மொக்கையான சோகக் கதை

 

ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் ‘பங்க்சுவல்’ பிரியா என்று சொல்லலாம். ஐந்தரை மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு வந்துவிடுவார்.

என்னைப் போன்ற ஒரு சோப்பலாங்கியை எதிர் வீட்டில் வைத்துக் கொண்டு இப்படி நேரம் கடைப்பிடிப்பது எனக்கு பெரிய ‘இன்சல்ட்’.இதையெல்லாம் அவர்களிடம் பேச முடியுமா? சைட் அடிப்பதோடு நிறுத்திக் கொள்வேன். இந்த ‘பங்க்சுவல்’ விஷயத்தை வைத்தே திருடர்கள் தங்களின் ஆட்டத்தை காட்டிவிட்டார்கள். ஐந்தரை மணிக்கு உள்ளே புகுந்து ஆறு மணிக்கு எல்லாம் கதையை முடித்துவிட்டார்கள். அரசு ஊழியரின் வீட்டில் இரண்டு லட்சம் அபேஸ் என்று அடுத்த நாள் ‘ஈநாடு’ பத்திரிக்கையில் செய்தி ‘ஒஸ்துந்தி’.

திரும்பி வந்த அம்மிணி கையும் ஓடாமல் காலும் ஓடாமல், போலீஸ் சைரன் போல‌ அலற ஆரம்பித்துவிட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எல்லாம் ‘செம ஹாட்’ விவகாரம் கிடைத்துவிட்டது. கஷ்டப்பட்டு தங்களின் ஆர்வத்தை மறைத்து சோகமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார்கள். ‘சுத்த கூர்கெட்ட திருடன்’கள் என்று நினைத்துக் கொண்டேன். அதே பகுதியில் இருக்கும் ஏதாவது சாப்ட்வேர் ஆசாமியின் வீட்டை உடைத்திருக்கலாம். பத்தோ,பன்னிரெண்டோ வாங்கி குருவி சேர்ப்பது மாதிரி சேர்க்கும் அரசு ஊழியர் வீட்டிலா திருட வேண்டும்?

நானும் சோக‌த்தைக் காட்டிக் கொண்டு நின்ற‌ போது, ஒரு ஆள் வீட்டிற்குள் ஒளிந்திருப்ப‌தாக‌ ச‌த்த‌ம் போட்டார்க‌ள். ஆனால் உள்ளே போவ‌த‌ற்கு அத்த‌னை பேருக்கும் த‌ய‌க்க‌ம். க‌த்தி வைத்திருப்பான், க‌ட‌ப்பாரை வைத்திருப்பான் என்று சொல்லிக் கொண்டே நின்றார்க‌ள். என‌க்கு ஒரு குருட்டு தைரிய‌ம் வ‌ந்தது. ஒளிந்திருப்ப‌வ‌ன் நிச்சய‌ம் ப‌ய‌ந்திருப்பான் அப்ப‌டியே பிடித்தாலும் என்னை அடித்தால் ம‌ற்ற‌வ‌ர்கள் பிடித்துக் கொள்வார்க‌ள் என்றும் நினைத்துக் கொண்டு ந‌க‌ர்ந்தேன். என்ன ஆனாலும் சரி, க‌ழுத்தில் வ‌யிற்றில் கத்தி ப‌டாம‌ல் பார்த்துக் கொள்ள‌ வேண்டும் என்று அந்த‌ நேர‌த்தில் சாமி கும்பிட்டேன்.

கீழ் வீட்டுச் சிட்டு மான‌ஸா இதை எல்லாம் பார்த்த‌து கூட‌ என் தைரிய‌த்திற்கு கார‌ண‌மாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அறைக்குள் சென்ற‌ போது பேசாம‌ல் அட‌ங்கிவிட்டான். க‌ன்ன‌த்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். என்ன‌ நினைத்தேன் என்று தெரிய‌வில்லை, கையைத் திருகி குத்திய‌தில் அவ‌ன் கையும் முறிந்துவிட்ட‌து. ம‌ற்ற‌ விவ‌கார‌ங்க‌ளை ம‌க்க‌ள் பார்த்துக் கொண்டார்க‌ள்.
—————————————
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஒரு மிகச் சுவாரசியமான நிகழ்வின் விளைவாக எனது செல்போன் தொலைந்து விட்டது (அல்லது) பறிக்கப்பட்டது.

இரவு 10 மணிக்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணி உண்டு முடித்த களைப்போடு ‘மசாப் டேங்க்’ மேம்பாலத்தின் கீழாக நடந்து வந்தேன். பஞ்சாரா ஹில்ஸ்க்கும், மெகதிப்பட்டணத்திற்கும் இடையில் இந்தப் பகுதி இருக்கிறது. கொஞ்சம் இருட்டாக இருந்தது. பாலத்தின் கீழாக ஆட்களின் நடமாட்டமும் இல்லை. இரண்டு கதாநாயகர்கள்(தெலுங்கு சினிமாக்களில் பெரும்பாலும் கதாநாயகன் திருடுபவனாக வருவதுண்டு) இரு சக்கர வாகனத்தில் வந்து என் பின்னந்தலையில் தட்டினார்கள்.

யாரோ தெரிந்தவர்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன். நமக்கு யார் இங்கே தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று என் கொஞ்சூண்டு மூளை சுதாரிப்பதற்குள் கையில் வைத்திருந்த செல்போனை ‘லவட்டி’விட்டார்கள். அந்த இழவெடுத்த செல்போனிலிருந்து நீல நிற குட்டி விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. நானாவது பாக்கெட்டில் வைத்து தொலைந்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. ரஜினி அளவிற்கு இல்லையென்றாலும் குறைந்த பட்சம் அவரது மருமகனாரின் துணிச்சலை வெளிக்காட்டும் விதமாக எட்டி பின்னாலிருந்தவனின் சட்டையைப் பிடித்தேன், கீழே விழுந்து முட்டியைக் கிழித்துக் கொண்டதுதான் மிச்சம்.

ரோந்து போலீஸாரிடம் 4,500 ரூபாய் மதிப்புள்ள செல்போன் போய்விட்டதாகச் சொன்னேன். வண்டி எண்ணைக் குறித்தீர்களா என்றார்கள். என் கொஞ்சூண்டு மூளை பாவம் அதை பற்றி அப்பொழுது நினைக்கவில்லை போலிருக்கிறது. சாப்ட்வேரில் இருக்கிறீர்களா என்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்தார்கள். சரி அய்யா என்று சொல்லிவிட்டு, டெட்டால் ஊற்றிக் கழுவிய புண்ணோடு அந்தக் கதாநாயகர்களுக்கு கொஞ்சம் சாபம் கொடுத்துவிட்டு கடைசியாக ஹிந்திச் சேனலில் வந்த பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடியவாறு தூங்கிப் போனேன்.
———————-
ஒரு திருட‌னின் கையை உடைத்த‌வ‌னுக்கு இவ‌ர்க‌ளைப் எட்டிப் பிடிக்க‌ முடிய‌வில்லை என்கிறீர்க‌ளா? அட‌ நீங்க‌ வேற‌. நான் எல்லாம் க‌தாநாய‌க‌னாக‌வா முடியும்? இப்ப‌டி அவ்வ‌ப்போது க‌தாநாய‌க‌ன் மாதிரி நினைத்துக் கொள்வ‌து ம‌ட்டும்தான். அப்ப‌டி திருட்டு ந‌ட‌ந்த‌ வீட்டில் நான் க‌தாநாய‌க‌ன் ஆவ‌தாக‌ நினைத்துக் கொண்டு ந‌ட‌ந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் என் செல்போனை ‘ஆட்ட‌ய‌’போட்டுவிட்டார்க‌ள். நான் க‌தாநாய‌க‌ன் ஆனால் என்னைய‌வே ‘ஆட்ட‌ய‌’ போட்டுவிடுவார்க‌ள். நென‌ப்புல‌ இதுவ‌ரைக்கும் க‌தாநாய‌க‌னாக‌ இருந்துவிட்டேன். இனிமேல் நென‌ப்பு கூட‌ ஆகாது போல் இருக்கு. என்ன‌ சொல்றீங்க?

- டிசம்பர் 17, 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
மழை நசநசத்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் வரைக்கும் தொடரும். மழைக்காலத்தில் சாலையோர மரங்களில் பாசி படிந்து கிடப்பதை பார்க்க முடியும். இந்த வருடம் ஜூன் மாதத்தில் மழை இல்லை. ஜூலையின் இறுதியில் இருந்துதான் ...
மேலும் கதையை படிக்க...
இந்தக் காரணத்திற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். நான் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று நம்புங்கள். இல்லையென்றால் எனக்கு தெரியப்படுத்தவும். என்ன சொல்லி அழுவது என் கதையை? எந்தப் பெண்ணும் ...
மேலும் கதையை படிக்க...
வள்ளியம்மாளைப் பார்த்திருக்கிறீர்களா? மங்கலம் ரயில்வே பாலத்துக்குக் கீழாக நின்று காசு வாங்கிக்கொண்டிருப்பார். அந்த வழியில் பெரும்பாலும் லாரிகள்தான் செல்லும். பல்லடத்துக்குச் செல்லும் லாரிகள் அவை. லாரிக்காரர்கள் நிறுத்திக் காசு தருவார்கள் என்று சொல்ல முடியாது. ஒன்றிரண்டு ஓட்டுநர்கள் தருவார்கள். மற்றபடி சில ...
மேலும் கதையை படிக்க...
நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை. ஒரு வெளிநாட்டு வங்கியில் அவன் கடன் வாங்கியிருந்தான். இந்த‌ விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமில்லாமல் இந்தத் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
புத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ நான்தான் அவனை அழைத்துக் கொஞ்சம் நேரம் பேசுவேன்.பெரும்பாலும் ஊருக்குள் நிகழும் 'கிசுகிசு'க்களைத்தான் சுவாரசியமாகச் சொல்வான். நண்பன் என்றும் சொல்ல முடியாத, உறவினன் ...
மேலும் கதையை படிக்க...
யோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் மூன்றாம் பக்கத்தில் இருந்த செய்தியை விலாவாரியாக படிக்க வேண்டும் போன்றிருந்தது. "கணவனின் நண்பருடன் உல்லாசம். தட்டிக் கேட்ட ...
மேலும் கதையை படிக்க...
பார்த்திபன் பதினோரு வயதிலிருந்தே திருட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தான். பள்ளிக்கு அருகில் இருக்கும் ஆயா கடையில் மிட்டாய் வாங்குவதற்காக வீட்டில் நாலணா, எட்டணா திருடி தன் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்ட போது பார்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்புறமாக ...
மேலும் கதையை படிக்க...
சேலத்தில், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விடுதி வாசம். நான்காண்டுகளும், அந்தச் சதுர வடிவ விடுதிக் கட்டடதிலேயே முடிந்தது. ஊத்தாப்பமும், வெண்பொங்கலும் அதோடு பல்லி விழுந்திருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து எடுக்கும் தோசையும் எங்களிடையே மிகப் பிரசித்தம். தோசை சுடும் ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி. பெண்கள் எட்டிக் கூட பார்க்காத எங்கள் பாலைவனத்திற்கும் வேறு பள்ளி பெண்கள் குவிவார்கள் என்றால் எப்படி எங்களை எல்லாம் கையில் பிடிப்பது? எங்களுக்கு எல்லாம் அப்பொழுது அரும்பு மீசை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த பருவம். ...
மேலும் கதையை படிக்க...
தன் வீட்டில் இருக்கும் கழுதை பேசுகிறது என்று சின்னான் சொன்ன போது ஊருக்குள் யாரும் நம்பவில்லை. யார்தான் நம்புவார்கள்? ஆனால் பாருங்கள் கிளி பேசுகிறது மைனா பேசுகிறது என்று சொன்னால் நம்புபவர்கள் கழுதை பேசுகிறது என்பதை நம்பாதது ஆச்சரியம்தான். நம்பிக்கை இழக்காத ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் கான், ஆனால் நான் தீவிரவாதியல்ல
என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்
காசுப்பாட்டி
ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்
காதலென்றும் சொல்லலாம்
காமம் இல்லாத காமக் கதை
களவும் கற்று
வாய் முகூர்த்தம்
எனக்கு பிரமச்சாரி ராசி
அமைச்சர் கழுதையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)