இணையதளக் காதல்
ஆர்தி அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருந்தது போலிருந்தது ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே…..
கிஷோர் காபி குடித்து வரலாமா கயல் என்று கேட்டான். அவனுடன் செல்ல பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றி சென்றாள். கிஷோர் இந்த அலுவலகத்தில் சேர்ந்த நாள் முதல் இவளையே சுற்றிச் சுற்றி வருகிறான் ஆனால் இவள் அவனைக் கண்டு கொள்வதே இல்லை.
ஆர்தி நான் பல தடவை கேட்டும் என் காதலை ஏற்க மறுக்கிறாய்.
கிஷோர் நானும் பல தடவை உன்னிடம் சொல்லிவிட்டேன் நான் ஏற்கனவே முகநூல் மூலமாக பரத் என்பவரை விரும்புகிறேன் என்று ஆனாலும் நீ ஏன் இப்படி புரிந்து கொள்ள மறுப்பதேன்.
ஆர்தி அவனைப் பற்றி உண்மையான விபரங்கள் எதுவும் உனக்கு தெரியாது. இதுவரை அவனை நேரில் பார்த்தது கிடையாது அதுவும் அவன் உன்னிடம் தெரிவித்த விபரங்கள் அனைத்தும் உண்மைதானா என்று தெரியாமல் விரும்புவதேன்?
உனக்கு என்னைப் பற்றி முழுமையாக எல்லா விபரங்களும் தெரியும் உன்னையே இரண்டு வருடமாக உன்னையே சுற்றி வருகிறேன் அப்படியிருந்தும் என் காதலை ஏற்க மறுப்பதேன்?
கண்மூடித்தனமாக விரும்பறதுக்கு பெயர் காதல் இல்லை உனக்கு நீயே வரவழைத்துக் கொள்ளும் ஆபத்து நீ அதை உணரவில்லையா? கயல் நான் சொல்வதைக் கேள் எதுவும் தெரியாத ஒருவரிடம் சென்று உன் வாழ்வை பாழாக்கிக் கொள்ளாதே.
கிஷோர் போதும் நிறுத்து உன் அறிவுரையை காதல் என்றால் என்னவென்று தெரியுமா? மனதும் மனதும் சார்ந்ததுதான் மற்றதெல்லாம் அதற்கு பிறகுதான் நான் எப்படி அவரை விரும்புகிறேனோ அதே போல் அவரும் என்னை விரும்புகிறார். உண்மையான காதல்தான் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கிறது ஆபத்து எதுவும் இல்லை. நீ நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக என்னை குழப்புவதேன்?
நாங்கள் இருவரும் அடுத்தவாரம் சந்திக்க போகிறோம். அவர் குடும்பத்தினர் எங்கள் திருமணம் பற்றி பேசுவதற்கு என்னை அழைத்து வர சொல்லி இருக்கின்றார்கள். நாங்கள் சந்தித்த பின் எங்கள் வீட்டில் வந்து அவர்கள் பேசுவார்கள்.
கிஷோர்க்கு அவள் சொல்வது அதிர்ச்சியாக இருந்தாலும் வரும் ஆபத்தை உணராமல் ஏதும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது எப்படியாவது இதில் இருந்து மீட்க வேண்டும். அவளிடம் நயமாக பேசி பரத் வரச் சொன்ன வீட்டின் விபரங்களை தெரிந்து கொண்டான்.
பரத் வீட்டிற்கு குறிப்பிட்ட தேதியில் சொன்னது போலவே சென்றாள். பரத்தை நேரில் பார்த்ததும் சற்று தடுமாறினாள் ஏனெனில் அவள் கற்பனை செய்திருந்ததற்கு நேர்மாறாக இருந்தான். அதுவும் வீடு மிகவும் அமைதியாக இருந்தது யாரும் உள்ளே இருப்பது போல் தெரியவில்லை.
பரத் வீட்டில் யாருமில்லையா நீ மட்டும்தான் இருக்கிறாய் எல்லோரும் இருப்பார்கள் என்று சொன்னாயே.
கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள் அருகில்தான் இப்போது வந்துவிடுவார்கள். நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன்.
சற்று நேரத்தில் குளிர்பானத்தோடு வந்தான் ஆர்தி இதைக் குடி. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கின்றார்கள்.
ம்ம் அனைவரும் நலம். ஆர்தி குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் அப்படியே சோபாவில் சாய்ந்தாள். ஒரு மணி நேரம் கழித்து கண்விழித்து பார்த்தாள். தான் ஒரு அறையில் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்து எழுந்தாள் எதிரே பரத் சிரித்துக் கொண்டிருந்தான்.
