கைதி எண் 202

 

யோவ்..இங்க வாய்யா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர்.

ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும், இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும், அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார்! என்று விரட்டினர்.

மருத்துவர் வந்த பின் அவரது உடல் முழு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவரே பேச்சுக் கொடுத்தார்.

உங்கள் பெயர்.?
முத்துராமன் என்றார்.

படிச்சு இருக்கீங்களா?

இல்லை! கைநாட்டு!

என்ன குற்றம் செஞ்சீங்க?
கொலை பண்ணினதா சொல்றாங்க!

யாரை?
என் மனைவியை.

காரணம்?
நான்தான் பண்ணலையே!

அன்றைக்கு போதையிலே சண்டை போட்டது என்னவோ உண்மைதான், ஆனா, ஒரு உயிரைக் கொலை செய்கிற அளவுக்கு நான் முட்டாள் இல்லைங்க.

அப்போ நீங்க பண்ணலையா?

இல்லைங்க! சந்தர்ப்பம்,மற்றும் பொய் சாட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்கி என்னை அடைத்துள்ளனர்.

நமட்டுச் சிரிப்புடன் வெளியேறினார் டாக்டர்..

தனது அறைக்கு திரும்பிய முத்துக்குமார்..

மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்துக்கொண்டு இருக்கும்போது, தனது மன நோயாளியான ஒரே தம்பி , வேறு ஒரு வீட்டில் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும்,
வீடு வந்த போது அங்கே மனைவி ராதா தூங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு கோபமுற்று அவளை எழுப்பி விட்டு கோபமாக,

என் தம்பி என்ன அனாதையாடி? ஒரு வாய் சோறு கூட உன்னால் போட முடியாதா? என்று கேட்டு கோபாமாகப் பேசி, அவளை அடித்துவிட்டு போதையில் பட்டினியுடன் படுத்துவிட்டேன்.

போலீஸ் வந்து எழுப்பியதும் தான் தெரிந்தது, மனைவி கொலை செய்யப்பட்டாள் என்றும் நான்தான் அடித்துக் கொன்றதாக கூறி என்னை பிடித்து காவலில் வைத்துவிட்டார்கள். என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்று கொலைக் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் சக கைதியிடம் கூறிக்கொண்டு இருந்தான் முத்துராமன்.

பேப்பர்ஸ் எல்லாம் அனுப்பி வைக்கிறேன், பெயில் பேப்பர்னு சொல்லி முத்துராமன்கிட்ட கைநாட்டை வாங்கிடுங்க, எந்த சந்தேகமும் யாருக்கும் வரக்கூடாது,

வேலை முடிஞ்சதும் கரண்ட் வச்சு முடிச்சிடுங்க!
என்று டாக்டர் சொன்னதும்,

அப்ப அவன் தம்பி? என்றார் ஜெயிலர்.

ஒருமாதம் போகட்டும். அவன் மனைவியே முடிச்சாச்சு,
அவன் ஒரு மனநோயாளிதானே அவனை நான் பார்த்துக்கிறேன், என்றார்.

நம்ம டீல்?

வேலையெல்லாம் சுமூகமா முடியட்டும், உங்க பங்கு தேடி வரும். என்ற டாக்டர் சொன்னதை, நான்கு சுவர்கள் மட்டும் காதில் வாங்கவில்லை, சுத்தம் செய்துக் கொண்டு இருந்த மற்றொரு கைதியும்தான்.

ஏம்பா 202, அந்த டாக்டரை உனக்குத் தெரியுமா?

தெரியாது.

அவனுக்கும் உனக்கும் என்ன பகை. அவங்க பேச்சை வச்சு பார்த்தால் உன் மனைவியை அவங்கதான் முடிச்சிருக்காங்க.

உன் தம்பியை வெளியேயும், உன்னை உள்ளேயும் முடிக்க பிளான் பண்றாய்ங்க, நீ என்னடான்னா இப்படி வெள்ளந்தியா அந்த டாக்டர் யாருன்னே தெரியலைங்கிறே?

நிஜமா தெரியாதுங்க!

இவருதான் டவுன்ல பிரபல ஹார்ட் டாக்டர் செல்வராஜ்.
இவரோட ஆஸ்பிட்டால் கூட பைபாஸில் பெரிய இடமா விஸ்தாரமா இருக்கே அதுதான் என்றதும், முத்துராமனுக்குப் பொறித் தட்டியது,

இப்போதான் எனக்கு புரியுது.

