சிக்கலைத் தீர்த்த சிங்கார வேலன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 11,231 
 

ரமேஷ் அண்ணா பல்கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு B.E. படித்து வந்தான்.

ரமேஷ் பெற்றோர்கள் ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள்.மிகவும் கர்னாடகமானவர்கள். மிகவும் ஆசாரமானவர்கள் கூட.இதை அறிந்த ரமேஷ் அவர்கள் பெற்றோர்கள் மனம் கோணாமல் நட ந்து வந்து,அவர்கள் சொல்தை கேட்டு வந்து,அவர்கள் இஷடப்பட்டது போல செய்து வந்தான்.ரமேஷ் நண்பர்கள் எல்லோரும் அவன் அறிவு கூர்மையை மிகவும் புகழந்து,அவனை அவர்கள் ஒரு ‘நடமா டும் பல்கலைக்’ கழகம் என்று அழைத்து வந்தார்கள்.ரமேஷ் வகுப்பில் கூட படித்து வந்த லதா ரமேஷ் அழகுக்கும், அறிவுக்கும் மயங்கி, தன்னை பறிகொடுத்து இருந்தாள்.

ரமேஷூக்கும் லதாவை மிகவும் பிடித்து இருந்தது.

இளம் பருவத்திலே ஏற்படும் ’பெண்கள் மேல் ஒரு ‘ஈர்ப்பு’, ‘மன்மதன் பாணம்’ இவற்றில் எல்லாம் சிக்கித் தவிக்காதவர் யார் இருக்க முடியும்.

ரமேஷ் இதற்கு விதி விலக்கு இலையே.

லதா ‘வாழ்க்கையில் தனக்கு கணவன் என்று ஒருவன் அமைய வேணுமானால் அது ரமேஷாக த் தான் இருக்க்கணும்’ என்பதில் மிகவும் தீர்மானமாய் இருந்தாள்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் ரமேஷ் “லதா,என் அப்பா அம்மா ரொம்ப அந்த காலத்து மனுஷா. கூடவே ரொம்பவும் ஆசாரமானவா. ஜாதி மதம் எல்லாம் அவா பாப்பா.இதனால் உடனே நான் உன் னை ‘நீ எந்த ஜாதி’ன்னு கேக்கப் போறது இல்லே லதா. நீ எந்த ஜாதியா இருந்தாலும் எனக்கு பரவாயில்லே. ஆனா நான் இதை என் அப்பா அம்மா கிட்டே எப்படி சொல்லி, நம் ஆசையை நிறைவேத்தி கொள்ளப் போறேன்னு தான் எனக்கு புரியலே லதா” என்று சொல்லும் போது அவன் கண்களில் கண்ணீர் துளித்தது.

லதா அவனை சமாதானம் பண்ணி “கவலைப் படாதே ரமேஷ்.நீ தைரியமாய் இரு.நம்ம கல் யாணம் நிச்சியமா நடக்கும்.எனக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லே” என்று சொல்லி சிரித்தாள்.

அதே வகுப்பில் படித்து வந்த சிங்காரமும்,சுதாவும், ஒருவரை ஒருவர் மனதார காதலித்து வந்த ¡ர்ககள்.அன்று ஹோட்டலில் இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள்..

சிங்காரத்தின் முழு பேர் சிங்காரவேலன்.அவன் அப்பாவும்,அம்மாவும் ‘கலப்பு கல்யாணம்’ பண்ணிக் கொண்டவர்கள்.

சிங்காரம் சுதாவிடம் “சுதா,நாம ரெண்டு பேரும் வேலைக்கு சேந்த அடுத்த மாசமே கல்யாணம் செஞ்சுக்கலாம் என்ன.‘ஸ்வீட்டை’எட்டும் இடத்லே வச்சுக் கிட்டு,அதை சுவைக்காம, வெறுமே வாய்லே ‘ஜொள்ளு’ விட்டுக்கிட்டு என்னால் சும்மா இருக்க முடியாது.அங்கே எப்படி சௌகரியம்” என்று கிண்டலாகக் கேட்டான்.

