மும்பையில் ஒரு மாலை…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 20,823 
 

கண் முழிச்சப்போ , வீட்டுல முன் அறையில் விளக்கு எரிஞ்சுட்டு இருந்துச்சு . மணி ஒன்றரை. இன்னுமா ரிஷபா தூங்கல ? தூக்கக்கலக்கத்தில, தள்ளாடிட்டே ராதிகா எழுந்து வந்தா.

“ரிஷப் மச்சி, இன்னும் தூங்கலையா?”

“தோ, இந்த book முடிக்க போறேன் ராதிகா , just 80 pages தான் பாக்கி, முடிச்சிட்டு தூங்கணும்.”

“just 80 pages? அருமை, காலைல நான் எந்திரிக்கறப்போ தான் நீ தூங்க போறே! ஏதோ பண்ணு”

கொட்டாவி விட்டபடி மறுபடியும் படுக்கையில் விழுந்து தூங்க போனா ராதிகா.

பட்டப்படிப்பை முடிச்சு தென் தமிழகத்தில் இருந்து, கணினித்துறையில பணிபுரிய மும்பை வந்த பெண் , ராதிகா. மும்பையோட பிரம்மாண்டம் ஆரம்பத்தில ராதிகாவுக்கு ஒரு வித மிரட்சியை குடுத்தது உண்மை தான். ஆனாலும் வேலை, அலுவலக சூழல், எதையும் எப்பவும் செய்யலாங்கிற சுதந்திரம், ராதிகாவுக்கு புதுசாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. tuition போக கூட அப்பாவோட வண்டில போன ராதிகாவுக்கு, இந்த கலாச்சாரமும், தொந்தரவு தராத தனிமையும், சுதந்திரமும் இன்னும் நிறைய விஷயங்களை தன்னிச்சையா கத்துக்க வெச்சுது. பின்னல் ஜடை, short hair ஆச்சு, துப்பட்டா over coat ஆச்சு, மருதாணி nailpolish ஆச்சு. ராதிகாவுக்கு அது பிடிச்சுது.

ஆனா ரிஷபா அப்படி இல்ல. மும்பைலயே பிறந்து வளர்ந்த நவநாகரீக தமிழ்பொண்ணு. வண்டி ஓட்டணும், நிறைய பயணிக்கணும் , சாகசங்கள் நிரம்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கணும், பிடிச்சதை செய்யணும் ன்னு வித்தியாசமான வாழ்க்கை வாழற பொண்ணு. சில விளம்பர படங்கள், சினிமா படங்களுக்கு photographer ah வேலை பாக்கறா. அப்பா அம்மா டெல்லில வேலை பாக்கறனால ரொம்ப வருஷமா மும்பைல தனியா வசிச்சிட்டு வந்தா. தினமும் மின்சார ரயில் ல போக ஆரம்பிச்ச ராதிகா ரிஷபாவோட அறிமுகம் ஆகி, அப்புறம் ஹாஸ்டல் காலி பண்ணிட்டு, ரிஷபாவோட அறையிலயே தங்க ஆரம்பிச்சா.

ரிஷபாவோட வேலை மாசக்கணக்குல இருக்கும், இருக்காது. நிறைய வெளியிடங்கள் பயணிக்கணும் , நிறைய மனிதர்கள், அசுர வேலை. ராதிகாவுக்கு கம்ப்யூட்டர் முன்னாடி 9 மணி நேர இயந்திர வேலை. அது முடிச்சா சாப்பாடு, தூக்கம், வீட்டுக்கு போன், டிவி அவ்ளோதான்.

ரெண்டு பேரோட வாழ்க்கை முறை வேறுனாலும், அவங்க நட்பு யதார்த்தமா இருந்துச்சு. நிறைய பகிர்ந்துக்குவாங்க. ராதிகா வேலையெல்லாம் செய்ய ரிஷபாவுக்கு சொல்லிகுடுப்பா, ராதிகாவுக்கு நிறைய பரிசளிப்பா ரிஷபா. நிறைய ஊர் சுத்துவாங்க. அவங்க நட்பு சந்தோஷமா நகர்ந்துட்டு போச்சு.

