Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நீயே எந்தன் புவனம்

 

(காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லைத்தான்,ஆனால் என்னவளுக்கு என் மனதில் உள்ளதை ஏதாவது முறையில் புரிய வைக்க வேண்டுமே! )

ரொரன்ரோ ஈற்ரன் சென்ரரில் ரொம்பவும் பிஸியான அந்தப் புத்தகசாலையில் ”வேலன்டையின்” கார்ட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதம் விதமான வர்ணங்களில் அவை, இருந்தாலும் எனக்குப் பிடித்தமான, பொருத்தமான வார்த்தைகள் அடங்கிய கார்டைத் தேடிக்கொண்டிருந்தேன்.

எப்படியும் வேலன்டைன் கார்ட் ஒன்றை, இன்று அவளுக்கு அனுப்பி விடுவது என்ற திடமான முடிவோடு தான் ,இங்கே வந்திருந்தேன். என் மனம் படும் அவஸ்தையை ,இனியும் என்னால் தாங்கமுடியாது. அவள் என்னை விரும்புவாளா ,இல்லையா என்பதை விட நான் அவளை மனதார விரும்புகின்றேன் என்பதையாவது அவளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எப்படியும் காதலர்தினத்தில் கிடைக்கும் ,இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடக்கூடாது.

ஒருவேளை நான் எடுத்திருக்கும் என்னுடைய ,இந்த முடிவு அவளுக்குப் பிடிக்காமற் கூடப் போகலாம். அதற்காக அவள் என் மேல் கோபங் கூடப்படலாம்.

‘நட்பிற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?” என்று கேட்டு சில சமயம் அவள் என்னை அவமானப் படுத்தலாம்!

படுத்தட்டுமே! அதற்காக நான் ,இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லும் உரிமை எல்லோருக்கும் ,இருக்கிறது, ஆனால் அதை ஏற்பதும், மறுப்பதும் மற்றவரைப் பொறுத்தது. காதலுக்கும் நட்பிற்கும்; வித்தியாசமே தெரியாமல் தினமும் செத்துப் பிழைப்பதை விட அவள் என்ன தான் என்னைப் பற்றி நினைக்கின்றாள் என்பதையாவது அறிந்து கொள்ளலாமே. ஆகமிஞ்சினால் எங்களுக்குள் ,இருக்கும் ,இந்த நட்பு மேலும்; தொடராமல் உடைந்து போகலாம். போகட்டுமே. யாருக்கு வேண்டும் அவளில்லாத ,இந்தப் பாலைவன வாழ்க்கை?

‘கவிதா” மூன்றெழுத்தில் அவள் பெயர் இருந்தது. எத்தனையோ ,இளைஞர்களின் எண்ணங்களில் அவள் ஒரு புதுக்கவிதையாய் ,இருந்தாள். அவள் முதன்முறையாக வேலைக்கு வந்த போது தான் அதுவரை தூங்கிவழிந்து கொண்டிருந்த எங்கள் ஆபீஸே விழித்துக் கொண்டது. ஏதோ புதிதாகப் படம் ரிலீஸானது போல எல்லோரும் அவளைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். நான் மட்டும் அலட்சியமாய் இருந்தேன். சைவக்கொக்கு என்று என்னைப் பற்றிச் சிலர் தங்களுக்குள் கிண்டலாகப் பேசிக் கொள்வது எனக்குத் தெரியும், ஆனாலும் வேண்டாம் இந்தப் பெண்கள் விவகாரம் என்று மௌனமாய் இருந்து விட்டேன்.

ஊரை விட்டு இந்த நாட்டிற்கு வந்த போது ‘காதல் கீதலென்று எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாதே” என்று அம்மா அழாக்குறையாய்ப் புத்திமதி சொல்லிவிட்டது அடிக்கடி என் நினைவிற்கு வரும். போதாக் குறைக்கு பணம் அனுப்பு என்று அப்பாவின் கடிதம் மாதம் தவறாமல் வரும். கடிதத்தின் முடிவிலே ‘கல்யாணமாகாமல் உனக்கொரு தங்கை இருக்கிறாள் என்பதை மறந்திடாதே” என்று எழுதி பேனாவால் அண்டலைன் பண்ணியிருப்பார். எனது சம்பளத்தில் சராசரி வாழ்க்கை தான் என்னால் வாழமுடியும் என்ற நிலையில் காதல் ரொமான்ஸ் என்கிற ஆசைகள் எல்லாவற்றையும் மெல்ல எனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டேன்.

அன்று எங்கள் ஆபீஸ் கிறிஸ்மஸ் பார்ட்டி. ஜாஸ் ,இசை ,இதமாய்க் காற்றிலே மிதந்து வந்தது. மாலை நேரத்து மின்விளக்கின் மெல்லிய ஒளியில் கண்களை மூடி அந்த ஜாஸ் இசையை ரசித்துக் கொண்டிருந்தேன்.

‘எக்ஸ்க்யூஸ் மீ” என்ற ,இனிய குரல் ஒன்று தட்டி எழுப்பியது.

ஜாஸ் ,இசையில் குயில் ஓசையா? நிமிர்ந்து பார்த்தேன் கவிதா! கண்முன்னே சிரிக்கும் அழகுநிலாவாய் நின்றாள்.

‘யாழ் ,இனிது குழல் ,இனிது என்பார் கவிதாவின் இனிய மொழி கேளாதார்” என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

‘,இங்கே உட்காரலாமா?” எதிரே இருந்த நாற்காலியைக் காட்டிப் புன்னகைத்தாள். முழுமதி தான் அவள் வதனமோ? முத்துத் தான் உதிர்ந்ததோ அவள் மோகனப் புன்னகையில்?

‘ஆம்” என்று தலையை மட்டும் அசைத்தேன் அந்தப் புன்னகையின் மயக்கத்தில்.

புதுசா பூத்த பூ மாதிரி ஆரேஞ்சுநிறச் சேலையில் கவிதா ரொம்ப அழகாய் எளிமையாய் இருந்தாள். எந்த ஒரு ஆணையும் ஒரு முறை நிமிர்ந்து பார்க்க வைக்கும் அழகு அவளிடம் குடிகொண்டிருந்தது..

அவளது அடக்கமான தோற்றம், படிப்பு, புத்திசாலித்தனம் எல்லாமே இது தான் பெண்மையின் இலக்கணமோ என்று என்னை ஒருகணம் எண்ண வைத்தது.

அவளைப் பாராட்டு என்று மனசு அடித்துக் கொண்டாலும் வார்த்தைகள் வெளியே வரமறுத்தன.

அந்த மேசையைச் சுற்றி இருந்த எல்லோரிடமும் அவள் சிரித்த முகத்தோடு சகஜமாகவே பழகினாள். பார்ட்டி நடக்கும் போது அவள் ஏதோ ஜோக்கடிக்க என்னைத் தவிர எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

நான் என்னையே மறந்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தற்செயலாக நிமிர்ந்து என்னைப் பார்த்தவள், ‘என்ன மிஸ்டர் வஸந், நீங்க சிரிக்கவே மாட்டீங்களா?” என்றாள்.

அதைக் கேட்டு எல்லோரும் மீண்டும் சிரித்தார்கள். எனக்கோ சங்கடமாய்ப் போய்விட்டது. என் முகம் சட்டென்று வாடியதைக் கண்டதும் அவள் மௌனமானாள். பார்ட்டி முடிந்து போகும் போது அவள் என் அருகே வந்து சிறிது தயங்கியபடி, ‘ஸாரி ஃபோ தற்” என்றாள்.

‘எதுக்கு?” ஏதும் புரியாமல் கேட்டேன்.

‘நடந்ததுக்கு. உங்க மனசை நோகடிச்சதற்கு.”

‘நோ…நோ…ஐயாம் ஓகே” பெருந்தன்மையாய் மறுத்தேன்.

அன்று இரவு முழுவதும் கண் மூட முடியாமல் அவள் தான் என் கண்ணுக்குள் நிறைந்து நின்றாள். ஏதோ சொல்ல வேண்டும் என்று தயங்கிக் கொண்டு அவள் என் அருகே வந்து நின்றது, என்னைப் பார்த்து ‘ஸாரி” சொன்னது, அதில் கூட எனக்குச் சந்தேகம் இருந்தது அவளது வாய் பேசியதா அல்லது கண்கள் பேசியதா என்பதில், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தேன்.

என் நினைவெல்லாம் கவிதாவே!

பசியில்லை, தூக்மில்லை, அவள் நினைவில் ,தமான அந்த சுகத்தில் என்னையே மறந்தேன்!

அதன் பின், நான் நானாகவே ,இல்லை! எனக்குள் என்னை அறியாமலே பல மாற்றங்கள். என்னவென்று எனக்கே புரியவில்லை. ஒருவேளை இதைத் தான் காதலென்பதோ?

காதல் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று தான் கவனமாய் இருந்தேன். ஆண்டவன் ஏன் தான் அவளை இத்தனை அழகோடும் நல்ல பண்போடும் படைத்தானோ தெரியாது! படைத்தாலும் பரவாயில்லை எங்கள் ஆபீசுக்கு ஏன்தான் அவளை அனுப்பிவைத்தானோ? அவள் என்னைத் தொடாமலே சித்திரவதை செய்தாள்.

அன்று பனி கொட்டிக் கொண்டிருந்தது. பாதைகள் நல்ல நிலையில் இல்லாதபடியால் போக்கு வரத்து தடைப்பட எல்லோரும் நிறுவனங்களை நேரத்துடன் மூடிவிட்டு அவசரமாக வீடு திரும்பினார்கள்.

இவைற் டயமன் வாசனை அருகே வர நிமிர்ந்து பார்த்தேன்.

‘வஸந் உங்க கிட்டே ஒரு உதவி கேட்கலாமா?”

‘எ…ன்ன?”

‘வந்து…. லைட்சிக்னல் பிரச்சனையாலே ஸப்வே எல்லாம் எங்க ரூட்லே ஓடலையாம், அதனாலே வீட்டிற்குப் போகமுடியலை, நீங்க அந்தப் பக்கம் தானே போவீங்க, எங்க வீடு வரைக்கும் எனக்கு ஒரு ‘லிப்ட்” தர முடியுமா?

என்னை அறியாமலே ‘ஆமா” என்று தலையாட்டினேன். இன்ப அதிர்ச்சியில் என் உதடுகள் ஒட்டிக் கொண்டன.

வாசலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரை நோக்கிப் போகும் போது உறைபனியில் அவளது பாதஅணி சறுக்கவே அவள் விழுந்து போகமல் சட்டென்று அருகே வந்த எனது தோள்களைப் பற்றிக் கொண்டாள். நானும் விழுந்து போகமல் என்னை நிலைப் படுத்திக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டேன்.

“ஸாரி” என்றாள் தன்னைச் சமாளித்துக் கொண்டு.

“ஆ யூ ஓகே?” அணைத்த கைகளை எடுக்காமலே கேட்டேன்.

“ஐயாம் ஓகே..! அவள் வெட்கப்பட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

என் ,இதயத்தில் ,இடம் பிடித்தவள் என்னருகே ,இருக்கிறாள் என்ற எண்ண உணர்வில் நான் கற்பனையில் மிதந்தேன். அந்த சந்தோகம் அதிக நேரம் நிலைக்கவில்லை. இவ்வளவு விரைவாக அவளது வீடு வரும் என்று நான் நினைக்கவில்லை. அவளது வீடு வந்ததும் அவள் கீழே ,இறங்கி நன்றி சொன்னாள். என்னை விட்டுப் பிரிந்து போகிறாளே என்ற அந்த ஏக்கத்தில் அவளது வீடு ,இன்னும் சற்றுத் தொலைவில் ,இருந்திருக்கலாமே என்று கூட என்னை எண்ண வைத்தது.

உள்ளே வருமாறு என்னை அழைத்தாள். வேறு ஒருநாள் வருவதாகச் சொல்லி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன்.

‘உள்ளே போயிருக்கலாம், கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டோமே என்று அறையிலே படுத்திருக்கும் போது மனசு ஏங்கியது. கவிதா மூன்றெழுத்து, வஸந் மூன்றெழுத்து, காதல் கூட மூன்றெழுத்து என்று ஏதேதோ எல்லாம் கற்பனை பண்ணிப் பார்த்தேன். அவள்; பட்ட இடமெல்லாம் வைற் டயமன் வாசனை தந்தது. எனது அறையில் அவளும் என்னோடு கூட இருப்பது போன்ற உணர்வில் நான் என்னை மறந்தேன்.

‘ஹலோ……! உங்களைத்தான்” குரலின் இனிமை கவிதாவை நினைவிற்குக் கொண்டு வரச் சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.

என்னவளேதான்! சந்தன நிற சுரிதாரில் இன்னும் அழகாக இருந்தாள். சேலையில் தான் கவிதா அழகு என்ற என் எண்ணத்தை உடனேயே மாற்றிக் கொண்டேன். எந்த ட்ரஸ்ஸிலும் அவள் அழகாய்த் தானிருப்பாள்.

‘கவிதா…என்ன இங்கே?” எதிர்பாராமல் அவளைப் பார்த்ததில் வார்த்தைகள் வெளியே வராமல் என் குரல் அடைத்துக் கொண்டது.

‘ஏன் நாங்க இங்கே வரக்கூடாதா? என்ன வேலன்டைன் கார்ட் செலக்ட் பண்ணுறீங்களா? குடுங்க பார்க்கலாம்”

‘,இல்லே.. வந்து வீட்டிற்கு, இது..அ..ம்மாவிற்கு” சொல்ல முடியாமல் விழுங்கினே;

‘நீங்க என்ன அம்மா பிள்ளையா? கொடுங்களேன், உங்க செலக்ஸனையும் பார்க்கலாம்.”

கையில் இருந்த கார்ட்டைக் கொடுத்தேன்.

முன் பக்கத்தில் பொன்நிறத்தில் இதயம். அதிலே ஒரு வெள்ளைரோஜா. உள்ளே

‘யூ ஆர் மை வேள்ட்!”

‘வாவ்…… சூப்பர் நல்லாய்தான் செலக்ட் பண்ணியிருக்கிறீங்க …ஏன் வஸந் ,து மாதிரி வேறொன்று கிடைக்குமா?”

‘இல்லே… ஒன்றே ஒன்று தான் ,இருந்திச்சு தேடி எடுத்தேன்.”

‘ஐ லைக் திஸ்…. கார்ட், ,தை எனக்குக் கொடுங்களேன்…பிளீஸ்” கெஞ்சினாள்.

என்னையே கொடுக்க நான் தயாராய் இருக்கிறேன். ,இவள் என்ன ,இந்தக் கார்ட்டுக்காகவா கெஞ்சுகிறாள்.

‘ஐ லவ்யூ……லவ்யூ” என்று எழுதி உடனேயே அவளிடம் கொடுக்கக் கை துடித்தது. ஆனாலும் மனசு தயங்கியது. அவளிடம் கொஞ்ச நேரம் என்றாலும் பேசிக் கொண்டிருந்தால் எனக்குப் போதும் போல ,இருந்தது.

‘இங்கே தான் நிறையக் கார்ட் ,ருக்கே! உங்களுக்குப் பிடித்த நல்ல செலக்ஸனாய்த் தேடி எடுங்களேன்.”

அவள் முகம் சட்டென்று வாடியது.

‘,இல்லே…,ந்த வாசகம் எனக்கு ரொம்பவும் பிடிச்;சிருக்கு… ,இப்படி ஒரு வாசகம் உள்ள வேலன்டைன் கார்ட்டுக்காகத்தான் ,ங்கே தேடி வந்தேன்.”

“ஏன்? ,இந்தக் கார்டில் என்ன விஷேசம்?”

“நான் விரும்பும் ஒருவருக்கு என்னோட காதலை எடுத்துச் சொல்ல எனக்கு ஒரு வழியும் தெரியல்லே! அவரைத் தான் நான் விரும்புகின்றேன் என்று அவரிடம் தெளிவாகச் சொல்ல நினைத்தேன். அதற்குச் சந்தர்ப்பம் ஒன்றும் கிடைக்கவில்லை! பட்டென்று அவரிடம் சொல்ல எனக்கு வார்த்தையும் வரவில்லை. என்னுடைய காதலை காதலர் தினத்தில் அன்றாவது அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ,இந்தக் கார்ட் மூலமாவது அவருக்கு என்காதலைப் புரியவைக்கலாம் என்று நினைக்கிறேன். பிளீஸ்….. அதைக் குடுங்களேன்!”

ஏனோ அவள் இதைச் சொல்லும் போது மிகவும் வெட்கப்பட்டுத் தடுமாறினாள்.

நான் எனக்குள் உடைந்து போனேன். ஒரு நொடியில் என் எண்ணங்கள் கனவுகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து என்னைப் பாதாளத்தில் தூக்கி எறிந்துவிட்டாளே! அவளே ‘,இல்லை” என்றானபின் இந்தக் கார்ட் எதற்கு?

நான் அதைக் கொடுக்காவிட்டால் அவளே அதைப் பறித்துக் கொண்டு போய் விடுவாள் போல இருந்தது.

‘சரி உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களே அதை எடுத்துக் கொள்ளுங்க”.

என்னைச் சமாளித்துக் கொண்டேன். நிஐம் என் கண் முன்னாலே நிழலாய்மாற, நினைவிலே அவளோடு வாழ்ந்த சுகம் தான் மிஞ்சி நின்றது.

‘தாங்யூ.. ஸோ..மச்… கார்ட் செலக்ட் பண்ற வேலையே எனக்கு இல்லாமற் செய்திட்டீங்க வஸந், தாங்யூ வண்ஸ்மோ… பாய்!” அவள் அந்த ,டத்தை விட்டு மின்னலாய் மறைய, நான் நடைபிணமாய் வீடு திரும்பினேன்.

படுக்கையில் புரண்டு படுத்தேன். பெண்ணின் மனதை ஏன்தான் என் போன்ற ஆண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லையோ?

பசி ,இல்லை, தூக்கம் ,இல்லை, அவளை என்னால் மறக்கவும் முடியவில்லை!

முதன் முதலில் என் ,இதயத்தில் அவள் குடிபுகுந்த போதும் ,இதே நிலையில் தான் நானிருந்தேன். ஆனால் அது ,இன்பத்தின் எல்லை!

அவள் மனதில் நானில்லை என்று இன்று தெரிந்த போதும் அதே நிலையில் தான் நானிருக்கிறேன். ,இதுவோ துன்பத்தின் எல்லை!

அவள் மேல் எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை. நான் அவள் மேல் வைத்திருந்தது ஒரு தலைக்காதல் தான். நான் என் காதலை அவளிடம் சொல்ல நினைத்தேனே தவிர என்றுமே சொன்னதில்லை. இந்தத் தோல்விக்கு என் மௌனமும் ஒரு விதத்தில் காரணம் தான். எனக்குள் மட்டும் தான் ,ந்தத் தோல்வி. ஏனென்றால் வேறு யாருக்கும், ஏன் அவளுக்குக் கூட அவளை நான் காதலித்தது தெரியப் போவதில்லை. வாழ்நாள் எல்லாம் அசைபோட்டுப் பார்க்க மனசுக்கு இது ஒரு தீராத சுமையாகத் தான் ,இருக்கப் போகிறது. ,இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள ,இப்போ இந்த மனசிற்கு ஆறுதல் மட்டும் தான் தேவை.

காலம்தான் என் வேதனையை மாற்றவேண்டும் என்பதால் ,இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அறைக்குள் முடங்கிக் கிடந்தேன்.

வேதனை, ஆற்றாமை, தோல்வி, விரக்தி இவையெல்லாம் நானே தேடிக் கொண்டது தானே! ஏனிந்த வாழ்க்கை என்று மனசு வேதனை தாங்காமல் உடைந்து போய் வெம்பி அழுதது. வேண்டாம், அவள் நினைவே வேண்டாம்! வேறு ஒருவனுக்கு மனைவியாகப் போகிறவளைப் பற்றி நினைக்கவே வேண்டாம் என்று பிடிவாதமாய் அவளை மறக்கப் பார்த்தேன். முடியவில்லை! கண்களை மூடினாலும் கண்ணுக்குள் அவள் தான் நின்றாள். மறப்பதற்கா அவளை என் ,இதயத்தில் ,இத்தனை நாள் வைத்துப் பூஜித்தேன்?

