Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மையல் விழி காதல்

 

2006 ஜூன்

ஒரு 10ம் வகுப்பு மாணவன் ஆணோ பெண்ணோ உடலாலும் உள்ளத்தாலும் பல மாற்றங்களை சந்திப்பர். விடலை பருவத்தில் பொதுவாக அனைவரையும் எரிச்சலூட்டிய வார்த்தை “நீ வர வர சரியில்லை” “நீ மாறிட்ட” என்பவை.

பெற்றோர்கள் பேச்சை தட்டி கழிப்பதில் இருந்து இந்த விடலை பருவம் துவங்குகிறது.நான்தான் பெரியாள் என்ற கர்வம் இந்த வயதில் மேலோங்கும்.அப்படியான விடலை பருவத்தில் ஒரு புதியவனாய் ஜெகதீ~; வீட்டிலிருந்து புறப்பட்டான்.

எப்போதும் கண்களுக்கு ரோடு மட்டும் தெரியும் ஆனால் இப்போது உடன் செல்லும் மாணவிகள் மட்டும் தெரிந்தனர்.

எப்படியோ 10ம் வகுப்பில் என்னவென்றே தெரியாத புதிய உணர்வுடன் அடியெடுத்து வைத்தான் ஜெகதீ~;

தனது வீட்டில் இருந்து அவசரம் அவசரமாக ஸ்கூலுக்கு கிளம்பினாள் மஞ்சு. “ஏ மொத நாளே லேட்டா” என அவள் அம்மா திட்ட “நா அப்படித்தா போவேன்” என திருப்பி கூறிவிட்டு கிளம்பினாள் மஞ்சு.புது வகுப்பில் மஞ்சுவும் ஜெகாவும் அமர்ந்தனர்.இன்று மட்டும் ஏனோ ஜெகா கண்களுக்கு அனைவரும் அழகாய் தெரிந்தனர் மஞ்சுவுக்கும் அப்படித்தான் ஆனால் அவளுக்கு சிறிது பொறாமை ஏற்படுத்தியது.சொல்லப்போனால் அனைவர்க்கும் அப்படித்தான்.

ஒரு நாள் பள்ளியில் ஜெகா ப்ரேக்கின் போது வகுப்;பறைக்குள் வர எதிரிலே மஞ்சுவும் வந்தாள் கதவருகே வரும்போது மஞ்சுவுக்கு வழித் தர வலதுப்பக்கம் நகர மஞ்சுவும் அவ்வாறே நினைத்து தனது இடப்பக்கம் நகர்ந்தாள் இப்படியே மாறி மாறி இருவரும் தனது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வெளிப்படுத்த மஞ்சு “நீ போ” என்றாள்.மஞ்சு ஜெகா இருவரும்
அவ்வளவு அழகில்லை சுமாரானவர்கள்தான்.இந்த நிகழ்வுக்கு பிறகு ஜெகா கண்கள் கடைசி பெஞ்சில் இருந்த மஞ்சுவை நோக்கியே சென்றன.ஜெகாவின் நண்பன் அருணின் ஆளை பார்க்க பர்ஸ்ட் ப்ளோர் வரண்டாவில் நின்றிருந்தனர்.அருண் தனது ஆள் கூட பேசிக்கொண்டிருந்தான்.ஜெகா ஓரமாக நின்றிருந்தான் அவனை பார்த்து அவள் அருணிடம் “ஏ உங்க
கிளாஸ்ல எல்லாரும் லவ் பண்றாங்க இவனும் அந்த மொக்கைக மட்டும்தா லவ் பண்றது இல்ல”

“அவளுக தெரியல மாப்பி தேடிட்டு இருக்கான் சரி வேற” என்றான் அருண். “ஹே மஞ்சுவ இவன் பாத்துட்டே இருக்கா” என அவள் கூற “அப்படியா மாப்பி” என ஜெகாவை பார்த்து சிரித்தான்.

மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்ப டிவியில் தேர்தல் முடிவு ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி அரியணை ஏறுவதா அறிவிக்கப்பட்டது காவேரி பிரச்சனை தமிழகத்திற்கு சார்பாய் இல்லை என்றும் அறிவித்தது.