ஒரு மாலை நேரம், வேலை முடிஞ்சு ரிஷபா சீக்கிரமே வீட்டுக்கு வந்து பாட்டு போட்டு டான்ஸ் ஆடிட்டு இருந்தா. முன்பக்க கதவை படார் ன்னு திறந்த ராதிகா, பாட்டை off பண்ணினா.

“இப்போ எதுக்கு இவ்ளோ சத்தமா பாட்டு ஓடுது இங்க?”

“உனக்கென்ன ஆச்சு, நீ ஏன் இப்படி டென்ஷனா இருக்கே? ”

“எல்லாம் என் நேரம், எதுவும் கேக்காதே தயவுசெய்து அமைதியா விடு” ராதிகாவுக்கு பேச பேச கண்ணீர் முட்டிட்டு வந்துச்சு.

“ஹே, என்னன்னு சொன்னா தானே தெரியும்? என்ன problem? come on tell me”

“நம்ம apartment முன்னாடி ரெண்டு பசங்க மேல வந்து பிடிச்சிட்டு போறாங்க. திரும்பி முறைச்சா ஏதோ ஹிந்தில கமெண்ட் அடிச்சிட்டு சிரிச்சிட்டு போறாங்க, என்னால ஏன் எதுவுமே பண்ண முடில, அவன் இடிச்சதை விட, அவனை எதுவுமே செய்ய முடிலயேங்கிற கோவம் தான் ரிஷபா எனக்கு அதிகமா இருக்கு. ”

கண்ணுல தண்ணியோட ஆக்ரோஷமா பேசுன ராதிகாவை ரிஷபா அமைதியா பாத்தா. ராதிகாக்கு அவ்ளோ சரளமா ஹிந்தி பேச வராது. நிறைய தடுமாறுவா. அதுனாலயே தான் நினைக்கறது சொல்ல முடிலங்கிற வருத்தம் அவளுக்கு உண்டு.

“ராதிகா, என் கூட வா!” ரிஷபா அவளை இழுக்காத குறையா கூட்டிட்டு போனா. வெளியே போய் watchman கிட்டே எதோ கேட்டா, நேரா எதிர்ல இருந்த super market ல நுழைஞ்சா. அங்க இருந்த 2 பசங்களை ராதிகா கிட்டே காட்டி, இவங்களா-ன்னு கேட்டா. ராதிகா கொஞ்சம் தயக்கத்தோடு ஆமான்னா.

Agar who teri behen hoti toh kyat um upse haath uthaoge? Uspe hasoge? Agar teri behen ko dard……… (பட பட ன்னு ஹிந்தில பேசிட்டு போனா ரிஷபா)

(இவ ஒரு வேளை உன் தங்கையா இருந்திருந்தா, உன் நண்பன் அவளை இடிச்சிருந்தா என்ன பண்ணிருப்பே? இப்படி சிரிச்சிருப்பியா? அப்போ அவங்களுக்கு வலிக்குதுனா நீ இப்படி செய்ய மாட்டே-ல? அப்போ இவளை இடிக்கலாம் ன்னு உனக்கு யார் அனுமதி குடுத்தது? நீ இடிச்சது அவளுக்கு மனசில தான் வலிச்சிருக்கும். அடுத்த பொண்ணை உனக்கு இடிக்கணும் ன்னு தோணும் போது, இவளோட கண்ணீர் உனக்கு ஞாபகம் வருதா ன்னு பாரு)

சொல்லிட்டு, ராதிகாவை கூட்டிட்டு திரும்ப அபார்ட்மெண்ட்க்கே வந்துட்டா. அந்த பசங்க ஒரு வார்த்தை பேசல, திரு திரு னு முழிச்சிட்டு நின்னாங்க.

ராதிகாவுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. ரூமுக்குள்ள வந்து ரிஷபாவை கட்டிபிடிச்சிட்டு அழுது தீர்த்துட்டா.

