Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பழைய ராகம்

 

பாக்கெட்டிலிருந்த சில்லறையை எடுத்து டீக்கு கொடுத்துவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தான் ‘ஷாம்’.

வீதியின் இரு பக்கமும் வண்டிகளின் நெரிசலை பார்த்ததும், பயந்து பம்மிக்கொண்டே முன்னாடியிருந்த பஸ் ஸ்டாப்புக்கு தாவி ஓடிச்சென்று நின்று கொண்டான்.

ஒரு மர நிழலில் பஸ்ஸுக்காக காத்திருந்த அவன், வாட்சில் நேரத்தை சரி பார்த்தவண்ணம் தூரத்தில் பஸ் ஏதாவது தென்படுகிறதா என வீதியை வெறித்துப் எட்டிப் பார்த்துக்கொண்டான்.

டவுணுக்கு செல்லும் பஸ் ஏகப்பட்ட பயணிகளை அடைத்து ஏற்றிக்கொண்டு முக்கி முனங்கிக்கொண்டே வந்துசேர்ந்தது. அங்கு காத்திருந்தவர்களோடு ஷாமும் அடிச்சுப்புடிச்சி தாவி ஏறிக்கொண்டான்.

“பின்னடியே உரசிக்கிட்டு நிற்காம முன்னாடி போங்கய்யா…” என ஒருபக்கம் கண்டக்டர் கூச்சலிட்டார்.

“டவுணுக்கு ஒரு டிக்கெட்” என அவரிடம் காசை எட்டி நீட்டினான் ஷாம். டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு அந்த நெருசலில் ஏதோ முனங்கிக்கொண்டு போனார் கண்டக்டர்.

“டவுண் ஜீ,வி ஹோஸ்பிட்டல் வந்துருச்சு… இறங்கவேண்டியவங்க இறங்கிக்கோங்க” என்று விசிலோடு கத்தினார் கண்டக்டர்.

ஷாம், அந்த தனியார் ஹோஸ்பிட்டலில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ரிஸெப்சன் பணியாளனாவான். அவனும் இன்னும் சிலரும் அந்த ஸ்டாப்பிலே இறங்கிக்கொண்டார்கள்.

“அடுத்த மாசம் எப்படியாவது ஒரு பைக் வாங்கிடனும்… பஸ்ல வர்ரதுங்கிறது பெரும் பாடாப்போச்சு ச்சே” என மனதுக்குள் அழுத்துக்கொண்டே அந்த ஹோஸ்பிட்டல் உள்ளே நுழைந்தான்.

டியூட்டி டைம் ஷேஞ்சாகி ரிஸெப்சனுக்கு வந்த ஷாம், மேசையில் அங்கும் இங்குமாக கிடந்த பைல்களை ஒழுங்குபடுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான். “எஸ்கியூஸ்மி…, டொக்டர் சரவணன் சேரை சேனல் பண்ணுவதற்க்காக புக்கிங்க் பண்ணியிருந்தோம்” என்றவாறே கூறிக்கொண்டு ஒருத்தன் முன்னாடி நின்றிருந்தான்.

“உங்க பெயரு?”

என கேட்டுக்கொண்டே புக்கிங் பைலை புறட்டினான் ஷாம்.

வைபோட பெயரை கொடுத்திருந்தோம் பெயர் “ரீனு” என்றான் அவன்.

ஷாம் அவனை நிமிர்ந்து ஒருமுறை பார்த்துவிட்டு “ஓகே வெய்ட் பண்ணுங்க சேர்… டொக்டர் இப்ப கூப்பிடுவாரு” என புக்கிங் சீட்டோடு அட்மிஷன், பில் என எல்லாவற்றையும் பிரிண்ட் எடுத்து அவனிடம் கொடுத்தான் .

அவன் அவற்றை வாங்கிக்கொண்டு சென்ற பின்னர், ஷாம் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்க அவனது பள்ளிப்பருவ ஞாபகங்கள் மறுபடியும் அவனது நினைவுக்கு திரும்பி வந்தது.

ஷாம் பாடசாலையில் பத்தாம் வகுப்பில் படிக்கும்போதே ஒரு பெண்ணை லவ் பண்ணியிருந்தான். அவள் பெயரும் ‘ரீனு!’.

