ரயில் நிலைய பெஞ்சு

 

மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும் மக்களின் சுறுசுறுப்பு இவர்களிடம் இல்லை!

எதோ ஒரு சலனம்!

அவர்களின் இரண்டு “காரியான்கள்” கூட அவர்களின் கை இறுக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருந்தன !

சலனமும் படபடப்பும் அவனை விட அவளுக்கு நிறைய தெரிந்தது!

அவள் செல்போனிலிருந்து “எனக்கு பயமா இருக்கு! மனசு சரியில்லை! தடுமாறுகிறது!” என்று அவனுக்கு அனுப்பினாள்!

“பக்கத்தில் இருந்தே மெசேஜ் கொடுக்கிறாயே! என்ன ஆச்சு உனக்கு!”

“இப்படி சொன்னா என் கான்பிடன்சும் குறையும்! தைரியமா இரு!” என்றான்

அவள் சிறிது நேரம் அவனைப் பார்த்தாள்! தன்னுடைய போனைப் பார்த்தாள்! எதிரே நடமாடும் பல மனித உருவங்களை பார்த்தாள்!

பிறகு சற்று கண்ணை மூடிக்கொண்டு மனதைத் தேடினாள்!

தேடவில்லை! தோண்டினாள்! ஆனால் நேற்றுவரை இல்லாத இன்று இப்பொழுது இந்த சலனம் ஏன்!

பிரிவு என்ற இடைவெளி தெரியாது, சுயநலமற்ற உள்ளங்கள் நேற்று வரை இவளையும் இவள் தேவைகளையும் அரவணைத்து பாசப் பிணைப்பு நிறைந்த மனித உறவுகள்!!

அவள் மனதில் மெள்ள நடமாடியது!

இன்னும் சற்று நேரத்தில் வர போகும் ரயிலினால் இடைவெளி நெடுந்தூரம் சென்று விடும்! நாளை இவளை தேடும்போது பரிதவித்துப் போகும்!

ஒட்டிய உறவுகள் மறந்து காலமும் பருவமும் தேடிய புது உறவு!

எதையும் மறந்து எல்லாம் இவன் ஒருவனே என்ற மயக்கும் மங்காத இனிய உணர்வு! உடலும் உணர்வுகளும் இவனுக்கென தனி உலகை இவள் தேர்வு செய்து ஆசைகளோடு நிறைவாக வேறெதுவும் நினைவில் வராது நெடு நாள் தீராத கனவுகள்!

அந்த தனி உலகத்தின் ஆரம்பம்தான் இந்த ரயில் நிலைய பெஞ்சு!

இதுவரை காணாத, உணராத அன்புப் பிணைப்பும் ஆர்வமும் அவளை மயக்கி, இனி உள்ள எதிர் காலம், வாழ்க்கை, அதன் ஏற்ற தாழ்வு!

இன்ப துன்பம், எல்லாமே இவர்களின் நான்கு கைகளுக்குள் அடங்கி இவர்களோடு அந்த ரயிலில் பயணிக்க போகிறது!

உறுதுணை என்பது இவர்கள் மட்டும்தான்!

சுற்றம் சூழல், பந்தம் பாசம் என்ற நினைவெல்லாம் இந்த பெஞ்சில் உட்காரும்போதே மறைத்து விட்டது! மறந்து விட்டது!

ரயிலும் வந்தது!

கூட்டத்தில் நடுவில் ஓடி அவன் தங்கள் இருப்பிடத்திற்க்காக ரயிலில் ஏறினான்!

பின் திரும்பினால் அவள் இல்லை!

அருகில் இருந்த பெரியவர் அவனிடம் “என்ன தம்பி! ஏதாகிலும் முக்கியமானதை மறந்திட்டிங்களா?”

“ஆமாம் ஐயா!” என்று படபடக்கலானான்!

“பதட்டப் படாதீங்க! கிடைச்சிரும்” என்றார்.

அவன் செல்போன் சிணுங்கியது!

“மன்னித்துவிடு! வாழ்க்கையில் பயணமும் பாதையும் நாம் இருவர் மட்டும் எட்டி நடை போட முடியும் என்ற நம்பிக்கை உறுதி எனக்கு இல்லை! ஆனால் உன்மேல் உள்ள அன்பும் பாசமும் என் உள்ளம் உள்ளவரை மாறாது! மறக்காது! உன் சுற்றத்துடன் என் இல்லம் வந்து பேசி, என் கரம் பற்றி செல்! அன்புடன் காத்திருக்கிறேன்!”

ரயிலும் சென்று விட்டது! வெறிச்சோடிய பிளாட்பாரத்தில் மெதுவாக தன் பெட்டியை உருட்டிக் கொண்டு நடந்தான்!

சற்றே அவர்கள் உட்கார்ந்த அந்த பெஞ்சை பார்த்தான்!