“ஹே லூசு, இப்படி வளர்ந்த புள்ளை அழுகலாமா?”

“இல்ல ரிஷபா, என் ஊர்ல எல்லாம், பசங்க கிண்டல் பண்ணினா, மேல உரசினா எதுவும் கேக்க முடியாது, யாரும் support பண்ண மாட்டாங்க. பொறுத்துட்டுதான் போகணும். இன்னிக்கு நீ பேசுனது எனக்காக மட்டும் இல்ல, இவ்ளோ நாளா இதெல்லாம் பொறுத்துகிட்டே பொண்ணுங்க எல்லாற்காகவும் னு தோணுது. thank you.”

“friends குள்ள thanks-லாம் சொல்லுவாங்களா என்ன? முகம் கழுவிட்டு வா, எனக்கு ice cream சாப்பிடணும் போலருக்கு. வெளிய போலாம்”

ராதிகாவுக்கு எதோ ஒரு விதமா, புதுசா இருந்துச்சு. ஒரு சந்தோஷம், நிறைவு. வெளியே கெளம்பி போனாங்க. வண்டியே ஓட்ட தெரியாத ராதிகாவுக்கு, பைக் ல ரிஷபா பின்னாடி உக்காந்துட்டு, தெருக்கள்-ல மும்பையோட இரவை துரத்தறது ரொம்ப பிடிச்ச ஒண்ணு. வேகமா, பாட்டு பாடிட்டு அரட்டை அடிச்சிட்டு , எதாவது சாப்பிட்டு வண்டில சுத்திட்டே இருக்கறது ராதிகாவுக்கு ஒரு மிக பெரிய பரிசா ரிஷபா குடுத்தா. எவ்வளவு சந்தேகங்கள் கேட்டாலும் பொறுமையா சொல்லிக்குடுத்தா. நிறைய இடங்கள் சுத்தி காட்டினா. டான்ஸ் ஆட சொல்லிகுடுப்பா, காலைல அவ எந்திரிக்கறதுக்குள்ள உணவு தயார் செய்து வெச்சுடுவா. ஊருக்கு போறதை விட, ஆபீஸ் போறதை விட ரிஷபா கூட அதிக நேரம் செலவழிச்சா ராதிகா. கிட்டத்தட்ட ரிஷபா இல்லைனா ராதிகாவுக்கு நாளே நகராது.

ஆனா, ராதிகாவுக்கு ஏதோ ஒரு நெருடல் இருந்துச்சு. ஏன் இவ்ளோ நெருக்கம்? எந்த சிநேகிதி கிட்டயும் இப்படி இருந்தது இல்ல. முதல் தடவை வீட்டை விட்டு வந்து தங்கறனாலயா? ரிஷபாவோட அலட்டிக்காத குணத்துனாலயா? நம்ம அவகிட்ட தோழிங்கறதை தாண்டி நெருங்கறோமா? இப்படி நிறைய கேள்விகள் அவளுக்குள்ளேயே.

அவ கிட்டே இயல்பாவும் பழக முடில, விலகியும் நிக்க முடில, ராதிகாவுக்கு நிறைய குழப்பங்கள். இதன் தொடர்ச்சியா ரிஷபாக்கிட்டே எரிஞ்சு விழ ஆரம்பிச்சா. ரிஷபாக்கு கொஞ்சம் குழம்பினாலும், பின்ன அதை கண்டுக்காம விட்டுட்டா. ஒரு நாள் சாயங்காலம் ரிஷபா ஆபீஸ்லேர்ந்து லேட்டா வந்தா. light கூட போடாம, வீடே இருட்டா அமைதியா இருந்துச்சு. இவ்ளோ நேரமா ராதிகா வரலை ன்னு நினைச்சிட்டே light போட்டா. ராதிகாவோட விசும்பல் சத்தம் கேட்டுது. பெட் ல சுருண்டு படுத்துட்டு அழுதுட்டு இருந்த ராதிகாவை பார்த்ததும் ரிஷபாவுக்கு ஏதோ போல ஆயிடுச்சு.

“என்னாச்சு ராதிகா, இன்னிக்கு எதாவது பிரச்சனையா? மும்பை வந்ததுலேர்ந்து உனக்கு எதாவது ஒண்ணு வந்துருது. நீயும் அடிக்கடி upset ஆய்டறே! problems face பண்ண கத்துக்கோ, இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி சமாளிப்பே? health போயிடாதா? என்னாச்சு சொல்லேன்….”

ராதிகாவை வலுக்கட்டாயமா இழுத்து உக்கார வெச்சா. அவ முகத்தை திருப்பினா. ராதிகா அவளை நேருக்கு நேரா பார்த்தா.

“ரிஷபா, எனக்கு மும்பை பிரச்சனை இல்ல. உன்கிட்டே ஒண்ணே ஒண்ணு கேக்கணும். அதுக்கு நேரா பதில் சொல்லுவியா? ”

“கேளு டா”

” பயம் வர்றதுக்குள்ள பட்டுனு கேட்டுடறேன். நீ திட்டினாலும் பரவாயில்லை. நான் உன்கிட்டே ரொம்ப நெருங்கிட்டேன் ரிஷபா. எனக்கு எந்த ஆணை பாத்தாலும் எதுவும் தோணலை. ஆனா உன்கூட இருந்தா தான் எனக்கு ஒரு நிறைவா இருக்கு. இவ்ளோ நாளா எனக்கே தெரில. ஒரு வேளை நான் லெஸ்பியனா இருக்கேனா என்னவோ தெரியல. ஆனா எனக்கு உன்கூட உன் வாழ்க்கை துணையா இருக்கனும்ன்னு தோணுது ரிஷபா. நான் என்ன பண்ணட்டும்?”

ராதிகா தேம்பி தேம்பி அழறதை பாத்ததும், ரிஷபாவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அமைதியா அவளை கட்டிபுடிச்சுகிட்டா,அழுது முடிக்கட்டும்ன்னு.

ஒரு இருபது நிமிஷம் கழிச்சு, ராதிகா கொஞ்சமா ஆசுவாசம் ஆனா. அவளை face wash பண்ண வெச்சு, ரெண்டு coffee-யோட balcony ல உக்காந்தா ரிஷபா.

“ராதிகா, அழுது முடிச்சிட்டே ல? fine, இனிமே அழாம அமைதியா நான் சொல்றதை கேளு. கேட்டு முடிச்சிட்டு அழலாமா வேணாமா னு நீயே முடிவு பண்ணு. நான் இந்தியா முழுக்க சுத்திருக்கேன். பசங்க பொண்ணுங்கன்னு நிறைய friends இருக்காங்க. எனக்குன்னு நிரந்தர வீடு கிடையாது, நிரந்தர வேலை கிடையாது என் உணவு, dressing, விருப்பு வெறுப்பு ன்னு என் lifestyle யே வேற. but, நீ அப்படி இல்ல. சின்ன குடும்பம், கிராமத்து life, traditions, சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கற ஒரு indian middle class பொண்ணு. நான் cool ah இருப்பேன், நீ நிறைய கோபப்படுவே. நான் ரொம்ப jolly type நீ ரொம்ப அமைதி. எல்லாமே நம்ம contrast தான் இல்லையா? ஒத்துகரியா?”

ராதிகா ஆமா-ன்னு தலையாட்டினா.

“Good. நம்ம இப்போ வேலை காரணமா ஒண்ணா ஒரே வீட்டுல இருக்கோம், நிறைய பேசுவோம், பகிர்ந்துக்குவோம். ஒரு பிரச்சனைன்னா நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்போம். But as friends. ஒரு Support, ஒரு companionship எல்லாமே இருக்கு. இப்போ வரை நமக்குள்ள எந்த commitment -யும் இல்லங்கிறதை நீ உணர்றியா? ஆனா இது ஒரு relationship ah மாறும்போது, நமக்குள்ள எதிர்பார்ப்புகள் வரும் இல்லையா? நீ எனக்காக நேரம் ஒதுக்கணும், என்கூட வெளிய வரணும், எனக்காக சிரிக்கணும் சண்டை போடணும் ன்னு நிறைய expectations & commitments இருக்கும் இல்லையா? அப்பவும் நீ இதே அன்போட என்கிட்டே இருக்க முடியுமா? because நான்லாம் marriage கான ஆளே கிடையாது. நான் எந்த ஆணையும் கல்யாணம் பண்ணிக்க போறதும் கிடையாது. அதுக்காக நான் லெஸ்பியனா-னு கேட்டா பதில் சொல்ல தெரியல. but என்னால இந்த family , குழந்தை, மாமியார், நாத்தனார், சமையல், கணவர் சேவை ன்னு உக்கார முடியாது. அதான் நான் ஏன் வீட்டுல கூட marriage பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டேன்…”

ராதிகா எதுவும் புரியாம அமைதியா கேட்டுட்டு உக்காந்துருந்தா.

“ஆனா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் 6, 7 வருஷம் தனியா தான் இருக்கேன், நான் பாட்டுல பயணிப்பேன், சாப்பிடுவேன், ஊர் சுத்துவேன், தூங்குவேன், எனக்குன்னு யாரும் வேணும் ன்னு நான் நினைச்சதே இல்ல. ஜாலியா இருக்கனும். அவ்ளோதான் எனக்கு வேணும். எனக்கு உன்னையும் ரொம்ப புடிக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, என்கிட்டே ரொம்ப இயல்பா அன்பா ன்னு இருக்கே. எனக்கும் உன்கூட இருக்க பிடிக்கும் தான். ஆனா, என்னோட இந்த வாழ்க்கை முறைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாம , என்கிட்டே பெரிய எதிர்பார்ப்புகள் வெச்சுக்காம அன்பை மட்டுமே குடுத்து வாங்கி, உன்னால என்கூட இருக்க முடியுமா?”

ராதிகா மலங்க மலங்க முழிச்சா. “புரியல ரிஷபா!”

“தெளிவாவே சொல்றேன். எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும். நம்ம இப்போ ஒண்ணாதானே இருக்கோம் இந்த வீட்டுல. இப்படியே இருக்கலாம். நம்ம வேலைகளை செய்வோம். வீட்டுக்கு அப்பப்போ போய்ட்டு விடுவோம். நிறைய பயணிப்போம், கத்துக்குவோம். கூடவே நீ ஆசைப்பட்டதை போல, நம்ம life partners ah இருப்போம். சரியா?”

ராதிகா கண்ணெடுக்காம பார்த்தா.

“இரு, முடிச்சர்றேன். நான் உன்கிட்டே இப்போ போலவே அன்பா இருப்பேன், உன்னை நல்லா பாத்துக்கறேன். ஆனா, குழந்தை, கல்யாணம்-னு பேச கூடாது. meanwhile உனக்கு ஏதாவது ஒரு ஆண் அல்லது இன்னொரு பெண்ணையோ புடிச்சுதுன்னா நான் எதுவும் சொல்ல மாட்டேன், உன் life நீ தேர்ந்தெடுத்துக்கலாம். ஆனா என்கிட்டே என்னோட இந்த எதார்த்தமான குணத்துக்காக சண்டை போட கூடாது. ஜாலியா இருக்கணும் எப்பவும் சிரிச்சிட்டே. இருப்பியா? ”

“என்ன ரிஷபா இவ்ளோ simple ah முடிச்சிட்டே? நீ என்கூட பேசாம போய்டுவேன்னு எல்லாம் நினைச்சுட்டேன். அப்போ உனக்கு ஓகே வா? உனக்கும் என்னை பிடிக்குமா? உனக்கும்…”

“ஐயோ லூசு இரு… அன்பா இருக்க, ஆண், பெண், நாய்க்குட்டி, திருநங்கை ன்னு பால் பேதம், இன பேதம் பாக்கற ஆள் கிடையாது நான். என்கிட்டே அன்பா இருந்தா நானும் அன்பா இருப்பேன். அவ்ளோதான். simple …

அதோட என்ன கேள்வி இது, உன்னை புடிக்குமான்னு? யார்க்கு உன்னை புடிக்காது? எல்லார்க்கும் புடிக்கும், எனக்கும் ரொம்ப புடிக்கும். என்ன……. இவ்ளோ நாளா உன்னை friend ah மட்டும் பாத்துட்டேன், இனி அதை தாண்டியும் பாக்கணும். அவ்ளோதான்”

“ஹே, என்ன நீ? இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல டா…. நான் சொன்னதும் எப்படி நீ சரின்னு சொன்னே? வீட்டுல என்ன சொல்றது? இதெல்லாம் நம்ம ஊர்ல சாத்தியமா?”

“அது உன் பிரச்சனை. உன் வீட்டுல என்ன சொல்லணும், எப்படி சொல்லணும் ன்னு நீதான் பாக்கணும். என் வீட்டை நான் பாத்துக்கறேன். கல்யாணம் ன்னு ஒண்ணும் இல்லையே, சேர்ந்து இருக்க போறோம், நம்ம வாழ்க்கை இது, நம்ம தான் முடிவெடுக்கணும். சரியா? நான் இது மாதிரி நிறைய பேர் பாத்துட்டேன், உனக்கு தான் இது புதுசு. எனக்கொண்ணும் இல்ல So உனக்கு ஓகே னா நல்லா யோசிச்சு முழு மனசா சொல்லு”

“ரிஷபா, நீ திடீர்னு இப்படி சொல்லுவே ன்னு நினைக்கல டா….. ஆனா எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும்ன்னு மட்டும் தெரியுது, எனக்கு உன்கூட இருக்கணும். அவ்ளோதான். இதுல யோசிக்க ஒண்ணுமில்லே. ……”

ஒரு 10 நிமிஷம், ரெண்டு பேரும் அமைதியா இருந்தாங்க. ராதிகா தான் முகத்தை துடைச்சிட்டு தீர்க்கமா சொன்னா..

“ரிஷபா, நான் நல்ல யோசிச்சிட்டேன். இனிமேலும் யோசிக்க தயார் இல்ல. எங்க வீடு or society or சட்டம் ன்னு எந்த பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம். எதோ வேகத்தில சொல்லல. நல்லா யோசிச்சு தான் சொல்றேன். நான் ரெடி தான். இனி நம்ம ரெண்டு பேரும் life partners ah ஒண்ணா இருக்கலாம். நீ சொன்னது போல, சிரிச்சிட்டே. இருப்பியா?”

ராதிகா சொன்னப்போ, ரிஷபா கண்ணுல சின்னதா ஒரு spark தெரிஞ்சுது. அமைதியான முகத்தோட, சிரிச்சிட்டே “thankyou ராதிகா” அப்படினு மட்டும் சொன்னா.

ராதிகாவுக்கு கண்ணுல தண்ணீ வர ஆரம்பிச்சுது, மெதுவா தன் தோள்ல சாஞ்சவளை, ரிஷபா தூக்கி, “இப்போதான அழ கூடாதுன்னு சொன்னேன்?” அப்படினு சொன்னா. ராதிகா ஏதோ சொல்ல வாய் திறந்தப்போ “ஷ்ஷ்….” ன்னு அவ இதள்கள்ல விரல் பதிச்சா. ரெண்டு நொடி ராதிகாவோட முகத்தை பார்த்தா. மெல்ல விரல் நகர்ந்து இதழ்களே ஆக்கிரமிக்க தொடங்கிச்சு. மெல்ல விழுந்த சாரல் மழை யோட, மும்பை மாநகர மாலை நேர காற்று சில்லுனு வீச ஆரம்பிச்சுது….

Print Friendly, PDF & Email

1 thought on “மும்பையில் ஒரு மாலை…

  1. அடடா அருமை ரொம்ப வித்யாசமான கதை .விசித்திரமனான காதல் கதை ..அருமை ..எங்கு இது புதுமையானதாக இருக்கு ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *