Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

பேச நினைத்தேன் பேசுகிறேன்

 

(இது முந்தய கதையின் தொடர் )

அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர் !

செல்வியும் மாதவனும் சுங்கச் சோதனை போகுமுன் விடை பெற குடும்பத்தினரிடம் வந்தனர் .

பார்வையாளர் பகுதியில் சில கல்லூரிப் பெண்களும் இருந்தார்கள் .

‘அதோ பாருடி ! வாட் எ பேர் ! மேட் பார் ஈச் அதர் ! என்ன அருமையான ஜோடி !

புறப்படும் இடத்தில் இத்தனை பேர் இருந்தும் மாதவனும் செல்வியும் தனி அழகுடன் மெருகுடன் தெரிந்தார்கள் .

தனியான வெற்றிப் புன்னகையுடன் கூடிய காதல் ஜோடிகள் !ஏற்கெனவே பார்த்தாலும் ஏறிட்டுப் பார்க்கத் தோணும் அழகு! இங்கு அவர்கள் ஜொலித்து ஒளி வீசினார்கள் !

லக்கேஜ் செக் பண்ணிவிட்டு முதல் வகுப்பு போர்டிங் பாசுடன் குடும்பத்தினரிடம் வணங்கி விடை பெற வந்தார்கள் .

வணங்கிய இருவரையும் ,டாக்டர் சண்முகநாதன் மனைவியையும் ராஜேஸ்வரியையும் பார்த்து திருஷ்டி சுற்றி வழி அனுப்பச் சொன்னார் .அனைவர் முகங்களிலும் கண்ணீர் !

விடை பெற்று சுங்கச் சோதனை தாண்டி புறப்படும் வாயிலுக்கு வந்தனர் .

ஏற்கெனவே காலை மணி ஒன்று !போர்டிங் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்.

உட்கார்ந்தார்கள் .

மாது!

எஸ் !டார்லிங்!

அவன் கையை இறுக்கப் பிடித்து கொண்டு ‘நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ! என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

பாசமும் காதலும் கலந்த அவள் காதலனின் பார்வையைப் பார்த்து உவகையான பெருமிதம் மிக்க அவளின் அழகிய முகம் கண்கள் மூடிய படி அவன் தோளில் சாய்ந்தாள்.

மாது!

எஸ்!டார்லிங்!

உன்னோட நான் எப்பவும் இப்படியே குழந்தையாக இருக்கணும் ஆசைப் படறேன்! சரியா!

பதில் வரவில்லை! கலங்கிய கண்ணீர் அவள் கைகளில் விழுந்தது .

மாது சொன்னான் .

‘செல்வி! நீ என்னோட செல்லக் குழந்தைதான்! இந்த இறுக்கிய கரங்கள் எப்போதும் என்னோடு இப்படியேதான் இருக்கும். பல சமயங்களில் எனக்கும் உன் போலக் குழந்தையா உன்னோட கொஞ்சிப் பேச ஆசைகள் வரும். அந்த நேரங்கள் என் வாழ்வின் அருமையான நேரங்கள்! உன்னையே நினைச்சுப்பேன் !

அந்தப் பேச்சின் இனிமையில் அவள் மெய் மறந்து போனாள்.

காதலின் பரிமாணங்கள் கணக்கில் அடங்காதவை !அவரவர் உள்ளங்களின் ஒருமித்த ஆசை உணர்வுகள் மென்மையான இந்நேரங்களில் அழகான கவிதைகளை அருமையாகச் சொல்லும் .அப்பழுக்கில்லாத இனிய இனிமை எண்ணங்கள் ! உண்மை அழகும் அதன் ஒளிர்வும் அவர்கள் முகங்களில் மட்டும் இல்லை !மனம் நிறைந்த காதல் உணர்வுகள் அவர்கள் அகத்திலும் அழகாக நிறைந்து அதற்கென தனி உயர்வை கொடுத்துக் கொண்டு இருந்தது.

நீங்க புதுசா கல்யாணம் ஆனவாளா !

எதிரில் இருக்கும் வயதான மாமி கேட்டாள்.மாமா இவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார் .

மாதுவுக்குப் புரிந்தது!

செல்வி!நேராக உட்காரு! நீ சாய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து கேட்கிறார்கள். என்று அவள் காதில் முணுமுணுத்தான் .

செல்வி நேராக உட்கார்ந்து ‘ஆமாம் மாமி! நீங்க எங்கே போறீங்க?’

‘நாங்க டீசீக்குப் போறோம் .நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க ! சந்தோஷமா நன்னா இருங்கோ !

தேங்க்யு மாமி ! உங்க போல பெரியவங்க ஆசீர்வாதம் நிறைய வேணும் !

மாமி சிரித்தாள்.மாமாவும் சிரித்தார் .

மாது சொன்னான் .’இது தான் நம்ப ஊரு ! கொஞ்சம் உரசி உட்க்கார்ந்தாலே போரும்! கூர்ந்து கவனிப்பாங்க !

எனக்கும் தெரியும் மாது! நானும் அப்படி இருக்க மாட்டேன் .ஆனா உன் கிட்டே இருந்து என்னாலே விலகி இருக்க முடியலே! தவிர கடவுள் செயலாலே நான் பயந்த படி இல்லாமே எல்லா தடையும் நீங்கி நம்ம வீட்டில் சம்மதிசிட்டாங்க !

