அந்தக் கவிதையை அவன் பத்தாவது தடவையாகப் படித்து விட்டான். இன்னும் அவனுக்குச் சலிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை -
நீ என்று
சுட்டு விரல் முன்
நீட்டும் போதுன்
கட்டை விரல்
காட்டுவது
முட்டாளே
உன்புறமே தான்!
சொற்கட்டும் கவிச் சிறப்பும் கருத்தாழமும் படிக்கப் படிக்க அவனை மெய் சிலிர்க்கச் செய்கின்றன. கவிதை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.
பிரபல சஞ்சிகையில் பிரபலமாகப் போகும், கவிஞர் ‘வாத்துக் குஞ்சு’ வரதராஜனின் கவிதை. எத்தனை பேர் கண்களில் படப் போகிறது! எத்தனை பாராட்டுக் கடிதங்கள் வந்து குவியப் போகின்றன!! யாரிந்த வா.வ. என்று எத்தனை வண்ணத்துப் பூச்சிகள் [அதாவது கல்லூரிக் கன்னியர்] விழியுயர்த்தப் போகின்றன!!!
அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது இந்தக் கவிதையை அந்த எதிர்வீட்டு அகிலாவின் கண்ணிற் படச் செய்துவிட வேண்டும். அதன் பின் அவளது ஏளனப் பார்வை குளிர்ந்த தென்றலாக மாறி….
வாசற் கதவு தட்டப் படும் ஒலியில் அவனது கற்பனை தடைப்பட எரிச்சலுடன் கதவைத் திறந்தவன் விழிகளில் 100 Watts பல்ப். அவன் எதிர்பார்க்கவே யில்லை. எதிர் வீட்டு ஏந்திழையின் ஒரே தம்பி அவன் வீட்டுப் படியேறி உள்ளே வந்தான்.
“இந்த வாரக் ‘கர்ப்பூரம்’ மகஸினை அக்கா வாங்கிட்டு வரச் சொல்லிச்சு”
இன்பத்தேன் ஒரு லிட்டர் அவன் காதில் வந்து பாய்ந்தது.
ஆஹா! என் கவிதை இதில் வெளியான சேதி எப்படியோ அவள் காதுக்கும் எட்டி விட்டது. தூது விட்டிருக்கிறாள் தம்பியை. இனியென்ன? கவிஞனல்லவா – அவன் கற்பனை சிறகடித்துப் பறக்கலாயிற்று.
“கடையில அக்கா கேட்டுச்சாம். எல்லாப் பொஸ்தகமும் தீர்ந்திடுச்சாம்”
மேலதிகத் தகவல் தந்தான் தங்கத்தம்பி. ஆகா! எத்தனை இனிப்பான சேதி! அவன் கவிதை வெளியான இதழ்யாவுமே விற்றுப் போய் விட்டனவாம்.
தனது இதயத்தையே எடுத்துக் கொடுப்பது போல அந்த இதழைப் பக்குவமாக எடுத்து அவளது தம்பியின் கையில் திணித்தான்.
“கவனம்!”
போகிற போக்கில் அவள் தம்பி சொன்ன வார்த்தைகள் தேனைத் தேளின் விஷமாக மாற்றும் மாயத்தைச் செய்துவிட்டன.
“அக்கா எழுதின கதை ஒண்ணு இந்த இஸ்யூல வந்திருக்காம்”
அவன் புரட்டிப் பார்க்காத பக்கங்களுள் ‘அகல்யா’ எழுதிய ‘கிணற்றுத் தவளை’யும் ஒளிந்திருந்ததை பாவம், வாத்துக் குஞ்சு வரதராஜன் அறிந்திருக்கவில்லை!
['இருக்கிறம்' - 15 . 03. 2010 இல்பிரசுரமானது]
தொடர்புடைய சிறுகதைகள்
குறள்:
'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்'
பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், இலங்கை வானொலியும் ...
மேலும் கதையை படிக்க...
நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின 'சோகக் ' கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, ...
மேலும் கதையை படிக்க...
மான்குட்டி போல் அவள் துள்ளித்துள்ளி ஓடி வந்து கொண்டி ருந்தாள். அவளுக்கு ஆகக் கூடினால் ஆறு வயதுதான் இருக்கும். அவள் பின்னால் அவளை எட்டிப் பிடிப்பது போல, ஆனால் அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால் சற்றுப் பின் தங்கியவனாக, அவளை ...
மேலும் கதையை படிக்க...
மலேரியா எண்டால் தெரியும். சிலவேளை மலேரியாக் காய்ச்சலில் விழுந்து குயினைன் குளிசைகளை நாலு மூண்டு ரெண்டு எண்டு விழுங்கி ஒரு மாதிரிச் சுகப்பட்டு எழும்பின வராயும் நீங்கள் இருக்கலாம்.
லவேரியா ?
கருப்பட்டியும் தேங்காப் பூவும் சேர்த்திடித்து இடியாப்பத்துக் குள் பொதிந்து வேக வைத்த, ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்கு எப்பேண்டாலும் அடக்கேலாமல் 'அது' வந்திருக்கோ? வராமல் இருந்திராது. ஆனாலும் வெளியில சொல்லியிருக்க மாட்டியள் – கிரிசை கேட்டை. ஆனால் நான் சொல்லப்போறன். ஏனெண்டால் என்னால அடக் கேலாமல் கிடக்கு - ஆத்திரத்தை!
வயசான ஆக்களாயிருந்தால் சில நேரம் 'அது' வாறதும் தெரியாது. ...
மேலும் கதையை படிக்க...
ஹலோ...! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்...உங்ககிட்ட மட்டும்தான்...ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி உங்களைக் கொஞ்சம் தைரியப் படுத்திக்குங்க ..நீங்க ஒரு ‘ஹாட்' வீக்கான ஆளா இருந்து அப்புறம் நான் சொல்றதக் கேட்டு அதிர்ச்சியில ...
மேலும் கதையை படிக்க...
மன்மதன் அவன் உடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தான். கல்யாணம் கட்டி ஆறேழு வருடங்கள் கழிந்து விட்ட இந்த வயதிலும் அவன் மட்டும் ஜெமினி கணேசனைப் போல [கமலைப்போல/சூர்யாவைப்போல என உங்கள் வயதுக் கேற்ப உவமையை மாற்றிக் கொள்ளுங்கள்] கன்னியரைக் கவர்ந்திழுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பாதர் பீட்டர் திடுக்கிட்டு விழித்தெழும்பினார்.மிக அருகில் எங்கோ கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் அவர் தூக்கம் கலைந்திருந்தது. மறுநாள் பிரசாங்கத்துக்கான உரையை ஆயத்தப் படுத்தி விட்டு அவர் படுக்கைக்குச் சென்று அதிக நேரமாகி இருக்காது. ரோச் லைட்டை அடித்து நேரத்தைப் பார்த்தார். ...
மேலும் கதையை படிக்க...
பரீட்சை முடிவு தெரியவில்லை. வினோத்துக்கு ஒரே டென்ஷானாக இருந்தது. பரீட்சை எழுதியபோதிருந்த நம்பிக்கை இப்போ கொஞ்சம் கொஞ்சமாகத் தளர ஆரம்பித்திருந்தது. 'விடைத் தாளில் சுட்டெண்ணைச் சரியாக எழுதினோமா?' என்று வேறு சந்தேகம் முளைத்து மனதை அரித்தது.
ஒரே தவிப்பு. எதிலும் கவனம் செலுத்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்