அந்த அரபிக் கடலோரம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 28,372 
 

மும்பாய்

இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட வினோத் சார் எனக்கு விசாகப்பட்டினம் கப்பலை பார்வையிட சர்வே பண்ண மிகுந்த சந்தோஷம் கூட. ஆனால் இதைப் பற்றி இந்துவிடம் ஒரு வார்த்தை பேசினால்… என்று தன் மேலதிகாரியிடம் வேண்டுமென்றே பற்ர வைத்தான்.

மிஸ்டர் வினோத் இந்துவிடம் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். அடுத்த புதன் கிழமை நீங்களும் இந்துவும் விமானத்தில் ஹைதராபாத் கிளம்புகிறீர்கள். அங்கிருந்து டாக்ஸியில் விசாகப்பட்டினம் போர்ட்டில் நிற்கும் கப்பலை சர்வே செய்து மூன்று நாள்களுக்குள் எனக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ணுகிறீர்கள். ஓ கே என்றார் வினோத்தின் மனேஜர்.

“ஓகே சார்.”

நீங்கள் போகலாமா?

இந்துவிற்கு முதலில் வினோத்துடன் பயணம் செய்ய விருப்பம் இல்லை. அவன் மறுத்தால் கண்டிப்பாக வேலையை விட்டு நிறுத்தி விடுவார்கள். குடும்ப நிலைமையை பொறுத்து அவள் இந்த வேலையை விட முடியாத சூழ்நிலை அதனாலேயே வினோத்துடன் விசாகப்பட்டனம் போவதற்கு ஒத்துக் கொண்டாள். வினோத் ஒருமுறை என்னைக் காதலிப்பதாக சொல்லி கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறான். ஒரு முறை ஆபீஸ் அலுவலகத்தில் இடுப்பை மறை முகமாகக் கிள்ள அத்தனை ஸ்டாஃப்கள் முன்னிலையில் செருப்படி பட்டிருக்கிறான். இரண்டு மூன்று முறை என்னிடம் திட்டு வாங்கி ஒதுங்கிக் கொண்டிருக்கிறான். இப்போது அவனோடு பயணம் செய்து அவன் கொடுக்கிற சர்வே ரிப்போர்ட்களை டைப் செய்ய வேண்டும். அவனோடு என்னால் ஒழுங்காக அலுவலக விஷயம் கூட பேச முடியுமா என்பது சந்தேகம். என்ன செய்ய போகிறேனோ? என்று எண்ணிக் கொண்டே பயணத்திற்கு தயரானாள்

***

விமானத்தில் இந்துவோடு பயணம் செய்யும் போது கூட வினோத் அவளோடு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு நாளை நீ சாகப் போகிறாய் பெண்ணே. என்னை எத்தனை பேர் முன்னால் கேவலப்படுத்தினாய் என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அவன் மனதிற்குள் அழகான திட்டம் ஒன்று உருவானது.

கப்பலில் சர்வே செய்கிற நேரத்தில் எப்படியும் கேப்டன் அறைக்குள் போக வேண்டியதிருக்கும். போகிற வழியில் இவளைக் காலை வாரி விட்டால் கடலுக்குள் விழுந்து விடுவாள். நீச்சை தெரியாது. கீழே இருந்து கத்தினால் கப்பலில் இருப்பவர்களுக்கு கேட்கப் போவதில்லை.

சில மணி நேரம் கழித்து இந்துவைக் காண வில்லை என்று கேப்டனுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்து விட்டால் போகிறது.

வினோத்தும் இந்துவும் கப்பலின் பல பகுதிகளை பரிசோதித்து ரிப்போர்ட் தயார் செய்தார்கள். கடைசியில் கேப்டன் அறைக்கு கிளம்பிய போது வினோத்திற்கு ஒரு கொலை செய்யப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டது. இருப்பினும் துணிந்தவனாக இந்து கேப்டன் அறையை முழுவதும் சர்வே செய்து விடலாம் என்றாள்.

“சரி சார்”

“நீ முன்னாலே போ.”

“ஓ.கே.சார்” என்று வேகமாக கிளம்பினார். முன்னால் இந்து கயிற்று ஏணிப்படிகளில் ஏற பின்னால் வினோத் ஏறிக் கொண்டிருந்தவன் “ஆ! அதோ திமிங்கலம் கரைக்கு வருவது போலிருக்குறதே” என்று சப்தமிட்ட வாறு போலியகப் பயந்தான் வினோத்.

இந்து கடலுக்குள் திரும்பிப் பார்க்க “தொலைந்து போ” என்று முணு முணுத்த படியே இந்துவின் கால்களைப் பிடித்து தூக்க முயற்சிக்க அவளின் சேலையின் ஒரு பகுதி கயிற்று ஏணியில் சிக்கிக் கொள்ள ஐயோ என்றவாறு எகிறிவிழ இருந்தவள் வினோத்தின் கையைப் பிடிக்க வினோத் என்று இந்து சப்தம் செய்தவாறு கயிற்று ஏணியைப் பிடித்துக் கொள்ள, தடுமாறிய வினோத் கடலுக்குள் தலைகுப்புற விழுந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *