காமமே காதலாய்

 

நிறை ததும்பும் விழி, ஈரம் உலரா கருங்கூந்தல், இதழும், இதழின் வரிகளும், அவளின் அழகை நெடு நேரமாய் கண்ணாடி முன் நின்று அவளே ரசித்துக் கொண்டிருந்தாள், மஞ்சள் நீராடலில் நனைந்திருந்த அவள் உடல் ஓர் சிற்பம் போல் அந்த கண்ணாடியில் பிரதிபலித்தது, மேலாடை அணியும் முன் அரும்பாத மீசையை முறுக்கி பார்க்கும் இளைஞனைப் போல், தனது பருக்காத மார்பினை மெல்ல வருடி பார்த்துக் கொண்டாள். ஏதோ பெண்மையின் முழுமையை அடைந்ததை போல் அவளுள் ஓர் இன்பக்களிப்பு, ஆடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு விரைந்தாள் .

அவள் வயதுக்கு வந்ததை ஊர் அறிய திருவிழா போல் கொண்டாடிவிட்டு, அதை யாரிடமும் பகிரக் கூடாத பிரம்ம ரகசியம் போல் மது தன் தோழிகளின் கேள்விகளுக்கு சிரிப்பும் வெட்கமுமாய் மழுப்பிக் கொண்டே இருந்தாள். வகுப்பில் இருந்த அனைத்து ஆண்களின் கண்களும் ஒரு முறையாவது மதுவின் மீது பட்டு நழுவிய படியே இருந்தது. குணாவும் மதுவை ரகசியமாய் பார்த்து ரசிப்பதும், அவள் திரும்பியவுடன் அவள் பார்வையை எதிர்கொல்ல முடியாமல் பார்வையை விலக்கிக் கொள்வதுமாய் தவித்துக் கொண்டிருந்தான். ஏனோ பெண்களின் கண்களை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் தைரியம் ஆண்களுக்கு எளிதில் கிட்டிவிடுவதில்லை.

திடீரென ஒரு நாள் மதுவை அவர்கள் வீட்டார் பள்ளியின் பாதி நேரத்தில் அழைத்து சென்றதும், அதை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் மேலாகியும் அவள் பள்ளிக்கு வாராததும் குணாவிற்கு ஏதோ போல் இருந்தது, பெண்களிடம் அதிகமாய் பேசாத குணா, ஒரு நாள் தயங்கித்தயங்கி மதுவின் தோழிகளிடம், அவள் பள்ளிக்கு வராததின் காரணத்தை கேட்ட போது அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி வாயை மூடி மெல்லிய சிரிப்புடன் கடந்து சென்றதின் மர்மம் விலங்காமல் தவித்தான், பின் அவன் நண்பனின் மூலம் அந்த மர்ம சிறிப்பிற்கு விடை கிட்ட, அவன் எண்ணத்தில் வேறு ஒரு கேள்வி தொற்றிக் கொண்டது. “ஆமா வயசுக்கு வரதுனா என்ன?” ஒருகணம் அவன் நண்பன் அதிர்ந்துவிட்டான் . பின் அவனின் ஒட்டு மொத்த நண்பர்கள் பட்டாளமும் கூடி பள்ளி கட்டிடமே அதிரும் அளவுக்கு சிரித்தது அவனை வறுத்து எடுத்தது. வயத்து வருவதை பற்றியும், உடலுறவை பற்றியும் அவன் நண்பர்கள் கொடுத்த விளக்கத்திற்கு வாந்தி வராத குறை குணா அறுவருப்பின் உச்சத்திர்க்கு சென்றுவிட்டான்.

”டே அசிங்கசிங்கமா பேசாதடா டே… அந்த மாதிரியெல்லாம் யாராச்சும் dress செ இல்லாம, அப்படிலாம் பன்னுவாங்களா.. கருமம் புடிச்சவனே” என கேட்டான் குணா

”டே .. இன்னாட இவன் இப்படி கொழந்தமாதிரி பேசுரான்”

”அடிங்க… யாரு கொழந்த மாதிரி பேசுரா.. வாய்கியலாம் ஒடச்சிடுவன்”

”அப்பனா கொழந்த எப்படி பொறக்குதுனு நீயே சொல்லு”

” கல்யாணம் பண்ணும் போது தாலி எதுக்கு கட்ராங்க தெரியுமா? தாலி கட்ணாலே கொழந்த பொரக்கும், அதுக்கு அவ்வளோ பவர் இருக்கு, நீ சொல்லுர மாதிரியெல்லாம் எவனும் பண்ணமாட்டான்”

”போடா லூசு, பாய் வீட்லையும், க்ரிஸ்டீன் வீட்லையும் தாலியா கட்ராங்க, அப்ப அவங்களுகெல்லாம் எப்படி கொழந்த பொறக்குது?”

பின் அவன் நண்பர்கள் சொன்ன விளக்கங்களுக்கும், சால நற்பல ஆபாச படங்களுக்கும், திமிரி எழுந்து, ஓடி ஒலிந்து, கண்களை இறுக்க மூடிக்கொண்டாலும், சிவந்த இதழ்களிலும், பவளம் போன்ற கன்னத்திலும், நீண்ட கழுத்திலும், சிலை போல் செதுக்கிய சிற்றிடையிலும், பருத்த மார்பின் முலைகலிலும் அவன் கண்கள் சிக்கித்தவித்தன, எதிர்படும் ஒவ்வொரு அழகிய பெண்களின் இதழ்களையும் கனம் தோரும் சுவைக்க அவன் இதழ் ஏங்கி தவித்தது. அவனது இரவும் பகலும் அந்த நிர்வான பிம்பங்களுக்குள்ளும், அது எழுப்பிய மாய ஒலிகளுக்குள்ளும் மெல்ல முழுகிபோனது. தொடக்கத்தில் அது அவனுக்கு சுகமாக இருந்தாலும் சில நேரங்களில் அதுவே அவனுக்கு சாபமாக மாறி நின்றது. அதன் முன்பு வரை இயல்பாக பேசிக் கோண்டிருந்த தோழிகளிடமும், பக்கத்து வீட்டு அக்காவிடம்கூட அவனால் இயல்பாக பேச முடியவில்லை, எந்த பெண் அவன்முன் வந்து நின்றாலும் அவர்களின் இதழுக்கும், மார்புக்குமாக அவனது கண்கள் தாவிக் கொண்டே இருந்தது. தனக்குள் ஏதோ தவறு நேர்ந்துவிட்டதாக அவன் உணர்ந்தான். அவன் காம உணர்வுகள் எல்லாம் மெல்ல குற்ற உணர்வாக மாற தொடங்கியது. அந்த காம எண்ணத்திற்குள் இருந்து வெளிவர அவன் எண்ணிய ஒவ்வொரு கனமும் அதன் ஆழத்திற்க்குள் இழுத்து தள்ளியது.

அந்த குற்ற உணர்வில்தான் மதுவின் கண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான், எதர்ச்சையாக மதுவை பார்க்க நேரும் கணமும், அவன் கண்கள் மதுவின் இளமார்பின் மீதே படிந்தது. எத்துனை முயன்றும் அந்த உணர்வுகளில் இருந்து அவனாள் விடுபட முடியவில்லை, அந்த காமத்தை ரசித்தான், சுய இன்பத்தின் வழியே அந்த அழ்கடலின் இன்ப சுழற்சியில் உழன்று களித்தான், அதன் பரவசத்தில் திலைத்தான். அவன் சக்திகள் நீர்த்து போன கனம் தான் ஏதோ தவரு செய்துவிட்டோம் என தன்னை தானே நொந்துக் கொண்டு அந்த காமத்தை உமிழ்ந்து தள்ளினான், ஆனால் மீண்டும் அதே காமம், அந்த காமத்தை பற்றி அவனால் யாரிடமும் பேசவும் முடியவில்லை, அது என்ன வென்று அவனால் விளக்கி கொள்ளவும் முடியவில்லை.

