காதல்

 

அடுக்குமாடிகள் முளைத்து இருந்த திட்டிப் பகுதியைத் ‘திவைத்தா’ என்றார்கள். அது ஓஸ்லோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது ஒரு திட்டியாக, எண்ணைக்காசு வந்தபின்பு நோர்வேயில் எழுந்த மாடிவீடுகள் அங்கு வானை முட்டுகின்றன. இலங்கையிலிருந்து பயத்தைக் காட்டி வெளிநாட்டிற்கு வந்த நாங்கள் இங்கு இருந்த வளத்தைக் கண்டு பூரித்துப் போய்விட்டோம். இந்தா நாடுதிரும்புகிறோம் என்ற கதை மலையேறிப் போய்விட்டது. இப்போது இங்கே கல்லறை தேடுபவர்களின் தொகை அதிகரித்துவிட்டது. மனித சுபாவம் அப்படித்தான். மன்னித்துக் கொள்ள வேண்டும். வேலை செய்து வரி கட்டி வாழ்வதில் தமிழர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது மட்டும் பெருமைதான். கடனட்டையைக் களவு செய்து அனைத்துத் தமிழர்கள் முகத்திலும் அடிக்கடி கரிபூசி விடுகிறார்கள் என்பதும் உண்மை. தமிழன் என்கின்ற ஒரு இனம் இருக்கிறது என்பதை உலகிற்குக் ஏற்றுமதி செய்தபெருமை மட்டும் அல்ல அதையே எங்கள் அடையாளமாய் கொண்ட பெருமை எமக்கே உரித்தானதுதான். கால ஓட்டத்தில் எங்கள் பெருமைகள், அடையாளங்கள் அஸ்திவாரம் இல்லாது கட்டப்பட்ட கோட்டைகளான அந்தரம் செல்விக்கு வருவது உண்டு.

திவைத்தா ‘சொப்பிங் சென்றர்’ அந்த திட்டிக்கு ஏறும் அடிவாரத்தை வழிமறித்துக் கொண்டு நின்றது. நிலத்திற்கு கீழ் ஓடும் ‘இரும்பு வண்டிகளின் ‘ நிலையம் அதற்கு கீழே இருந்தது. பிரதான வீதி இந்தத் திட்டியின் அடிவாரத்தின் கரையோரமாகப் நீண்டு கொண்டு இருந்தது. பிரதான வீதியை மனிதர்கள் பாதுகாப்பாய்க் கடப்பதற்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.

பரமேஸ்வரன் என்கின்ற பரமேஸ்சும் கலைச்செல்வி என்கின்ற செல்வியும் திவைத்தா சென்றருக்குள் தமது காருடன் நுளைந்தார்கள். காரைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு கட்டடத்திற்குள் புகுந்தார்கள். கதவு தானாகத் திறந்து வாழைப்பழத்திற்கு புகைஅடிப்பது போல வெப்பக் காற்றை அடித்து அவர்களை உள்ளே அனுப்பி வைத்தது. விடுப்பு பார்ப்பது செல்விக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் கண்களில் அப்படியான காட்சிகள் எப்போதும் தட்டுப் பட்டுவிடும். ‘ வெல்றில் ‘ போய்க் கொண்டு இருந்த பரமேஸின் கையைப் பிடித்து இழுத்தவள்…

‘அங்க பாருங்க அப்பா அதுகளை ‘ என்றாள். பரமேஸ் அவள் காட்டின திசையில் பார்த்தான். அங்கே ஒரு பதினேழு வயது மதிக்கத்தக்க தமிழ் பெண் ஒருத்தி நோர்வே இளைஞ்ஞனோடு இதழோடு இதழ் வைத்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தாள்.

‘இதில என்ன அதிசயம் இருக்குது? ஏன் உனக்கு அப்பிடி வேணுமே?’ பரமேஸ் குறும்பாகச் செல்வியைப் பார்த்துக் கேட்டான்.

பரமேஸை முறைத்த செல்வி, ‘உங்கட புத்திய மாத்தேலாது’

‘ஏன் உன்ரபுத்தி மாத்திரம் நல்ல புத்தியா இருந்திருந்தா காந்தியின்ர குரங்குமாதிரியெல்லே நீ வந்து இருக்கோணும்’ என்றான்.

‘ஏன்னப்பா நான் கண்ணால கண்டதைக் கதைக்கிறது கூடத் தப்பே?’

‘நீ கதைக்கிறதுக்கு அதில என்ன அப்பிடித் தப்புக் கண்டிட்டாய்?’

‘இல்ல ஒரு தமிழ் பெட்டையா இருந்து கொண்டு இப்பிடி வெட்கமில்லாமல் செய்யிறதே?’

‘அப்ப வேற இனத்திற்கு இருக்கிற உணர்ச்சி எல்லாம் எங்கட இனத்திற்கு இருக்கக் கூடாதே? தமிழ் பெட்டைக்கு மாத்திரம்தான் வெட்கம் இருக்கோணுமே? யாழ்பாணத்தில பஸ்சுக்க சிங்களப்பிள்ளையே கிஸ் பண்ணுகினம்?’

‘நீங்கள் எல்லாத்துக்கும் இடக்கா கதைப்பீங்கள் அப்பா’

‘நான் என்ன இடக்கா கதைக்கிறன்… உண்மையைத்தானே சொல்லுறன்.’

‘அதுக்கு தமிழ் பெட்டை ஒண்டு இப்பிடிச் செய்யிறதையும் நியாயப் படுத்திறதே?’

‘அவளை யாரடி தமிழ் பெட்டை யெண்டு சொன்னது?’

‘நீங்கள் என்னப்பா கதைக்கிறியள்?’

‘தமிழருக்கு பிறந்தா தமிழ் பெட்டையா இருக்கோணும் எண்டு கட்டாயமே? உந்தப் பிள்ளையளுக்குத் தாய்மொழி நொஸ்க். தெரிஞ்ச கலாச்சாரம் நோர்வே காலச்சாரம். சிந்திக்கிறது நொஸ்க்கில… தோலும் பெயரும் தமிழர் எண்டு சொன்னா அவை தமிழராகி விடுவினமே? சொந்த மொழி தமிழா இருந்து, யாழ்பாணக் கலாச்சாரத்தில கட்டுப்பாடா வளா்ந்த குஞ்சுகள் தானோடி பஸ்சுக்க கட்டிப்பிடிக்குதுகள். பிறகு நீ இங்க கட்டுப்படுத்தத் தேவையில்லை எண்ட காலச்சாரத்தில வளர்ந்ததுகளைப் பார்த்து வாயை ஆவெண்டுறா’

‘உங்களோட கதைக்கேலாது. வாங்க நாங்க வந்த அலுவலைப் பார்ப்போம்’

‘எங்களோட கதைக்கேலாதோ, இல்லாட்டி உங்கட கதையில நியாயம் இல்லையோ?’

‘வாயப் பொத்திக் கொண்டு வறியளே அப்பா’

‘எல்லாரும் இப்பிடித்தாண்டி வெருட்டப் பார்க்கிறியள்’

அன்று சனிக்கிழமை. கைகாலை நீட்டி நிமிர்ந்து கொஞ்சம் அலுப்புத்தீர படுத்துவிட்டு பரமேஸ் காலைச் சாப்பாடு சாப்பிடு வதற்கு வந்திருந்தான். செல்வி ஏதோ கவலையாக தலைக்குக் கைகொடுத்தவண்ணம் யோசனையில் இருந்தாள். பரமேஸ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,

‘என்னடி கொப்பற்ற கப்பல் கிட்டங்கியில கவுண்டமாதிரி இருக்கிறாய்?’ என்றான்.

‘உங்களுக்கு ஒழுங்காகப் பிள்ளைய வளர்க்கத் தெரியாது, உந்த நக்கலுக்கு மாத்திரம் குறையில்லை.’

‘இப்ப அதையும் எங்கட தலையில கட்டியாச்சே?’

‘எதை?’

‘பிள்ள வளர்க்கிறதை’

‘ம் கிளிச்சியள்’

‘செரி இப்ப சொல்ல வந்ததைச் சொல்லு… இல்லாட்டி அதையும் மறக்கப் போறா’

‘கவின் வெளியால போயிட்டான்’

‘செரி அவன் நெடுக வீட்டுக்க இருக்க முடியுமே? போட்டு வரட்டும். அதுக்கு இப்ப என்ன?’

‘உங்களுக்கு பச்சை வாழைத்தாராட்டம் மூளை. எல்லாம் சொன்னாத்தான் விளங்கும்’

‘நான் என்ன ‘ஐன்ஸ்டைன்’னே சொல்லாமல் கொள்ளாமல் பிரபஞ்சம் பற்றி வழங்கிக் கொள்ள. பத்துதரம் கம்பரமாயனத்திற்கு கருத்துச் சொல்லித் தாந்தாலே பதினெராவதுதரம் அதுக்கு என்ன அர்த்தம் எண்டு தெரியாமல் நிண்டு முழிப்பன். இப்ப நீ விசயத்தைச் சொல்லு’

‘அவர் தன்ர சாரஸ்த்த (பெண்நண்பி) வீட்ட போறார். படம் எல்லாம் பார்த்திட்டு இரவுக்குத்தானாம் இங்க வருவினமாம்.’

‘ஓ’

காதல் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகும் உரிமையும் தைகிரியமும் இவர்களுக்கு இருக்கிறது. பரமேஸ்சுக்கு தான் சிறிய வயதில் களவுகளவாய் மதிலால் சுமியை எட்டிப்பார்க்க… ஆரடா அது எட்டிப் பார்க்கிறது என சுமியின் அப்பா கத்த… பரமேஸ் பயத்தில் சைக்கிளால் விழுந்து அறிவு ,மூச்சு இல்லாமல் கிடக்க… சுமியின் அப்பாவே வாழியோடு தண்ணியை கொண்டு வந்து அவன்மேல் ஊற்றி ‘இனி இந்தப்பக்கம் வந்தியெண்டா அறுத்துப் போடுவன்’ எண்டு கலைத்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. அங்கே அப்போது காதல் செய்வது குற்றம். செய்தாலும் அதை வெளிக்காட்டுவது அதைவிடக் குற்றம். வெளிக்காட்டினாலும் சேர்ந்து திரிவது அதைவிட அவமானம். இப்போது யாழ்பாணத்தில்…?

இங்கு அது எல்லாம் தலைகீழாக இருக்கிறது. அப்படிச் செய்யவிட்டால் பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்கிறதோ என மருத்துவரிடம் அனுப்பிப் பரிசோதிக்க ஆலோசனை வழங்குகிறார்கள்.

‘என்ன இப்ப வாயடைச்சுப் போச்சே’ இவ்வளவு கவலையிலும் பரமேஸ் பதில் சொல்ல முடியாது தெண்டாடியது செல்விக்கு ஒரு வித சந்தோசத்தைக் கொடுத்தது.

‘இதில என்ன அதிசயிக்க இருக்குது’

‘ஐயோ இதுகளோட நான் என்னெண்டு சீவியம் நடத்துறது’

‘இல்ல இப்ப யாழ்பாணத்திலேயே… எங்களுக்கு எல்லாம் இந்த அதிஸ்ரம் இருக்கேல்லை எண்ட வெப்பியாராமாக்கும் உனக்கு’

‘உந்த பாட்டை நிப்பாட்டுங்க இப்ப. அவனுக்கு ஆகப் பதின்னாலு வயசுதான் ஆகுது…’

‘அப்பிடித்தான் யாழ்பாணத்திலும்…’

செல்வி மேசையில் இருந்த அப்பிளைத் துாக்கி பரமேஸை நோக்கி ஏறிந்தாள்.

- தினக்குரலில் பிரசுரிக்கப்பட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம் நீக்கி நியாயத்தின் மீது நிலையாக காலூன்றிய கணங்கள். அசோகவனத்திற்கு அன்னை ...
மேலும் கதையை படிக்க...
இந்திரன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தரை அங்கே கண்டு கொள்ளலாம் என்கின்ற திடமான நம்பிக்கை அவனிடம் இருந்தது. இந்திரன் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். பௌத்த துறவி போலக் காவி தரிக்காவிட்டாலும் அவனும் காவி தரித்திருந்தான். தலை மொட்டையாக மழிக்கப்பட்டு ...
மேலும் கதையை படிக்க...
அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக் காவலனான பிள்ளையார் கோயில். இருள் கொண்ட நேரத்திலும் இரகசியம் பேசாத அலைகளின் கரைகாணும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள். ...
மேலும் கதையை படிக்க...
கமாலா ஒஸ்லோவில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு போவதற்காய் மிகவும் ஆர்வத்தோடு புறப்பட்டாள். அவள் அதற்காகப் பல மணித்தியாலங்கள் பல ஆடையலங்காரங்களை மாற்றி மாற்றி இறுதியாக ஒரு சிவப்புக் காஞ்சிபுரத்தை தெரிவு செய்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள். செல்வனைப் புறப்படுமாறு ஏற்கனவே பத்து ...
மேலும் கதையை படிக்க...
நன்றியுள்ள, என்றும் நம்பிக்கையான நட்பிற்கு அடையாளம் நாய்? விசுவாசத்தின் மறுபெயராகப் பூலோகத்தில் அவதாரமாகிய வைரவரின் வாகனம். ஐந்தரை அறிவு படைத்தாலும் ஆறறிவை மிஞ்சிய அற்புதம். சுந்தரன் சிறுவனாக இருந்த போது குட்டி நாய் ஒன்று அவன் வீட்டில் வளர்ந்தது. அதனுடன் கலையில் ...
மேலும் கதையை படிக்க...
வேலையால் வரும்போது தன்னையறியாத அலுப்பு உடலில் புகுந்து முறிப்பதாய் ஒரு அவஸ்தை. வீடு வேலை வீடு வேலை என இயந்திரமயமாகிய அலுத்துப் போன மனதில் உருவாகும் நச்சு உணர்ச்சிகளாகக் கோபம், ஆதங்கம், அவசரம், வெறுப்பு என்பதாக இன்னும் பல புற்றில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
ஏற்றமான இடமொன்றில் பரந்து விரிந்து கிடந்த சீக்கயெம்மின் (முதியோர் இல்லம்) கண்ணாடிக் கதவுகள் செல்வியை உள்ளே விட்டுத் தாளிட்டுக் கொண்டன. தாளிட்டதான அந்தச் சுதந்திரத்தைப் பிடுங்கும் உணர்வு நிம்மதி திருடிச் சென்றது. ஆரம்பக் காலங்களில் தோன்றாத இந்த உணர்வு இப்போது வாட்டும் ...
மேலும் கதையை படிக்க...
இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும் அடங்காத மோகத்தில், அதனால் விளைந்த அபரிமிதமான இச்சையில், அதுவே அவர்கள் உடலில் ஏறிய உந்தும் வேதனையான காமத்தின் வீறுகொண்ட பரிணாமிப்பில், ...
மேலும் கதையை படிக்க...
நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில் தொடங்கி முன்னோக்கிச் செல்லச் செல்ல பால், பழரசம், தயிர். வெண்ணை, ...
மேலும் கதையை படிக்க...
தேவி அடிவயிற்றைப் பூப்போலத் தடவிப் பார்த்துக் கொண்டாள். மஞ்சள்ப் பௌர்ணமி வந்து அடிவயிற்றில் குந்தியதாக அது கனத்தது. அதன்மேல் மலரின் மென்மையோடு மேடும் பள்ளமும் மாறிமாறி இடைக்கிடை உருண்டு ஓடிக்கொண்டிருந்தன. அந்த உருளலில் தாய்மை பொங்க, தனங்களும் கனப்பதாக அவள் உணர்ந்தாள். ...
மேலும் கதையை படிக்க...
சீதாயனம்
உதயம்
வானத்தால் குதிக்கும் வடலிகள்
தெய்வமில் கோயில்
வப்பு நாய்
அகப்பைக் காம்பு
அல்லல்
அவன்
கர்ண வேஷம்
கிறிஸ்பூதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)