ஆச்சர்யம்! இவர்களை போலவே ஒரு யுவனும் யுவதியும் அடுத்த ரயிலுக்காக அமர்ந்திருந்தனர்!

இவர்கள் என்ன செய்வார்கள்! தெரியவில்லை! 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும் அதில் வரும் செல்போன், ஹெட்போன் தான். "கிரேசி" என்று சொன்னாலும் "பிச்சு " என்று தெலுங்கில் சொன்னாலும், பைத்தியம் என்று ...
மேலும் கதையை படிக்க...
சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி அனுப்ப வந்ததால் அப்படியே அந்த ரிசெர்வேஷன் கௌண்டருக்கு வந்தான் .பாரம் எழுதி ஆகி விட்டது. ஆனால் ரயில் நம்பர் தெரியாது!பேர் தெரியும் ...
மேலும் கதையை படிக்க...
அந்த நாட்கள். என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டிய யவை ரெடியாக வைத்து விடுவாள் . அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள். என்ன ஆயா! சுறுசுறுப்பே ...
மேலும் கதையை படிக்க...
கண்ணன் சார் ! உங்களை எம்டி கூப்பிடறார் ! மாணிக்கம் சொல்லிட்டுப் போனான். கதவைத் தட்டிவிட்டுக் கண்ணன் 'உள்ளே வரலாமா ' என்று கூறி எம்டி அறைக்குள் நுழைந்தான் . 'கண்ணன்! நீ டெல்லி வரைக்கும் போகணும் பிராஜெக்ட் விஷயமா நேரா வரச் சொல்லிட்டாங்க ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும் ,அவரவர்களுக்கு உலவுவதற்கும் ஓடுவதற்கும் ,உட்கார்ந்து ரசிப்பதற்கும் தனிமை உண்டு.மாலையின் குளிர்ந்த அந்தப் பொழுதில் சாலை விளக்கொளிகள் சூரியன் மறைவதைப் பொறுத்து மிளிர ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கெட் டுகெதர் அல்லது விருப்பப் பட்ட சின்ன பார்ட்டி! நிறைய பேர்கள் இல்லாவிட்டாலும் அவரவர் வேண்டுவதை ஆர்டர் செய்து இருந்தார்கள்.நகரத்தின் பெரிய உணவகத்திலிருந்து. இப்பொழுதுதான் எது கேட்டாலும் வீடுதேடி வருகிறது! பாட்டும் சத்தமுமாக இருந்தது! பெற்றவர்களும் இருந்தார்கள். கதவு தட்டப்பட்டது. உணவுகளுடன் அந்தப் பையன்! உணவு நிறைய ...
மேலும் கதையை படிக்க...
(இது முந்தய கதையின் தொடர் ) அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர் ! செல்வியும் மாதவனும் சுங்கச் சோதனை போகுமுன் விடை பெற குடும்பத்தினரிடம் வந்தனர் . பார்வையாளர் பகுதியில் சில கல்லூரிப் பெண்களும் இருந்தார்கள் . 'அதோ ...
மேலும் கதையை படிக்க...
உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை அவனும் மனிதன்தானே என்று சொல்லிவிட முடியும் . நினைவுகளின் பரிமாணங்கள் அளந்து சொல்ல முடியாத ஒன்று ! எழுதலாம் . கடலுக்குள் ஆழமிருக்கிறது! ஆகாயத்தில் தூரமிருக்கிறது ! ஆனால் அவன் மனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும். ஒரு முறை வண்ணார் பேட்டையிலுள்ள என் தாத்தாபாட்டி, பெரியப்பா சித்தப்பா காண சென்றோம். நெல்லை டவுனில் என் பெரிய மாமனார் வீட்டில் அவளை ...
மேலும் கதையை படிக்க...
சிக்னல் அருகே கார்கள் சிகப்பு விளக்குக்காக நின்றன.ஊர்திகளும் பயிக்குகளும் ஓடி நின்ற வேகம் எழுந்த புழுதி லேசாகப் பறந்து மற்ற வண்டிகளில் படிந்தது . அந்த முதியவர் முடியாத நிலையில் இருந்தால் கூட உயிர் வாழும் அந்த ஒரு வேளை உணவிற்காக கால் கடுக்க நின்றார். எத்தனையோ ...
மேலும் கதையை படிக்க...
வைரஸ் வந்ததும் போவதும்
மெல்லிய மலர் உன் மனது
வைரங்கள் தெரிவதில்லை
ஓடும் ரயிலின் ஓரத்து ஜன்னல்
இவள் ஒரு காதம்பரி
காதல் டெலிவரி
பேச நினைத்தேன் பேசுகிறேன்
ரமேஷ் தேடிய ராகமாலிகா
என் மனைவி சொன்ன கதை
உயிரிலும் உயர்வாகும் உறவுகள்

ரயில் நிலைய பெஞ்சு மீது 2 கருத்துக்கள்

  1. sankaran aswathy says:

    thankal paaraatuthalukku mikka nandri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)