மாது சொன்னான் .’செல்வி! உன்னைப் போல பல மடங்கு ஆசைகளை உள்ளடக்கி வச்சிருக்கேன் !

யாருக்குமே என் போல அதிர்ஷ்டம் இருக்காது!

ரொம்ப அழகுள்ள , குழந்தையைப் போல நல்ல மனதுள்ள பேசும் சிற்பச் சிலையாக நீ எனக்குக் கிடைச்சிருக்கே! காதலர்களிலே மிக லக்கி பர்சன் நான்தான்!யு ஆர் மை டார்லிங் பார் எவர் !

அடக்கி வைத்திருந்த ஆசைகள் அன்பான வார்த்தைகளாகப் பொங்கி வந்தன! அவனிடமிருந்து .

‘மாது! இதுக்கு மேல பேசினா நான் மறுபடியும் உன் மேல சாஞ்சிடுவேன் !யார் பார்த்தாலும் கவலை இல்லை!

இதெல்லாம் அங்கே சீட்லே வந்து பேசு! அதுதான் அண்ணன் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் கொடுத்திருக்காரே ! என்று பேசி அவள் பார்த்த பார்வை உண்மைக் காதலை உருக்கிப் பிணைத்தது.

செல்வி! அப்படிப் பார்க்காதே ! என்னால் தாங்க முடியாது !

மாது !நான் ரொம்பக் கண்டிப்பானவ !நீ எனக்குக் கிடைத்த பொக்கிஷம் ! இந்த அன்பும் கோபமும் கிண்டலும் நமக்குள்ளே இருக்கணும்.

இப்படிப் பட்ட பிணைப்போடு நம் கடமை ,படிப்பு முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு .

விமானத்திற்கு கூப்பிட்டார்கள் .மெதுவாக இணைந்து இருவரும் இருக்கைக்குப் போனார்கள் .

சொர்க்கம் போல விமான ஊர்தி சென்னையிலிருந்து மெள்ள ஆகாயத்தில் தாவியது.இவர்கள்

இருவர் ஆனதால் நடுவில் சேர்ந்தாப்போல இட வசதி.சீட் நிமிர்ந்து படுக்கை போல ஆயிற்று.

செல்விக்காக படுக்கையை விரித்து தலையணை அமைத்து மேடம்! உங்களுக்காக ! என்று பணியாள் போல கையைக் காண்பித்தான் ஒரு புன்னகையுடன் .

உனக்கு !என்றால் அவள் .

நீ படுத்துக்கோ !மணி ரெண்டாகிறது ! நான் சரி செய்து கொள்ளுகிறேன் என்று தன் படுக்கையைச் சரி செய்து கொண்டான் .

மாது! உன் கை எங்கே ! என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

அவனும் மெதுவாக அவள் தலையை வருடிக்கொண்டே குழந்தையைத் தூங்க வைப்பது போல தூங்க வைத்தான் .

விமானம் பறந்து பிராங்க்பர்ட் அடைந்தது. சியாட்டில் போகும் கேட்டுக்கு போனார்கள் .

ஐயோ !மாது!அதே இடம் !என் பக்கத்திலே நீதானே ! என்னாலே நம்பவே முடியலே !

அவர்கள் முதலில் சந்தித்த அந்த இருக்கைகள் !

அவள் அவன் கைகளை இறுக்கிய வேகம் காதலின் பரிமாணங்களுக்கு இவ்வளவு வேகம் உண்டா!

அவளுடைய மன நிறைவுகளுக்கு இதற்க்கு மேல் அளவுகள் இல்லை!

ஒரு பெண்ணின் மகிழ்வும் உணர்வுகளும் பரிமளிக்க இதற்க்கு மேல் இருக்க முடியாது!

செல்வியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவான நிம்மதி உள்ள அழகு!

மாதவனுக்கு பேச்சே வரவில்லை! அந்த இடத்தைப் பார்த்த போது தான் காதலின் மென்மையான தன்மையை உணர்ந்தான்!

அந்த இடம்!அந்த சூழ்நிலை! நிறைவான அக் காதலர்களை நிலை மறக்க வைத்தது!

காதல் காவியங்களும் ஓவியங்களும் சொல்லிய கதைகள் காலத்தால் அழியாதவை என்பது உண்மை ! இங்கே உணர முடிந்தது!

எவ்வளவு நேரம் தன்னை மறந்து இருந்தார்களோ தெரியாது !

ஒலி பெருக்கியில் இவர்களை அழைக்கும் போது தான் நினைவு வந்தது!

செல்வி சொன்னாள்.’

‘இவ்வளவு சீக்கிரம் உன்னோடு நான் இங்கே திரும்ப வருவேன் என்று என்னால் நம்பவே முடியலே !ஆனா சென்னை வரும் போது இதே இடத்தில நான் தவித்த தவிப்பு ,எனக்கு இப்ப கூட அழுகை வந்திடும் .

மாது !உன்னுடைய நினைவு ! அதன் முக்கியம் !நான் எப்படி இருந்தேன் தெரியுமா ! இன்று என்னைப் போல சந்தோஷப் படுபவர் யாருமில்லே!

அது அருமையான இக் காதலர்களின் இனிமையான நேரம் !

அந்த அருமை உணர்பவர்களுக்குத் தான் தெரியும்!

முகம் முழுக்க வெட்கத்துடன் நுழை வாயிலுக்குச் சென்றார்கள் .

