Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நிமிட காதல்..

 

வழக்கம்போல் அன்று மாலையும் மின்சாரமில்லை. கொஞ்சம் புழுக்கம் அதிகப்படியானதால் மொட்டைமாடிக்கு செல்லலாமென முடிவெடுத்து மாடிக்குச் சென்றேன்.

காற்று உடலை வருடும்போது தென்றலின் அருமை புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். எங்கிருந்தோ சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பு வந்த திசையை நோக்கினேன்.. ஒரு அழகான அல்லது அம்சமான பெண்ணொருத்தி நின்றிருந்தாள். அவளருகில் அவளைவிட சுமாரான பெண்ணொருத்தி நின்றிருந்தாள். முன்னவளும் பின்னவளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் என்னைப் பார்த்துதான் சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலோங்க என் வெற்றுடலை மறைக்க எண்ணி மறுபடியும் வீட்டுக்குள் வந்து சட்டையை அணிந்துகொண்டு மாடிக்குச் சென்றேன். மறுபடியும் சிரித்தாள். சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அவள் சிரித்துக்கொண்டே என்னை பார்ப்பது போலிருந்தது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் சொக்கித்தான் போனேன்.

அப்போதுதான் அந்த கன்னியை (எனக்கு அப்படித்தான் தெரிந்தாள்.) நோக்கினேன். அடடா அடடா இப்படியொரு பேரழகியை எதிர்வீட்டிலேயே வைத்துக்கொண்டா நான் அமைதியாய் இருக்கிறேன். என் மீதே எனக்கு கோபம் கொப்பளித்தது. சிகையை சரிபடுத்திக் கொண்டு எதிர்வீட்டு ரோஜா மீது பார்வையை வீசினேன். கண்கள் நயனங்களை அள்ளிவீசியது. இதழ்கள் இனிப்பை நினைவூட்டியது. நைட்டி அணிந்த நிலா பிரகாசமாக நின்றிருந்தது. தற்செயலாக அவளது என்மீது விழுந்தது. பார்த்தாள். சிரித்தேன். மறுபடியும் பார்த்தாள். மறுபடியும் சிரித்தேன். சிரித்தாள். கண்கள் வழியாக காதல் பரிமாறப்பட்டது. சைகை வழியாக ஏதோ சொல்ல முயற்சித்தாள். பேசலாமென வாய் திறந்தேன். ஏதோ ஒன்று உறுத்தியது.. அப்போது வீட்டிற்குள் இருந்து ஒரு குரல் “என்னங்க டீ ரெடி கீழ வாங்க.. கரண்ட் வந்துடுச்சு..” அந்த குரல் என்னையும் தாண்டி எதிர்வீட்டு மைனாவையும் சென்றடைந்திருக்கும் போல..என்னை ஒருமுறை முறைத்துவிட்டு மறைந்தாள். என் இதயக்கோவிலில் நான் எழுப்பிவைத்த கோபுரம் மொத்தமாக இடிந்துவிழுந்தது.

என் பத்து நிமிட காதல் படுதோல்வியைச் சந்தித்தது.

சோகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். அந்த குரலுக்குச் சொந்தக்காரி கையில் தேனீர் கோப்பையோடு நின்றிருந்தாள். தேனீரை ருசித்தேன். என் மனைவியை ரசித்தேன்.. எதிர்வீட்டு மோகினியை மறந்தேன். கணவன்கள் திசைமாறாமல் வாழ்வதில் மனைவியின் பங்கு மகத்தானது..

- இந்த கதை பாக்யா வார இதழில் ஆகஸ்ட் 8-14 வெளியானது 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது. கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு நிற்கும் போதுதான் கவனித்தேன். அவள் பேருந்துக்குள் ஏறவில்லை. பேருந்து கிளம்ப தயாரனது. உடனே சுதாரித்துக் கொண்டு மறுபடியும் கூட்டத்தில் நீச்சலடித்து கீழிறங்கினேன். அவளருகிலும் அருகிலில்லாமலும் நின்றேன். நான் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு மட்டும் உதவி செய்வதற்கு சில தேவதூதர்களை கடவுள் படைத்திருப்பார் போலும்....நான் தலைவலியால் துன்பப்படுவதை அறிந்த அந்த இதயம், அலுவலகத்தில் எனக்காக விடுப்பு எடுத்துக் கொண்டார்... தலைவலி இப்போது இல்லைதான் இருப்பினும் அந்த தேவதூதரின் அன்புக்கட்டளைக்கு இணைங்கி மருத்துவமனைக்கு சென்றோம்.. அரசாங்கம் பாதி ...
மேலும் கதையை படிக்க...
சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை...கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய ரேகை முகத்தில்...இப்படி எல்லாமும் இருந்தாலும் அவரின் முகத்தை அழகாகக்காணவைத்தது அவரின் புன்னகைதான்...இத்தனைத் தகுதியுடைய அந்த தடியுடைய மனிதர் எங்களைஅன்போடு அணுகி, " பேராண்டிகளா ...
மேலும் கதையை படிக்க...
பேருந்து காதல்…
தேவதூதரும் தலைவலியும்
பிச்சைக்காரனைத் தேடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)