ஜெகா வகுப்பறையில் நுழைந்தவுடன் அவனை பார்த்து மஞ்சு மஞ்சு என கத்தினர்.

எதர்ச்சையாக மஞ்சுவும் பின்னால் வர பசங்க ஜெகாவ பாத்து “ஜெகா…. கெத்துதான் போ” என எல்லோரும் சொல்ல இருவரும் புரியாதவாறு நின்றனர்.மஞ்சுவை ஜெகாவென்றும் ஜெகாவை மஞ்சுவென்றும் அழைத்து ஓட்ட ஆரம்பித்தனர்.

ஜெகாவை ஓட்டும்போது அவன் ப்ரெண்ட்ஸை கண்டித்தாலும் மனசுக்குள் சிரிப்பான்.மஞ்சு சுமாராய் படிப்பவள் தோழிகள் ஓட்டும்போது அதிகம் கோபப்படுவாள்.ஆனால் வீட்டிற்கு போய் தனியாய் சிரிப்பாள்.ஜெகா தனியாய் ரோட்டில் நடக்கும்போது எதிரில் மஞ்சு வர தலையை குனிந்து நடக்க.மஞ்சு அவளாக வந்து தயங்கி வந்து பேசினாள்.அவளுக்கும் ஆர்வம் அழகோ மொக்கயோ நம்மள ஒருத்தங்க பாக்கறாங்கன்னு தெரிஞ்சா சின்ன சந்தோசம் மனசுக்குள்ள எட்டிப்பாக்கும்ள.தயங்கி பேச தொடங்கினாள். “எங்க போற” என கேட்டாள்.ஜெகாவும் கூச்சப்பட்டு “சும்மா” என்றான். “சரி நா போறன்” என்றான் ஜெகா “ஓகே ஆ… ஒரு நிமி~ம் அது உண்மையா”

“இல்ல சும்மா எளக்கறாங்க”

“எளக்…..”

“கிண்டல் பண்றாங்க” என உளறியபடி ஜெகா சொல்ல

“மத்த கேர்ல்ஸ் கூட மட்டும் சகஜமா பேசுற”

“இப்பவும் அப்படித்தான பேசுற”

“எங்க அப்பாவும் இப்படித்தான் எங்க அம்மாவை பாத்தா ரொம்ப பயப்படுவாங்க ம்.. சரி நீ கிளம்பு”

ஜெகா புரியாதவாறு நின்றான்.இரவு முழுவதும் யோசித்தான் ஜெகா மஞ்சுவை காதல் செய்ய தொடங்கினான்.மஞ்சுவுக்கும் அப்படித்தான் மனதில் ஒரு கிளர்ச்சி இது நீடிக்காதா என்று.லவ் ப்ரொப்போஸ் எல்லாம் செய்யவில்லை ஆனால் லவ்வர்ஸ் இருவரும் கிளாஸில் ஒருவரையொருவர் பார்ப்பதிலேயே பொழுதை கழித்தனர்.தன்னை அறியாமல் இருவரும் சிரித்து கொண்டனர் அடிக்கடி தெருவோரத்தில் சந்தித்து பேசினர்.ஒரு தோழியிடம் பேசும் போது அவனுக்கு ஏதும் தெரியவில்லை ஆனால் லவ்வர் உடன் பேசும் போது மட்டும் பார்ப்பவர் எல்லாம் அவன் கண்களுக்கு எதிரியாக தெரிந்தனர்.காதலிக்கும் போது மஞ்சுவுக்கு வளையல் போன்ற சொப்பு சாமான்களை வாங்கி தந்தான்.மஞ்சுவும் குட்டிகுட்டி பரிசுகளை வாங்கித் தந்தாள்.இவர்கள் பள்ளி வாழ்க்கை ஜாலியாக கழிந்தது.இவர்கள் பள்ளி உயர்நிலைப்பள்ளி என்பதால் 10ம் வகுப்பு வரைதான்.;.ஈழப் போர் உச்ச நிலை எட்டியதை காவேரி தீர்ப்பு வானொலி ஓலிபரப்ப அதை டீ கடையில் கேட்டு கொண்டிருந்த தாத்தாவிடம் காசு வாங்கி சென்றான். பப்ளிக் முடிந்தது இருவரும் பேசினர் “நீயும் நா படிக்கற ஸ்கூல்லயே சேருடி வீட்ல கெஞ்சு” என ஜெகா கூற “டே அது தூரம்டா நீ வேணா என் ஸ்கூல் வா” என்றாள் மஞ்சு “எங்க மாமா வீடு அங்க இருக்கு அதானாலதா அப்பா அங்க சேக்கறாரு”

“சரி அடிக்கடி வீட்டுக்கிட்ட வேணா வந்துட்டு போ பாக்கலாம்”

“ஏதோ சொல்ற நானும் கேக்கற” என கூறி இருவரும் விடைப்பெற்றனர் இதுதான் தனது கடைசி சந்திப்பு என்று அறியாதவாறு ஆவரவர் வழியில் சென்றனர்.இருவரும் அதன் பிறகு பார்க்கவில்லை அந்த பிஞ்சு காதலை மறக்கவும் தொடங்கினர்.

2011

சென்னை சத்யபாமா கல்லூரி தகவல் தொடர்பு பிரிவில் இரண்டாம் ஆண்டில் ஜெகா அடியெடுத்து வைத்தான் அவனது செமஸ்டர் பொழுது உலக கோப்பை பைனல் இரா முழுதும் கூத்தடித்தாலும் பர்ஸ்ட் கிளாஸ்ல் பாஸ் செய்தான்.அவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகமானது பெண் தோழிகள் அதிகம் ஆனால் காதலில் எல்லாம் அவன் விழவில்லை.ஏப்ரல் 13 தனது முதல் ஓட்டை பதிவு செய்ய கோயமுத்தூர் வந்திருந்தான்.லைனில் காத்திருந்தான் அப்பொழுது ஒரு பெண் ஜெகாவை பார்த்துகொண்டிருந்தாள்.

அவள் கொஞ்சம் உடம்போடு சப்பியாக கண்ணாடி அணிந்தபடி வெள்ளை நிறத்தோடு அழகாக இருந்தாள்.வெளில் வரும்போது ஜெகாவிடம் அவள் வந்து “நீங்க கோயமுத்தூரா அதுவும் இந்த ஏரியாவா” என கேட்டாள் . “நீ …..?” என ஜெகா முழிக்க அவள் முகம் வாடியது சோர்வானது. அவள் சோகமாக “நா உங்க கூடத்தான் படிக்கற சாரி கிளம்பற” என்றாள்.

“ஏ சாரி உங்க வீடு எங்க இருக்கு” என ஜெகா கேட்டான். “யார்ன்னே தெரியாதவங்க கிட்ட எப்படி அட்ரஸ் தர்ரது”என புருவத்தை உயர்த்தி கேட்டாள். “உன் பேரு” “வனிதா” இருவரும் நட்பு ரீதியாக பழக ஆரம்பித்தனர். நட்பு காதலாக மாறியது.ஆனால் வெளிப்படுத்தவில்லை ஒருநாள் கல்லூரியில் ஜெயலலிதா முதல்வர் ஆனது காவேரி பிரச்சனை குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

வனிதாவை ஜெகா பார்த்தவுடன் அவளுடன் பேச சென்றான்.சிறிது நேரம் பேசிவிட்டு வனிதா யோசித்து “ஜெகா நா ஒன்னு சொல்வேன் யார்க்கிட்டயும் சொல்லிடாத” என்றாள். “சொல்லு” என்றான். “எனக்கு ஒருத்தன பிடிச்சுருக்கு” என்றாள் ஜெகாவுக்கு பகீரென்றது ஒருவாரு சாமாளித்து கொண்டு “யாரை” என்று கேட்டான். “அதுக்கு முன்னாடி எல்லாப் பசங்கள பாக்கறப்ப
முகத்த திருப்பத்த தோணும் ஆனா இவன பாத்த மட்டும் சலிக்கவே மாட்டேங்குது அவனுக்கே தெரியாம அவன பாத்துக்கிட்டே இருக்கனும்னு தோணுது என்ன பண்ணலாம்?” ஜெகா முகம் லைட்டா தொங்கியது யோசித்து “சொல்லு நா வேணா பேசுற” என்று சற்று தடுமாறி பேசினான். “வேணா நா என்ன பண்ணட்டும் ஐடியா மட்டும் கொடு”என கேட்டாள். “எனக்கு தெரியல” என சோகமாக சொன்னான். “அவன் கிட்ட போய் சொல்லட்டுமா இன்னிக்கே இப்பவே” “சொல்லு” என்றான்.வனிதா “அவன பாத்து ரெண்டு மாசம்தா ஆச்சு தப்பா எடுத்துக்க மாட்டான்ல” “நீ நல்ல பொண்ணுன்னு எல்லாருக்கும் தெரியும்” “ஓகே ஐ லவ் யு”ஷ என்றாள்.ஜெகா தனக்குள்ளயே சிரித்தான்.அவர்கள் வாழ்க்கை ஆனந்தமானது அவர்கள் வெளியே எங்கேயும் சுற்றவில்லை உள்ளத்தால் உருகி உருகி காதலித்தனர்.நினைவலைகளில் மட்டும் உறவாடிக்கொண்டனர்.

2015

4 வருட காதலை சந்தோசமாக கழித்தவர்கள் சென்னையிலேயே தனது நண்பர்களுடன் வீடு எடுத்து வேலை பார்த்துவுந்தாள் வனிதா.ஜெகா பெங்களுரில் வேலை பார்த்தான்.இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியும் செட்டிலாகி திருமணம் செய்து கொள்ள இருந்தனர்.ஆனால் அவர்கள் கனவெனும் வானில் இடியாய் வந்து இறங்கியது டிசம்பர் மழை.சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

பெங்களுரில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜெகாவின் போனுக்கு அழைப்பு வந்தது எடுத்தான் எதிர்முனையில் இருந்தவர் வனிதா இறந்துவிட்டதாக கூறினார்.

2016

மஞ்சு அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தாள்.அவள் கல்லூரி நாட்களில் இருந்து அவனை ஒருவன் பின்தொடர்ந்து வந்தான் இன்று வரை ஆரம்பித்தில் அவனை வெறுத்த மஞ்சுவுக்கு அவன் நல்ல குணங்களாலும் தன்னை உண்மையாக நேசிப்பதாலையும் அவனை இவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.ஒரு நாள் பஸ்ல் இருந்து இறங்கி ஸ்டாஃப் ரூமில் அமர்ந்தாள்.உடன் வந்த ஆசிரியை “நா பாத்த உங்கள ஒரு பொறுக்கி ஃபாலோ பண்றான்” என்றார். “பொறுக்கிலா இல்ல ரொம்ப நல்லவரு” என்றாள் மஞ்சு.

“அவரா…” “அவரேதா என்ன காலேஜ் படிக்கறப்ப ஒரு ஃபன்க்~ன்ல பாத்தரு எனக்கு மாமா முற வேணும்னு தெரிஞ்சுன்ன என்ன விடாம துரத்துராரு” என்றாள் சிறு புன்முறுவலுடன் மஞ்சு. “அவர் பேர்” “அஜீத்” என கூறி சிரித்தாள் “அப்பறம் காவேரி பிரச்சனை”

மஞ்சு தனது தந்தையிடம் அஜீத்தை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க திருமணம் இனிதே முடிந்தது.

“என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்” என அஜீத் வழிந்து கொண்டு கேட்டான்.அதற்கு மஞ்சு “யார் சொன்னா உன்ன எனக்கு புடிக்கும்னு” என்றாள். “அப்ப பிடிக்காதா நா அழகாயில்லயா” என சோகமாக கேட்டான் அஜீத். “நா அழகுன்னு எப்படி நானே சொல்றது என்ன பிடிக்கும்னு எப்படி நா சொல்றது” என்றாள் அவள். “புரியல” “போடா தத்தி நீதான்டா நா நான்தான்டா நீ”

“நீதான்டி புலம்பற” என்றான் அஜீத்.இருவரும் சந்தோசமாக இல்லற வாழ்வை அனுபவித்தனர்.தனது நண்பன் திருமணத்திற்கு நண்பர்களுடன் செல்ல தாயாரானான். “போய்தா ஆகனுமா” என மஞ்சு சோகமாக கேட்டாள் “அவன் வந்தான்ல”

“ரெண்டு மாசம்தான்டா ஆச்சு”

“சீக்கிரம் வந்தர்ரன்”

“சரி பாத்து போ குடிச்சுட்டு வண்டி ஓட்டாத குடிக்காத பைக்லதான போறீங்க”

“ஆமா ப்ரெண்ட்ஸ்கூடத்தா போற ரெண்டு நாள் பொறுத்துக்கோ” என கூறி மஞ்சுவுக்கு முத்தமிட்டு விடைப்பெற்றான்.

ஸ்கூலில் மாணவர்களிடம் இப்ப நம்ம முதலமைச்சர் யாரு? “அம்மா” “வெரி குட் எல்லாருக்கும் ஒரு ப்ராஜக்ட் இங்க ஒரு சார்ட்ல நாட்டு தலைவர்கள்ளா ஒட்டனும் அப்பறம் இப்ப டெங்கு” என பேசிக்கொண்டிருக்கும்போது போன் ஒலித்தது.

எடுத்து பேசினால் எதிர் முனையில் “மஞ்சு?”

“ம் சொல்லுங்க”

“உங்க ஹஸ்பன்ட் …..இறந்துட்டாரு”

மஞ்சு போனை கீழேபோட்டு அழத்தொடங்கினாள்.

2017 ஜனவரி

ஜெகா தனது சொந்த ஊரில் வனிதாவை நினைத்து அழுதுக்கொண்டிருந்தான் வேலையை விட்டுவிட்டான்.ஜெகா தன்னில் ஒரு பாதியை இழக்கவில்லை தன் உயிரையே இழந்துவிட்டான்.

மஞ்சு தன் மாணவர்களின் ஆதரவோடு ஒருவாறு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாள். “பசங்களா இப்ப நம்ம முதல்வர் யாரு?”

“ஓ.பன்னீர் செல்வம்”

“கரக்ட்”

“சார்ட்ல மாத்திட்ட மிஸ்” என்றான் .

“வெரிகுட்”; .காலையில் எழுந்தால் வெறும் பிண்டமாகதான் அவள் வேலைக்கு செல்வாள். டிவியில் “ஜல்லிகட்டு போராட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இன்று ஓ.பி.எஸ் முதல்வர்
பதவியிலிருந்து விடைப்பெற்றார் அப்பறம் காவேரி….” என வாசித்தனர்.ஸ்கூலில் “இப்ப முதலமைச்சர் யாரு சார்ட்ல என்ன எந்த போட்டோ ஒட்டறது சசியா ஈ.பி.எஸ்ஸா”

தனது பழைய நண்பனை ஜெகா சந்தித்தான் பழைய நினைவுகளை இருவரும் பறிமாரி கொண்டனர். “அப்பறம் மஞ்சுவ பாத்தியா” என கேட்க அப்பொழுதுதான் மஞ்சு குறித்த நினைவு ஜெகாவிற்கு வந்தது.மஞ்சு என்ன பண்றா என ஜெகா கேட்டான்.

“அவ நம்ம படிச்ச ஸ்கூல்லதா டீச்சரா இருக்க பாவம் அவ புரு~ன் இறந்துட்டான்” என கூறி அவள் கதையெல்லாம் கூற ஆரம்பித்தான்.

மறுநாள் காலை மஞ்சுவை காண பள்ளிக்கு சென்றான்.மஞ்சு குறித்து பள்ளி நிர்வாகம் எதுவும் கூறவில்லை.அதனால் மாலை வரை பள்ளி வாசலிலேயே நின்றிருந்தான்.மஞ்சு உள்ளே “இனி ஆண்ட்ராய்டு கேம் விளையாடாதிங்க பு@ வேல் விளையாட கூடாது என்றாள்.மஞ்சு வெளியே வந்தாள் அதே மாறாத அழகுடன் இருந்ததாள் கண்டுபிடித்தான்.மஞ்சு அருகே சென்று
நா ஜெகா என்றான்.தனியா பேசுனும் என்றான்.பார்க்கில் நீண்ட நேர அமைதிக்கு பிறகு “ம் சொல்லு ஜெகா நீ எப்படி இருக்க” என மஞ்சு கேட்டாள் “நா இருக்கனான்னு எனக்கே தெரியல உன்ன பத்தி கேள்விப்பட்ட அதா…..”

“ஏன் அவ்ள சோகம்” என கேட்டாள்

“உன்ன மாதிரிதா…” என தன் கதையை கண்ணீரோடு கூறினான்.கண்ணீரை பார்க்கும் பொழுது கண்ணீர் சிந்துபவனுக்குதான் உணர்ச்சி அதிகம் கண்ணீரோடு தன் கதையும் சொன்னாள் மஞ்சு.இருவர் கண்ணீராலும் பார்க் நினைந்தது.

“சின்ன வயசுங்கறது வெறும் கனவு மாறி ஆனா பெரிசான்னா நாம ஒடிக்கிட்டேதா இருக்கனும் இங்க யாரும் அவங்க வாழ்க்கைய வாழ்றது இல்ல வாழ்க்கைனா என்னன்னே நாம உணர தவறிரோம்” என்றாள்.

“எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைய வாழ்ந்துட்டு போவோம் களைச்சு போய்டன்டி சின்ன வயசு காதல ரியல் ஆக்கலாம்ன்னு நா நினைக்கற நீ என்ன…..”

“ஜெகா இப்பவும் நீ குழந்தையாட்டயே பேசுற”

“2 ம் கல்யாணம் பண்ண உங்க அப்பா உனக்கு மாப்ள தேடறாருன்னு தெரியும் அது ஏ நானா இருக்க கூடாது”

“நீ கிளம்பு ஜெகா நீ உளர்ற”

“இனிமே என் மிச்ச வாழ்க்கை உன்கூடதா” எனக் கத்தி கூறிவிட்டு மகிழ்ச்சியோடு சென்றான் ஜெகா.

2019

ஜெகா ஒரு போட்டோ முன் நின்று கொண்டு “நீ சொன்னது சரிதான், வாழ்க்கைல எதுவும் நிரந்தரமானது இல்ல.நல்லவங்கள மட்டும்தா கடவுள் சீக்கிரம் எடுத்துப்பார் போல.உன்னை
டெங்கு மூலமா. வாழ்க்கைக்கு நாம ரொம்ப தப்பான உதாரணம் மஞ்சு. சின்ன வயசு காதல் பொய்யா இருக்கலாம் ஆனா அது நாம முழுசா அனுபவிச்ச ஒரே காதல்”.

ஒரு குழந்தை டிவி ஆன் செய்ய நீயூஸில் காவேரி பிரச்சனை …அந்த குழந்தை கார்ட்டுன் மாற்றியது.

ஜெகா சுற்றி குழந்தைகள், ஜெகா குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை செய்ய துவங்கினான். 

தொடர்புடைய சிறுகதைகள்
கல்யாண அவசரத்தில் அந்த மண்டபம் உழன்றுக்கொண்டிருக்க மாப்பிள்ளை உதய் மட்டும் வடக்கு கிழக்காக நடந்து புழம்பிக்கொண்டிருந்தான்;. “எல்லோரும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி லவ் ங்கற பேருல என்னன்னமோ பண்றாங்க நம்ம சைட் மட்டும்தா அடிச்சுருக்கும் இவனுக வேற உசுப்பேத்திட்டு போறாங்க ஆ..அ……. ...
மேலும் கதையை படிக்க...
இன்று. சி.எப்.எல் விளக்கு அணைக்கப்பட்டது. நைட் லாம்ப் மட்டும் மின்னி மின்னி எரிய அவள் தன்னவனை எண்ணிக் கொண்டிருக்க அவளை தானாக ஒரு கரம் பற்றியது. அவள் அதை எதிர்பார்த்தாள் போலும். அவள் தானாக சோபாவில் கிடத்தப்பட்டாள். அவளால் நகர முடியவில்லை. அவள் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காலத்தில் சமஸ்கியா என்ற ஊர் இருந்தது அதில் 28 கிராமங்கள் .அதில் ஒரு கிராமம் பெயர் அமிழ்தம் 30 பஞ்சாயத்துகளை கொண்டது.அமிழ்தமில் இரு வேறு நாட்டாமைகள் மாறி மாறி ஆட்சி செய்வர் ஆனால் யாரும் நல்லது செய்ததில்லை.அதில் ஒரு பஞ்சாயத்தின் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முத்தம் வேணும்
என்னுள் நீ எப்படி……?
வேதாந்தா இல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)