பேருந்தின் ஜென்னலின் வழியே அடிவானத்தில் சென் நிறமாய் மறைந்துக் கொண்டிருக்கும் சூரியனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான், ஒரு நாள் அந்த காமமும் அதுபோல் மறைந்து விடாதா என்று, அருகில் யாரோ அமர்வதை உணர்ந்து அவன் திரும்பி பார்க்க அவன் அருகில் மது. திடீரென அவன் நெஞ்சில் ஒருவிதமான பயம், ஒரு படபடப்பு, காதல் அல்லது அது எந்த விதமான உணர்வென சரியாக அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. நெடுநாட்களாய் மதுவை தொலைவில் இருந்தே ரசித்தவன் என்றாவது ஒரு நாள் அவளை நெருங்கிவிட முடியாதா என ஏங்கி தவித்தவனின் தோள்களை உரசியவாறு அருகில் அமர்ந்திருந்தாள் மது, இப்படிப்பட்ட ஒரு தரிசனம் கிடைத்தும் அவனால் மதுவை இரண்டு நொடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை உடனே தலையை திரிப்பிக் கொண்டு ஜென்னலின் வழியே வெளியே பார்த்தான், கைகளை பிசைந்தான் நகத்தை கடித்தான், யாரும் அறியா வண்ணம் தனக்கு தானே சிரித்தான், மீண்டு மீண்டும் அதே சுழற்சி பார்ப்பதும், மறைவதும், சிரிப்பதும் . அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை அந்த இடத்திலே எழுந்து கத்திக்கொண்டே ஒரு ஆட்டம் போடவேண்டும் போல் இருந்தது. குணாவின் கரங்களை மது மெல்ல பற்றியதுதான் நேரம். அவன் கரங்கள் நடுக்க முற்று, இதய துடிப்பு பல மடங்கு உயர்ந்து தாருமாராய் துடித்தது, சுற்றி இருந்த எல்லாம் மெல்ல இருண்டு போக. அங்கே அவனும் மதுவும் மட்டுமே, உணர்ச்சி பெருவெள்ளத்தில் தத்தலித்துக் கொண்டிருந்தான் குணா. மது தன் சிறிய இதழ்களை அளவாய் விரித்து சிரித்தாள். அப்படியே அவளை கட்டியணைத்து அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி பிடிக்க வேண்டும் என அவன் உடல் தவித்தது. ஆனால் பயம், பொது நாகரீகம் உருவாக்கி வைத்த வரையறை.

நாகரீகங்கள் வரையறைத்து வைத்த எல்லைகள் மிகவும் பலவீனமானவை, அது பொதுவெளியில் தங்களை ஒப்பழுக்கற்ற புனிதர்கள் என காட்டி கொள்வதற்காக மனிதர்கள் உருவாக்கிவைத்துக் கொண்ட புனைவு. புனைவுகள் எப்பொழுதும் நிலைப்பதில்லை, மனிதன் தன் அந்தரங்கத்தில் அந்த முற்களால் வேயப்பட்ட நாகரீகம் எனும் ஆடையை கழற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாய் நிற்கவே ஆசைப்படுகிறான். அந்த தனித்த அரையில் குணாவும், மதுவும் ஆடைகளை கலைந்து முழு நிர்வாணமாய் நின்றிருந்தனர். அவர்களின் பள்ளி பருவம் முடிந்து கல்லூரி காலம் தொடங்கிய பொழுது அவர்கள் பிரிய நேரிட்டது, அரிதாக விடுமுறையில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் மட்டுமே.

இந்த தனிமை அவர்களின் நெடு நாள் தாபம். பெரும் அணைகளை உடைத்து வெளியேரும் காட்டாறு போல் நெடுங்காலமாய் அவர்களின் சிந்தனைக்குள் தேக்கவைக்கப்பட்டிருந்த காமம் வெடித்து வெளியேறின. அந்த காம நதியில் அவ்விரு உடல்களும் ஒன்றுடன் ஒன்று மோதி மாபெரும் சுழற்சியை உருவாக்கின. இதுவரை காண துடித்த உடல், தீண்ட துடித்த உறுப்புகள் என அனைத்தையும் வென்று எடுத்தான், ஒருகனம் குணாவின் இரு கைகளுக்குள் அடங்கிவிடும் குழந்தை போல் இருந்தவள் மறுகனம் வேட்டையாடும் மிருகம் போல் அவனை தன் கைக்குள் அடக்கியாண்டாள். அட்சய பாத்திரத்தில் நிறையும் அன்னம் போல், அவர்களின் காமம் வற்றாத ஊற்றாய் சுரந்துக் கொண்டே இருந்தது, இடமும் காலமும் மறந்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புணர்ந்து மகிழ்ந்தனர், மெல்ல மெல்ல குணாவின் பார்வையில் அவன் மனதில் கொதித்துக் கொண்டிருக்கும் காமத்தை தனிக்கும் உடலாக மாறிக் கொண்டிருந்தாள் மது

