பார்க்காமலே – ஒரு பக்க கதை

 

மாலினிக்கு சாட்டிங்கில் பழக்கமானான் தியானேஷ். சாட்டிங் பழக்கம் அவர்களை ஒருவரை ஒருவர் காதலிக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருந்தது. மாலினியின் தோழி கீதா அவளை எச்சரித்தாள்.

படு கிழங்கள்கூட இப்படி சாட்டிங்கில் ஏதாவது இளைஞன் படத்தைப் போட்டு இளம்பெண்களிடம் ஜொள்விட்டு பேசுவதாக

ஆனால் மாலினி நம்புவதாக இல்லை. ”வெப் கேமராவில் உன் தியானேஷை வரச் சொல்லுடி” என்றதற்கு அவன் ‘நாம் பார்க்காமலேயே லவ் பண்ணுவோம், இறுதியில் சந்திப்போம்” என்று கூறவும் மாலினிக்கும் சந்தேகம் தட்டியது.

கீதாவிடம் ஐடியா கேட்டாள்.

கீதா ஒரு ஐடியா கூறினாள். கம்ப்யூட்டரில் இல்லாமல் உங்கள் கைப்பட ஒரு கடிதம் அனுப்புங்கள் என்று மெசேஜ் தட்டச் சொன்னாள். அவனும் அனுப்புவதாகச் சொல்லி மெசேஜ் அனுப்பினான்.

இரண்டு நாளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கடிதம் வந்தது.

கடிதத்தைப் படித்த கீதா சொன்னாள்.

”அடியேய் உன் ஆளூ ஆதாம் ஏவாளுக்குப் பொறந்த மூத்த பையன்டி, வயசு எப்படியும் அறுபதுக்கு மேலிருக்கும்”

எப்படிச் சொல்றே?

தமிழ் எழுத்தை உன் ஆளு எப்படி எழுதியிருக்கிறார் பாரு. எழுத்துச் சீர்திருத்தம் வர்றதுக்கு முன்னாடி வர்ற முறையில இதை பயன்படுத்திருக்கிறார். நம்ம ஏஜ் பசங்க இப்படி எழுதவே மாட்டாங்க”

என்று கீதா விளக்கவும் , கம்ப்யூட்டரில் அமர்ந்து அந்த ஜொள் ‘கிழவனுக்கு’ கெட்ட கெட்ட வார்த்தையில் மெயிலை தட்ட ஆரம்பித்தாள் மாலினி

- வி.சகிதா முருகன் (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், ஆகா, மனிதனின் கருணையே கருணை! எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தேடிப்பிடித்து தூண்டி முள்ளில் வேறு குத்தி, தண்ணீருக்குள் அல்லவா விட்டிருக்கிறான்? என்றது நன்றியுடன். அட முட்டாளே! கருணையாவது, ...
மேலும் கதையை படிக்க...
‘டேய்…நாளைக்கு என்ன செய்யப்போற?’ – ரவியைக் கேட்டான் சிவா. ‘வழக்கம் போலத்தான்.அப்பா, அம்மாவுக்காக, போய் தலையைக் காட்டிட்டு, பொண்ணு பிடிக்கலேன்னு சொல்லிடப் போறேன்!’ ”நியாயமாடா இது? வீட்டிலேயே விஷயத்தைச் சொல்லி தடுக்காம, பொண்ணு பார்க்குற வரைக்கும் போய் அவங்ககிட்டே சொல்றே…அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்!” ‘உண்மைதாண்டா. ...
மேலும் கதையை படிக்க...
கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதி;ல் இருவருக்கும் தயக்கம் இருந்தது. ஓவ்வொரு தடவையும் மனம் திறந்து சொல்லிவிடுவோமா என்று நினைக்கும் போதெல்லாம், ...
மேலும் கதையை படிக்க...
பாக்கெட்டிலிருந்த சில்லறையை எடுத்து டீக்கு கொடுத்துவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தான் 'ஷாம்'. வீதியின் இரு பக்கமும் வண்டிகளின் நெரிசலை பார்த்ததும், பயந்து பம்மிக்கொண்டே முன்னாடியிருந்த பஸ் ஸ்டாப்புக்கு தாவி ஓடிச்சென்று நின்று கொண்டான். ஒரு மர நிழலில் பஸ்ஸுக்காக காத்திருந்த அவன், ...
மேலும் கதையை படிக்க...
காட்சி 1: "என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!" "இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்" "என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?" "சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி" "யார் மேல தப்பு?" "ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். ...
மேலும் கதையை படிக்க...
கருணை – ஒரு பக்க கதை
முடிவு – ஒரு பக்க கதை
கண்ணில் தெரியுது காதல் – ஒரு பக்க கதை
பழைய ராகம்
யார் மேல தப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)