அக்கா – ஒரு பக்க கதை
”உங்க அக்கா ஒரு கிரவுண்ட் வாங்கியிருக்கா…! உங்க தங்கை ஒரு லட்சம் அரியர்ஸ் வாங்கினா. ரெண்டும் கஞ்சப் பிசாசு…”
என் மனுஷாளை குறை சொல்லாம இருக்க மாட்டியா?
ரவி வெடித்தான்.
“ஹூம்..! என் அம்மா வீட்டுக்குப் போறேன்…” போய் விட்டாள்.
ரமாவின் தாய் வீடு.
”சொந்தக்காரா பக்கத்துல வீடு பார்க்காதீங்கன்னேன். இப்ப, டாண்ணு உங்க அக்கா வந்துடறா, டேரா போடறா, ச்சேய்…”
ரமாவின் தம்பி மனைவி அங்கலாய்த்தாள்.
ரமாவுக்கும் கேட்டது, வெளியேறினாள்.
ரவியின் செல் ஒலித்தது.
”வினய் பேசறேன்….மாமா…அக்காவை என் ஒய்ஃப் குறையா பேசச் சொன்னேன். ஐடியா ச்க்ஸஸ். இனிமே, ரமா கோச்சிக்க மாட்டா…”
ரவி சிரித்தான்
- ச.பிரசன்னா (30-3-11)
தொடர்புடைய சிறுகதைகள்
“படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள்.
ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள்.
டாக்டரான வித்யாவிடமே, ரமா போய் நின்றாள். கன்சல்ட் செய்ய அல்ல..? அபார்ஷனுக்காக..!
ஒரு குழந்தைக்காக தவமா தவமிருக்காங்கடி..? முதல் பிள்ளையையே கலைக்கறேங்கற…?
”வேற டாக்டரையாவது ரெகமண்ட் செய் ...
மேலும் கதையை படிக்க...”என் மாமியாரைக் கேட்டுச் சொல்றேனே…”
ராதா,பக்கத்து வீட்டுக்காரியிடம் சொன்னாள்.
அட…! ஷாப்பிங்க் போகவுமா கேக்கணும்..?
இல்லடி..என் மாமியார் சொல்றது கரெக்டா இருக்கும்னுதான்…
கேட்ட ராஜனுக்கு மயக்கமே வந்தது.
‘ப்ச்…என் இஷ்டத்துக்கு வத்தக்குழம்புகூட வைக்க முடியலே, ச்சே…’ இதே ரமா காலையில் அதே மாமியாரிடம் சொன்னாள்.
ராஜன் வெடித்தான்.
எப்பவும் உங்களுக்குள்ள சண்டைதான். ...
மேலும் கதையை படிக்க...கிரிக்கு மகா ஆத்திரமானது. மனைவி காயத்ரி நகர்ந்ததும் தாங்காமல் கேட்டு விட்டான்.
நடந்தது இதுதான். காயத்ரி மாமனார் சம்பத் தஞ்சாவூரிலிருந்து வந்திருந்தார். சொன்னார், ‘தமிழ் பேப்பர் வேணாம். இங்கிலீஷ் பேப்பர் வாங்கலாம்மா…’’
நீங்க படிச்சா போறுமா…? எல்லாரும் படிக்கணும்ல …’’
காப்பி வேணாம், டீ போடும்மா…’’
காபி ...
மேலும் கதையை படிக்க...அவ்ளோதானே…! நோ ப்ராப்ளம்ப்பா…பாமா சிரித்தாள்
இப்பவே உனக்கு பொறுப்பு வந்திடுச்சிடி…அம்மா – அப்பா மகிழ்ந்தனர்.
பாமா, பிடிவாதக்காரி, பிரபல ‘ரிவர்சிபள்’ காட்டன் புடவைகளை கல்யாணத்திற்கு எடுத்திருந்தாள்.
டிசைன்ஸ் சூப்பர்…நான் எடுத்துக்கவா? என வருங்கால நாத்தனார் கேட்டாள். பாமா அப்பா தந்து விட்டார்.
அக்கா கேட்டாள், ‘என்னடி, ஹேர் ...
மேலும் கதையை படிக்க...அக்கா நித்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள். அம்மா, தங்கை வித்யாவிடம் கிசுகிசுத்தாள்.
“உள்ளே போ…’தங்கை பேரழகு; அக்கா சுமார் என்பதால்…!
பெண் வீடே அதிர்ந்தது. காரணம் – நித்யாவை அழைத்து வந்ததே வித்யாதான்….! வந்தவர்களுக்கு சம்மதம்; அக்கா நித்யாவுக்கும்…!
“போய்ச் சொல்கிறோம்…’ என ...
மேலும் கதையை படிக்க...