உள்ளே சென்றால் ஆச்சர்யம் ! அதே பணிப் பெண் !

ஹாய்!யு ஆர் பேக் ! ஹாப்பி டு சி யு !

செல்வி கேட்டாள்.தங்களுடைய பழைய சீட்டுக்களைப் பார்க்கலாமா என்று!

ஒ!லவ் மெமரி ! அவசியம் காட்டறேன்! என்று அவர்களை அழைத்து போனாள். அங்கு இருந்த ஒரு அமெரிக்க ஜோடியிடம் பணிப்பெண் காதோடு எதோ சொல்ல ,உடனே அவசியம் என்று சொல்லி செல்வியையும் மாதவனையும் அந்த இருக்கையில் அமரச் செய்து என்ஜாய் ! என்று கை குலுக்கினார்கள் .

செல்வியும் மாதவனும் அவர்களுக்கு நன்றி சொல்லி தங்கள் இடத்திற்குப் போனார்கள் .

இணை பிரியாத காதலர்களைச் சுமந்து கொண்டு ஒரு சொர்க்க ஊர்தி பறந்து சியாட்டில் சென்றது சியாட்டில் ஏற்போர்டிற்கு சுபா , ஜெனி ,ரிச்சர்ட் ,ஜான்,,சுரேஷ் அங்கிள் வந்திருந்தனர் .நாளை முதல் வேலை இருக்கு என்று சொல்லி மாது ஜானோடு உடனே போய் விட்டான்.

செல்விக்கு சுபாவைப் பார்த்து ஒரே ஆச்சர்யம்!

வெல்கம் பேக் ! என்று எல்லோரும் சொன்னாலும் செல்விக்கு கொஞ்சம் புரியாமல் இருந்தது.

செல்வி! நாளை நீ அங்கு வந்த அப்புறம் உனக்கு நிறைய விஷயம் இருக்கு! என்று சொல்லிவிட்டு சுபா அவர்களுடன் போய் விட்டாள்.

பத்து நாளில் இவ்வளவு மாறுதல்களா ! புரிய வில்லை !

சுரேஷ் அங்கிளிடம் பேச பயம்!இது பற்றி ! மற்ற விஷயங்களெல்லாம் பேசி அங்கிள் இவளுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்.

அன்றிரவு முழுக்க செல்விக்கு சுபாவைப் பற்றி கவலை!

என்ன செய்கிறாள்! என்ன செய்தாள்!மாது கிட்டே இவளிடம் பேசின அப்புறம் சொல்லலாம் .

மறுநாள் அபார்ட்மெண்டுக்குப் போனாள்.

சுபா அவளுக்கு முறையாக வாழ்த்துக் கூறி ‘செல்வி!எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

யு ஆர் வெரி லக்கி ! என்று தழுவிக் கொண்டாள்.

சுபா! என்று அவளைக் கூர்ந்து பார்த்து ‘நீ எப்போதும் உள்ளவளா அல்லது மாறுதல் இருக்கா ?

எனக்குக் கொஞ்சம் தெரியணும். என்றாள் செல்வி .

அவ்வளவுதான் .செல்வி ! என்று ஓடி அவளைக் கட்டிக் கொண்டாள் .

தனிமையான தன உணர்வுகளின் உண்மைகளை ஒரு பெண் தன் காதலனை விட தன் தோழியிடம் தான் சொல்லுவாள் .

செல்வி! உன்னைப் போல நானும் காதல் வசத்தில் விழுந்து விட்டேன் !

என்னையும் அறியாமல் எனக்கு நேர்ந்தது !இதன் விளைவுகள் என்ன என்பதை நான் நினைக்க வில்லை! உனக்காக காத்திருக்கிறேன் !

செல்விக்கு பிரமிப்பு கலந்த ஆச்சர்யம்!

காதல் வலிமையின் நிலமை நன்கு தெரிந்த பெண் அவள்!

சொல்லு!சுபா! நாங்கள் உனக்குத் துணையாக இருப்போம் !கவலைப் படாதே !நீ எங்களுக்கு எப்படி உதவி இருக்கிறாய்!

சொல்லு!

சுபா சொன்னாள்.

‘உனக்குத் தெரியும் ஜெனிபர் என்னோடுதான் படிக்கிறா என்று! நீ ஊருக்குப் போனதும் படிப்பில் சில சந்தேகங்களுக்காக இரண்டு முறை என்னை அவள் வீட்டிற்க்கு கூட்டிச் சென்றாள். ஜெனி அம்மாவும் அப்பாவும் என் கிட்டே நிறைய ஆசையா நம்ம ஊரைப் பற்றி பேசினாங்க! நாம் ஊர் சாப்பாடு,கோயில்கள் டெல்லிக்குப் போன போது சுற்றிப் பார்த்திருக்காங்க!

அவங்க என்ன பண்ணறாங்க?

கன்சல்டிங் லாயர்ஸ் ஒரு பெரிய கம்பனிக்கு!

அதனால்தான் ரிச்சர்ட் லா படிக்கிறான் .

சரி! அதுக்கும் உன் மன சஞ்சலத்துக்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கு!போன வீக் எண்ட் அவங்க எல்லாரும் ஜெனி,ஜான் உள்பட “மவுண்ட் ரெனீயர்” போனோம்.

ஹைகிங் போனோம் !எனக்கு ரிச்சர்ட் தான் துணைக்கு வந்தான் .

சரி!சுபா !சொல்லு!

போகும் போது நாங்க நாலு பேரும் ஜெனியோட கார்லே போனோம்.அவ அப்பா ,அம்மா அவங்க பிரண்ட்சொடு வந்தாங்க!

ஜெனியும் ஜானும் முன் சீட்டில் ! நானும் ரிச்சர்டும் பின்னால் இருந்தோம் .
ரிச்சர்ட் பேசினான் .

சுபா!நாம பெயின் பிரிட்ஜ் தீவு போகும்போதே உன்னோடு பேசணும் நினைச்சேன் !உன்னோடு சாப்ட் பேச்சு கேட்டு இன்னும் பேசணும்னு நினைச்சேன் ! உங்க ஊர்லே எல்லோரும் இப்படி சாதரணமாக சாவதானமாகப் பேசுவாங்களா !

சுபா சொன்னாள் .’பொதுவாக புதுசா நாங்க பேசுவதே யோசனை செய்துதான் பேசுவோம் . சுலபமாக ப்ரீயாகப் பேச மாட்டோம் .’

ஆமாம்!நானும் பார்த்திருக்கிறேன் .கொஞ்சம் பழகின அப்புறம் ப்ரீயாகப் பேசறாங்க! அதற்க்கு மேல எனக்கு பேச்சுத் தொடர ஒரு மாதிரியாக இருந்தது ! ஆனா ரிச்சர்டின் பேச்சு எதையும் தெளிவாகக் கேட்டு மனம் கோணாமல் பதில் சொல்லுவது எனக்குப் பிடிச்சது !

மேல பேச ஆரம்பித்தேன் .

பொதுவா எங்க ஊர் பெண்கள் மனசுலே ஒண்ணு ,வெளியே ஒண்ணு என்று பேச மாட்டார்கள் .

பேச்சில் உண்மை இருக்கும் .போலி இருக்காது!

அதுக்குள்ளே “ஸ்டார் பக்ஸ் ” காபி ஷாப் போனோம்.

ஜெனி! ஐ ஆம் கன்பியூச்ட் !எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலே !

என்னுடைய கல்ச்சர் எப்படி நான் மாத்தி அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு தெரியலே!
ஜெனி சொன்னாள்!

நாம பெயின் பிரிட்ஜ் தீவு போனதிலே இருந்தே ரிச்சர்ட் நிறைய தடவை என்னுடைய பெற்றோரிடமும் என்னிடமும் உன்னைப் பற்றிப் பேசினான் .அவன் எதுவுமே இன்னொருவர் மனது புண் படும்படியாகப் பேச மாட்டான்.எங்களுக்கே அவன் செய்கை ஆச்சர்யமாக இருக்கு !

சுபா!இன் ஷார்ட் மை பிரதர் லைக்ஸ் யு !ஹி இஸ் மேட் அட் யு ! உன் மேல பைத்தியமாக இருக்கான் !

ஆனா நாங்க யாரும் யாரிடமும் நிர்பந்தம் பண்ண மாட்டோம்.உன் கிட்டே எல்லாருக்கும் விருப்பம் இருக்கு !

சுபாவுக்கு ரொம்ப ஆச்சர்யம் !

ஜெனி! உண்மையாகவா?

ஆமாம்! நான் கூட அவனிடம் ஈஸ்ட் வெஸ்ட் கல்ச்சர் பற்றிப் பேசினேன் .ஆனால் அவன் அவளுக்குத் தகுந்த மாதிரி நான் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவேன் .எனக்கு அவள் தன்மை ,,

அவள் உறவினர்களின் அன்பு எல்லாம் ரொம்பப் பிடிச்சிருக்கு ! நம்மை விட அவங்க ரொம்பத் தீர்மானமாக இருக்காங்க! அன்பா இருப்பாங்க! என்று சொல்றான்.

‘ஸ்டார் பக்ஸ்” விட்டு ஜெனியும் சுபாவும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள் .ரிச்சர்ட் கார் ஓட்டினான்.

ஜானுக்கு இந்த டெவலப்மெண்ட் தெரியாது.

ரிச்சர்ட் கார் ஓட்டும் போது இவர்கள் பேசுவதை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே ஓட்டினான்.

அவன் பார்க்கும் போது சுபாவும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மிகவும் அருமையான கூர்மையான முகம் அது! பார்க்கப் பெருந்தன்மையானவன் என்று சொல்லும் முக பாவம் !நல்ல அழகுடன் இருந்தான் .

சுபா அவனுக்கு ஏற்ற அழகு,உயரம்,அமெதியான தோற்றம் ,ஒரு பெண்ணின் தனிச் சிறப்பான தன்மையோடு நன்றாகவே இருந்தாள்.

விசிட்டர் செண்டர் வந்தார்கள்.ஜெனி ,ரிச்சர்ட் அப்பா அம்மா அங்கு இருந்தார்கள் .

மிதமான வெயிலுடன் நடப்பதற்கும் ஹய்கிங் போவதற்கும் நல்ல சிறப்பான நாள் அது !

இவர்கள் நால்வரும் நடக்க ஆரம்பித்தனர் .பாதை மேடாக மலைப்பாங்கக இருந்ததால் சுபாவிற்கு கொஞ்சம் சிரமம்.இது போல மலைப் பாதைகளில் போனதில்லை .

முதன் முறையாக ‘சுபா! கென் ஐ ஹெல்ப் யு ! என்று ரிச்சர்ட் கரம் நீட்டினான்.
எஸ்!ரிச்சர்ட் !என்று சுபா புன்முறுவலுடன் சொன்னாள்..

கம் ஆன் சுபா! என்று ரிச்சர்ட் கை நீட்டி அழைக்க சுபாவின் கை அவன் கையைப் பற்றியது !

கிழக்கு மேற்கு நாடுகளின் இரு அழகிய யுவனும் யுவதியும் அமெரிக்காவின் புகழ் வாய்ந்த சிறப்பு மிக்க ‘மவுண்ட் ரெனீயர்” மலையின் முன்னால் நெருங்கிய நண்பர்களாகும் நேரம் அது!

முதன் முறையாக சுபா தன மனம் விரும்பி ரிச்சர்ட் கரம் பிடித்தாள்.

மலைப் பாதையில் நடந்து கொண்டே பேசினார்கள் .

சுபா!உனக்குப் பிடிச்சா நான் ஒண்ணு சொல்லலாமா !

சொல்லு ரிச்சர்ட் !பரவாயில்லை சொல்லு!

அவன் அவள் முகத்தைப் பார்த்து மறுபடியும் ,சொல்லலாமா ‘ என்றான் .அவன் வார்த்தைகளில் தயக்கம் அடக்கம் இருந்தது !

சுபா!ஐ லைக் யு ! உன்னுடைய நெருங்கிய நண்பனாக விரும்புகிறேன்! உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

சுபா சொன்னாள் .’எனக்கும் உன்னுடைய பேச்சு ,மெதுவாகப் பேசும் குணம் எல்லாம் பிடிக்கும் !

ஆனா என்னாலே ஒரு முடிவுக்கு வர முடியலே!

ரிச்சர்ட் சொன்னான் . ‘எனக்கும் தெரியும் !உங்களுடைய கல்ச்சர் பழகும் விதம் வேற !நாங்கள் பழகும் விதம் வேற ! நான் புது விதமா உங்கள் பழக்கங்களுக்கு தகுந்த படியே இருக்க ஆசைப் படுகிறேன்.நான் உனக்காக இதைச் சொல்லலே! ஏற்கெனவே இந்தியப் பண்பாடு நாகரீகம் படித்துத் தெரிந்து வைத்து இருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக உன்னைப் பார்க்க நேர்ந்தது!

ஜெனிபர் ,அப்பா அம்மா விடம் கூட உன்னைப் பற்றிப் பேசி இருக்கிறேன் .

எனக்கு எப்பவும் உன்னோடு இருக்க ஆசை! உன் முடிவிக்கும் விருப்பங்களுக்கும் எப்போதும் மதிப்பு கொடுப்பேன் .

சுபா சொன்னாள் .

ரிச்சர்ட்!பொதுவாக நாங்கள் ஒருவரிடம் மனம் விட்டுப் பழக ஆரம்பித்தால் பிறகு இன்னொருவருக்கு இடம் கொடுக்க மாட்டோம்.தவிரப் பழகுவதில் சில கட்டுப் பாடுகள் ,நியதிகள் இருக்கும்.வெறும் பிரண்ட்ஷிப் ஆகப் பழகுவதில்லை .முடிவு செய்யத் தாமதமாகும் .ஆனால் முடிவு செய்தால் அது திருமணத்தில் தான் முடியும் .

உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு!எனக்குக் கொஞ்சம் யோசிக்க டயம் வேணும் !என் குடும்பத்தில் சொல்லி ,உனக்கு சாதகமாக பதில் சொல்லுவேன் .

உன் அப்பா அம்மா என் தோழி ஜெனிபர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

முதன் முறையாக ரிச்சர்ட் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான் .

இந்த அருமையான பதிலுக்கு உன்னைக் கட்டித் தழுவணும் போல இருக்கு .ஆனா உன் அனுமதி இல்லாமே நான் எதுவும் செய்ய மாட்டேன்.

சுபா சொன்னாள் ‘உன்னுடைய இந்த அருமையான குணம் என்னை உன்னிடம் இன்னும் நெருங்கி அன்பு கொள்ளத் தோண்டுகிறது .விரைவில் அது நடக்கும் .கொஞ்சம் பொறுத்துக்கோ !

ஐ லைக் யு ரிச்சர்ட் ! யு ஆர் மை பெஸ்ட் மேன்!

ரிச்சர்ட் ரொம்பப் பரவசமானான் . அவர்கள் திரும்பும் நேரம் வந்தது!

சுபா !என்னுடைய மிகவும் நல்ல நேரம் இது !நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் !

அவள் கையை இருக்கப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

சுபாவிற்கு அவனை ரொம்பவும் பிடித்து விட்டது !

அவர்கள் திரும்பும் போது ஜெனியும் ஜானும் இல்லை !அப்பா அம்மா இருந்தார்கள் .
டாட் !மாம்! ஹியர் ஈஸ் யுவர் கேர்ல் சுபா ! என்று ரிச்சர்ட் அவன் பெற்றோரிடம் சுபாவைக் காண்பித்தான் .

ரியலி!ஒ மை சுவீட் கேர்ல் ! என்று இருவரும் மாறி மாறி சுபாவைக் கட்டித் தழுவி முத்தம் இட்டார்கள்.

காதல் மிக உயர்ந்தது !தெய்வீகமானது!அதற்க்கு எதுவும் தடை இல்லை!அதற்கென்று ஒரு தனி நேரம் உண்டு !அந்த நேரம் அமைவது மிகவும் அரிது !அமைந்து விட்டால் அதற்க்கு இணை எந்த உலகத்திலும் இல்லை! இது உறுதி அமைந்த சொற்கள் ! என்றும் இருப்பவை !

ஒரு பண்பான உயர்ந்த இலட்சியமான இரு உள்ளங்கள் நாடு மொழி எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து மிகவும் நல்ல மனமுடைய சுபாவும் ரிச்சர்டும் காதல் என்ற அன்பினால் இணைந்தனர் !

அவர்கள் திரும்பும் போது சுபாவும் ரிச்சர்டும் பின் சீட்டில் இருந்தனர் .

ரிச்சர்டின் கையை இறுக்கிய படி அவன் தோளில் சுபா சாய்ந்த விதம் பார்த்து ஜான் கேட்டான் .

ஹே! வாட் ஈஸ் கோயங் ஆன் ! ஆற யு இன் லவ் !

எஸ்! என்றாள் சுபா !

ரிச்சர்ட் முகம் பார்த்து ‘கங்கிராட்ஸ் ரிச்சி! என்றான் .

பின்னால் ஜெனியின் முகம் பார்த்து ‘ஹே ! ஜெனி!வாட் ஹாபேன் டு யு ! என்றான் .

சுபாவின் அந்த ஒரு வார்த்தையில் கார் ஓட்டும் ஜெனி கண்களில் நீர் வழிந்தது ! நல்ல அண்ணனுக்கு நல்ல ஒரு தங்கை அவள் !

நத்திங் ஜான்! ஐ ஆம் ஹாப்பி!

இதுதான் நடந்தது செல்வி ! இப்போ நான் என்ன செய்யணும்? அக்கா அம்மா அப்பாவுக்கு எப்போ சொல்லணும் !

மாதுவும் நீயும் தான் வழி சொல்லணும் .

கவலைப் படாதே சுபா !நாளை மாது வருவான் .நாம் உட்கார்ந்து நல்ல பிளான் பண்ணி முடிவுக்கு வருவோம் .

சுபா!ரிச்சர்ட் நல்ல பையன் ! லாயர் வேற ! எனக்கு சந்தோஷமா இருக்கு!

அடுத்த நாள் .சனிக்கிழமை! மாது வந்தான் .

என்ன சுபா !ஒரு மாதிரியா உட்கார்ந்து இருக்கே! அந்த கலகலப்பையே காணோம் !

நான் சொல்றேன் மாது ! ஷி ஈஸ் இன் லவ் !

ஒ !மை காட் ! அப்படியா !

மாது! அவன் கையைப் பிடித்துக்கொண்டு சுபா அழ ஆரம்பித்தாள்.

நிறுத்து!நிறுத்து ! இப்பத்தான் ஒரு அழுகை முடிச்சு ஒருத்தி சிரிக்க ஆரம்பிச்சுருக்கா!அதுக்குள்ளே நீ ஆரம்பிக்கிரே !

மாது!வேணாம் ! என்னை வம்பிழுக்காதே ! அவ பிராப்ளம் சால்வ் பண்ண வழி பாரு! என்றாள் செல்வி .

முழு விஷயமும் சொன்னார்கள் .

அடிப் பாவி! நல்ல பையனா தான் தேர்ந்து எடுத்திருக்கே ! ரிச்சர்ட் ரொம்ப நல்லவன் ! நம்ப ஊரு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் .ஜான் சொல்லுவான் .

கவலைப் படாதே !இது நல்ல படியா நடக்க வழி பண்ணலாம் .

இல்லேடா மாது! நான் இன்னும் கொஞ்சம் அவனிடம் பேசணும் .ஆனாலும் அவன் நல்ல குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு.!

சுபா!நீ ரொம்ப ஸ்டெடி பொண்ணு! உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இதோ இது மாதிரி செல்வியைக் காண்பித்து உடனே எல்லாம் போச்சு என்று ஆரம்பிக்க மாட்டே! அதற்குள் செல்வி ‘மாது! மறுபடியும் வம்பிழுக்கிறே !வேணாம்! என்னை இழுக்காதே !அப்புறம் கத்திக் கலக்கி ஊரைக் கூட்டுவேன் !

அம்மா தாயி! நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் ! தயவு செய்து ஊரைக் கூட்டாதே ! என்று அவளிடம் ஓடினான் .

சுபாவுக்குச் சிரிப்பு தாங்கலெ! ஐயோ செல்வி! எங்களுடைய பெரிய அதிர்ஷ்டம் நீ எங்களுக்குக் கிடைச்சு இருக்கே!

அதே சமயம் அவர்களது அன்பையும் சீண்டல் கலந்த உரசலையும் மிக ரசித்தாள். அதற்குள் கதவு மணிச் சத்தம் கேட்டது .

வெளியே ரிச்சர்ட் ,ஜான் ,ஜெனிபர் நின்று கொண்டிருந்தார்கள் .

கங்கிராட்ஸ் ரிச்சர்ட் ! என்று மாது அவனைக் கட்டித் தழுவினான் .