பரத் எனக்கு என்ன ஆயிற்று நீ ஏன் சிரிக்கிறே? நான் எப்படி இங்கு வந்தேன்.
உன்னை இங்கே வரவழைத்த வேலை சுலபமாக முடிந்தது என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு நடந்த அனைத்தையும் காணொளியாக பதிவு பண்ணிவிட்டேன்.
ஆர்தி அழுதாள் அவனை மாறி மாறி அடித்தாள் உன்னை நம்பி வந்ததற்கு இப்படி என் வாழ்வையே நாசமாக்கி விட்டாயே என்று அழுதாள்.
நானா உன்னை நம்பச் சொன்னேன் நீயாக கற்பனை வளர்த்துக் கொண்டு வந்தாய். அதற்கு நான் என்ன செய்ய நீ என்னை நேரில் பார்த்ததுக் கூட கிடையாது எப்படி என்னை நம்பினாய்.
கிஷோர் சொன்னதை கேட்காமல் வந்தேன் இதுக்கு எனக்கு இது தேவைதான் ஆபத்தை உணராமல் உன்னை முழுவதுமாக நம்பியதற்கு எனக்கு இது தேவைதான். அவன் முகத்தில் நான் எப்படி விழிப்பேன். அவன் முன்னாடியும் வீட்டிற்கும் நான் இப்படி போய் நிற்பதைவிட இறப்பது ஒன்றுதான் வழி என்று அழுதாள். பரத்தை திரும்பவும் அடித்தாள்.
பரத்தை ஏன் இந்த அடி அடிக்கிறே? உனக்கு ஒன்றும் ஆகவில்லை ஆர்தி. நீ நன்றாகதான் இருக்கிறாய். பரத் மிகவும் நல்லவர் அவர் உன்னை ஒன்றும் செய்யவில்லை.
குரல் கேட்டு திரும்பிய ஆர்தி அங்கே கிஷோரும் ஒரு பெண்ணும் நிற்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் முழித்தாள்.
நீ ஏதும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று உன்னிடமிருந்து பெற்ற விபரங்களை வைத்து இரண்டு நாட்கள் முன்பே இங்கு வந்துவிட்டேன். வந்தபிறகுதான் தெரிந்தது அவர்கள் உனக்கு நல்ல பாடம் கற்பிக்கதான் அழைத்திருக்கிறார்கள். பரத் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர்தான் அவரின் மனைவி இலக்கியா என்றான்.
உன்னை மாதிரி பெண்கள் இணைய தளங்கள் மூலமாக தவறானவர்களிடம் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்வையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு காதல் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த மாதிரி ஆபத்தை உணராமல் தவறான வழியில் சென்று மாட்டிக் கொண்டு அதற்குண்டான் தண்டணையை அனுபவிப்பது பெண்கள்தான் மற்றவர்கள் முன் அசிங்கப்பட்டு அவமானத்துடன் வாழ வேண்டும் என்று சொன்னாள் இலக்கியா.
தொழில்நுட்பங்கள் வளர்வது நமது வேலைச் சுமையை குறைக்கவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், நமது அத்தியாவசிய தேவைகளை எளிதில் முடித்து கொள்வதற்கும்தான் அதே நேரத்தில் அதில் நல்லதும் உள்ளது தீயதும் உள்ளது. சிலர் நல்லதை விட்டுவிட்டு தீயதை நோக்கிச் சென்று உன்னைப் போல் ஆபத்தில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள் என்றான் பரத்.
நீயே சிறிது யோசித்துப் பார் தவறானவர்களின் கையில் நீ மாட்டியிருந்தாள் உன் வாழ்வு என்ன ஆகியிருக்கும் என்று எல்லோரும் பரத் போல் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். நீ தீயவர்களிடம் மாட்டியிருந்தால் உன் நிலைமையை யோசித்துப் பார் உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்றான் கிஷோர்.
கிஷோர் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும், அவருக்கும் உன்னைப் பற்றி நன்றாகவே தெரிந்தும் புரிந்தும் வைத்து இருக்கிறார். நீ ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று உனக்கு முன்னாடியே இங்கு வந்து உன்னைக் காப்பாற்ற நினைத்திருக்கிறார் இப்படிப்பட்ட ஒருவரை நீ இழக்க விரும்புகிறாயா? அவர் உன் மீது கொண்டுள்ளதுதான் உண்மையான காதல் என்றாள் இலக்கியா.
ஆர்தி அவனையே பார்க்க கிஷோர் தன் இரு கைகளையும் நீட்ட அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.