காகிதகாதல்

 

சென்னை பல முகங்கள் கொண்ட ஒரு மாநகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே…..அழகும் அசிங்கமும் நிறைந்த ஒரு இடமும் சென்னைதான்….பகல் முழுக்க கல் சுமந்து ….இரவில் கஞ்சி குடித்து …தெருவில் உறங்கும் மனிதர்கள் மட்டுமல்ல …..பகல் முழுக்க கம்பூயூட்டர் தட்டி இரவில் போதையில் மிதக்கும் மனிதர்களும் இங்கேதான்…..

சமூக அவலங்களை பேசும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய மனிதன் அல்ல….நான் மட்டும் பார்த்த ஒரு அழகிய காதலை உங்களுக்கும் காட்ட விரும்புகிறேன்…..

ரமேஷ் ..சுருட்டை என்று இவனை சுற்றி உள்ளவர்களால் பாசமாக அழைக்கபடும் முகவரில்லாத இளைஞன்…தரமணி குப்பைதொட்டியின் மடியில் கிடந்த இவனை குப்பைகள் பொறுக்கும் மனிதாபிமானமுள்ள ஏழை கும்பல் எடுத்து வளர்கிறது…..

தாயம்மாள் என்னும் தாயின் அணைப்பில் வளர்ந்த அவனுக்கு படிப்பு என்ற பொக்கிஷம் கிடைக்கவில்லை…..

வளர்ந்த அவன் ..கருகிய தோல்கள் …சுருண்ட முடி… பணம் கொடுத்து முடி வெட்டும் அளவிற்கு வசதி இல்லை சாதாரண குப்பை பொறுக்கும் இளைஞன்…சுருட்டை முடிதான் இவனது அடையாளம்…..பகல் முழுக்க குப்பை பொறுக்கி…..இரவில் கடைக்கு சென்று போடுவான்…..கடையின் உரிமையாளனோ சரியான எடை போடமாட்டான்…..இவனால் கேட்கவும் முடியாது அல்லவா காரணம் அனாதை…..நம் தேசத்தில் நியாமானவனை பார்த்து வெகு நாட்கள் ஆகிறது……..

குப்பை பொறுக்கினாலும் இவன் நண்பர்களுடன் சந்தோஷமாகதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்…..பல கஷ்டங்கள் வாழ்வில் வந்தாலும் சமாளித்து வாழும் அவனுக்கும் காதல்……

அவள் பெயர் ரம்யா இவன் காதல் சிலை…. பணக்கார வீட்டு பெண்….தெரு தெருவாக குப்பை பொறுக்கும் இவனுக்கு தன் வீட்டிலுள்ள பிளாஸ்டிக் பைகளை கொடுத்து உதவுவாள்……காரணமில்லாமல் காதல் வரும் காலத்தில் ….இவனுக்கு உதவுவதால் காதல் வருகிறது….இவன் காதல் நிறைவேறுமா என்று எதிர்பார்ப்பு என்னை ஆட்கொண்டது…..

உலகில் ஏழை பணக்காரன் என்று பார்க்காத ஒன்று காதல் மட்டும்தான்……

வழக்கம் போல் இவன் குப்பை பொறுக்கி கொண்டிருக்கிறான்……இவன் கும்பலை சோ்ந்த ஒரு குழந்தை….கடையின் ஓரம் ஒரு பணக்கார குழந்தை தின்னும் சாக்லேட்டை பிடிங்கி தின்கிறது அந்த குழந்தையின் தந்தை ஏழை குழந்தை அடித்துவிடுகிறான்…….

அழுது கொண்டிருக்கும் அந்த குழந்தைக்கு ரம்யா சாக்லேட் வாங்கி தருகிறாள்……சுருட்டை இதை பார்த்ததும் காதல் வலுப்படுகிறது…..

சில தினங்கள் போக இவனை சார்ந்த கும்பலுக்கு பிரச்சனை……இவன் கும்பலில் உள்ள பெண் சிறுமிகள் காணாமல் போகின்றன…….காவலில் புகார் செய்ய சென்றால் காதில் கூட போட்டு கொள்ளவில்லை……….வெளியே துரத்திவிடுகிறார்கள்……..குப்பை பொறுக்கும் சிறுமிகளை கூட விட்டு வைக்காத மிருகங்கள்…………

எங்கு தேடி பார்த்தும் சிறுமிகள் கிடைக்கவில்லை…..காவலும் அவர்கள் புகாரை ஏற்று கொள்ளவில்லை..காணாமல் போனது பணக்கார சிறுமியாக இருந்தால் காவலுக்கு பணம் கிடைக்குமல்லவா……மனதை கல்லாக்கி கொண்டு அன்றாட வாழ்கைக்கு திரும்புகிறார்கள்…..

சுருட்டையோ காதலில் விழுந்த காகிதமாய் பறந்து கொண்டிருக்கிறான்….பகல் 9மணிக்கு குப்பை பொறுக்க ஆரமிக்கும் அவன் 5 மணிக்கு மசூதியில் ஒலிக்கும் சங்கு சத்ததை கேட்டதும் …காகிதமாய் பறந்து ரம்யா வசிக்கும் தெருவிற்கு வந்துவிடுவான்…ரம்யாவின் வீட்டு எதிரேயுள்ள மர நிழலில் அமர்ந்து கொள்வான்…..காரணம் ஒன்றும் பெரிதில்லை….5 மணிக்கு ரம்யா இறகு பந்து விளையாடுவாள்…..தடுப்புசுவரை தாண்டி பந்து விழுந்தால் எடுத்து கொடுப்பான்……

குப்பை பொறுக்குபவனுக்கு பந்து பொறுக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே…..

6மணி வரைக்கும் வேடிக்கை பார்த்து முடித்ததும் அன்று பொறுக்கிய குப்பைகளை கடையில் போட்டுவிட்டு…….தரமணி 4-வது குறுக்கு சந்திலுள்ள சலாம் பாய் டீ கடையில் ஒரு டீ-யும் இரண்டு க்ளாஸ் தண்ணீயும் குடித்துவிட்டு…அவன் முகவரியான குப்பை தொட்டி அருகே சென்றுவிடுவான்…..

அவன் நண்பர்களுடன் அரசியல் ஆரமித்து சினிமா கிசு கிசு வரை ஒரு பட்டிமன்றமே நடக்கும்…..அதன் பிறகு உறங்க செல்வார்கள் ..குப்பை தொட்டியின் அருகில் சென்றாலே மூக்கை மூடுவோம் நாம் ஆனால் …இன்னும் பெரும்பாலோனரின்..முகவரியே அதுதான்……

சுருட்டைக்கு அதுதான் வசந்த மாளிகை …கொசுக்களின் ஆட்சி நடக்கும் இடத்தில் உறங்கினால் விடுமா கொசுக்கள்…..இரத்தம் வழியாக அவன் குடித்த ஒரு க்ளாஸ் டீயையும் எடுத்துவிடும்….

மறுநாள் அவன் குப்பை பொறுக்க செல்லவில்லை காரணம் உ.டல்நிலை சரியில்லை……உறங்கி கொண்டிருந்தான்…..சிறுவன் ஒருவன் அங்கிருந்த சிக்னலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்…..கார் கண்ணாடியின் வெளியே நின்று …அவனின் குரல் உள்ளிருப்பவருக்கு எங்கே கேட்க போகிறது…உள்ளே ஒலித்து கொண்டிருப்பது வெளிநாட்டு பாடல் அல்லவா……

சிக்னல் விழுந்ததை அறியாத அவனை வேகமாக வந்த வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் செல்கிறது…..எதிரிலுள்ள போலீஸோ உறங்கி கொண்டுள்ளது….சத்தம் கேட்டு ஓடி வரும் சுருட்டை உதவி கேட்கிறான்….

மானங்கெட்ட மனிதர்கள் ரோட்டிலுள்ள பெண்களை பார்க்க தெரிந்த அளவிற்கு அடிப்பட்ட சிறுவனை பார்க்க தெரியவில்லை…..சுருட்டையும் அச்சிறுவனின் தாயும் குப்பை பொறுக்கும் வண்டியில் மருத்துவமனைக்கு சிறுவனை எடுத்து செல்கிறார்கள்…அடிக்கும் மதிய வெயிலில் சிறுவனின் மேல் வழிந்த இரத்தம் காய்ந்தவிட்டது….ஈரமாக இருப்பது என்னவோ அத்தாயின் கண்ணீரும் …சுருட்டையின் வியர்வையும்தான்…..

