கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதி;ல் இருவருக்கும் தயக்கம் இருந்தது.
ஓவ்வொரு தடவையும் மனம் திறந்து சொல்லிவிடுவோமா என்று நினைக்கும் போதெல்லாம், மற்றவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ, தூயநட்பு இதனால் உடைந்து விடுமோ என்ற பயத்தில் இருவருமே மௌனம் காத்தனர்.
இனியும் தாங்கமுடியாது என்ற நிலையில், அவள்தான் துணிந்து அவனிடம் கேட்டாள்,
‘பிரதீப், கேட்கிறேனே என்று தப்பாய் எடுத்திடாதே, உனக்கு கேர்ள்பிரண்ட் இருக்கா?’
அவன் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு ‘ஆமா’ என்று தலை அசைத்தான்.
அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மென்று விழுங்கினாள். யார் அந்த அதிர்ஸ்டசாலி என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினாள்.
‘உன்னோட உள்ளத்தைக் கவர்ந்தவளின் போட்டோ இருந்தால் கொஞ்சம் கொடேன், பார்க்கலாம்!’ என்றாள்.
‘எல்லோரும் தங்க காதலியை நெஞ்சிலே சுமப்பாங்க, நான் மட்டும் வித்தியாசமா கண்ணுக்குள்ளே சுமக்கிறேன்’ என்றான்.
‘போட்டோவைக் கேட்டால் கண்ணுக்குள் சுமக்கிறன் என்கிறாய், விரும்பினால் காட்டு இல்லை என்றால் வேண்டாம்’ என்றாள் பொய்யான கோபத்தோடு.
‘சரி, சரி கோபப்படாதே, இங்கேபார்’ என்று தான் அணிந்திருந்த பாதரசம் பூசப்பட்ட தனது கூலிங்கிளாசைச் சுட்டிக்காட்டினான்.
எதிரே நின்ற அவளது ‘அழகான முகம்’ அதிலே பளீச்சென்று தெரிந்தது.
தொடர்புடைய சிறுகதைகள்
தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி ...
மேலும் கதையை படிக்க...
(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் - மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன)
‘அம்மா, நீ கட்டாயம் வேலைக்குப் போகணுமா..?’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் ...
மேலும் கதையை படிக்க...
'சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?'
தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா.
அப்பாவிற்கு கோயில், குளங்களுக்குப் போவதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அதனாலே என்ன தான் தலை போகிற காரியமாய் இருந்தாலும் வெள்ளிக் கிழமைகளில் தாயைக் கோயிலுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி ...
மேலும் கதையை படிக்க...
"பிடிச்சிருக்கா?"
அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக் கொண்டு வந்து காட்டிய அந்தப் படங்களைப் பார்த்ததும் பிரமித்துப் போய் விட்டான். இப்படி ...
மேலும் கதையை படிக்க...
புல்லுக்கு இறைத்த நீர்..!