காத்திருப்பு

 

என்னுடைய பெயர் ராதா.நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஒரு மாதங்களே ஆன நிலையில், முதல் முறையாக விடுமுறைக்காக வீட்டிற்க்கு செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பேருந்தும் கிடைத்தது. அவசர அவசரமாக பேருந்தில் இடம் பிடிக்க சென்றேன். அதிர்ஷ்டவசமாக இடமும் கிடைத்தது. ஆனால் மனதில் தயக்கம்.அந்த இடத்தில் அமரலாமா ? என்று.

அது மூவர் அமரும் இருக்கை,அந்த இருக்கையின் ஜன்னல் ஒரம், ஒரு 24 வயது உடைய ஆண் அமர்ந்து இருந்தான்.

வேறு இடத்தை தேடி பார்வை சென்றது. ஆனால், என் நேரம் இடம் எதுவும் இல்லை. ஆகவே ஒரு இடைவெளி விட்டு அவன் அருகில் அமர்ந்தேன்.

பேருந்தும் மெல்ல ஊர்ந்தது.ஒரு பத்து நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு 46 வயது மதிக்கத்தக்க பெண்மணி பேருந்தில் ஏறினாள்.

என் அருகில் வந்து நின்று என்னை சற்று தள்ளி அமர சொன்னாள்.

நானும் சற்று தயக்கத்துடன் அமர்ந்தேன்,நேரம் கரையத் தொடங்கியது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு,அவனுக்கு கைப்பேசில் அழைப்பு வந்தது. அவன் சிறிது நேரம் பேசி விட்டு,தனது கைப்பேசியை அணைத்தான். அவனுடையக் குரல் மென்மையாக இருந்தது, நான் என்னையும் அறியாமல், அவனை கவனிக்கத் தொடங்கினேன்.

அவன் சீராக வெட்டப்பட்ட கேசத்தையும்,வசீகரமான பெரியக் கண்களையும், நீண்ட நாசிகளையும்,தாமரைப் போன்ற இதழ்களையும், அகன்ற தோள்களையும் கொண்டு இருந்தான்.

அவனுடைய கைப்பேசியின் திரையில் இருந்த வாசகத்தை படிக்க ஆரம்பித்தேன். அவ்வாசகமானது “Everything Happens for a Reason”’. அவ்வாசகம் கூட அவனைப் போல நேர்த்தியாக இருந்ததது.சில்லென்ற காற்றையும், மனதிற்கு இதமான ரகுமானின் இசையையும், அவனையும் ரசித்துக் கொண்டு இருந்தேன்,அவனறியாமல்.

சில மணி நேரத்திற்குப் பிறகு, என்னுடைய கைப்பேசி அலறியது.

என்னுடைய தந்தை நான் எந்த இடத்தில் இருக்கின்றேன், என்றுக் கேட்டார்.

நான் தெரியவில்லை என்றேன்.

அப்போது ‘திண்டிவனம் அருகில்’ என்று ஒரு குரல் ஒளித்தது.

அது அவன் குரல் தான்.

மிகவும் ஆச்சர்யம் அடைந்த நான், என் தந்தையிடம் பேசி முடித்தவுடன் என்னுடைய நன்றியை தெரிவித்தேன்.

பிறகு மெல்ல மெல்ல பேசத் தொடங்கினோம்.

படிப்பு,உத்தியோகம்,சினிமா,பிடித்தது,பிடிக்காதது என அனைத்தையும். என் மூளை எச்சரித்தது, பேசாதே என்று. ஆனால் என் மனமோ கேட்கவில்லை. காரணமும் தெரியவில்லை.

எங்களுடைய பேச்சும் நீண்டது, எங்கள் பயணம் போல.

அவனுடைய பேச்சில் ஒரு தெளிவு இருந்தது. அதை நான் விரும்ப தொடங்கினேன்.

நாங்கள் இறங்கும் இடமும் நெருங்கியது. நான் சிறிது தயக்கத்துன்,அவனுடைய கைப்பேசி எண்ணைக் கேட்டேன்.

எண்களை பறிமாறிக் கொண்டோம்.

இறங்கும் இடமும் வந்தது. இருவரும் பிரியா விடைப் பெற்றோம்.

அன்று இரவு முழுவதும் , அவனுடைய நினைவுகள் மட்டுமே. இதை யாரிடமாவது சொன்னால்,அவர்கள் என்னை பைத்தியம் என்பார்கள்.

காத்துக் கொண்டு இருக்கின்றேன், அவனுடைய அழைப்புக்காக….

அவனுடைய நினைவுகளுடன்…..

நான் சொல்ல மறந்துவிட்டேன், அவன் பெயர் ராகவன். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஊர் எங்கும் மழை , விடிய விடிய ஓயாமல் கொட்டியது . பூமி தாய் போதும் போதும் என்கிற அளவிற்கு மழை. மழை புயலாக மாறியது. என்னுடைய கைபேசிக்கு ராகவனிடம் இருந்து விடியற்காலை சுமார் 4 மணியளவில் அழைப்பு வந்தது. இரவு பணியை ...
மேலும் கதையை படிக்க...
கார்ப்பரேட் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)