பைபாஸ் ரோட்டை ஒட்டி எங்க பூர்வீகச் சொத்து சுமார் ஐந்து ஏக்கர் ,ஆஸ்பித்தால் அருகே இருக்கிறது. அதை ஒரு டாக்டர் வாங்க விரும்புவதாகவும் என்னிடம் கொஞ்ச நாள் முன்னாலே தரகன் ஒருவர் வந்துப் பேசினார், நான் அது விளை நிலம் அது தருவதற்கில்லை என மறுத்திட்டேன். அதுதான் காரணமா இருக்குமா? என்றான்.

என்ன விலை போகும்?

சுமாரா ஒரு கோடி போகும். நானும் என் தம்பியும் தான் வாரிசு. என் தாத்தா காலத்திலிருந்து அதில் விவசாயம் செய்து வருகிறோம்.

அதேதான், நீ உள்ளே ஜாக்கிரதையா இருந்துக்க,

ஆனா, உன் தம்பியை யார் பார்த்துப்பா? என்றான் சக கைதி.

அதான் எனக்கு கவலையே என்றார்.

நீ உன் அட்ரஸைக் கொடு நாங்க உன் தம்பியை பத்திரமாக தங்க ஏற்பாடு பண்றேன்,என்று கருணைக் காட்டினான்.

கருணை உள்ளவர்கள் உள்ளே இருக்க,மிருகங்கள் வெளியே நடமாடுகிறது,என்று நினைத்தவன், அதோட இன்னொரு வேலையும் எனக்காக செய்யனுமே! என்றான்.

என்ன செய்யனும் சொல்லு,

ஒருவேளைச் சோறு தம்பிக்கு கிடைக்காததற்கே, நான் குற்றம் செய்யாமலே தண்டனை அனுபவிக்கின்றேன்,
அவனையே கொல்ல துணிந்தவனை சும்மா விடுவேனா?

அந்த டாக்டரை சீக்கிரமாகப் போடச்சொல்லு,

நான் என் நிலத்தை விற்றாவது உனக்கு பணம் தருகிறேன் என்றான் முத்துராமன் கொலைவெறியோடு .. 

தொடர்புடைய சிறுகதைகள்
பிரியா பெயருக்கேற்ற அழகும், வயதுகேற்ற வாளிப்பும் உடைய அழகு தேவதை. கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆயிற்று, வேலைக்குச் செல்ல அனுமதியில்லை வீட்டில் ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நல்ல வரன் வந்தால்,திருமணம் செய்துவிடலாம் என்பது பெற்றோரின் விருப்பம். ப்ரியாவின், அப்பா பாங்கில் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா! ரேவதி, சீக்கிரமா எழுந்திரு. கொஞ்சம் எழுந்து வேலையை பாரு! நானே எல்லாம் செய்யனும்! இதுக்கெல்லாம் ஒருத்தன் வருவான் பாரு, அப்ப தெரியும் இந்த அம்மாவோட அருமை. என காலை மந்திரம் ஓதினாள். ரேவதி எழுந்து வந்து அப்பாவைப் பார்த்து கண்ணடித்தாள், எப்படி ...
மேலும் கதையை படிக்க...
சார் லோன் விஷயமா ஆறு மாசாமா வருகிறேன், இதோ, அதோங்கிறிங்க, என்ன சார் கிடைக்குமா? இல்லைன்னா சொல்லுங்க ,என் அலைச்சலாவது மிச்சமாகும், என அலுத்துக் கொண்டே புலம்பினார். ஆறு மாதமாக ஆட்டோ ஒன்று வாங்க வங்கி லோனுக்காக அலைந்து ஏமாற்றத்தையே சந்தித்த ...
மேலும் கதையை படிக்க...
பாரு...காபி கொண்டு வாம்மா! என்றார் ராமன். ராமன், இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்று சிறிதாக டவுனில் வைத்துள்ளார். நிலபுலங்கள் கிராமத்தில் இருந்தும் படிப்புக்காக புறநகர் வந்து வீடு கட்டி குடியேறிய நடுத்தர குடும்பம். இதோ அப்பா, அம்மா கலந்துண்டுருக்கா! ...
மேலும் கதையை படிக்க...
ஏண்டி!, மீனாட்சி, நீ வேலை செய்யற ஆபிசர் காலனி வூட்டிலே கல்யாணமாமே, சொல்லவே இல்லே. ஆமா யக்கா,அது சொல்ற மாதிரி ஒன்றும் இல்ல ,என பீடிகை போட்டாள். நல்ல வூடு, நல்ல அம்மா, நல்லப் பொண்னு எல்லாமே என்கிட்டே பாசமாத்தான் இருக்கும். ஐயாதான் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
இனிய தோழா!
உண்மை
ஆட்டோ அங்கிள்
அனுபந்தம்
தகவல் எந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)