அக்கறை – ஒரு பக்க கதை

 

ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் நுழைந்தான் ராகவன்.

சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் கட்…!

மைத்துனன் மாதவன்தான் டிஸ்பிளேயில், ‘மிஸ்டு கால் மாதவன்’ என்று பெயர் வைத்தால் பொருந்துமோ!

இப்படிப்பட்ட துண்டிப்பு ஒரு முறை, இருமுறையல்ல…எப்போதுமே ..கோபம் கோபமய் வந்தது ராகவனுக்கு.

”என்ன மைதிலி, உன் தம்பி …என்னை மாதிரி சேல்ஸ் ரெப்பா அவன்? ஐ டி கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்குறான். இருந்தும் ஏன் இந்த மிஸ்டு கால் புத்தி?” – மனைவியிடம் இப்படிக்கேட்டுவிடும் தீர்மானத்தோடு வீட்டுக்குப் போனான்.

வாசலில் மைத்துனன் மாதவனின் காலணிகள்.

அப்போ இங்கிருந்துதான் கூப்பிட்டானா?

ஏண்டா அவருக்கு போன் போட்டா பேச வேண்டியது தானே எதுக்கு மிஸ்டு கால் ? தப்பா எடுத்துக்கபோறார்…” – மனைவியின் குரல் வாசல் வரை.

”புரியாம பேசறியேக்கா…அவர் எந்நேரமும் வண்டியில சுத்தறவர். ரோட்ல வண்டியெல்லாம் எமனாட்டம் வருது. நான் விடாப்பிடியா ரிங் கொடுக்க…ஏதோ அவசரமான விஷயம்னு நினைச்சு அவர் பதற்றமா எடுத்துப் பேசினா ஆபத்துதனே? என்றவன் தோளைப் பாசமாய் பற்றி அணைத்து வரவேற்றான் ராகவன்.

- கே.எம்.சம்சுதீன் (ஜூன் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அடைக்கோழி
சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள். தெரிந்துவிட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக் கொண்டையாக முடிந்தபடியே எழுந்தவள் வீதிக்கு வந்தாள். ""சீனு ராசா ஓடியாப்பா'' உரத்த குரலில் அழைத்தாள். ""கருப்பி வந்துட்டாளா பாட்டி? டேய் வாங்கடா'' சீனு ...
மேலும் கதையை படிக்க...
சகோதரிகள் இருவர்
"எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. ...
மேலும் கதையை படிக்க...
மேடைக்கு வரலியா?
பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண மேடையில் ஏதோ சடங்குகள் நடந்த வண்ணம் இருந்தன. அமர்ந்திருப்பவர்களையும் அவர்களது தோற்ற பாவனைகளையும் நோட்டம் விட்டபடி அமர்ந்திருந்தேன். மெல்ல சுழன்று ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. நான் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து குப்பை ...
மேலும் கதையை படிக்க...
'மெடி கிளினிக்'கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில் ஏராளமானவருக்கு அவர்தான் '•பமிலி டொக்ரர், ஜி.பி (G.P)'. மோகனும் நளினியும் ஒரு மூலையிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகன் துறுதுறுவென ...
மேலும் கதையை படிக்க...
அடைக்கோழி
சகோதரிகள் இருவர்
மேடைக்கு வரலியா?
இரு கடிதங்கள் !
உள்ளும் புறமும் – குறுங்கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)