Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மன்னிப்பு

 

திரிலோகசந்தர் பார்வதி தம்பதிகளின் ஒரே மகனாகிய ரமணி என்னும் நான், சுய நினைவோட எழுதின கடிதம்:

நான் தற்கொலை செய்ய முடிவு செஞ்சிருக்கேன். அதுக்குக் காரணம் இருக்குதுங்க. என் உயிர் நண்பன் ராஜூவின் மனைவியைக் கொலை செஞ்சது நான் தான். அந்தக் குற்றத்தோட சுமை தாள முடியாம தற்கொலை செய்துக்கறதா முடிவு செஞ்சிருக்கேன்.

என் நண்பனுக்கு நான் செஞ்ச துரோகம் மட்டுமில்லே, ஒரு அப்பாவிப் பெண்ணோட வாழ்க்கையை அவசரமா முடிச்சுட்ட வருத்தமும் குற்ற மனப்பான்மையும் என்னை தினம் வாட்டி எடுக்குது.

இதைப் படிக்கும் போலீசாருக்கும் என் சுற்றத்தாருக்கும், குறிப்பா என் அருமை நண்பன் ராஜூவுக்கும் என் முடிவுக்கான காரணங்களை விவரிக்கக் கடமைப்பட்டிருக்கேன்.

இப்ப வேணும்னுன்னா அப்படித் தோணுதே தவிர, கொலை செய்யுறதுக்கு முன்னாலே ராஜூவின் மனைவி அப்படியொண்ணும் அப்பாவியா தெரியலிங்க. ராஜூவோட திருமணத்துக்குப் பின்னால எங்க நட்பில் விரிசல் ஏற்படலையின்னாலும் நெருக்கம் குறையத் தொடங்கிடுச்சு. எங்கே அழிஞ்சு போயிடுமோ என்கிற அச்சமும் உண்டாயிடுச்சு. அந்த அச்சம் தான் என்னைக் கொலைகாரனா மாத்திச்சு. இது புரியணுமுன்னா எங்க நட்பின் ஆழத்தை நீங்க புரிஞ்சுக்கணும்.

நானும் ராஜூவும் குட்டிப் பிள்ளைங்களா இருந்தப்பவே நெருக்கம். பக்கத்து பக்கத்து வீட்டுல இருந்தோம். ஒரே வகுப்புல படிச்சோம். ஒண்ணா ஸ்கூலுக்குப் போவோம்; விளையாடுவோம். அந்த நாளை நினைச்சுப் பாத்தாலே நெஞ்செல்லாம் கனக்குது.

தெருவோரமா இருந்த மரைக்காயர் வீட்டு வேப்பமரத்தடியில் நானும் அவனும் மாவுமில் குருமூர்த்தியும் பேந்தா கோலி விளையாடுவோம். அப்துல்காதர் செட்டோட சேர்ந்து கில்லி விளையாடுவோம். குருமூர்த்தி என்னைக் கிண்டல் செய்யுறப்பல்லாம் ராஜூ எனக்கு வக்காலத்து வாங்குவான். அதே போல ராஜூவை யாராவது எதுனா சொன்னா எனக்குப் பொறுக்காது. உடனே சண்டை போடுவேன்.

ராஜூவுக்காக நிறைய அடியும் உதையும் கூட வாங்கியிருக்கேன். ஒரு முறை தெரசா பெண்கள் போர்டிங்க் பள்ளியின் குளியலறை சுவத்துல ஒரு சின்ன ஓட்டை போட்டு உள்ளாற பள்ளிக்கூடப் பெண்களும் கிறுஸ்துவ சன்னியாசினிகளும் குளிக்குறதை அரையிருட்டில பார்த்துக்கிட்டிருந்தப்ப மதர் சுப்ரீம் வந்துட்டாங்க. அவங்க வர்றதைப் பார்த்து குருமூர்த்தியும் மத்தவங்களும் ஒசைப்படாம ஓடிட்டாங்க. ராஜூ மாட்டிக்கிட்டான். அந்தச் சுவத்துல ஓட்டை போட்டு அவனை வலுக்கட்டாயப்படுத்தியது நான்தான்னு பழியை ஏத்துக்கிட்டு அந்த வருசம் பூரா கன்னிமேரி கோவில் தரையையும் பெஞ்சுகளையும் தினமும் சுத்தம் செஞ்சேன். எல்லாம் ராஜூவுக்காக.

