“எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா”
அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன்.
எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா?
பயம்தான். பயம் மட்டும்தான் காரணம்.
காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய
பணக்கார குடும்பத்தில் பிறந்தவள்.
அவளிடம் போய் எப்படி சொல்வது?
யாராவது பார்த்துவிட்டால் அவ்வளவுதான். காலேஜ் முழுசும் தெரிஞ்சு
அசிங்கமாயிடுமே…
“எனக்கு பயமா இருக்குடா” என்றேன் தோழனிடம்.
“போடா உனக்கெல்லாம் எதுக்குடா மீசை? ஒரு பொண்ணுகிட்ட பேசறதுக்கு இவ்ளோ பயமா?”
“சரி, இன்னைக்கு என்ன ஆனாலும் அவகிட்ட பேசத்தான் போறேன்,வந்து பாரு” சொல்லிவிட்டு வேகமாக கல்லூரி நோக்கி நடந்தேன்.
வேப்பமரத்தடியில் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள் ஜெசினா.
“ஜெசினா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
“சொல்லுங்க”
“நீ நினைக்கிற மாதிரி பிரதீப் நல்லவனில்லை,அவனுக்கு நிறைய பொண்ணுங்களோட பழக்கம் இருக்கு,படிப்புல மட்டும் உன் கவனத்த செலுத்து. பிரதீப் மாதிரி பொறுக்கிய நம்பி ஏமாந்துபோகாத”
“அத சொல்றதுக்கு நீங்க யாரு?” வெடித்தாள் ஜெசினா.
“உன்னை மாதிரியே ஒரு அழகான தங்கச்சிக்கு அண்ணன்!” வாயடைத்து நின்றாள் ஜெசினா.விறுவிறுவென்று நடந்துகொண்டிருந்தேன் நான்.
- Tuesday, January 29, 2008
தொடர்புடைய சிறுகதைகள்
புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது...
அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று சேலையில் அவள் வந்த அழகை வர்ணிக்க அடடா தமிழில் வார்த்தைகளே இல்லையா!
பூக்களால் செய்த சிலையோ?...பட்டாம்பூச்சிகள் இருவிழியோ?
இவள் என்ன பச்சைக்கிளி ஜாதியா? ...
மேலும் கதையை படிக்க...
புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.
வெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. ...
மேலும் கதையை படிக்க...
என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள் டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே சில்லென்ற காற்றும், ஏதோவொரு பூவின் வாசமும் மிதந்து வந்தது. நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். இரண்டு நாட்களாய் மண்டைக்குள் குடைச்சல். என் ...
மேலும் கதையை படிக்க...
மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில் இறங்கி செருப்பை அணிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக கார் நிறுத்தும் இடம் நோக்கி சென்றாள். மாலை வெயிலில் அழகாய் மின்னியது அந்த ...
மேலும் கதையை படிக்க...
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்