Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

காதல்..காதல்…காதல்..!

 

புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடி பால்கனிக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து நான் படிக்க அமர்ந்தபோதுதான் எதிர் வீட்டு பவானி அவள் வீட்டு பால்கனியில் பளீரென்று தோன்றினாள். இடையில் சாலை. போக்குவரத்து. !!

‘சே…! படித்தாற்போலத்தான் ! ‘மனம் சளித்தாலும் பார்வை அவளை அப்பியது.

நல்ல களையான உருண்டை முகம்.

செக்கச் செவேர் தர்பூசணிப் பழத்தைப் போல் எப்போதும் ஈரப்பூச்சுள்ள கடித்துத் தின்னச் சொல்லும் உதடுகள்.

அங்கே இங்கே நில்லாது குறுகுறுத்து அலைபாயும் மறைந்த ஸ்ரீவித்யா நடிகை கண்கள்.

மொழு மொழு குண்டு ஆப்பிளை சரி பாதியாக வெட்டி ஒட்டப்பட்டுள்ள கன்னங்கள்.

பளீர் சிரிப்பில் வெளீரென்று தெரியும் வெண்முத்துப் பற்கள்.

எச்சில் விழுங்கினால் வெளி தெரியும் சங்கு கழுத்து.

கழுத்துக்குக் கீழே…..’ வேண்டாம் !’ என்று மனது தடை போட்டது.

பாவாடை , ஜாக்கெட் , தாவணிகள் மறைத்தது தவிர….கிறுகிறுக்க வைக்கும் பளபளக்கும் இடுப்புப் பகுதி.

தொட்டால் உடைந்து விடும் சின்ன இடை.

உரித்த வாழைத்தண்டு செழுமை கால்களில் கொலுசுகள்.

இதுதான் பவானி !

எப்படி படிக்க முடியும்…?

எத்தனை ஏணி வைத்தாலும் ஏறாது. விழுந்து விழுந்து படித்தாலும் பிடி மண் ஒட்டாது.

அது என்னவோ… சிறிது நாட்களாகவே…குறிப்பாக ஒருவார காலமாக நான் மாலை படிக்க மாடிக்கு வந்தால்…கண்கொத்தி பாம்பாக இருந்து இவளும் வருகை.!!

என்னைப் படிக்கவிடாமல் செய்வதில் இவளுக்கென்ன சந்தோசம், மகிழ்ச்சி. ?? சண்டாளி. !!

ஒழுங்காக நிற்கின்றாளா என்றாலும் அதுவுமில்லை. ஒற்றைக் கையை ஒயிலாக இடுப்பில் வைத்துக் கொண்டு நெஞ்சை அள்ளும் ஓரப்பார்வை, மோகன சிரிப்பு.

விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க வந்த மேனகை மாதிரி…படுத்தி எடுக்கிறாள் பாதகத்தி…..!!

இரட்டைச் சடையில் ஒன்றை எடுத்து கையில் சுற்றிக் கொண்டு நிற்கும் அந்த ஒயிலென்ன.?….. கண்களில் காதல் காந்தம் என்ன..?

ஏன்தான் மனுசி இப்படி உயிரை வாங்குகிறாளோ..?!

‘ஏ..! காதல் கரும்பே ! கற்பகவிருச்சமே !எத்தனை நாளைக்கடி இப்படி பார்வையாலேயே படுத்தி எடுத்துக்கொண்டு இருப்பாய்..? என்னைப் பிடித்திருக்கின்றது, விரும்புகிறாய் என்றால் ஓடி வந்து….” ஐ லவ் யூ !” சொல்லவேண்டியதுதானே..?! ‘ – ஆத்திரப்பட்டது மனம்.

ஒருத்திக்கு…. ஒருவன் மீது எவ்வளவு தான் ஆசை , காதல் இருந்தாலும் வெட்கத்தை விட்டு தன் மனத்தைத் திறந்து காட்டுவாளா..? முண்டம் ! முண்டம் ! ஒரு கோடுதான் காட்டுவாள். அதைப் புரிந்து கொண்டு ஆண்தான் அடுத்து செயல்படவேண்டும். பார்க்கவேண்டும், பேச வேண்டும். !! அதை விடுத்து….? மனம் இடித்தது.

“ஓ…! என்னை விரும்புவதால்தான் இவள் இப்படி வந்து நின்று படுத்தி எடுக்கின்றாளா..? கோடு போடுகிறாளா..?! இது தெரியாமல் நான் ஒரு மடையன் படிப்பு படிப்பு என்று.!

வேறு வழி இல்லை மடக்கிவிட வேண்டியத்துதான். !! என்று நினைத்து விரித்த புத்தகத்தை எதிரில் இருந்த மேசை மீது கவிழ்த்து அருகிலிருந்த கைபேசியை எடுத்தபோது அது உயிர்த்தெழுந்து அழைத்தது.

பார்த்தேன்.

பெயரில்லா…. எண்கள். அறிமுகமில்லாதது.

‘ இது என்ன சிவா பூசையில் கரடி …? ‘ என்று அவளை பார்த்தேன். அவள் காதில் கைபேசி.

‘நான்தான். எடுங்க..’என்பதுபோல் எனக்கு சைகை.!!

அவளேதான். !! ஆச்சரியம்…!!

‘ஓ பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது. நேரடியாக அவளே சொல்லப்போகிறாள் ! ‘ – மனம் எம்பிக் குதிக்க…உயிர்ப்பித்து காதில் வைத்தேன்.

“தாத்தா !…”அவள் குரல்.

மனம் பொசுக்கென்றானது.

‘அறுபது வயது ஆணை இருபது வயது பெண் ஒருத்தி எப்படி அழைப்பாள்..? மனம் சமாதானப்பட்டது. நமக்கு அழைப்பு முக்கியமில்லை. விசயம் ! ‘ நினைத்து…

“என்ன பவானி..?” என்றேன்.

“நானும் உங்க பேரன் வினிஷும் உயிருக்குயிராய்க் காதலிக்கிறோம். நீங்கதான் பெரிய மனசு பண்ணி…உங்க வீட்டிலேயும் எங்க வீட்டிலேயும் பேசி எங்க கலியாணத்தை முடிக்கனும் !” சொன்னாள்.

‘ஓ… என்னை அந்தப் பார்வை பார்த்து சிரித்து மயக்கியது எல்லாம் இந்த சேதி சொல்லத்தானா…? ! இது புரியாமல் என் வயது, நிலைமை பற்றி யோசிக்காமல்…’ – என்று நினைக்கும்போதே எதிரில் கவிழ்ந்து கிடக்கும் என்னைப் பார்த்து ராமாயணம் சிரித்தது.

“என்ன தாத்தா யோசனை..?” என்றாள்.

“ஓ… ! அதுக்கென்ன தாராளமா முடிக்கிறேன் !” சொல்லி அவளை பார்த்தேன்.

“நன்றி தாத்தா” கோகிலா மலர்ந்து கைபேசியை அணைத்தாள்.

இருந்தாலும்…..

அறுபது வயதானாலும்… தலைக்கு கருப்பு அடித்து, எந்தவித நோய்நொடி இல்லாமல், நல்ல வாட்ட சாட்டமாய், நன்றாகத்தானிருக்கிறேன். இதெல்லாம் எதிரில் வரும் பெண்களுக்கு எங்கே தெரிகிறது….? எல்லாரும் அந்தந்த வயதிற்குத் தகுந்த ஆட்களாகத்தான் பிடிக்கிறார்கள்!! – என்று மனம் ஆதங்கப்பட்டது, பெருமூச்சு விட்டது.!!!!! 

தொடர்புடைய சிறுகதைகள்
சந்தியாவதனம் முடித்து சாமி கும்பிட்டு சாப்பாடெல்லாம் முடித்து சாவகாசமாக வந்து அமர்ந்த பரமசிவம் எதிரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் திவ்யா. வயசு 27. பொறியியல் படிப்பு. அயல்நாட்டு இந்திய கம்பெனி ஒன்றில் அரை லட்சத்திற்கு மேல் சம்பளம். நடு நெற்றியில் வட்ட அகலப் பொட்டு. ...
மேலும் கதையை படிக்க...
ஜோதிலிங்கம் அக்கம் பக்கம் பார்த்து இருட்டில் செடி மறைவில் ஜன்னலோர சுவர் ஓரம் பதுங்கி உட்கார்ந்தார். திருட்டு மனம் படபடத்தது. நேற்றுதான் இவர் மோகனைச் சந்தித்தார். அவன் இவரை....தன் வீட்டு வாசல்படியில் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தான். பின் ஆச்சரியப்பட்டு , சுதாரித்து , சமாளித்து.... "வாங்க ! ...
மேலும் கதையை படிக்க...
இரவு பத்து மணி. கட்டிலுக்கு வந்த மகேசுக்குள் மகிழ்ச்சித் துள்ளல். காரணம் இன்றைக்குத் தாம்பத்திய நாள். கணவன் மனைவி மாதச் சம்பளக்காரர்கள், அலுவலக உழைப்பாளிகள் என்றாலே தாம்பத்தியத்தில்கூட கட்டுப்பாடு என்பது காலத்தின் கோலம். என்னதான் ஆண் பெண்ணுக்கு உதவி ஒத்தாசை அனுசரணையாக இருந்தாலும் காலை...சமையல் ...
மேலும் கதையை படிக்க...
மனசுக்குள் வலியாக இருந்தது. அறையில் வந்து மல்லாந்து படுத்தேன். அறைக்கு வெளியே கூடத்தில் தம்பி, தம்பி குடும்பம் . பார்க்க வந்த எங்களுக்கு அறையை ஒழித்துக் கொடுத்து விட்டு அங்கே படுத்திருந்தார்கள். புரண்டு படுத்தேன். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவனுக்கு இரண்டும் பெண். அவனுக்குப் பாரம் ...
மேலும் கதையை படிக்க...
"ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பெத்துக்கிறதிலே விருப்பமில்லை. எனக்கும் அப்படி. நாம கடைசிவரை இப்படியே இருக்கனுமா..? - கேட்டு தன் ...
மேலும் கதையை படிக்க...
மணி 8.50. வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது 10 வயது மகன் நிர்மல் முதுகுச் சுமையான பையை மாட்டிக் கொண்டு முகம் வெளிறி தாய் முன் போய் நின்று திரு ...
மேலும் கதையை படிக்க...
புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று வெறுப்பேற்றினான். மரியாதை மருந்துக்குக் கூட ''சார்!'' நீட்டவில்லை. எனக்கு, இவன் அநாகரீகத்தை உணர்த்தி முகத்தில் கரி பூச ஆசை. கடலூர் பேருந்து ...
மேலும் கதையை படிக்க...
சாலையோர குடிசை வாசலில் வலிகனைசிங் கடை. என்னையும், இன்னொரு ஆளையும் தவிர வேறு யாருமில்லை. என்றாலும் சாமுவேல் பிசியாக இருந்தான். பத்தடி தூரத்தில் பெரிய பெரிய இரும்பு குழாய்கள் ஏற்றிய லாரி ஒன்று ஜாக்கியில் நின்றது. அதன் பின் இரண்டு சக்கரங்களைக் கழற்றி ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் நுழைந்த மகளைப் பார்த்த தாய் லைலாவிற்கு ஆத்திரம், ஆவேசம். "ஏய் நில்லுடி!" நாற்காலியை விட்டு எழுந்து நின்று அதட்டல் போட்டாள். நின்றாள் கல்லூரி மாணவி மீரா. "எத்தனை நாளாய் நடக்குது இந்தக் கூத்து..?" வெடித்தாள். "எது...?" மீரா தாய் அதட்டல் உருட்டலுக்கு அதிராமல் மிரளாமல் திருப்பிக் ...
மேலும் கதையை படிக்க...
வெளியே போன ஆள் இரண்டு நாளாக வீடு திரும்பவில்லை என்ன ஆனார், எங்கே போனார் என்று தவித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது, ‘‘கேட்டியாக்கா சேதிய. நீ தேடிக்கிட்டிருக்கிற அந்த மனுசன்... அதான் உன் புருசன் டவுன்ல ஒரு சிறுக்கி ...
மேலும் கதையை படிக்க...
திவ்யா திருமணம்…!!
இருள் மனம்
ஞாயிறு…!
தம்பிப் பெண்..!
குழந்தை.. – ஒரு பக்க கதை
ஐந்து ரூபாய்..!
மனிதன்..!
ஒத்த ரூபாய்
பழக்கம்..! – ஒரு பக்க கதை
ஓடிப்போனவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)