கடற்கரை.
கடலைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது?
பேச ஆரம்பித்தான் கார்த்திக்.
“ஏதோ பேசனும்னு சொன்னியே மலர்….”
“என்னை மன்னிச்சுடு,இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை கார்த்திக்” உடைந்தகுரலில் வந்து விழுந்தது மலரின் வார்த்தைகள்.
அவன் எதிர்பார்த்ததுதான்.
மலருக்கு நிச்சயதார்த்தம் நேற்றுதான்
நடந்தது.
“தெரியும் மலர்”
“உனக்கு கவலையா இல்லையா கார்த்திக்,எனக்கு அழுகையா வருதுடா”
“இதுல அழுறதுக்கு என்ன இருக்கு? உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கற
மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்,படிச்சவர் அப்புறம் என்ன மலர்?”
“தெரியும் கார்த்திக்,ஆனா உன்னைப் பிரிஞ்சு எப்படி வாழப்போறேன்னுதான்
தெரியலடா”
“முதல்ல பிரண்டா இருந்தோம்,அப்புறம் காதலிச்சோம்,இப்போ பிரியறோம்,இதுல கவலைபட்டு என்ன ஆகப்போகுது மலர்?”
“எப்படிடா இவ்ளோ ஈஸியா உன்னால பேச முடியுது?”
அவள் கேட்டதை கவனிக்காமல் நாளை நடக்கவிருக்கும் தன் நிச்சயதார்த்தத்தை நினைத்தபடியே பேச்சைத்தொடர்ந்தான் கார்த்திக்.
- Wednesday, December 12, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று ...
மேலும் கதையை படிக்க...
ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள். அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் ...
மேலும் கதையை படிக்க...
கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது.
அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத்.
"என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே பேசாம கடலையே பாக்குற?" பொறுமையிழந்து கேட்டான் சேகர்.
பெருமூச்சு ஒன்றை பலமாய் வெளியிட்டு பேசத்தொடங்கினான் வினோத்.
"சேகர், உனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் காதலுக்கும் ஒத்தே ...
மேலும் கதையை படிக்க...
மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள்
ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும். முதல் முறையாக ஒரு
கொலை செய்யப்போகிறேன் என்கிற எண்ணமே உடலுக்குள் ஏதேதோ செய்தது. லேசாய்
உடம்பு சுட்டது. முதல் வகுப்பு ஏசியில் பயணித்தும் வியர்த்துக்கொண்டே
இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
மெரினா கடற்கரை:
"இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே
இல்லையா?" கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா.
"இல்ல பாலா...உன் புரிதலில்தான் தப்பு இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கும்,
உன்கூட சினிமா,டிஸ்கோன்னு நான் சுத்தினதும் உண்மை, எனக்கு ஊர்சுத்துறது ரொம்ப பிடிக்கும்,அதுக்கு ஒரு ஆள் ...
மேலும் கதையை படிக்க...
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி இரண்டு.
வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
"சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.
அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது...
"அப்பா ...
மேலும் கதையை படிக்க...
1.
மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால் நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய ...
மேலும் கதையை படிக்க...
நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு.
வீடு என்பதை விட அதை பங்களா என்றே சொல்லலாம்.
சத்யா வரவேற்பறையில் காத்திருந்தாள். சத்யா எழுத்தாளர் பத்ரியின் தீவிர ரசிகை.
அந்த வீட்டின் நிசப்தம் சத்யாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
"என்னங்க எனக்கொரு சந்தேகம்" தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும் தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்.
முகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி "என்ன?" என்றார் ராதாகிருஷ்ணன்.
"நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல"
"ஆமா அதுக்கென்ன?"
"மூத்த ...
மேலும் கதையை படிக்க...
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)
போனோமா வந்தோமான்னு இருக்கணும்