நான் திங்கள் அன்று கலிபோர்னியா போறேன் யுனிவேர்சிடியிலே ஜாயின் பண்ண ! சோ ! இந்த வீகெண்ட் எல்லோரும் சேர்ந்து இருக்கலாம் என்று பிளான் பண்ணி இருக்கோம்.

ஒகே !எங்க போகலாம் ! இப்பதான் நாம எல்லோரும் ஜோடி சேர்ந்து இருக்கோம் . என்ன சுபா! என்றான் மாது .

சுபாவுக்கு வெட்கமாகப் பொய் விட்டது!

சுபா சொன்னாள். மறுபடியும் பெயின் பிரிட்ஜ் தீவுக்குப் போகலாமா !

பியுஜெட் சவுண்ட் என்ற அற்புதமான அழகான நீர்பரப்பிர்க்கு இடையில் உள்ள அருமையான தீவுகள் சியாடிலின் தனிப் பட்ட அழகு!

காதலர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் இடம் எனச் சொல்லலாம் .

வாவ் ! போகலாம் என்று தீர்மானம் செய்து இவர்கள் கார் அந்தக் கப்பலோடு பெயின் பிரிட்ஜ் தீவுக்கு மிதந்தது .

சியாட்டில் நகரத்தை விட்டு அந்த பெர்ரி நீர்பரப்பில் நகர நகர ஊரின் அழகு இன்னும் நன்றாகத் தெரிகிறது !சுற்றி உள்ள மவுண்ட் ரேயனியர் போன்ற மலைகள் ,ஸ்பேஸ் நீடில் ,மலைக்குன்றில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் ஒரு பெரிய ஓவியத்தை நேரில் பார்ப்பது போல இருக்கிறது!

அதுவும் பெர்ரியின் மேல் டெக்கில் மூன்று ஜோடிகள் தங்களை மறந்து இயற்கையை ஒரு மனமாக ரசித்துக்கொண்டிருந்தனர் !இவர்களைப் போல நிறையப் பேர் .பியுஜெட் சவுண்ட் தண்ணீர் பரப்பில் கனவு போல அந்தக் கப்பல் மிதந்து சென்றது!

ரிச்சர்ட் சொன்னான் .

சுபா!என்னால் யுனிவர்சிடியை மாற்றிக் கொண்டு இங்கேயே உங்கள் யுனிவர்சிடிக்கு வர முடியும்.

அது உனக்கும் தெரியும் .உன்னுடைய வரப்போகும் தீர்மானங்கள் என்ன என்பதைப் பொருத்தது .

உன்னுடைய பிரபோசல் களுக்கு தகுந்த மாதிரி செயல் பட முயற்சிப்பேன்.என் பெற்றோரும் தங்கையும் சரி சொல்லுவார்கள் .

சுபா சொன்னாள்.

எனக்கு மிகவும் அதிர்ஷ்டம் !உன் போல நல்ல மனதுடைய நண்பன் என்னிடம் இவ்வளவு ஈடுபாடு கொண்டதோடு என் பழக்க வழக்கங்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து என்னிடம் ரொம்ப அன்பாக இருக்கிறாய் !உன் பெற்றோரும் தங்கையும் என் மேல் ரொம்பவும் ஆசையாக இருக்கிறார்கள் .

ரிச்சர்ட் சொன்னான் .

நீ என் காதலி என்பதால் மட்டுமல்ல ! நாளை நாம் இணைந்து கணவன் மனைவி ஆன பிறகும் உன்னுடைய விருப்பங்களும் ஆசைகளும் பண்பாடுகளும் என்றும் குறையாமல் இருக்க நான் இருப்பேன் .இது உறுதி !

மை டியர் ரிச்சர்ட் ! இதற்க்கு மேல் உன்னைக் காக்க வைக்க விரும்பவில்லை !நான் எங்கு தேடினாலும் உன் போன்ற மிக நல்ல மனதுடையவன் எனக்கு கிடைக்க மாட்டான் .நீ எனக்குக் கொடுக்கும் சலுகைகளை நான் என் சுயநலன்களுக்காக பயன் படுத்த மாட்டேன்.

இந்தக் கணம் முதல் உனக்காக நான் வாழ்வேன்!உனக்காக நான் இருப்பேன்! நம் வாழ்க்கையை ஒரு லட்சியமாக வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உன்னிடம் எனக்கு பரிபூரணமாக உள்ளது !

அவன் அருகில் இருந்த சுபா உணர்ச்சிப் பரவசத்தோடு அவனை இறுகிக் கட்டித் தழுவி அவன் மார்போடு தன் தளிர் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

இந்த நேரத்தை நான் மறக்க முடியாது சுபா! என்று ரிச்சர்ட் அவளை இறுகத் தழுவிக் கொண்டான் !

வாவ் !வாட் எ மோமென்ட்! என்று ஜான்,ஜெனி ,செல்வி, மாது அவர்களை சூழ்ந்து கொண்டனர் .

பார்டி டு டே! என்று ஜான் ஜெனியுடன் கூவினான் !

பெயின் பிரிட்ஜ் தீவில் உள்ள நல்ல உணவு விடுதியில் மதிய உணவு உண்டனர் . செல்வி சொன்னாள்.

இந்த அருமையான நேரத்தில் எனக்கு ஒரு ஆசை இருக்கு ! நிறைவேற்றுவீர்களா ! எனக் கேட்க

‘”நிச்சயமாக ” என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள் .