”எனக்கும் அதே ஆசை தான் சுரேஷ்.ஆனா ….” என்று இழுத்தாள் சுதா.

“என்ன சுதா,ஆனான்னு இழுக்கிறே” என்று கவலையோடு கேட்டான் சிங்காரம்.

”அது வந்து சுரேஷ்,நான் நம்ம காதல் விஷயத்தே இன்னும் என் அப்பா அம்மாகிட்டே சொல் லலே.மெல்ல அவங்க கிட்ட சொல்லி, அப்புறமா தான் அவங்க சம்மதத்தை வாங்கணும்” என்று இழுத்தாள் சுதா.

“அப்படியா சமாச்சாரம்.நீ சீக்கிரமா சொல்லி ‘பர்மிஷன்’ வாங்கிடு” என்று சொல்லி விட்டு சிரித்தான் சிங்காரம்.

சுதா கவலைப் பட்டாள்.

சுதாவின் பெற்றோர்களும் ரமேஷின் பெற்றோர்களைப் போல அந்த காலத்து மனிதர்கள். ரொம்பவும் ஆசாரமானவர்கள்.அவர்கள் தங்கள்பெண்ணுக்கு ஜாதகம் பாத்து,அது நன்றாக பொறுந்தி இருந்து, பிறகு ‘பெண்’ பார்த்து,முறைப்படி எல்லாம் பேசி முடிச்சு,நிச்சியதார்த்தம் செஞ்சு, நல்ல முகூர்த்தத் தில் நாலு பெரியவர்களின் முன்னிலையில் வேத மந்திரம் எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ண வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

யோஜனைப் பண்ணிக் கொண்டே தன் வீட்டுக்கு வந்தாள் சுதா.

வீட்டுக்கு வந்த சுதா,அப்பா வீட்டில் இல்லாததைப் பார்த்து சுதா இது தான் சமயம் என்று எண்ணி அவள் அம்மா கிட்டே“அம்மா,அம்மா,நீ எனக்கு ஒரு ‘ஹெல்ப்’ பண்ணணும்.நீ பண்ணுவி யா” என்று சொல்லி தன் அம்மாவின் மோவா கட்டையை தொட்டு கொஞ்சினாள்.

“என்னடி என்னவோ சின்ன குழந்தை போல் கொஞ்சரே.என்ன விஷயம் சொல்லு” என்று சொல்லி அவள் கையை விலக்கினாள் சுதாவின் அம்மா.

”அம்மா,எனக்குப் பிடிச்ச ஒருத்தரை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஆசைபடறேம்மா. இதுக்கு நீயும்,அப்பாவும் சம்மதம் தருவேளா” என்று மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள் சுதா.

“என்ன சொன்னே,உனக்கு வரப் போறவனை நீயே பாத்துக்க போறயா.உனக்கு மூளை குழம்பி போயிட்டுத்தா.போன வாரம் தான் உன் அப்பா ‘இன்னும் கொஞ்ச நாள்ளே நம்ம சுதா B.E. முடிச்சு விடப் போறா.நான் ஜாதகக் கட்டை எடுத்து நல்ல பையன் ஜாதகமாகத் தேடனும்.இதுக்கு நடுவிலே சுதா உன் கிட்டே வந்து, ‘காதல்’‘கத்திரிக்கா’ ‘எனக்கு ரொம்பப் பிடிச்சவன்’ ‘நல்ல பையன்’ன்னு எல் லாம் சொல்லிண்டு வந்தா அதை என் காதிலே போடாதே. அவளை அப்படியே இந்த ஆத்தை வீட்டுட்டு அவன் கூடவே ஓடி போக சொல்லு.நான் அவளை தலை முழுகிடறேன்ன்னு’ கோவமா சொன்னார். அதனாலே இப்பவே இந்த காதல் விவகாரத்துக்கு முத்து புள்ளி வச்சுட்டு வேறு வேலையை கவனி” என்று சொல்லி விட்டு சுதாவின் அம்மா சமையல் ரூமுக்குப் போய் விட்டாள்.

அம்மா சொன்னதை கேட்ட சுதாவுக்கு தலை மேல் இடி விழுந்தது போல் இருந்தது.

இதை சுரேஷிடம் ‘எப்படி சொல்லப் போறோம்’ என்று நினைத்து அனலில் விழுந்த ஒரு புழு போலத் துடித்தாள் சுதா.

மயிலாப்பூர் கோவிலில் ‘ஜாதக பொருத்தம்,ஜாதக பரிவர்த்தனை’ எல்லாம் பண்ணி வரும் கண பதி குருக்களிடம் போய்,தன் பெண்ணின்,படிப்பு வயசு.எல்லாம் சொல்லி, ஜாதகத்தை கொடுத்து,ஒரு நல்ல பையன் ஜாதகமா பார்த்து கொடுக்கும்படி சொல்லிக் விட்டு காத்துக் கொண்டு இருந்தார் சுதா வின் அப்பா சுந்தரம்.

கணபதி குருக்கள் சுந்தரத்திடம் இருந்து அவர் பெண் ஜாதகத்தை வாங்கி,ஒரு வெள்ளை காகித்ததில் கணக்கைப் போட ஆரம்பித்தார்.அப்படி போட்டுக் கொண்டு இருக்கும் போது அங்கே வந்தார் கணேசன்.”நமஸ்காரம் மாமா” என்று சொல்லி விட்டு அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார் கணேசன்.

கணேசனைப் பார்த்த கணபதி குருக்கள் “வாங்கோ, வாங்கோ,கணேசன் சௌக்கியமா.எங்கே ரொம்ப நாளா உங்களை இந்த பக்கமே காணலே” என்று கேட்டார். “என் பையன் இந்த வருஷம் B.E. முடிக்கிறான் இல்லையா. அவன் ஊர் எல்லாம் சுத்தாம நேரத்தோடு ஆத்துக்கு வந்து அவன் பாடங்களை படிக்கணும்ன்னு தான் நான் ஆத்திலேயே இருந்து அவனை கண்காணிச்சுண்டு வந்தேன்.உங்க ளே நேர்லே வந்து பாக்க நேக்கு நேரமே இல்லை” என்று சொல்லி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார் கணேசன்.

கணக்குப் போட்டு கொண்டே “இவரைத் தொ¢யுமோ கணேசன்.இவர் தான் மிஸ்டர் சுந்தரம் இவர் பெண்ணுக்கு இவர் ஒரு நல்ல பையன் ஜாதகமா பாத்து கொடுக்கச் சொல்லி இப்போ வந்து இருக்கார்” என்று சுந்தரத்தை அறிமுகம் செய்து வைத்தார் குருக்கள்.

செல் போனில் குருக்களை யாரோ அவசரமாக கூப்பிடவே,“நீங்கோ ரெண்டு பேரும் பேசிண்டு இருங்கோ.நான் இதோ ஒரு பத்து நிமிஷத்தில் வந்து விடறேன்”என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினார் குருக்கள்.

சுந்தரும்,கனேசனும் நிறைய நேரம் தங்கள் குடும்ப விவரம்,உத்தியோக விவரம்,வீட்டு நிலவரம் நாட்டு நடப்பு, போன்ற பல விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

பத்து நிமிஷம் கழித்து உள்ளே வந்த குருக்கள் “சுந்தரம் சார்,நான் இவா பையன் ஜாதகத்தை பாத்து இருக்கேன்.உங்க பெண் ஜாதகம் இவர் பையனுக்கு நன்னா பொருந்தும்ன்னு நினைக்கி றேன்.சித்த இருங்கோ” என்று சொல்லி தன் பையில் இருந்த ஜாதகக் கட்டில் இருந்து கணேசன் பையன் ஜாதகத்தை எடுத்து சுந்தரம் பெண் சுதாவின் ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.

சிறிது நேரமானதும் “பேஷான ஜாதகம் ரெண்டும்.பத்து பொருத்தத்லே ஒம்பது பொருத்தம் இருக்கு. இவா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வச்சா அமோகமா இருப்பா” என்று சொல்லி சிரித்தார் குருக்கள்.

சுந்தரதிற்கும் கணேசனுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.

இருவரும் குருக்களுக்கு தக்ஷணையை கொடுத்து விட்டு பேசிக் கொண்டே வெளியே வந்தார்கள்.

சுந்தரமும்,கணேசனும் அவரவர்கள் வீட்டுக்கு வந்து தங்கள் மணைவியிடம் குருக்கள் வீட்டில் கிடைத்த நல்ல ஜாதகத்தைப் பற்றி சொல்லி,அந்த இடத்திலேயே கல்யாணத்தை பண்ணி முடிக்கப் போவதாயும் சொன்னார்கள்.

காலேஜில் எல்லா மாணவர்களும் இரண்டு நாள் கோடைக்கானல் ‘டூர்’ போய் இருந்தார்கள். அந்த ‘டூர்’ முடிந்ததும் உடனே வருடாந்தர பரிட்க்ஷ ஆரமபம்.

சுதா சிங்காரத்திடம் “இந்த ‘டூருக்கு’ அப்புறம் நாம் ஒருவரை ஒருவர் மறக்க வேண்டியது தான். என் அப்பா எனக்கு ஒரு பையனை ஜாதகப் பொருத்தம் பார்த்து,அவனுக்கு என்னை கல்யாணம் பண்ணி ஏற்பாடு பண்ணி இருக்கார்.நான் அந்தப் பையனைத் தான் கல்யாணம் பண்ணிக்க வேணும் என்பதிலே என் அப்பா ரொம்ப பிடிவாதமா இருக்கார்” என்று சொல்லும் போதே சுதா கண்களில் கண்ணீர் தளும்பியது.

உடனே பக்கத்தில் இருந்த ரமேஷூம் ”எனக்கும் என் அப்பா ஒரு பெண்ணை ஜாதகப் பொருத்தம் பாத்து இருக்கார். வேறு வழியே இல்லே எனக்கு லதா. நீ என்னை மன்னிச்சே ஆகணும் ரொம்ப ‘சாரி’ லதா” என்று சொல்லி தன் தலையை கிழே தொங்க போட்டு கொண்டான்.

லதாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த சிங்காரம் “நீங்க ரெண்டு பேரும் இதை வெறுமனே ‘சாக்கா’ சொல்லி உங்க காதலை ‘தியாகம்’ பண்ண பாக்கறீங்களா.இந்த காதலில் உணமையான விருப்பம் இல்லையா உங்களுக்கு.இல்லே உங்க அம்மா அப்பாவுக்கு பயப்படறீங்களா.எனக்கு ஒன்னு மே புரியலே”என்று ஒரு ஜட்ஜ் கேட்பதை போல் கேட்டு விட்டு அவர்கள் பதிலை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தான்.

”எங்க காதல் கல்யாணத்துக்கு நீ தான் ஒரு நல்ல ஐடியாவா சொல்லு சிங்காரம்” என்று இருவரும் கெஞ்சினார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு ‘ஐடியா’ கொடுத்தார்கள்.எல்லா¡ ‘ஐடியா’விலும் எதோ ஒரு சிக்கல் இருந்ததது.

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவனாய் சிங்காரம்”சரி,நீங்க இருவரும் உங்களுக்கு ஜாதகம் பொருந்தி இருப்பவர் யார்ன்னு என் கிட்டே வந்து சொல்லுங்க.அந்த நபரை சந்திச்சு ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கறேன்” என்று சொன்னதும் எல்லோருக்கும் இந்த ‘ஐடியா’ ‘சரி’ என்று பட்டது.

சென்னைக்கு வந்ததும் முதல் வேலையாய் ‘தனக்குப் பார்த்து இருக்கும் பெண் யார் ‘என்று தன் அப்பாவிடம் கேட்டான் ரமேஷ்.அவர் உடனே “ரமேஷ் அந்தப் பொண்ணு பேர் சுதா.அவ இந்த வருஷம் அண்ணா பொறியியல் கல்லூரியில் B.E. முடிக்கிறாளாம்.மயிலாப்பூரில் நான் ஜாதகம் பாக்க போனப்போ சுதா அப்பாவிடம் நான் பேசிண்டு இருந்தேன்.அவா ரொம்ப நல்ல குடும்பம் ரமேஷ்” என்று பெருமையாகச் சொன்னார் கணேசன்.

