யோசனை! – ஒரு பக்க கதை
அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி.
அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ” என்றான்.
”சொல்லுங்க ? ”
”போற வழியில உள்ள தபால் பெட்டியில இந்த கவரை சேர்க்கனும்.” நீட்டினான்.
”கண்டிப்பா…” கை நீட்டி வாங்கி நடந்தாள்.
நாலடி நடந்தவள் உறையைப் பார்த்து தன் கைபேசியை எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்து…….
”ஹலோ..!” என்றாள்.
”சொல்லுங்க திவ்யா.? ”
”இப்போ பேசுறது என் நம்பர். சேமிச்சு வைச்சுக்கோங்க.” சொன்னாள்.
”முகத்தைப் பார்த்து மனசைப் படிச்ச நமக்கு எப்படி பேசன்னு யோசனை. அதான் என் கைபேசி எண், விலாசத்தைத் தெரிவிக்க இந்த அஞ்சல் உறை யோசனை.” என்றான்.
”நன்றி !” திவ்யா மலர்ந்தாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
'அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா.....?!!' எனக்குத் தலைகால் புரியவில்லை.
மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்...ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...செல்வம். வயது 25. கட்டிளம் காளை. ஊருக்கு ஒதுக்குப் புறம் வயல்வெளிகளைப் பார்த்தவாறே.....வரும்போதுதான் அவள் எதிர்பட்டாள்.
மங்காத்தா ! - பிரச்சனைக்குரிய விதவை.
அவள் சோகம் ஒரு வினாடி உலுக்க... சமாளித்துக் கொண்டு அவளைக் கடக்க முற்படுகையில் .....
"செல்வம்....! "சன்னமான குரலில் அழைத்தாள்.
'நாளைக்கு கிராமத்துக் ...
மேலும் கதையை படிக்க...தவளைத் தன் வாயால் கெடும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா,,?
'அட ! பார்த்துதான் இருக்கீங்களா...? !
பார்க்கலை..! கேள்விப்படலைன்னா.... இதை படிங்க... புரியும்...!
'என் ஆத்துக்காரியும் நானும் மாச சம்பளம் எடுக்கும் வேலையாளுங்க. அவளுக்கொரு இடத்துல வேலை. எனக்கொரு இடத்துல வேலை.
வீட்டிலேர்ந்து ரெண்டு பேரும் ஒன்னா ஸ்கூ ...
மேலும் கதையை படிக்க...அலுவலகம் விட்டு இறங்கிய சுமதி எதிரில் அமர்ந்திருந்த ராஜூவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பாதை மாறி நடந்தாள்.
ராஜு விடவில்லை. ஓட்டமும் நடையுமாக அவளைத் தொடர்ந்தான்.
"சு....மதி.. ! "அருகில் சென்றதும் அழைத்தான்.
அவள் பதில் சொல்லாமல் நடையை எட்டிப் போட்டாள். வேகத்தை அதிகப்படுத்தினாள்.
இவன் ...
மேலும் கதையை படிக்க...சேகர், ஜானகி இடிந்து போனார்கள்.
அவன் ஆத்திரத்துடன் கூறியது இன்னும் அவர்கள் காதுகளில் ரீங்காரித்தது.
ஒரு சில வினாடிகளுக்கு முன்தான்...பெண்ணின் அண்ணன் அரவிந்தன் வந்தான் .
"வாங்க"ன்னு சொல்லி உபசரிப்பதற்கு முன்பே....
"உங்க தம்பி.. தங்கக் கம்பி. மனநிலை சரி இல்லாதவராமே ! போன வருசம் தஞ்சாவூர் ...
மேலும் கதையை படிக்க...குமார், காலை 9. 10 த்திற்கெல்லாம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நுழைந்தான்.
அப்போதுதான் கடைநிலை ஊழியன் கந்தசாமி.... அலுவலக முகப்பில் பார்வையாளர் பகுதியில் எல்லோர் பார்வையும் படியுமிடத்தில் ஸ்டூல் மேல் ஸ்டூல் போட்டு சுவரில் ஆணி அடித்து அதை மாட்டினான்.
நீலக்கலர் பிரேம் போட்டு , ...
மேலும் கதையை படிக்க...முந்தானையால் மூடிய குழந்தையை இன்னும் நெருக்கி மார்போடணைத்து ஜன்னலோரம் இன்னும் நெருக்கி அமர்ந்து, வெளியே வெறித்தாள் தனலட்சுமி.
பேருந்து ஏறி இவளுக்குப் பக்கத்தில் அமர்ந்த அம்புஜம் இவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
தனலட்சுமியின் அழுதழுது வீங்கிய முகமும், பரட்டைத் தலையும், அழுக்கில் கசங்கிய புடவையுமாக இருந்தவளை ...
மேலும் கதையை படிக்க...சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை.
அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும் வந்திருந்தார். அந்த குடும்பத்திற்குப் பெரியப்பாவான தர்மராசாவும் வந்திருந்தார். பாகப்பிரிவினைக்கு உள்ளான சோமு, ராமு, பாலு, அவரவர் மனைவி மக்கள், முத்து இருந்தார்கள்.
சிக்கல்.... ...
மேலும் கதையை படிக்க...படப்பிடிப்பு இடைவேளையில் தன் சக நடிகைகளுடன் அமர்ந்திருந்த நித்யாவிற்கு..எப்போதும் போல் இப்போதும் மனதிற்குள் அதே நினைவு, முக வாட்டம்.
இந்தத் தொழிலில் நான்கைந்து வருடங்களாக துணை நடிகையாக வாழ்க்கை நடத்தும் தனக்குத் திரைப்பட நடிகையாக வெளிக்காட்டிக் கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கம், கஷ்டம்.!
தோழிகள், உறவினர்களிடம் ...
மேலும் கதையை படிக்க...வீட்டில் நுழைந்த மகளைப் பார்த்த தாய் லைலாவிற்கு ஆத்திரம், ஆவேசம்.
"ஏய் நில்லுடி. ! ‘’ நாற்காலியை விட்டு எழுந்து நின்று அதட்டல் போட்டாள்.
நின்றாள் கல்லூரி மாணவி மீரா.
"எத்தனை நாளாய் நடக்குது இந்தக் கூத்து..? "வெடித்தாள்.
"எது...? "மீரா தாய் அதட்டல் உருட்டலுக்கு அதிராமல் ...
மேலும் கதையை படிக்க...
Good ப்ரோபோசல் பய Adhavan.