“ஹலோ…”
“சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்…”
“கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்…”
“ஓ… தாராளமா…!”
“எப்ப கூப்பிடலாம்…?”
“இப்பவே நான் ஃப்ரீ தான்… காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க…”
“காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?”
“காதல் என்கிற உன்னதமான கான்ஸப்ட்டுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்..!”
ஒரு மணி நேரப் பேட்டியில் காதல் குறித்து நவீனன் பேசிய ஒவ்வொன்றும் தேன்மொழிக்கு பிரமிப்பைத் தந்தன.
தேன்மொழி ஒரு முடிவுக்கு வந்தாள்.
இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது என்பதை அறிந்து 100 மீட்டருக்குப் பின்னால் காரில் உட்கார்ந்திருந்த தேன்மொழி காரிலிருந்து இறங்கி தனிமையில் அமர்ந்திருந்த இளம் எழுத்தாளர் நவீனிடம் வந்தாள்.
“நான்தான் இத்தனை நேரமும் உங்களைப் பேட்டி எடுத்த தேன்மொழி சார். காதல் ரசம் சொட்டச் சொட்ட நீங்கள் எழுதிய எல்லாக் கதைகளையும் பல முறை படிச்சவ நான். நான் உங்களை டீப்பா லவ் பண்றேன் சார்…’ஐ லவ் யூ’ என்றாள்.
நவீனன் ரௌத்ரம் ஆனான்.
“எனக்கு எங்க வீட்ல பெண் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த காதல் கத்திரிக்காய்…இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது… சாரி…” என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான் நவீனன்.
- கதிர்ஸ் – பிப்ரவரி – 1-15-2021
தொடர்புடைய சிறுகதைகள்
மண்டை பிளக்கும் வெய்யில் .
ரேஷன் கடையில் விலையில்லா அரிசி வாங்க 80 வயது நாராயணசாமி வரிசையின் கடைசியில் நின்றார்.
தும்பையாய் வெளுத்த தலை. பஞ்சடைந்த கண்கள். பழுப்பேறிய வேட்டி. கசங்கிய சட்டை. ஒரு கை ஊன்றுகோலை தாங்கியிருக்க மறு கையில் ரெக்ஸின் பை. ...
மேலும் கதையை படிக்க...
ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம்.
மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்.
மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா.
ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை.
அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று.
கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர அந்தச் சிறுமியின் வலது கண்ணில் குத்திநிற்கும் மரச்சிராய். ரத்தக் குழியில் முளை அடிதத்தைப் போல பார்க்கவே படு பயங்கரமாக.
டாக்டர் தாமஸ் ...
மேலும் கதையை படிக்க...
நவம்பர் 1,2021
காத்தவராயன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் தம்பி ரகு ஆறாம் வகுப்பு.இருவரும் படிப்பது அரசுப் பள்ளியில். பள்ளித் திறப்பால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
நீண்ட நாட்கள் கழித்து நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள்.
தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தீபாவளி டிரஸ் பற்றிய பேச்சே ...
மேலும் கதையை படிக்க...
தீபாவளி சீசன்..கடை கட்டவே நடு நிசி ஆகிவிட்டது வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது மணி 1.00. சோர்வு போக குளித்து பின் படுக்கையில் சாய்ந்தபோது மணி 2.00.
எட்டு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி,டிபன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாராய் வந்தான் பூர்விகாவின் கணவன் ...
மேலும் கதையை படிக்க...
ரயிலில் கூட்டம் அதிகமில்லை.
அந்த கூபேயில் இரண்டு தம்பதிகள் மட்டுமே.
“நீங்களும் ராமேஸ்வரம்தானோ...?” முகக் கவசத்தை இறக்கிவிட்டுக்கொண்டு கேட்டார் எதிர் சீட்டுக்காரர்.
“ம்” என்றான் அருள்.
“பரிகாரமோ…?”
“ம்…!”
“குழந்தை பாக்கியத்துக்காக ராமேஸ்வரம் கோவிலில் பரிகாரம் செய்யப் போறீங்களாக்கும்…”
அருள் ஆச்சரியப்பட்டான். ‘எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறார்…?’ ஆனால் பதில் ஏதும் ...
மேலும் கதையை படிக்க...
"வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…" என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார்.
"சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…" அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி.
"வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ...
மேலும் கதையை படிக்க...
டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை அழைத்தார்.
“இன்ணைக்கும் நீ பேரண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வரலியா?” டீச்சரின் கேள்வியால் தலை குனிந்தான் முத்து.
சுண்டினால் சிவக்கும் செம்மேனி உடைய தன் வகுப்புத் தோழர்களின் அப்பாக்களோடு, கருத்த மேனியும் தும்பையாய் வெளுத்த தலையுமாய் இருக்கும் தன் அப்பாவை ஒப்பிட்டு… ...
மேலும் கதையை படிக்க...
பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை.
‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது.
ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ ...
மேலும் கதையை படிக்க...
அவரால் முடிந்தது – ஒரு பக்க கதை
தீபாவளி டிரஸ் – ஒரு பக்க கதை
கருப்பு அப்பா – ஒரு பக்க கதை