வெகு நேரமாய் office ல் உள்ள உயர் அதிகாரி முதல் கூட்டி பெருக்கும் வேலை பெண் வரை எல்லாம் மதுவை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திடீர் சூழல் மாற்றம் அவளால் ஏனென புரிந்துக் கொள்ள முடியவில்லை, பின்புதான் அவள் செய்தியை அறிந்து உயிரற்றவள் போல் ஆனால், குணாவும் மதுவும் அந்தரங்கமாக இருந்த video பதிவுகள் எல்லாம் இனையத்தில் வெளியாகியிருந்தன. அழுகை பொத்துக்கொண்டு வந்தது . நண்பர்களாக, உறவுகளாக பழகிய எல்லோரும் ஒரே நொடியில் ஒரு வேசியை பார்ப்பது போல் பார்த்தனர். யாராவது ஒருவரிடம் இருந்து ஆதரவு கிடைக்காத என அவள் கண்கள் ஏங்கின. தன்னை காணும் ஒவ்வொரு ஆண்களின் கண்களிலும் உள்ள வன்முறையை உணர்ந்தாள். ஏன் ஆண்களுக்கு இப்படி ஒரு ஈன புத்தி, மாமிச பட்சிகள், பெண்களின் உடலை வேட்டையாட துடிக்கும் மாமிச பட்சிகள் வெகு நேரமாய் தன் மார்பையே பார்த்துக் கொண்டு இருந்தவனை பலாரென கன்னத்தில் அரைந்துவிட்டு தன் இரு மார்புகளையும் வெட்டி அவன் கையில் கொடுத்துவிட வேண்டும் போல் இருந்தது. துப்பட்டாவள் மார்பிலும், முகத்திலும் சுற்றிக்கொண்டு office ல் யாரிடமும் சொல்லாமல் வெளியேறினாள்.

Hostelக்கு வந்த அவள் வேகமாய் தன் அறை கதவை மூடிக்கொண்டு வெடித்து அழுதாள். கோவம், ஏமாற்றம், எல்லாம் சேர்ந்து கண்ணீராய் வழிந்துக் கொண்டிருந்தது. விடாது ஒலித்துக் கொண்டிருந்த mobile லை தூக்கி எறிந்தாள், கையில் கிடைக்கும் அனைத்தையும் உடைத்துப் போட்டாள். தன் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதற்கே அவளுக்கு அருவருப்பாக இருந்தது, தன் உடல் முழுவதையும் துண்டுதுண்டாக வெட்டியெறிந்து விடவேண்டும் போல் இருந்தது. கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ஒரு கண்ணாடி துண்டை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தான் கையை அருத்துக் கொண்டாள். இரத்தம் கட்டுக்கடங்காமல் வழிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் கண்கள் இருண்டு வந்தன, நிற்க முடியாமல் நினைவற்று கட்டிலில் சாய்ந்தாள்.

யாரோ அவள் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது, மெல்லிய குரல், அவளுக்கு மிகவும் பரிச்சயமான குரல், ஆம் குணா, அது குணாவேதான் . அவளால் கண்களை உடனே திறக்க முடியவில்லை, சிரமப்பட்டு தன் கண்களை திறந்தாள், மங்கலான பிம்பத்தில் குணா தெரிந்தான், பள்ளியில் பார்த்த அதே குணா, பெண்களை அருகில் பார்த்தாலே பயந்து நடுங்கி தயங்கி தயங்கி பேசும் குணான். தனக்காக உயிரை விட துணிந்தவன், மது அவன் கன்னத்தில் தனது கரங்களால் தீண்டினால், மெல்ல அவன் முகம் தாடியும் மீசையும் முளைத்த குணாவாக மாறினான், அவன் கண்களில் இருந்த வெகுளி தனம் மறைந்து கோபத்தையும் காமத்தையும் உமிழ்ந்து.

