஒரு மணி நேரமா? ...
மேலும் கதையை படிக்க...
ஏண்டி!, மீனாட்சி, நீ வேலை செய்யற ஆபிசர் காலனி வூட்டிலே கல்யாணமாமே, சொல்லவே இல்லே. ஆமா யக்கா,அது சொல்ற மாதிரி ஒன்றும் இல்ல ,என பீடிகை போட்டாள். நல்ல வூடு, நல்ல அம்மா, நல்லப் பொண்னு எல்லாமே என்கிட்டே பாசமாத்தான் இருக்கும். ஐயாதான் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
நியூயார்க். விண்ணை முட்டும் கட்டிடங்கள், பனி படர்ந்த சாலைகள், விரைந்தோடும் கார்கள். பார்த்துப் பார்த்து ஒரு சேலையை வாங்கிக் கொண்டிருந்தான் ரகு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த சேலையை எடுத்துக் கொண்டான். “ம்ம்.. அம்மாவுக்கு இது நல்லா இருக்கும் இல்லையா ஜெனி?“ – மனைவியைக் ...
மேலும் கதையை படிக்க...
ஜீப் வேகமாக மேடுகளில் ஏறிக் கொண்டிருந்தது. காளியண்ணன் கண்களை மூடி, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகதான் இருந்தது. இவன் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கலாம் என்று மனம் பொருமியது.காளியண்ணனுடன் ஆசானைப் பார்க்கப் போகிறேன் என்று ...
மேலும் கதையை படிக்க...
கடவுள் சொன்ன ரகசியம்…
சுகமான அனுபவம்… – ஒரு பக்க கதை
தகவல் எந்திரம்
அம்மா…
வட்டங்களுக்கு வெளியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)