வெளியே தபாற்பெட்டி திறந்து மூடும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கடிதங்களை எடுத்துப் பார்த்தேன். பணம் அனுப்பு என்ற அப்பாவின் வழமையான வரிகள், உனக்கு கல்யாணவயதில் ஒரு தங்கை ,இருக்கிறாள் என்றெல்லாம் நினைவு படுத்தும் அந்தக் கடிதத்திலிருந்து ,து வித்தியாசமாய் மாறுபட்டிருந்தது. ஆவலோடு பிரித்துப் பார்த்தேன்.

உள்ளே கடிதமல்ல, கார்ட். வலன்டைன் கார்ட். பொன்நிற ,தயத்தில் ஒரு வெள்ளை ரோஜா! உள்ளே….. ‘You Are My World!”

என்னிடம் ,இருந்து பறித்துச் சென்ற அதே கார்ட்! முத்து முத்தான கவிதைத் தனமான அவளது கையெழுத்தில் ‘நீயே எந்தன் புவனம்” என்று அழகுதமிழில் எழுதி அதன் கீழே ஒரு சோடி உதடுகளின் சிகப்பு நிற லிப்ஸ்ரிக்கை மெல்லிய கோடாய்ப் பதித்திருந்தாள்! 

தொடர்புடைய சிறுகதைகள்
தைமாதத்தில் ஒரு நாள். தைப் பொங்கல் தினம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பூம்பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்று தான் உன்னை முதன் முதலாகக் கண்டேன். பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோ போல நீயும் குளிர் ஆடை அணிந்து தலையை மூடியிருந்தாய். கோயில் ...
மேலும் கதையை படிக்க...
அவளுக்கு ஒரு கடிதம்
அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். அவனது நண்பர்கள் நேற்று அவனிடம் வேடிக்கையாகச் ...
மேலும் கதையை படிக்க...
என்றும் இல்லாதவாறு இன்று வாசலில் அதிக கூட்டமாக இருந்தது. டாக்டர் அஞ்சலி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். கடமையில் இருந்த தாதிகளால் கூட அவளுக்கு ஈடாக நின்று பிடிக்க முடியவில்லை. இடியும் மின்னலுமாய் இருந்த வானம் சற்று ஓய்ந்திருப்பது போலத் தோன்றினாலும், ...
மேலும் கதையை படிக்க...
(ஊர் வம்பு என்றால் இலவச ஆலோசனை கொடுப்பதில் பழக்கப் பட்டவர்கள், ஒத்துப் போகாவிட்டால் போட்டு மிதிப்பார்கள்; இல்லாவிட்டால் தூற்றிவிட்டுப் போவார்கள்.) சுரேன் மருத்துவமனைக்குப் போகும்போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு குளிர் வேறு அவனை நடுங்க வைத்தது. குளிரில் நடுங்கினானா அல்லது ...
மேலும் கதையை படிக்க...
முகநூல் காதல்
  கதை ஆசிரியர்: குரு அரவிந்தன். 'உமா, உங்கள் பேஸ்புக்கில் நண்பராக என்னை இணைத்துக் கொள்வீர்களா?' மின்னஞ்சல் மூலம் அந்தச் செய்தி வந்திருந்தது. முன்ஜென்மத் தொடர்போ என்னவோ ‘திரு’ என்ற அந்தப் பெயர் எனக்குப் பிடித்தமானதாக இருந்ததால் பத்தோடு பதினொன்றாக அவனையும் எனது சினேகிதனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று ...
மேலும் கதையை படிக்க...
காதல் வந்திடிச்சோ..
அவளுக்கு ஒரு கடிதம்
வெயில் வா மழை போ..!
தீக்குளிக்கும் மனங்கள்
முகநூல் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)