ரமேஷூக்கு அவர் சொன்ன விவரம் தூக்கிப் போட்டது.

சுதாவும் சென்னைக்கு வந்ததும் முதல் வேலையாய் ‘தனக்குப் பார்த்து இருக்கும் பையன் யார்’ என்று தன் அப்பாவைக் கேட்டதும் அவர் உடனே “அந்த பையன் பேர் ரமேஷ்,அவன் இந்த வருஷம் அண்ணா காலேஜிலே BE முடிக்கிறானாம்” என்று சொன்னார்.

சுதாவுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

அடுத்த நாள் எல்லோரும் கல்லூரியில் சந்தித்த போது ரமேஷூம்,சுதாவும் சொன்ன விவர த்தை கேட்ட சிங்காரமும் லதாவும் அசந்து விட்டார்கள்.லதா கவலைப் பட்டாள்.

சிங்காரம் நிதானமாக “ரமேஷ்,உன் அப்பா அம்மா உன்னை அழைச்சுக் கிட்டு சுதாவை ‘பெண் பாக்க’ வரும் போது நீ ’எனக்கு இந்த பொண்ணு பிடிக்கலே.அவ ரொம்ப கர்வியா இருக்கா’ன்னு சொல்லிடு. சுதா, உன்னை ரமேஷ் ‘பெண் பார்க்க’ வரும் போது நீயும் ‘இந்த பையன் எனக்குப் பிடிக்கலே. சுத்த கட்டுப் பெட்டியா இருக்கான்’ன்னு சொல்லிடு.கல்யாணம் நின்னுடும்.அப்புறமா நாம நமக்கு பிடிச்ச வரை கல்யாணம் பண்ணிக் கிடலாம்” என்று தன் ‘ப்ளானை’ சொன்ன போது எல்லோர் முகத்திலேயும் சந்தோஷம் தொ¢ந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் “இது நடக்காது சிங்காரம்.நான் இந்த ‘பொண்ணு வேணாம்’ன்னு சொன்னா,உடனே நான் உனக்கு வேறு ஒரு பெண்ணைப் பாக்கறேன்னு என் அப்பா சொல்லி வேறே ஒரு பெண்ணை எனக்குப் பார்த்து என் தலையில் கட்டி விட்டா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது “ஆமாம் சிங்காரம் என் அப்பாவும் எனக்கு வேறு பையனை பாத்து என் தலையில் கட்ட முயற்சி பண்ணுவார். இப்படி எத்தனை பையனைகளை, நானும் எத்தனை பெண்களை ரமேஷூம் பிடிக்கலேன்னு சொல்றது” என்று கேட்டு சிங்காரத்தின் சுரேஷ் முகத்தை பார்த்தாள் சுதா.

ஒரு அரை மணி நேரம் யோஜனைப் பண்ணினான் சிங்காரம்.

பிறகு சிங்காரம் சுரேஷ் “இந்த ‘ப்ராப்லெம்’ ‘சால்வ்’ ஆக ஒரு வழி தான் இருக்கு.அது கொஞ்சம் கஷ்டமான வழி இது.மனதை திடப் படுத்திக் கிட்டு இந்த ‘ப்ளானை’ சுதாவும் ரமேஷூம் தான் பண் ணணும்.நானும் லதாவும் கொஞ்சம் மாசம் பொறுமையாக இருக்கோம்.நீங்க ரெண்டு பேரும் பேசாம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு, ஒன்னும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்குங்க” என்று சொன்னான்.

உடனே மூவரும் “உனக்கு பைத்த்தி¢யமா பிடிச்சு இருக்கு சிங்காரம்.கல்யாணம் பண்ணி முடி ஞ்ச பிறகு நாம என்ன பண்ண முடியும்.எப்படி நாம் காதலிச்சவரை கல்யாணம் பண்ணி கொள்றது சுத்த பேத்தல் ஐடியாவா இருக்கே” என்று கத்தினார்கள்.

”அவசரப் படறீங்களே.நான் இன்னும் என் ‘ஐடியா’வை முழுக்க சொல்லலே.அதுக்குள்ளே என் ஐடியாவை ‘பேத்தல்’ன்னு முடிவு கட்டி விட்டீங்களே” என்று சொல்லி வருத்தப் பட்டான் சிங்காரம்.

உடனே மூவரும் “சாரி சிங்காரம்,நாங்க ரொம்ப அவசரப் பட்டு விட்டோம்.நீ உன் ‘ஐடியா’வை முழுக்கச் சொல்லலு”என்று கெஞ்சினார்கள்.

“அப்படி வாங்க வழிக்கு” என்று சொல்லி தன் காலரைத் தூக்கி விட்டான் சிங்காரம்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”நீங்க இரண்டு பேரும் ஒரு ‘டிராமா’ போடணும்.கல்யாணம் பண்ணி கிட்டவுடன் நீங்க ரெண்டு பேரும் உடனே உங்க அப்பா அம்மா கிட்டே உங்களுக்கு “·பர்ஸ்ட் நைட்” ‘அரேஞ்’ பண்ணச் சொல்லுங்க.அன்னைக்கு நீங்க இருவரும் ‘வெறுமனே’ இருந்து விட்டு,காலைலே எழுந்து வெளியிலே வந்து,சுதா நீ உன்னை பெத்தவங்க கிட்டே ‘இந்த பையன் குடும்ப வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவன்.இந்த பையன் எனக்கு வேணாம்’ன்னு சொல்லி அப்பா அம்மா கூட கிளம்பி உன் வீட்டுக்கு வந்து விடு” என்று சொல்லி நிறுத்தினான்.

‘இவன் என்ன ‘ஐடியா’ சொல்றான்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

சிங்காரம் ரமேஷைப் பார்த்து “ரமேஷ்,உன் அப்பா அம்மா உன்னேப் பாத்து கேட்டா ‘ஆமா, அந்த பொண்னு சொல்றது சரி சுதாவை அவா அப்பா அம்மா கூட அனுப்பி விடுங்க’ன்னு சொல்லு” என்று சொல்லி விட்டு மறுபடியும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.

மூவரும் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

“ரமேஷ்,கொஞ்ச நாள் போனதும்.நீ மெல்ல உன் அப்பா அப்பா கிட்டே’எனக்கு நீங்க ரெண்டா டாவது கல்யாணம் பண்ண பெண் தேட வேணாம்.பெண் தர வரவா எல்லாரும் முதல் கல்யாண விவரத்தை பத்தி கேப்பா.இந்த.விஷயம் ஊர் பூராவும் பரவும்.அதனால் நான் என் வழியை நானே பார்த்துக்கறேன்.இப்போதைக்கு இந்த சமாசாரத்தை இத்தோடு மறந்துட்டு நாம வேறு வேலையை கவனிக் கலாம்ன்று தீர்மானமாகச் சொல்லி விடு” என்று சொல்லி விட்டு மறுபடியும் சும்மா இருந்தான்.

பிறகு சுதாவைப் பார்த்து “சுதா, நீயும் உன் அப்பா கிட்டே ‘எனக்கு மறுபடியும் ஜாதகம் பாத்து பையனை தேட வேனாம்ப்பா.அப்படி நீங்க தேடி என்னை பொண்ணு பாக்க வரவா என் முதல் கல்யா ணத்தே பத்தி கேப்பா.நாம அதை மறைக்க முடியாது.தவிர ஒரு தடவை கல்யாணம் ஆன பொண்ணை கல்யாணம் பண்ணிக்க யாரும் முன் வரமாட்டா. நான் என் வழியை நானே பாத்துக்கறேன்ன்னு சொல்லி விடு” என்று சொல்லி விட்டு சிங்காரம் கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டான்.