ஷாம் ‘தன்னை லவ் பண்ணுவதாக அரசல்புரசலாக ரீனும் எப்படியோ தெரிந்துகொண்டாள்’. அவளும் அவனை ஏதோ காரணமின்றி விரும்பியிருந்தாள். ஆனால் அவளது குடும்ப கௌரவம் கருதி எதையுமே வெளியே காட்டிக்க விரும்பாமலே இருந்துவிட்டாள். ஷாமும் உயர்தரம் வரை படித்து முடித்த கையோடு அவளிடம் லவ்வை சொல்லி விடலாம்னு பலதடவை ட்ரை பண்ணியும் எல்லாமே அவனுக்கு பெய்லிருலே வந்து முடிந்தது.

பைனல் எக்ஸாம் நடந்து முடிந்த கையோடு எல்லோரும் அப்படியே பிரிந்தும் சென்றுவிட்டனர்.

“இனியும் சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணக்கூடாது” என ஷாம் ‘தனது லவ்வை அவளிடம் எப்படியாவது சொல்லியாக வேண்டும்’ என ஒருநாள் முடிவு செய்து லெட்டர் ஒன்றையும் எழுதி நண்பன் ஒருவன் மூலமாக ரீனுக்கு அனுப்பி வைத்திருந்தான்.

அதை வாங்கி படித்த ரீனு பெரும் சந்தோஷப்பட்டுகொண்டாள். இருந்தும் தன் குடும்ப நிலவரத்தை நினைத்து அவள் ஷாமுவை கொஞ்ச நாள் வெய்ட் பண்ண சொல்லி அப்போதைக்கு அதையே பதிலாகவும் அனுப்பி வைத்திருந்தாள் ரீனு.

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி சில வருடங்களாகவும் சுழன்று முடிந்தது. ரீனுடைய பதிலுக்கா காத்திருந்து உள்ளுக்குள்ளே காதல் கற்பனையோடு காத்திருந்த ஷாமுக்கு இறுதிவரை எந்தவொரு முடிவையும் – பதிலையும் ரீனு சொல்லவேயில்லை என்றாகிப்போனது.

பின்னர் ஷாமுக்கு ரீனுவை சந்திக்கும் வாய்ப்பு எதுவுமே கிடைக்காமல் போய்விட்டது. அவனும் பலநாள் காத்திருந்துவிட வீட்டில் வேலையில்லாமல் வெட்டியாக இருப்பதை சுட்டிக்காட்டி வீட்டாரும் நச்சரிக்க ஒருகட்டத்தில் வெளியூர் ஒன்றுக்கு சென்று மெடிக்கல் சென்டர் ஒன்றிலும் ஜொயிண்ட் பண்ணிக்கொண்டான்.

சில வருடங்களுக்கு பிறகு ‘ரீனுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதாக’ தன் நண்பன் ஒருவன் மூலமாக அறிந்துகொண்டான் ஷாம்.

அத்தோடு அவள் நினைவுகளிருந்து விலக முடியாமலே நாளுக்குநாள் தவிக்கவும் தொடங்கினான் ஷாம். ஊருக்கு வரும் சமயங்களிலும், தான் படித்த பாடசாலை வழியாக செல்லும்போதெல்லாம் முதல் காதலான ரீனுவின் நினைவுகளோடவே பித்துப்பிடித்தவன் போல் அழையதொடங்கினான் ஷாம்.

டெலிபோன் மணி அடிக்க திடிக்கிட்டு நினைவிலுருந்து சுதாரித்துக்கொண்டு எழுந்து போனை எடுத்தான். ஏதோ பேசிவிட்டு “ஓகே சேர்…” என வைத்துவிட்டு “ரீனுங்கிற பேஷண்ட் யாருங்க?… உங்களை சேர் உள்ள கூப்பர்ராரு” என பேஷண்ட் பக்கமாக பார்த்து சத்தமாக சொன்னான் ஷாம்.

அந்த பெண்ணுடைய கணவன் முதல் எழுந்து வந்தான். அவன் பின்னாடி தூரத்திலிருந்து எழுந்து நடந்து வந்தாள் ஒரு பெண். அவள் ரிஸெப்சனை நெருங்கி வந்தபோது எதர்ச்சியாக பார்த்தான் ஷாம்.

அது வேறு யாருமல்ல அவன் லவ் பண்ணிய அந்த பெண் ரீனுவேதான்…

ஒருநிமிடம் ஷாக்காகிப்போய் நின்ற ஷாமுடைய முகம் சிவந்துபோய் காணப்பட்டது. ‘அவளை பல கேள்விகள் கேட்கவேண்டும் – திட்டவேண்டும்!’ என அவன் நினைத்திருக்க, நிறைமாத கர்ப்பிணியாக அவள் வயிறு தள்ளிகொண்டிருந்த காட்சியை பார்த்ததும் என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனது கண்கள் பணிந்து புருவத்தை உயர்த்தி அவள் முகத்தை அப்பாவியாக இயலாமையின் தனத்தில் பார்த்து துடித்தான்.

ஷாம் என அடையாளம் கண்டுகொண்டு அவளும் அவனை பார்த்துவிட, முகஜாடையால் இங்கேதான் ‘இருக்கியா…? நலமா…?’ என மௌன மொழிகொண்டே பேசியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றால்.

அதற்கு அவனும் தலையசைத்துக்கொண்டே மீண்டும் தலையை குனிந்துகொண்டான்.

டொக்டர் ரூமுக்கு சென்ற அவர்கள் இருவரும் அரைமணிக்கு பிறகு திரும்பி வெளியே வந்தார்கள். ரீனுடைய கணவன் ரிஸெப்சன் முன்னாடியிருந்த சேரொன்றில் அவளை உற்கார வைத்துவிட்டு மருந்துகளை எடுத்து வருவதாக அவளிடம் கூறிவிட்டு சென்றான்.

தலையை உயர்த்தி ரிஸெப்சனிலிருந்த ஷாமை பார்த்தாள் ரீனு . ஷாம் சிறு புன்னகை இட்டுக்கொண்டே கைகளால் சைகை செய்து “செக்கப்பெல்லாம் நல்லபடியா முடிந்தாதா?” என அவளிடம் கேட்டான்.

அவளும் “ஹ்ம்..” என தலையை அசைத்துவிட்டு, “உனக்கு கல்யாணம் ஆச்சா?” என சைகை மூலமாக கேட்டால்.

“ஹ்ம்… ஆச்சு” என்றான் அவன்.

“எத்தனை குழந்தைகள்?” என மறுபடி கேட்டாள் அவள்

“ஒன்னு மட்டும் … மூன்று வயசு…” என பதில் சொன்னான் ஷாம்.

இருவரும் சைகை மூலமாகவே பேசிக்கொண்டார்கள்.

பார்மசிக்கு சென்ற அவள் கணவன் திரும்பி வந்தான். “ஓகேம்மா போலாம்” என்றான் . ரீனு எழுந்து அவன் பின்னாடியே நடக்கத் தொடங்கினாள். ஷாமை திரும்பி ஒருமுறை பார்த்தாள்.
கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டுருந்த அவனும் மெல்லிய புன்னகையோடு அவளுக்கு விடைகொடுத்தான் .

ஷாமுக்கு கல்யாணமாகி, குழந்தையும் இருப்பதாக நினைத்து நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் மனதுக்குள் சிரித்துக்கொண்டே ரீனு வெளியேறி டோர் வழியாக மறையும்போது, அதை தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த ஷாமுடைய புன்னகை முகம் மெதுமெதுவாக சோகத்தால் சுருங்கி மாறிவிட, அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடி மேசைமீது விழுந்தது.

அவள் சந்தோஷப்படுவாள் என்பதற்காகவே ‘கல்யாணமாகி, குழந்தை இருப்பதாக ஷாம் கூறியது அத்தனையுமே பொய் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்!’

இருபத்தைந்து வருடத்துக்கு பிறகு ஒரு டீக்கடையில் நரைமுடியோடு சடைத்த தாடியுமாக ஒருத்தர் உற்கார்ந்திருந்தார்.

அவருடை நண்பர் அவர் அருகே சென்று தோளில் தட்டிக்கொண்டே “50வயசாகியும் காதல் தோல்வியால் கடைசிவரை கல்யாணம் கட்டிக்காமலே இருந்துட்டே… உனக்கு என்னதான்டா அப்படியொரு வைராக்கியம்…? இன்னைக்காவது உண்மையை சொல்லுடா…?” என கேட்டார்.

டீயை குடித்துக்கொண்டே திரும்பி பார்த்து “முதலும் முடிவுமாக தோற்ற காதல்… வலியான அந்த இன்பத்தில் தோற்காமலே வாழ்ந்துவிட்டேன்… இனியும் வாழ்ந்துவிடுவேன்…!” என்று ‘ஷாம்’ கூறி முடிக்கும்போதே

” பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

பாவமுண்டு பாவமில்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை…”

அந்த நொடி டீக்கடையில் ஒலித்த அந்த பாடலானது, ஷாமுக்காகவேண்டியே ஒலித்ததுபோல் அடங்கியது…! 

தொடர்புடைய சிறுகதைகள்
"பொழுதுபோக்கு அம்சங்களுக்கு எங்க ஊரை மிஞ்சவே முடியாது என்றிருந்த, ஒரு காலம் அது..." சுன்னத்து கல்யாண வீட்டிலும், ஏனைய விசேஷ இன்னபிற கலை நிகழ்ச்சிகளிலும் இன்னிசைக் கச்சேரிகள் இடம்பெற்றுவந்த காலம். 'என்னமோ தாங்கள்' எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ் என்பதை போன்ற நினைப்பில் தெருவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பக்ரி; யாராலும் எளிதில் சந்திக்க முடியாத ஒரு பிசியான மனுசன். அப்படியே சந்தித்துதான் ஆகவேண்டுமென்றால் ஊருக்குள் நடக்கும் இரண்டு விசேஷங்களில்தான் ஆளைக் காணாலாம்!. ஒன்று திருமண வீடு, இன்னொன்று எழவு வீடு. இந்த இரு வீடுகளில் ஏதாவது ஒன்றில் 'உதவி ஒத்தாசை பன்னுவதற்காக ...
மேலும் கதையை படிக்க...
அன்றொரு மதியம். புழுக்கம் கதகதப்பை தரவும், கடலோரமாக சென்று சற்று இளைப்பாறலாமென எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் வங்கக்கடலின் விளிம்பவள் நீல நிறத்தில் மிதந்து கொண்டிருந்தாள். கடல் அருகில் அதன் கரையோரமாக நெடு ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை சிறு மழைத்துளிகளோடு சுபஹ் சொழுகைக்கான பாங்கும் ஒலித்தது. கையில் ஒரு தடியோடு தட்டுத்தடுமாறி பள்ளிவாயல் கேட்டில் ஒரு கையை வைத்து உள்ளே நுழைந்தார் அபூபக்கர் டைலர். மோதினார் மைக்கில் பாங்கை சொல்லிவிட்டு திரும்பி பார்த்தார். எப்பவும்போன்றே, அபூபக்கர் டைலர் மட்டும் முதல் ...
மேலும் கதையை படிக்க...
பூஞ்சோலை எனும் பெயர் கொண்ட அழகியதொரு கிராமம்தான் எனது கிராமம். இயற்கை கொஞ்சும் பச்சை புல்பூண்டுகளும் மஞ்சல் மணல் தெருக்களும். கிராமத்தின் ஒவ்வொரு மண் குடிசைகளிலின் முற்றத்திலும் வாகை, புங்கான், மாமரம் முந்திரிகை தேக்கு என அக்கிராமே மரங்களால் சூழ்ந்தே செடிகொடிகளோடும், ...
மேலும் கதையை படிக்க...
பிச்ச காக்கா
தண்ணீர் டேங்கி
பிசாசக்கை
அபூபக்கர் டைலர்
சேகு மாமாவின் அம்பாஷ்ட்டர்

பழைய ராகம் மீது 2 கருத்துக்கள்

 1. Ramesh says:

  சூப்பர்

 2. Ganesh Manika says:

  நல்ல மௌனமான காதல் கதை.
  கதைக்கு ஏற்ற பாட்டுகூட.
  பைக் பற்றிய சிறு குறிப்பு தேவையில்லை என தோணுது.
  மொத்தத்தில் பிடித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)