மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி கேட்டாள்.
“ என்னால் இனியும் வீட்டில் சமாளிக்க முடியாதுங்க!….நாம இந்த ஊரை விட்டே எங்காவது போயிடலாமுங்க!….”
“ஏண்டி!…அர்த்தமில்லாம பேசறே?…யாரிடமும் சொல்லாம நாம ஊரை விட்டுப் போனா…ஊர் உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?”
“ உங்களுக்கு என்னைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லே!….நான் அவங்க கிட்டே மாட்டிக்கிட்டா அவங்க என்னை சின்னா பின்னப் படுத்திடுவாங்க!…”
“நான் இல்லேனு சொல்லலே!….நல்லா யோசித்து நாம ஒரு முடிவு எடுக்கலாம்!…”
“ அதற்குள் நேரம் கடந்து விடும்!…” என்றாள் சாருமதி.
சாருமதி சொல்வதிலும் நியாயம் இருந்தது. யோசிப்பதற்குள் காலாண்டு தேர்வு முடிந்து எல்லா ஸ்கூலும் லீவு விட்டு விடுவாங்க..
உள்ளூரிலேயே இருக்கும் மூன்று மகன்களும், மருமகள்களும் வேலைக்குப் போகிறவங்க…தனியாக இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டில் அவங்க குழந்தைகளை லீவுக்கு கொண்டு வந்து, விட்டு விட்டுப் போயிடுவாங்க…பாவம் வயசான காலத்தில், சாருமதி ஒருத்தியால் எப்படி குறும்பு செய்யும் ஏழு குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொள்ள முடியும்?
- தி இந்து 25-10-13 இதழ்
தொடர்புடைய சிறுகதைகள்
“ சித்தப்பா!..வரவர உங்க போக்கே சரியில்லே!...நாங்க சொன்னக் கேட்டிட்டு பேசாம இருக்கனும்!.....உங்க இஷ்டத்திற்கு எதையும் செய்யக் கூடாது!...உங்களுக்கு எங்களை விட்டா யார் கொள்ளி போடுவாங்க?..” என்று அண்ணனின் மூத்த மகன் செல்வ மணி சத்தம் போட்டான்.
“ சித்தப்பா!...இந்த வயசிலே கோயில், குளம், ...
மேலும் கதையை படிக்க...
சபேசன் வீட்டு ‘கேட்’டை திறந்து கொண்டு மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள்ளே நுழைந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளாக இருக்கலாம்! இனி மேல் பகலில் கூட வெளிக் ‘கேட்’டிற்கும் பூட்டு போட்டு விட்டால் தான், இந்த தொல்லையை தவிர்க்க முடியும் என்று சபேசன் நினைத்துக் ...
மேலும் கதையை படிக்க...
சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட்.
அதனால் பெற்றோர் அவன் விஷயத்தில் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் இஷ்டப்படி விட்டு விட்டார்கள்! பிளஸ் டூ முடித்தவுடன் அவன் விருப்படி சென்னை ...
மேலும் கதையை படிக்க...
கோகிலாவுக்கு முப்பது வயசு கூட நிரம்பவில்லை! ஒரு பெரிய நிறுவனத்தின் எம்.டி. அவள் கணவன் பரத் ஒரு தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனியில் சீனியர் இன்ஜினீயர்.
அவர்களுக்கு சகல வசதிகளும் உண்டு. அவர்களுக்கு கிடைக்காத ஒரு விஷயம் நேரம் என்பது தான்! கிடைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
குலோத்துங்க சோழன் இன்று தமிழகத்தில் தலை சிறந்த பேச்சாளன். மேடைக்கு மேடை தமிழர் பண்பாடு, நாகரிகம் பற்றி அவன் பேசுவதைக் கேட்க ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு விடுவார்கள்.
குலோத்துங்க சோழனின் தேதி கிடைப்பது ரொம்ப கஷ்டம்! தமிழ் நாடு முழுவதும் இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ஜாலிலோ ஜிம்கானா…டோலியோ கும்கானா !