மருத்துவமனைக்குள் சென்றதும் அங்குள்ள ஊழியர்களிடம் கெஞ்சிகிறார்கள்…..அவர்களோ மனதில் ஈரமில்லாமல் அரசு மருத்துவமனைக்கு போ இங்கு பார்க்க முடியாது என்கிறார்கள்……அத்தாயோ அவர்களின் காலில் விழுந்து கதறுகிறாள்…..கதறி பயனில்லை சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது…..கதறும் தாயின் குரல் அந்த இறைவனுக்கு கேட்கவில்லை…சிறுவனின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்த சென்றால் சுடுகாட்டின் காவலாளி முதலில் மறுக்கிறான் பின் தாயின் கண்ணீரையை பார்த்ததும் மனம் இறங்குகிறான்……காரணம் அவனும் ஏழை அல்லவா….சிறுவனின் உ.டலை புதைத்துவிட்டு சட்டையில் இரத்த கறையுடன்….அங்கு இருந்து நகர்கிறான் சுருட்டை

சிறுவனின் மரணம் அவனை மிகவும் துயரத்திற்கு தள்ளிவிட்டது ..ஒரு வாரம் அவன் எங்கும் செல்லவில்லை….ஒரு வாரம் கழித்து ரம்யாவை பார்க்க செல்கிறான்…அங்கு சென்றால் ரம்யா யாரோ ஒரு இளைஞனுடன் பேசி கொண்டிருக்கிறாள்…சுருட்டை அவனை பார்க்கிறான் வெள்ளை தோல்….அழகான முடி…கையில் முகம் பார்க்கும் கண்ணாடி அளவிற்கு ஒரு போன் …சுருட்டை தன்னை ஒரு முறை பார்க்கிறான்..சிரிக்கிறான்….

நாம் மிகவும் ஆசைபட்டுவிட்டோம் என்று நினைத்து கொள்கிறான்….என்னை பொறுத்தவரைக்கும் அவன் போராசைகாரனல்ல…..காதல் ஓன்றும் வரும் முன் நம்மை கேட்பதில்லையே..என் காதலும் அப்படிதான்…..ஆனால் அவன் காதல் அற்புதமானது..அங்கிருந்து விடைபெறும் அவன் முதல்முறை தன்னை வெறுக்கிறான்….அவன் அப்பொழுது அறியவில்லை காதல் குப்பை பொறுக்குபவனையும் குபேரன் ஆக்கும் ..குபேரனையும் குப்பை பொறுக்க வைத்துவிடும் என்பது……

சிறிது காலம் போக அவன் எதிர்பாராதவிதமாக ரம்யாவை பார்க்கிறான்…ரம்யா அவனிடம் வந்து..எங்க உன்ன ரொம்ப நாளா காணும்..சரி சாய்த்திரம் வீட்டுக்கு வந்து நிறைய குப்பை இருக்கு எடுத்துட்டு போ என்று சொல்லிவிட்டு போகிறாள்….

ஆனால் அவன் செல்லவில்லை…அன்று இரவு எல்லோரும் உறங்கிய பின்னர் தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டு சுருட்டை செல்கிறான் அங்கு மூன்று சிறுமிகளை வண்டியில் வலுகட்டாயாமாக ஏற்றுகிறார்கள் …அக்கும்பலின் தலைவன் திரும்பி நிற்பதால் முகம் தெரியவில்லை…..அவன் சுருட்டையை பார்த்துவிடுகிறான்……அவன் வேறு யாருமில்லை தரமணியை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள ரவி மிக பெரிய ரவுடி….அவன் சுருட்டையை பார்த்ததும் அவன் ஆட்களிடம் அவனை பிடிக்க சொல்கிறான் சுருட்டையை துரத்துகின்றனர்….சுருட்டை காரின் பின்புறம் ஒழிந்து தப்பித்து கொள்கிறான்…..

அடி ஆட்கள் ரவி இடம் சென்று…..அண்ணா தப்பிசிட்டாணா….ஒரு வேலைக்கும் உறுப்படமாட்டிங்கடா …மூஞ்ச பாத்திங்களா… இல்லனா …சரி இந்த பொண்ணுங்களா லாரி ஏத்திடு.. சிக்னல நம்ம போலீஸ்தா பயபடமா ஓட்டிடு போ….நான் பாத்துக்குற…

சுருட்டை பயத்துடன் அவன் இடத்தில் வந்து படுத்து கொள்கிறான் போலீஸிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்தால் போலீஸை பற்றிதான் தெரியுமே…..அவன் கும்பலிடம் சொல்லலாம் என்றால் எங்கு ரவி எல்லோரையும் கொன்றுவிடுவனோ என்று மறைத்துவிடுகிறான்….

வழக்கம் போல் குப்பை பொறுக்க சென்றுவிட்டு 5மணிக்கு ரம்யாவை பார்போம் என்று செல்கிறான்….வீடோ பூட்டியுள்ளது…தொடர்ந்து 5 நாட்கள் ஆகியும் வீடு பூட்டியுள்ளது….வருத்ததுடன் அவன் இடத்திற்கு வந்துவிடுகிறான்….

அவன் வந்த சிறிது நேரம் கழித்து ரவி பைக்கில் வந்து அவனை அழைகிறான் பயத்துடன் சென்ற அவனிடம்….டேய் 5நாளைக்கு முன்னாடி நைட்ல ஒரு பையன் இப்படி ஓடி வந்தனா நீ பாத்தியா..இல்லணா ..சரி….போ என்று சொல்லவிட்டு கிளம்புகிறான்…

நடுக்கத்துடன் சென்று படுத்து கொள்கிறான்….மறுநாள் ரம்யாவை பார்க்க செல்கிறான் வீடு திறந்துள்ளது ஆனால் வெளியே அவள் வரவில்லை…..சரி குப்பை கேட்க்ற மாறி உள்ளே போவோம்…சார் என்று அலைகிறான்….

என்ன வேணும்..குப்பை இருக்குனு சொன்னங்கா …அதல இல்ல போ என்று சொல்லிடு உள்ளே போகிறார்கள்…எட்டி பார்த்தால் ரம்யா சோகத்துடன் படுத்து கொண்டிருக்கிறாள்…அங்கு இருந்து நகரும் அவன் ….உடம்பு சரியில்லையோ….சாமி அவங்களுக்கு ஒன்னும் ஆக கூடாது என்று வழியில் உள்ள எல்லா கோயில்களிலும் வேண்டி கொண்டே வந்தவன்…..

சலாம் பாய் டீ கடையில் அமர்ந்து டீ குடிக்குறான்..அந்நேரம் பார்த்து ரவி அடியாட்கள் வர அவன் செய்திதாளை எடுத்து முகத்தை மறைத்து கொள்கிறான்…..சலாம் பாயோ இவனுக்குதான் படிக்க தெரியாதே என்று யோசிக்கிறார்….அடியாளில் ஒருவன் அவனிடம் செய்திதாளை கேட்கிறான்…செய்திதாளை வாங்கியவனுக்கு..சுருட்டை அடையாளம் தெரியவில்லை….

குப்ப பொறுக்குறவனுக்கு என்னடா பேப்பர் எழுந்து ஓடுனு தலையில் அடித்துவிடுகிறான்…அவன் அங்கிருந்து அவன் இடத்திற்கு வந்து விடுகிறான்…..வழக்கம் போல அன்று இரவு ரவி கும்பல் சில சிறுமிகளை கடத்துகிறார்கள்

இந்த முறை சுருட்டை சார்ந்த சிறுமிகள் இல்லை..வேறு சிறுமிகள்….ஆனால் என்ன அதிர்ச்சி என்றால் ரவியிடம் ஒருவன் பணம் வாங்கி கொண்டிருக்கிறான்….அவனை பார்த்ததும் சுருட்டைக்கு அதிர்ச்சி அவன் சுருட்டை கும்பலை சோர்ந்தவன் அவன் சிறுமிகளை கடந்த உதவி இருக்கிறான்….அவர்கள் இம்முறை சுருட்டையை தெளிவாக பார்த்துவிடுகிறார்கள்….

அவனை பிடிக்க துரத்துக்கிறார்கள்…அவன் அடித்து பிடித்து மூச்சி வாங்க தரமணியில் உள்ள காட்டினில் பாலைடந்த வீட்டில் பதுங்கி கொள்கிறான்….அடியாட்கள் திரும்பி செல்கிறார்கள்….அண்ணா இந்த வாட்டியும் தப்பிசிட்டாணா…சுருட்டையின் கும்பலை சார்ந்தவன் சரி விடுங்க சார் அவன்ல ஒரு ஆளு…எப்படியும் நம்ம இடத்துக்குதான் வரனும் வந்த நான் சொல்லி அனுப்புற. என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறான்….

சுருட்டை இரண்டு நாளும் அங்கேயே இருக்கிறான்….ஒரு குப்பை பொறுக்கும் இளைஞனால் என்ன பண்ண முடியும் அவனிடம் இருப்பது உயிர் மட்டும்தான் சினிமா ஹீரோக்களாக இருந்தால் பறந்து சண்டை போட்டு இருப்பார்கள் அவனால் முடியாதே…நன்கு யோசித்த பின்பு அவன் கும்பலிடம் சொல்லிவிடலாம்……என்று இருட்டிய பின் கிளம்புகிறான்…..

கிளம்புவன் மீண்டும் சிறுமிகளை கடத்துவதையை பார்க்கிறான்.. இம்முறை கடத்துபடுவது சிறுமிகள் மட்டுமல்ல ரம்யாவும்தான் இதை பார்த்த சுருட்டைக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அவனுள் ஒரு கோபம் வருகிறது..கடத்தப்படுவது அவன் காதலி அல்லவா….அவன் அவர்களிடம் ஓடுகிறான் ஆனால் அதற்குள் வண்டியை எடுத்துவிடுகிறார்கள்…ரவியும் கிளம்பிவிடுகிறான்..இரண்டு அடியாட்கள்தான் சிக்ரெட் பிடித்து கொண்டு நிற்கிறார்கள்……

சுருட்டை நெருங்கியதும்..அவர்கள் இவன்தான்டா மச்சான் அது அன்னைக்கு ஓடி போனானே…அடிடா அவன..சுருட்டை கீழே தள்ளி..காலால் உதைக்கிறார்கள்…சுருட்டையோ அண்ணா நீங்க கடத்துன பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணுணா விட்டுங்கணா என்று கெஞ்சிக்கிறான் ஆனால் காதில் வாங்காத அவர்கள் அவனை இரத்தம் வரும் வரை உதைக்கிறார்கள்…

தடுமாறிய அவனுக்கு கையில் கிடைத்தது… பீர் பாட்டில் கோவத்தில் அதை உடைத்து ஒருவனை குத்திவிடுகிறான்..காதலுனா கடவுள்கிட்ட கூட சண்டை போடும் அளவுக்கு தைரியம் வந்துவிடும்……..

மற்றொருவனையும் காலை பிடித்து கீழே தள்ளி..உடைந்த பாட்டிலை வைத்து மிரட்டுகிறான்…அந்த பொண்ணுகளா எங்க கடத்திடு போறிங்க….பயந்த அடியாள்..கேரளா….அங்க கூட்டி போய்..அழகா இருக்க பொண்ணுங்களா வித்துடுவோம்….மிச்ச பொண்ணுங்களா…அவங்களா கிட்னி கண்ணு எடுத்துட்டு..வேற ஊர்ல ரோட்டுல இறக்கி விட்டுட்டுவோம்..

கேரளால எங்க…பாலக்காடுல ரவி எஸ்டேட்ல…மனிசனாட நீங்களாம்…….என்று வெறியேறியவனாய் அவனையும் குத்தி விட்டு அவன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து கொண்டு ஓடுகிறான்…வழியில் கேரளாவுக்கு இறைச்சிகாக ஏற்றி செல்லும் எருமைமாட்டு லாரியில் ஏறி கொள்கிறான்…..

அங்கு சென்றதும்…..ரவியின் எஸ்டேட்டை….கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் உள்ளே செல்கிறான்….அங்கு ரம்யாவையும் சிறுமிகளையும் அடைத்து வைத்துள்ளனர்……அடியாட்கள் போதையில் மட்டையாகி கிடக்கின்றனர் ..அவர்களை வெளியே அழைத்து வருகிறான்….வரும் வழியில் சமையலைறையில் உள்ள தீபெட்டியை எடுத்து கொண்டு….எரிவாயுவை திறந்துவிட்டு வெளியில் வந்ததும் கொளுத்திவிடுகிறான்…எஸ்டேட் வெடித்து சிதறிவிட்டது….

அங்கு இருந்து ஓடும் அவர்கள் இரயில் நிலையத்தை அடைக்கிறார்கள்…..ரம்யா சுருட்டையை பார்த்து நீ எப்படி இங்கே என்கிறாள்…உங்கள கடத்தறத பாத்த வந்த…ரம்யா thanks என்று….சொல்கிறாள் மற்ற சிறுமிகள்….கை கும்முடுறாங்க..சுருட்டை தடுக்கிறான்….

சென்னை இரயில் வந்ததும் ஏறுகிறார்கள்…அவர்கள் அனைவரும் சீட்டில் அமர சுருட்டை படிகட்டு அருகே அமர்ந்து கொள்கிறான்…..சிறிது தூரம் சென்றதும் ரம்யா அவனிடம் வந்து பேசுகிறாள்…..எனக்காகவா கஷ்டபட்டு இவளவ்வு தூரம் வந்த.. ஏன்…..

சுருட்டை காதலை மறைத்து நீங்க எனக்கு உதவி செஞ்சிங்க அதுக்கு நன்றிகடனா வந்தேன்..என்கிறான்……பிளாஸ்டிக் பை கொடுத்ததெல்லாம் hlp pa……அத கூட யாரும் பண்ணமாட்றாங்களே…

ஆமா நீங்க எப்படி அவங்க கிட்ட மாட்டினிங்கா…..ரம்யா கண்ணீருடன் நான் ஒரு பையனா love பண்ண பணக்கார பையன் என் கூட பொய்யா பழகிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணா….நான் அவன மறக்க முடியாமா மருந்து குடிச்சிட….5நாள் hospital la இருந்த …

.சுருட்டை மனசுக்குள் அத 5நாளா வீடு பூட்டியிருந்துதா….நீ வந்து குப்பை கேட்கும் போது என்னால பேசமுடில மன்னிச்சிரு ….

பரவாலிங்கா…அவன் ஞாபகம் என்ன நிம்மதியா தூங்க விடுல அன்னிக்கு நைட் வீட்ட விட்டு எழுந்து வந்துடேன்….வரும் போது இந்த பொண்ணுங்களா..கடத்திடு இருந்தாங்க நான் பாத்துட என்னையும் அவங்க பாத்தடாஙக வெளிய சொல்லிடுவனு கடத்திட்டாங்க….

நினைச்சி கூட பாக்கல நீ வருவனு ரொம்ப…..thanx…அய்யோ அதல வேணாங்க .கொஞ்ச தூரம் மெளனம் ஆதிக்கம் செலுத்த…சரி நீ முடியே வெட்டமாட்டியா….எனக்கு அடையாளம் இதான் அப்படியே விட்டுட…..குழிக்கமாட்டியா….எப்பயாச்சும் கடவுள் அழுதா ஒதுங்க இடம் இல்லாமா…குழிப்போம் …..நல்ல பேசுற……

சென்னை வந்து அடைகிறார்கள் …ரம்யா thanx சொல்லிவிட்டு கிளம்புகிறாள்…சுருட்டை காதலை சொன்னால் ஏற்கமாட்டால் என்று சொல்லாமல் செல்கிறான்..அவன் இடத்திற்கு….. அங்கு சென்று அவன் கும்பலிடம் விவரத்தை கூறி சிறுமிகளை கடத்த உதவுபவனை…அடித்து விரட்டிவிடுகிறார்கள்….

சில தினங்கள் கழித்து ரம்யா சுருட்டையிடம் வருகிறாள்…என் கூட வா என்று அழைத்து செல்கிறாள்..எங்க…..வா சொல்ற …..அவனை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடி வெட்டுகிறாள்…..அவன் மறுக்கவில்லை காரணம் காதலி…..facial வேறு…புது உடையும்….சுருட்டை என்ற அடையாளம் மாறி hero போல் உள்ளான் அதிர்ச்சி அடைந்த அவன்….எதுக்கு இதல…

நீ குப்பை பொறுக்கவேனா……என் friendoda அப்பா குப்பையலாம் recycle பண்ணற கம்பெனி வெச்சிருக்காரு நீ அங்க வேலைக்கு போ……

என்னது cycle செய்யற கம்பெனியா எனக்கு அதல தெரியாது….

cycle இல்ல recycle னா குப்பையலா பிரிச்சி..மறுபடியும்…பொருளா..மாத்துவாங்க அதான்…குப்பானா சரி…..ரொம்ப நன்றி…..

நன்றி சொல்லறளவுக்கு பெருச பண்ணால சரி நாளைக்கு இந்த விலாசத்துக்கு போ சரியா….ரம்யாவின் மேல் மிகவும் காதல் வலுப்பட்ட சுருட்டைக்கு சொன்னால் தவறாக நினைப்பால் என்று சொல்லவில்லை……

கம்பெனியில் வேலை செய்யும் அவன்…2ஆண்டுகளில் உழைத்து ஒரு கம்பெனிக்கு முதலாளியாக மாறுகிறான்..அவனை போல் உள்ளவர்களுக்கு உதவுகிறான்…தைரியம் வந்த அவன்…..ரம்யாவிடம்…காதலை சொல்கிறான் …..

வேறு எதுக்கோ பழகிய காதலனை விட….அன்பு காட்டும் இவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ……சுருட்டையை திருமணம் செய்து கொள்கிறாள் சுருட்டையும் ஒரு தாய் கிடைத்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்…….. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)