சிங்காரம் வேதாந்தமாக “யார் யாரோ எல்லாம் எத்தனை எத்தனையோ பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செஞ்சு முடிக்கறாங்க.கல்யாணத்துக்கு முன் பெண்ணின் வாழ்க்கைலே நடந்ததை எல்லாம் பொய் சொல்லி மறைக்கிறாங்க.பையன் வாழ்க்கைலே நடந்ததை பொய் சொல்லி மறைக்கி றாங்க. நாம அப்படி எல்லாம் செய்யலையே.நாம ’ஒரு பொய்’, ‘ஒரே ஒரு பொய்’ சொல்லி ரெண்டு காதல் உள்ளங்களை சேத்து வச்சு கல்யாணம் பண்ணி வக்கப் போறோம். நாம் ஏன் இதை செய்யக் கூடாது” என்று மூவரையும் பார்த்துக் கேட்டான்.

கொஞ்சநேரம் யோஜனை பண்ணி விட்டு ரமேஷூம் சுதாவும் “சரி,சிங்காரம்,நாங்க முழு முயற்சி பண்ணி. இந்த ‘ப்லானை’ வெற்றி பெற செய்றோம்” என்று கோரசாகச் சொன்னார்கள்.

இதற்கிடையில் நாலு பேருக்கும் நல்ல ‘ஐ.டி.’ கம்பனியில் நல்ல வேலை கிடைத்து விட்டது.

ரமேஷ்,சுதா, கல்யாணத்தை அவர்கள் குடும்ப பெரியவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து விமரிசையாக கொண்டாடினார்கள்.

‘பஸ்ட் நைட்டின்’ போது சுதாவும், சுரேஷூம் சிங்காரம் சொன்ன ஐடியாப் போல செய்தார்கள்.

தன் பெற்றோர்களுடன் தன் வீடு வந்து சேர்ந்து விட்டாள் சுதா.

“என்னாடா ரமேஷ்,அந்த பொண்னு சொல்றது ‘சரி’ன்னு சொல்றே.நீ ஏண்டா உன்னை ஒரு டாக்டர் கிட்டே உன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டி அந்த ‘ப்ராப்லெத்தை’ சரி செஞ்சி இருக்கக் கூடாது” என்று கத்தினார் ரமேஷின் அப்பா.

ரமேஷ் ஒன்னுக்கும் பதில் சொல்லாம சும்மா நின்றுக் கொண்டு இருந்தான்.

இரு குடும்பத்தாரும் ரமேஷ் சுதா கல்யாணத்தை சுமுகமாக பேசி ‘விவாகரத்து’ செய்துக் கொண்டார்கள்.

அடுத்த நாளே ரமேஷின் அப்பா “டேய் ரமேஷ்,நீ நாளைக்கே ஒரு நல்ல டாக்டரை பாத்து உன் ‘ப்ராப்லெத்தை’க் காட்டி உடனே சரி செஞ்சுக்க” என்று கரிசனமாக சொன்னார்.
ரமேஷூம் “சரிப்பா,நான் என்ன தான் நான் செஞ்சு கிட்ட வைத்தியம்,டாக்டர் ‘சர்டிபிகேட்’ எல்லாம் காட்டினா வரவா நம்பணுமே. அதனாலே நான் என்ன சொல்றேன்னா, டாக்டர் கிட்ட என் உடம்பை காட்டி என் ‘ப்ராப்லெத்தை’ சரி செஞ்சிண்டு, நான் எனக்கு பிடிச்ச ஒரு பெண்ணை பாத்து கொஞ்ச நாள் அவ கூட பழகி, அப்புறமா அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேம்ப்பா. எனக்குன்னு ஒருத்தி என் வாழ்க்கைலே வேணாம்ப்பா” என்று கெஞ்சிய குரலில் கேட்டான் ரமேஷ்.

ரமேஷ் சொல்வது நியாயமாகத் தான் பட்டது ரமேஷின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.

சுதா அவள் பெற்றோர்களிடம் “அப்பா,எனக்கு நீங்க வேறு பையனை எல்லாம் பாக்க வேணாம். என்னுடன் கூட படிச்ச ஒரு பையன் என்னை ரொம்ப நாளாய் கல்யாணம் பண்ணி கொள்ள ஆசை பட்டு வரான்ப்பா.எனக்கும் அவனை ரொம்ப பிடிச்சு இருக்கு. நான் அவனை கல்யாணம் பண்ணிக் கலாம்ன்னு இருக்கேன்.நீங்க எனக்கு ஜாதகம் எல்லாம் பாத்து கல்யாணம் பண்ண ‘ட்ரை’ பண்ணா வரவா என் முதல் கல்யாணத்தே பத்தி விசாரிப்பா.அவா என்னே கல்யாணம் பண்ணிக்க மாட்டா. இனிமே ஜாதகம் பாத்து எனக்கு கல்யாணம் பண்றதுன்றது முடியாத காரியம்ப்பா” என்று தீர்மானமாக சொல்லி விட்டு வெளியே போய் விட்டாள் சுதா.

சுதா வெளியில் போனதும் “சுதா சொல்றது எனக்கு நியாயமா தான் படறது. நாம மறுபடியும் ஜாதகம் பாத்து வரன் ஏற்பாடு பண்ணினா,நிச்சியம் பொண்ணைப் பெத்தவா சுதா முதல் கல்யாணம் ஏன் முறிஞ்சி போச்சுன்னு கேப்பா.நாம சொன்னா அவா நம்பணுமே.அவாளுக்கு வேறே மாதிரி ’நியூஸ்’ கிடைச்சு,அவா ஒரு வாரம் கழிச்சு எங்களுக்கு ‘பொண்ணு பிடிக்கலே’ன்னு போனிலே சொல் லுவா.வேணாம் இந்த வேதனை எல்லாம்.சுதா தனக்கு பிடிச்ச பையனையே அவ கல்யாணம் பண் ணிண்டு சந்தோஷமா வாழ்ந்து வரட்டும்.நீ என்ன சொல்றே” என்று சொல்லி தன் மணைவியை கேட் டார் சுந்தரம்.

“எனக்கும் அப்படி தான் படறது.பேசாம நாம சுதா சொன்னது போல அவ இஷ்டத்துக்கு விட்டுட்டு, அவ அவளுக்கு பிடிச்ச பையனை கல்யாணம் பண்ணிக் கொள்ள நாம் சம்மதம் குடுக்கறது தான் சரின்னு எனக்கும் தோன்றது” என்று சாரதா சொன்னாள்.

வெளியே போன சுதா வீட்டுக்கு வந்ததும் சுந்தரம் சுதாவைப் பார்த்து ”நீ உன்னை ரொம்ப ஆசைப்படும் பையனையே கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருந்து வாம்மா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் சுந்தரம்.

மூன்று மாதம் ஆனதும் ரமேஷ் தன் பெற்றோர்களிடம் “அப்பா நான் வைத்தியம் பாத்து வந்த டாக்டர் என்னை இப்போது பூரணமா குணமாக்கி விட்டார்ப்பா” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

ரமேஷ் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.

“ரமேஷ்,நீ உனக்குப் பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் காதல் கல்யாணம் பண்ணீக்கோ”என்று சொன்னார்கள் ரமேஷின் அம்மாவும் அப்பாவும்.

இனி ‘இளசுகளுக்கு’ வேறு யார் சம்மதம் வேண்டும்.அவர்கள் நடுவே இருந்து வந்த ’சிக்கல்’ தீர்ந்து போனதற்கு சிங்காரம் சொன்ன ‘ஐடியா’வுக்கு நன்றி சொன்ன்னாகள் மூவரும்.
சிக்கலைத் தீர்த்து வைத்த சிங்காரத்தை அன்றில் இருந்து மூவரும் ‘சிக்கலை தீர்த்த சிங்கார வேலன்’ என்று அழைக்க ஆரம்பிக்க ஆரம்பித்தார்கள்.

ஆறு மாதம் கழித்து ‘காதல் ஜோடிகள்’ இரண்டும் சந்தோஷமாக கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *