காதலி…. வா..!

 

அலுவலகம் விட்டு இறங்கிய சுமதி எதிரில் அமர்ந்திருந்த ராஜூவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பாதை மாறி நடந்தாள்.

ராஜு விடவில்லை. ஓட்டமும் நடையுமாக அவளைத் தொடர்ந்தான்.

“சு….மதி.. ! “அருகில் சென்றதும் அழைத்தான்.

அவள் பதில் சொல்லாமல் நடையை எட்டிப் போட்டாள். வேகத்தை அதிகப்படுத்தினாள்.

இவன் அவளை வேகமாக நடந்து முந்தி… வழியை மறித்து…

“சுமதி ! நான் உன்கிட்ட தனியா பேசனும்…”சொன்னான்.

“விருப்பமில்லே. வழியை விடுங்க…”

“இரக்கமில்லாம பேசாதே சுமதி. நான் சொல்றதைக் கேட்டபிறகு அப்புறம் உன் விருப்பப்படி நட. “எதிரே இரு கைகளையும் விரித்தான்.

சாலையில்…..நடக்கும் ஆண்கள், பெண்கள் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

சுமதிக்கு ஒரு மாதிரியாய் தர்மசங்கடமாக இருந்தது.

‘ பணிந்து போய் அவன் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை.’ – நின்றாள்.

“அப்படி ஒதுக்குப்புறமாய்ப் போய் பேசலாம்…”கை நீட்டி இடத்தைக் காட்டினான்.

மறு பேச்சு பேசாமல் அந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

மரத்தடியில் உள்ள சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.

“உன் முடிவை மாத்திக்கனும் சுமதி ! “சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அவன் விசயத்திற்கு வந்தான்.

“மன்னிக்கனும்.. ! “மறுத்தாள்.

“மன்னிக்கனும்ன்னு ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிட்டுப் போறது நல்லதில்லே சுமதி. நீ இப்படி மனசு மாறினதைப் பார்த்தா நீ உண்மையா காதலிக்கலைன்னு தோணுது !”

“அ… அப்படி இல்லே….”வாயைத் திறந்தாள்.

“அப்படித்தான். ! உண்மையா காதலிச்சிருந்தால் அதை மறக்க முடியாது. சுலபமா முறிக்க முடியாது. அம்மா, அப்பா, தற்கொலை செய்துக்கிறேன் என்கிற பயமுறுத்தல், மிரட்டல் எதுவும் செல்லுபடியாகாது. ! “‘

“எதிர்த்து நின்னேன். முடியல..”சுமதி சட்டென்று கலங்கினாள். கமறினாள்.

“பொய் !”

“இல்லே.! நிஜமாவே எதிர்த்து நின்னு போராடினேன். உன் காதலை நாங்க ஏத்துக்க தயார். ஆனா கூடப் பொறந்த மூணு பொண்ணுங்க வாழ்க்கைப் பாத்திச்சுதுன்னா எங்களால தாங்க முடியாது. எல்லோரும் செத்துப் போறதைத் தவிர வேற வழி இல்லேன்னு பெத்தவங்க கெஞ்சுறாங்க. மனசு கல்லு இல்லே ராஜு.”

“மனசு கல்லு இல்லேதான். ஒத்துக்கிறேன்.! அதுக்காக ஒரேயடியா காதலை முறிக்கக் கூடாது. அதுக்கு காதலிச்சிருக்கவே கூடாது.”

“தப்புப்பண்ணிட்டேன் ராஜீ .”

“உன் வருத்தம் உடைஞ்சி போன மனசுக்கு ஒத்தடம் கொடுக்காது சுமதி.”

“அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க…? “பரிதாபமாகப் பார்த்தாள்.

“சுமதி ! சமூகம் எவ்வளவோ மாறிப்போச்சு. காதல் குற்றமில்லே. கை தட்டி வரவேற்குது. ஆனா.. பெத்தவங்க மறுப்புக் காட்டுறாங்க. ஏன்…?

பொண்ணு தப்பானவனைக் காதலிச்சு வாழ்க்கையில ஏமாந்து சீரழிந்து போய்விடுவாளோ என்கிற பயம்.

காரணம்….? அவுங்களுக்குத் தன் பெண்ணை மட்டுமே தெரியும். அவள் விரும்பும் ஆளைத் தெரியாது.

காதலிக்கிற உனக்குத்தான் இந்த காதலனைப் பத்தித் தெரியும். காதலன் நல்லவனா அமைந்து விட்டால்.. நீ தைரியமா பெத்தவங்க மறுப்பு எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளலாம்.

இன்னைக்கு பெண் காதல் திருமணம் செய்வதால் மத்த பொண்ணுங்க வாழ்க்கைப் பாதிக்கப்படும்ன்னு சொல்றதெல்லாம் தப்பு. அவுங்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும் என்கிறது நிஜம். இன்னைக்கு எதிர்த்து நிக்கிற பெத்தவங்க நாளைக்கு மனசு மாறி வருவாங்க.

என் நண்பன் சிவா ரொம்ப உத்தமன் சுமதி. நீ வெறுத்தும் அவன் உன்னை வெறுக்காம இருக்கான். காதல் தோல்வியில் தற்கொலை வரைப் போனவனைத் தடுத்து நிறுத்தி வந்திருக்கேன். அவன் வாழ்வும் சாவும் உன் கையில் . இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல…”நிறுத்தினான்.

“ராஜு ! உங்க நண்பரைத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்க…”உறுதியாகச் சொல்லி எழுந்தாள் சுமதி. 

தொடர்புடைய சிறுகதைகள்
காசிக்கு நெஞ்சுக் குழியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களாகப் பிரிய மாட்டாமல் ரொம்ப அவஸ்தை. அவள்.... கணவன், கொழுந்தன், பிள்ளைகள், மாமனாரெல்லாம் கண்ணீரும் கம்பளையுமாய் வீட்டுக்கு வெளியே கூடியிருந்தார்கள். உள்ளே.... ஊர்ப் பெண்டுகள் காசி படுக்கையைத் சுற்றி அழுத கண்ணும், சிந்திய மூக்கு, ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிறு விடுப்பு. காலை மணி 10 .00 எதிரிலுள்ள காம்பௌண்ட் கேட் வாசலைத் திறந்து கொண்டு வேட்டி கட்டிய நடுத்தர வயது கிராமத்து மனிதர் ஒருவர் தயங்கித் தயங்கி வருவதை பார்த்ததும் உள்ளே அமர்ந்து கவனித்த எனக்கு இவரை எங்கேயேயோ பார்த்த முகமாக ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை. வழக்கம் போல தேசிய நெடுஞ்சாலை 45 ஒரம் என் நடைப்பயிற்சி. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன்  ஒதுங்கி செல்ல....நடு ரோட்டில் கிடந்தது இளநீர். தூரத்து பேருந்து நிறுத்தம், மூன்று ரோடு முக்கம் உள்ள டீக்கடை, பால் விற்பனை நிலையம் அருகில் தினம் சைக்கிளில் ...
மேலும் கதையை படிக்க...
வினிதா வீட்டில் துடைத்து வைத்தாற்போல் நாதிகள் இல்லை. நானும் அவளும் வெகு அருகில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். சில பல வருடங்களுக்குப் பிறகு.... சற்று முன் இப்போதுதான் நானும் வினிதாவும் எதிர்பாராத விதமாக கடைத்தெருவில் சந்தித்தோம். இருவரும் தனித்தனி ஆளாக நின்றதால் அறிமுகப் புன்னகை. '' நலமா..? '' ...
மேலும் கதையை படிக்க...
'ஏன் அழைக்கிறார்..?! ' - யோசனையுடன் அந்த கட்டிடத்தின் முன் சைக்கிளை நிறுத்திய பதினான்கு வயது சிறுவன் ராமு விடுதியை அன்னாந்து பார்த்தான். பத்துமாடிக் கட்டிடம்! ஆள் முன் பின் பழக்கமில்லாதவர். நேற்று மூன்றாவது மாடி பால்கனியிலிருந்து எதிர் திசையிலுள்ள டீக்கடையைப் பார்த்து அவர்..... "சோமு! ...
மேலும் கதையை படிக்க...
கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்... அந்த ஓய்வறையில் மூச்சு விட முடியாதவள் போல் தவித்தாள். எதிரில் அமர்ந்து அவளைக் கவனித்த சுகுணா. .. '' என்ன கவிதா ஒரு மாதிரியா இருக்கே. ..'' சக ஆசிரியைக் ...
மேலும் கதையை படிக்க...
"அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது கொடுத்துடப் போறானோன்னு எனக்கு உள்ளுக்குள் திக் திக் பயம். இப்படியாப் பண்றது...?" அனுஷா சொல்ல.... கேட்ட கலியுகனுக்குள் ,முகத்தில் கலவரம் படர்ந்தது. பயத்துடன் ...
மேலும் கதையை படிக்க...
சேகர், ஜானகி இடிந்து போனார்கள். அவன் ஆத்திரத்துடன் கூறியது இன்னும் அவர்கள் காதுகளில் ரீங்காரித்தது. ஒரு சில வினாடிகளுக்கு முன்தான்...பெண்ணின் அண்ணன் அரவிந்தன் வந்தான் . "வாங்க"ன்னு சொல்லி உபசரிப்பதற்கு முன்பே.... "உங்க தம்பி.. தங்கக் கம்பி. மனநிலை சரி இல்லாதவராமே ! போன வருசம் தஞ்சாவூர் ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி 10 .10. ' பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ' - செந்தமிழ்செல்வனுக்குள் திடீரென்று கலக்கம் வந்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன். வீண் கட்டுப்பாடுகளால் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது. அது அவன் முன்னேற்றத்தைப் பாதிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
'இந்த இடமும் கை விரிப்புதான்!' - வீட்டுக்குள்ளிருந்தே அப்பா தூரத்தில் நடை தளர்ந்து வருவதைக் கொண்டே கண்டு பிடித்துவிட்டான் சேகர். ஆனாலும், அவர் உள்ளுக்குள் வந்ததுமே... "என்னப்பா ஆச்சு..?" கேட்டான். "பச்!!" அவர் சலிப்புடன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு போய் நாற்காலியில் அமர்ந்ததைப் பார்க்கப் பாவமாக ...
மேலும் கதையை படிக்க...
உயிர் முடிச்சு…!
அன்பு..!
மனிதம்
நேற்றைய தவறுகள்… இன்றையத் திருத்தங்கள்
தத்து…!
குரு தட்சணை…!
கலியாணம்..!
எதிர் வீட்டு எதிரி
இருட்டிலே விளையாடுங்க…
அப்பாவும், பிள்ளையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)