குணா “வாடி தே*** எப்டிலாம் என்ன உன் பின்னால அலையவிட்டிருப்ப, இப்ப தெரியுதா நான் யாருன்னு. யாரவன் உங்க அப்பன் பாத்து வெச்சிருக்கானே ஒரு மாப்ள , அவனுக்கு சின்ன சின்ன போட்டோலாம் அனுப்பாத, நா அனுப்புனேனே அந்த வீடியோவ அனுப்பு. அவன் உன்னோட மொத்த உடம்பையும் பாத்து ரசிக்கட்டும். அது சரியா தெரியலனா சொல்லு அதவிட சூப்பர் வீடியோலாம் இருக்கு அத அனுப்பி வைக்கிறேன்” என்று அவள் முடியை பிடித்து தரதரவென வெட்டவெளியில் இழுத்து வந்து கம்பத்தில் கட்டி போட்டான். அவளின் ஆடைகளை முழுவதையும் கிழித்து எறிந்து முழு நிர்வாணமாக ஆக்கினான். இதுவரை அன்பாய், மரியாதையாக பார்த்த உறவினர்களும், நண்பர்களும் சுற்றி நின்று அவளை அருவருப்பாக பார்த்தனர், கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவந்த அவள் அம்மா மண்ணை வாரி இறைத்து அவளை சாபமிட்டாள். மது எதையோ சொல்ல வாய் எடுத்தால். கூட்டம் முழுவதும் இந்த வேசியை கொல், இப்படி பட்ட ஒழுக்கம் கெட்டவள் இருப்பதை விட சாவதே மேல்… அவளை கொல் கொல் என கூட்டம் முழுவதும் கத்தியது. குணா அவள் மேல் தீ முட்டினான். அவள் உடல் முழுவதும் பற்றி எரிந்தது அவள் உடம்பின் ஒவ்வொரு இடமும் ஆயிரம் முற்களை வைத்து குத்துவது போல் அவள் துடித்தாள், அந்த மாபெரும் கூட்டத்தின் வசை ஒலிகளுக்குள்ளே அவள் எழுப்பிய சிறிய ஒலி நீர்த்துப்போனது. அவள் உடல் தீயில் வெந்து யாரும் பார்க்க விரும்பாத அருவருப்பாய் மாறியது.

திடுக்கிட்டு கண்விழித்தாள் மது. பதறி கொண்டு தன் உடல் முழுவதையும் தொட்டுப்பார்த்தாள். கையில் அவள் கண்ணாடி துண்டால் கிழித்துக் கொண்ட இடத்தில் ஒரு கட்டு மட்டும் இருந்தது. மற்றோரு கையில் குழாய் ஊசி வழியே மருந்து ஏறிக்கொண்டிருந்தது. பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டபடி கட்டிலில் சாய்ந்தாள். மறுகணமே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது, உள்ளுக்குள் ஏன் பிழைத்தோம் என எண்ணம் எழுந்தது. அந்த அரை கதவின் கண்னாடி வழியே வெளியே பார்த்தாள் அங்கு அவளுக்காக ஒரு கூட்டம் காத்துக் கிடந்தது அவர்களிடம் தன்னை பற்றி பேச அவளிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தது. ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமான விமர்சங்களுடன் வெளியே ஒரு சமூகம் காத்துக்கிடந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கதையைப் பற்றி: வீசப்படும் தூண்டிலில் ஒன்று வெல்வது தூண்டில் போட்டவன், இல்லையெனில் வலிமையான மீன் இடையில் இருக்கும் புழு எப்பொழுதும் பிழைப்பதில்லை. மதங்களின் வலிமையை பெருக்க நடைபெறும் அறமற்ற மதவேட்டையில் சிக்கி தூண்டில் புழுவென சிதையும் பெண்களை பற்றிய கதை. கருமை தீட்டிய இருள், ...
மேலும் கதையை படிக்க...
தூண்டில் புழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)