ப்ளஸ்டூ சேர்ந்த புதுசுல முதல் முதலா சிகரெட் பிடிச்சுப் பாத்தோம். இழுக்கத் தெரியாமல் இழுத்து, விடாம இருமிக்கிட்டிருந்த என்னை உக்கார வச்சு ஆசுவாசப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தவன் ராஜூ தான். செத்துட்டன்னே நெனச்சேன்.

ப்ளஸ்டூ முடிச்சு இரண்டு பேருமே எஞ்சினியரிங் கல்லூரியில சேந்து படிச்சோம். அடையாறு ஆஸ்டல்லே ஒரே ரூம்ல தங்கினோம். ஒரு தடவை காந்தி மண்டபம் போனப்ப அங்கே ஒரு ரகசிய நிழலில் நானும் ராஜூவும் முதல் முதலாக ஒரு பெண்ணோட திறந்த மார்பகத்தைத் தொட்டுப் பார்த்தோம். எங்களை அழைச்சுக்கிட்டுப் போன ராபர்ட் அதுக்கே பத்து ரூபாய் பிடுங்கிக்கிட்டு ஓடிட்டான். தொட்டுத் தடவிக்கிட்டிருக்கோம், திடீர்னு போலீஸ் விசில் கேட்டு ஆடிப்போயிட்டோம். அந்தப் பொம்பளை ஒரே ஓட்டமா காணாமப் போயிட்டா. நானும் ராஜூவும் அங்கிருந்து ஓடி ராஜ்பவன் தாண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வரை விடாம ஓடியாந்தம்னா பாருங்க.

கல்லூரி முடிச்சு எனக்கு மவுன்ட் ரோடுல வேலை கெடச்சு நான் சேந்தேன். ராஜூவுக்கு இன்னும் வேலை கிடைக்கலை. இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் இருந்தோம். என்னோட வாடகை ரூம்ல என்னோட சம்பளத்துல தான் அவன் காலந்தள்ளினான். அவன் என் கூட இருந்ததுல எனக்குத் திருப்தி தான். அவன் கூட எதுனா பாரமா இருக்கேனானு கேப்பான், எனக்கு கெட்ட கோவம் வந்து திட்டியிருக்கேன். என்னவோ தெரியலை அவனுக்கு வேலை கிடைக்கவேயில்லை.

சும்மா வீட்டுல இருக்குறது பிடிக்காம எங்கனா சுத்துவான். திடீர்னு ஒரு நாள் கவிதை எழுத ஆரம்பிச்சான். நல்லா இருக்குனு சொன்னேன். நண்பனாச்சே, ஆதரவா எதுனா சொல்ல வேண்டாமானு சொல்லலீங்க. உண்மையிலயே அருமையா எழுதியிருந்தான். அவனோட முதல் கவிதை இன்னும் நினைவிருக்கு. தூக்கிக்கிட்டா கை வலிக்குது, கீழே விட்டா மனசு வலிக்குதுனு ஒரு அம்மா தன் குழந்தையைப் பத்தி சொல்லுற மாதிரி ஒரு கவிதை.

அப்புறம் அடிக்கடி பீச்சுக்குப் போய் உக்காந்து எழுத ஆரம்பிச்சான். அப்படி ஒரு நாள் எழுதிக்கிட்டிருந்தப்ப விமலாவைச் சந்திச்சான். விமலாவோட அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர். விமலாவோட பழகத் தொடங்கினான். அந்தப் பழக்கம் விமலாவோட அப்பாவுக்குத் தெரிஞ்சு போய் விவகாரமாயிடுச்சு. வேலையத்த பயலுக்கு காதலானு அவரு அடியாளுங்களை விட்டு மிரட்டினாரு. நான் தான் அவங்க கிட்டே சமரசமெல்லாம் செஞ்சு ஒரு வழியா வீட்டு மாப்பிள்ளையா இருக்கட்டுமுன்னு கல்யாணம் செஞ்சு வச்சேன்.

ராஜூவுக்கு அடிச்ச அதிர்ஷ்டம் பாருங்க, கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரமே விமலாவோட அப்பா செத்துட்டாரு. அத்தனை சொத்தும் விமலாவுக்கு வந்து சேந்து, ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாங்க. அப்பா போன அதிர்ச்சியிலே விமலா ரொம்ப நொந்து போயிடுச்சுன்னாலும் ராஜூ மேலே ரொம்ப காதலா இருந்துச்சு.

அதே நேரம், ராஜூவோட கவிதைங்க பிரபலமாகத் தொடங்கிடிச்சு. சினிமாவுக்கும் பத்திரிகைங்களுக்கும் எழுத ஆரம்பிச்சான். விஜய் படங்கள்ள கூட அவன் எழுதின பாட்டு வந்திருக்கு, அவன் பேமசானதுல எனக்கும் பெருமை.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் எனக்கு வேலை போயிடுச்சு. வேலை பாக்குறப்ப எனக்கு வலிப்பு வந்து ஒரே சிக்கலாயிடுச்சு. வலிப்பைக் காரணம் காட்ட முடியாம வேற எதுவோ சொல்லி என்னை வேலையிலந்து எடுத்துட்டாங்க. நாலஞ்சு மாசம் வேலை தேடி அலஞ்சேன். ஒண்ணும் கெடக்கலே. ஒரு தடவை இன்டர்வ்யூ போதே வலிப்பு வந்திடுச்சு. என் நிலைமை மோசமாயிட்டு வர்றதைப் பாத்து என் அருமை நண்பன் ராஜூ என்னை வீட்டோட இருக்கும்படி சொன்னான். விமலாவும் எங்க நட்பை மதிச்சு எப்பவும் இனிமையா நடந்துகிட்டா.

நாளாக ஆக எல்லாம் மாறத் தொடங்கிடுச்சு. ராஜூ என்னைக் கவனிக்கறதுக்கு ஒரு ஆயாவை வேலைக்கு வச்சான். சினிமால ரொம்ப பிசியாயிட்டான். ஒரு பத்திரிகை வேற வாங்கி நடத்த ஆரம்பிச்சான். விமலாவோட அடிக்கடி வெளியூர் போகத் தொடங்கினான். விமலா கூட சேந்துக்கிட்டு என்னைக் கொஞ்சம் மரியாதை குறைவா பேசத் தொடங்கினான். கேட்டப்ப என் மேல கோவப்பட்டு அனுசரிச்சுக்கிட்டு போ அப்படின்னு ரொம்ப துச்சமா சொல்லிட்டான். அன்னைக்கு என்ன தோணிச்சோ தெரியலிங்க “ராஜூ இதுக்குப் பலனை அனுபவிக்கத் தான் போறே”னு ஏதோ சொல்லிட்டேன்.

ராஜூ ஸ்டூடியோவுக்குப் போயிருந்தான். அன்னைக்கு ராத்திரி தான் விமலாவைக் கழுத்தை நெறிச்சுக் கொன்னேன். அவளோட பேசிக்கிட்டிருந்தப்ப வலிப்பு வந்ததாகவும், அவ கழுத்தைப் பிடிக்கப் போய் என்னை மறந்த வலிப்பு வேகத்துல நெறிச்சுட்டதாகவும் டாக்டருங்களும் போலீசும் கோர்ட்டும் ஒத்துக்கிட்டதால, அவளோட மரணத்தை ஒரு விபத்தா ஏத்துக்கிட்டு கேசை முடிச்சுட்டாங்க.

இதனால ராஜூவுக்கு அத்தனை சொத்தும் சேந்து பணக்காரனாயிட்டான். என்னை ஒழுங்கா கவனிப்பான்னு நெனச்சேன். ஆனா பாருங்க அவன் மனசு ஒடிஞ்சு போயி சோகமாயிட்டான். என்னையும் ஒதுக்க முடியலே. விமலாவையும் மறக்க முடியலே. அவன் பைத்தியக்காரனாயிட்டான். இதைப் பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலிங்க.

என்னோட வலிப்பைப் பயன்படுத்தி விமலாவைக் கொன்னதும், ராஜூ கிட்டேயிருந்து அதை மறைச்சு வச்சதும் தப்புனு இப்ப தோணுது. என்னையே என்னால மன்னிக்க முடியல. விமலா, ராஜூ: தயவுசெஞ்சு என்னை மன்னிப்பிங்களா?

அதான் தற்கொலை செய்துக்க முடிவு செஞ்சேன். என் மரணத்துக்கு நான் தான் காரணம்.

இப்படிக்கு
ரமணி

என்று எழுதிக் கவனமாகக் கையெழுத்திட்டான் ராஜூ. கையுறையைக் கழற்றாமல் கடிதத்தையும் கைத்துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு நிதானமாக ரமணியின் அறைக்குச் சென்றான்.

- 2010/05/05 

தொடர்புடைய சிறுகதைகள்
"அரிகாதொ". வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி சொல்லிவிட்டு, பதில் நன்றி சொல்ல அவள் குனிந்த போது மார்பு தெரிகிறதா என்று பார்த்தான். "மடா இகிமாசு". திரும்பி வருவதாகச் சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
பம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா 'நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி' என்று தனக்குத் தானே தலைமை மேஸ்திரி சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டு தினம் வெயில் வீணாகாமல் மேற்பார்வைக்குப் போய்விடுவார். நெருங்கிய நண்பன் ஸ்ரீதரின் அம்மா ...
மேலும் கதையை படிக்க...
வேகமாக நடந்த புங்கவர்மனைத் தொடர்ந்தாள். "மன்னா.. மன்னா" "என்னா?" "நான் சொல்வது காதில் விழாதது போலச் செல்கிறீர்களே? என் கணவருக்கு உறவோ என்று நினைத்துவிட்டேன்.. எனக்கு உதவி செய்வீர்களா?" "பெண்ணே.. அரக்கன் கணவன் காப்பாற்று போன்ற வசனங்களெல்லாம் கூத்துக்குப் பொருந்தும், சோத்துக்குப் பொருந்தாது. ஆளை விடம்மா" "உங்களால் ...
மேலும் கதையை படிக்க...
ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் சித்தே எசகுபிசகா இருக்கலாம், இருந்தா, பால்யரெல்லாம் வாசிக்கப்படாதுன்னு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேன்னா, ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்குக் கடந்த காலம் உண்டு; அவனுக்கும். திருமணத்துக்கு முன்னால் எத்தனை உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது என்பதிலல்ல தயக்கம், எவற்றை மறைப்பது என்பதில் தான். கதவைத் திறந்த விஜி, மகிழ்ச்சியுடன் வியந்தாள். அவனை எதிர்பார்க்கவில்லை. நேற்று இரவு பத்து மணிக்கு வீடு வரை துணை ...
மேலும் கதையை படிக்க...
என் அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளையொட்டி ஊர்ப்பக்கம் சென்றிருந்தேன். சாதாரணக் கோவிலில் கொண்டாடினால் சரியாக இருக்காது என்று, அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே ஒரு கோவில் இருப்பதாகச் சொல்லி அங்கே கொண்டாடுவதாக ஏற்பாடு. கடலூர் தாண்டி இருக்கும் அந்த ஊரின் பெயர் ...
மேலும் கதையை படிக்க...
உறக்கம் விலகி விழித்தேன். அருகே கடிகாரம் ஆயிரத்து நூற்றுப்பதினொன்று என்றது. அலாரம் வைத்த, கைக்கடக்கமான டிஜிடல் கடிகாரம். என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்! கெமிஸ்ட்ரிக்கு பதில் எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்கலாம்.. ஹ்ம்ம். தொடர்ந்து யாரோ கதவைத் தட்டுவது கேட்கக் கலைந்தேன். விலகிப் படுத்திருந்த மனைவியை எழுப்பினேன். ...
மேலும் கதையை படிக்க...
வினோத் எண்பது மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். தாமதாகி விட்டது. மேலதிகாரி எர்வின் முதல் நாள் தன்னையும் தன் ப்ளூமூன் குழுவையும் கலர் கலராய்த் திட்டியது நினைவுக்கு வந்தது. 'இன்றைக்கு நிச்சயம் பின்பகுதியைக் குத்திக் கிழிக்கப் போகிறான்' என்ற கடுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
சுகாதாரப் பிரிவில், பூமிக்குள்ளே நூறடி ஆழத்தில் வேலை பார்த்தான் ருத்ரமூர்த்தி. பெருமை சேர்க்கவில்லை என்றாலும் முக்கியமான வேலை. கழிவு திரட்டும் வேலை. 'ஆச்சு, இந்த ஒரு பீ மூட்டையைத் தூக்கி எறிஞ்சதும் இடம் சுத்தமாயிடும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பயோடிக்ரெடபில் கழிவுத்தொட்டியை ...
மேலும் கதையை படிக்க...
மனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.. அல்லது... பிராமணர்களிடம் சிக்கி விட்டார்களோ? சந்திப்பதாகச் சொல்லி வைத்திருந்த ஆலமரத்தடியில் ஒதுங்கினான். உள் விழுதுகளுக்கிடையே குழி தோண்டியிருந்தான். இரவாகி விட்டால், விடியும் வரை ...
மேலும் கதையை படிக்க...
கோமதீ
பாலுவின் கோடை
வந்தவளை – எங்கள் சவடால் 2K+11
ததாஸ்துக் களிம்பு
பசுமைக்குள் சுமை
நாகூர் 2012, கசம் சே!
சோட்டு
விடாமல்
லிக
யுக புருஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)