நம் மூன்று திருமணங்களும் ஒரே மேடையில் சென்னையில் நடக்கும் .அதற்க்கு உண்டான ஏற்பாடுகள் என் பெற்றோரும் அண்ணன்களும் செய்வார்கள் . சரியா !

நாங்களும் பரிபூரணமாக சம்மதிக்கிறோம் என்றார்கள்.

அந்த நாள் நிச்சயம் வரும் ! 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது புதுசான்னு தெரியலே! தனிமை உணர்வு என்னையே மறு முறை பார்க்கத் தூண்டியது!. தனிமையின் மிருதுவான உறுத்தல்களும் ,அதனுடைய உணர்வுகளும் ஏற்படுத்தும் இனிய அசைவுகள் ...
மேலும் கதையை படிக்க...
(இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்) ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. புவனா ! இவ்வளவு நெருக்கமா ஒரு பெண்ணோடு உட்கார்ந்ததே இல்லை! அப்படி இருந்தா எப்படி என்று இப்பதான் புரியறது! உங்க வீடு வரை கூட ஸ்கூட்டர் ஓட்ட முடியாது! இனிமே இப்படிதான் இருப்பாயா? ...
மேலும் கதையை படிக்க...
உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை அவனும் மனிதன்தானே என்று சொல்லிவிட முடியும் . நினைவுகளின் பரிமாணங்கள் அளந்து சொல்ல முடியாத ஒன்று ! எழுதலாம் . கடலுக்குள் ஆழமிருக்கிறது! ஆகாயத்தில் தூரமிருக்கிறது ! ஆனால் அவன் மனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
மகாலட்சுமி கோயில் மும்பை .மெயின் ரோடு வரைதான் கார் போனது.சற்றே குறுகலான இரு பக்கம் கடைகளும் கூட்டமும் மிகுந்த அந்த வழியில் சென்றோம். அர்ச்சனை தட்டுடன் கடைகளில் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணன் சார் ! உங்களை எம்டி கூப்பிடறார் ! மாணிக்கம் சொல்லிட்டுப் போனான். கதவைத் தட்டிவிட்டுக் கண்ணன் 'உள்ளே வரலாமா ' என்று கூறி எம்டி அறைக்குள் நுழைந்தான் . 'கண்ணன்! நீ டெல்லி வரைக்கும் போகணும் பிராஜெக்ட் விஷயமா நேரா வரச் சொல்லிட்டாங்க ...
மேலும் கதையை படிக்க...
நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும். ஒரு முறை வண்ணார் பேட்டையிலுள்ள என் தாத்தாபாட்டி, பெரியப்பா சித்தப்பா காண சென்றோம். நெல்லை டவுனில் என் பெரிய மாமனார் வீட்டில் அவளை ...
மேலும் கதையை படிக்க...
மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும் மக்களின் சுறுசுறுப்பு இவர்களிடம் இல்லை! எதோ ஒரு சலனம்! அவர்களின் இரண்டு "காரியான்கள்" கூட அவர்களின் கை இறுக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருந்தன ! சலனமும் ...
மேலும் கதையை படிக்க...
சிக்னல் அருகே கார்கள் சிகப்பு விளக்குக்காக நின்றன.ஊர்திகளும் பயிக்குகளும் ஓடி நின்ற வேகம் எழுந்த புழுதி லேசாகப் பறந்து மற்ற வண்டிகளில் படிந்தது . அந்த முதியவர் முடியாத நிலையில் இருந்தால் கூட உயிர் வாழும் அந்த ஒரு வேளை உணவிற்காக கால் கடுக்க நின்றார். எத்தனையோ ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும் ,அவரவர்களுக்கு உலவுவதற்கும் ஓடுவதற்கும் ,உட்கார்ந்து ரசிப்பதற்கும் தனிமை உண்டு.மாலையின் குளிர்ந்த அந்தப் பொழுதில் சாலை விளக்கொளிகள் சூரியன் மறைவதைப் பொறுத்து மிளிர ...
மேலும் கதையை படிக்க...
உன்னோடு நான் பேச மாட்டேன் ! என்ற சிறிய பேப்பர் துண்டு அவன் மேசையில் இருந்தது. முத்தான எழுத்துக்கள்! அவன் நினைத்துக்கொண்டான் 'என் மேல் உனக்குள்ள உரிமை என்னையே கட்டுப் படுத்துவது போல 'பேச மாட்டேன்' என்ற எழுத்துக்கள் . அவன் 'நான் என்ன செய்தேன்! ...
மேலும் கதையை படிக்க...
அனுவும், அவள் விரும்பிய அவனும்
மணம் கமழும் மலர்கள்
ரமேஷ் தேடிய ராகமாலிகா
காற்று, கடல், கண்மணி
ஓடும் ரயிலின் ஓரத்து ஜன்னல்
என் மனைவி சொன்ன கதை
ரயில் நிலைய பெஞ்சு
உயிரிலும் உயர்வாகும் உறவுகள்
இவள் ஒரு காதம்பரி
உன்னோடு நான் பேச

பேச நினைத்தேன் பேசுகிறேன் மீது 2 கருத்துக்கள்

 1. sekaar says:

  ரொம்ப நாள் ஆயிற்று இது போன்ற கதைகளை வாசித்து. எழுத்து நடை நன்றாக உள்ளது.

  • P.Sankaran says:

   தங்கள் அருமையான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி .
   வாழ்த்துக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)