ஹாய், பய் காதல்

 

கல்லூரி வளாகம்… பட்டம்பூசிகளாய் மாணவ மாணவியரின் கூட்டம்…யமஹாவில் வேகமாய் வந்து அரை வட்டம் அடித்து நிறுத்தினான் திலிப். கண்களில் கூலிங் கிளாஸ் கண்ணாடியும், வாயில் பபுள் கம் மென்று கொண்டு ஸ்டைலாய் இறங்கியவனை ரசனையுடன் பார்த்தது ஒரு பெண்கள் கூட்டம். அலட்சிய சிரிப்பொன்றை சிதரியவாறு நடந்தான் அவன்.

பேரழகுடன் ஜீன்ஸ் ஷார்ட் டாப்சுமாய் கவர்ச்சியுடன் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்ததும் கால்கள் சடன் பிரேக் போடா நின்றான் திலிப்.

‘வாவ் என்ன ஒரு அழகு… இப்படி ஒரு அழகை நான் இது வரை பார்த்ததில்லை….’ என்றவனை,

‘ரியல்லி…..’ என அழகுடன் நிமிர்ந்தாள் அவள்.

‘ஹாய் ஏஞ்சல் ….. ஐ எம் திலிப்’

‘ஐ எம் நிஷா’ என குயில் கூவியது’

‘என்ன ஒரு அழகான குரல்’ என பாராட்டினான் அவன்.

இப்படித்தான் அறிமுகமாகி காதலை வளர்த்தது அந்த ஜோடி.

ஒரு நாள்,

‘ஏஞ்சல் … போர் அடிக்குதுமா… வா மூவி போகலாம்’

‘என்ன மூவி டியர்?’

‘ஓடாத படம் தான்’

கலகலவென சிரித்தவாறு நகர்ந்தனர்.

படம் பார்த்து வெளி வந்ததும்,

‘ஹேய்… நீ ரொம்ப நாட்டி…’ என்று செல்லமாய் சிணுங்கினாள் நிஷா.

‘யூ ஆர் மை பியுட்டி’ என வழிந்தான் அவன்.

ஒரு வாரம் இனிதே ஓட,

‘நாளைக்கு நைட் என்ன ப்ரோக்ராம்?’ என்றவளிடம்,

‘பப் போகலாம்’

‘சோ நைஸ் …’ என அவனை கட்டி முத்தமிட்டாள் அவள்.

குடி என்ன? கும்மாளம் என்ன? ஸ்வீட் ஹர்ட்டும், ஏஞ்சலும் தண்ணீர் பட்ட பாடுதான்.

‘ஹேய் ஏஞ்சல், நாம மீட் பண்ணி ஒரு மாசம் ஆகுது’ குதூகலித்தான் திலிப்.

‘ம்ம்…’ சுரத்தில்லாமல் சொன்னாள் நிஷா.

‘ஹேய் என்ன ஆச்சு டா?’ பதரியவனிடம்,

‘வீட்ல மாப்ள பார்க்கறாங்க… என்னை மறந்திடு’

‘ ஒ நோ’

‘சாரி திலிப்…. குட் பய்’

அவள் சென்று விட … அவள் சென்ற பாதையை வெரித்திருந்தான் திலிப்.

ஒரு வாரம் சென்றிருக்கும்…..

நிஷாவை கோபமாய் முறைத்தாள் அவளது தோழி சைனி,

‘ஏண்டி பொய் சொன்ன?’

‘பின்ன என்னடி? இந்த மூஞ்சிய எத்தன நாள் தான் பார்க்கறது… போர் அடிச்சது … ஆள மாத்திட்டேன்’ கூலாய் சொன்னாள் நிஷா.

‘பாவம்டி…திலிப் தாடியோட தேவதாசா சுத்துறான்’

‘நீ வேனா கம்பெனி குடேன்’ சிரித்தவாறே சொன்னவள் பார்வை மறுபுறம் ஓட,

‘ஹேய் நிதின் நின்னுடா நானும் வரேன்…’ ஓடிய தோழியை வெறுப்புடன் பார்த்தாள் சைனி.

மேலும் ஒரு வாரம் ஓட…..

அதே கல்லூரி வளாகம்…

‘வாவ் என்ன ஒரு அழகு… இப்படி ஒரு அழகை நான் இது வரை பார்த்ததில்லை….’ என்றவனை,

‘ரியல்லி…..’ என அழகுடன் நிமிர்ந்தாள் அவள்.

‘ஹாய் ஏஞ்சல் ….. ஐ எம் திலிப்’

‘ஐ எம் ரேணு’ என குயில் கூவியது’ 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்களில் இருந்து பெருகி வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மனமற்று அமர்ந்திருந்தாள் மஞ்சு. புதுமணத் தம்பதியரான கார்த்திக்-மஞ்சு தம்பதிக்கிடையில் முதல் சண்டை. வருத்தம் இருக் கத்தானே செய்யும். திருமணமாகி இந்த இரண்டு மாதங்களும் குறும்பும், விளை யாட்டுமாய் குதூகலமாய் சென்றது. கார்த்திக் பெங்களூரில் வேலை செய்து ...
மேலும் கதையை படிக்க...
விருந்து முடிந்து வீடு திரும்பிய வினய் சற்றே பதற்றமும், சமாளிக்கும் சிரிப்புமாய் மனைவியை அழைத்தான், 'விஜி......... எங்கேடா இருக்க? என் செல்ல பொண்டாட்டியே.....' அடுக்களையில் இருந்து வெளிப்பட்ட விஜியின் முகத்தில் எப்போதும் ஒளிரும் புன்னகை இல்லை. திடுக்கிட்டாலும் காட்டிக்கொள்ளாது அவளருகே வந்தான் வினய். 'என்னடா செல்லம் நிறைய ...
மேலும் கதையை படிக்க...
அன்று வீடு அமர்க்களப்பட்டது . திவ்யா நாணமும், புன்சிரிப்புமாய் அமர்ந்திருக்க, தங்கை நித்யா அவளை கிண்டலடித்து சிவக்க வைத்துக்கொண்டிருந்தாள். 'அக்கா, நீ இன்னைக்கு ரொம்ப சூப்பரா இருக்க...... டாலடிக்கிற போ' 'ச்சீ போடி' என சிணுங்கினாள் திவ்யா. திவ்யாவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள். ...
மேலும் கதையை படிக்க...
பள்ளியில் இருந்து சோர்வுடன் திரும்பி வந்த 12 வயது ரோஷினி, பேகை தொப்பென போட்டு விட்டு சோபாவில் விழுந்தாள். 'ரோஷிமா, என்னடா செல்லம் ரொம்ப கோபமா தெரியறீங்க? ' என மென்மையான புன்னகையுடன் தாய் ரேவதி வினவ, ரோஷினியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. 'நீங்க ...
மேலும் கதையை படிக்க...
எழு மாத கர்பத்துடன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த தோழி நந்தினியை கண்களில் நீருடன் பார்த்தாள் சுஜி. நந்தினியின் ஒரே உறவான, அவளது அம்மா லதாவின் உயிர் பிரிந்து உடல் கூடத்தில் கிடத்தப்பட்டு இருந்தது. உறவினர் கூட்டம் அழுது ஓய்ந்தது. தாயின் முகத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
காதல் யுத்தம்
விட்டு விடு
இனி எல்லாம் சுகமே!
கருப்பு – வெள்ளை
அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)