தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது ரகுராமனுக்கு.
மீனா..அது மீனாவேதான். எத்தனை காலமாயிற்று பார்த்து. காதல் பரவசத்தில் உருகி உருகி திரிந்தது எல்லாம் மனதில்நினைவு வர, லேசாக வியர்த்தது.
ஏங்காவது மறைந்து கொள்ளலாமா என்று நினைப்பதற்குள் அவளும் கவனித்து விட்டாள்.
மெல்ல அருகில் வந்தவள், ‘எப்படியிருக்கீங்க?’ என்றாள் இயல்பாக.
ம். ஏதோ இருக்கேன். எத்தனை வருஷமாச்சு! நல்லாருக்கியா மீனா’ எனும்போது ஒரு பைக் சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்த இளைஞன் ” ஏறுங்க’ என்றான் மீனாவைப் பார்த்து.
யாரது மீனா?
இதுவா! இவன்தான் என் செல்லப்பேரன். கொஞ்ச நேரம்கூட காலாற நடக்க விடமாட்டான். உடனே பைக் எடுத்துகிட்டு வந்திருவான். என் மேல் கொள்ளை பிரியம், வரட்டுமா! என்று வண்டியில் ஏறிக்கொண்டாள்.
மீனாட்சி கொடுத்து வைத்தவள். நம் பேரன் ஒரு முறையாவது இப்படி வண்டியில் கூட்டிப் போயிருப்பானா? என்று மனதில் நினைத்துக்கொண்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தார் ரகுராமன்.
- ஜி.சசிகுமார் (ஜூலை 2014)
தொடர்புடைய சிறுகதைகள்
தேதி:2/01/1971
அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை, காப்பி சாப்பிட்டுவிட்டு காரம் கொஞ்சம் தூக்கல் என்று அந்தக் கூட்டத்தில் உமது அம்மையார் ஏதோ பெரிய ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்து வீட்டுக்கு போய்த் திரும்பிய தன் மனைவி உமாவை கவனித்தான் தினேஷ்.
போகும்போது துள்ளலுடன் போனவள் இப்போ வரும்போது தலையை தொங்க போட்டு கொண்டு ஏன் வருகிறாள்?
உமா உனக்கு என்ன ஆச்சு! போறப்போ சந்தோசமா போனே இப்ப ஏன் இப்படி வர்ற?
நம்ம வீட்ல ...
மேலும் கதையை படிக்க...
பிரியா பெயருக்கேற்ற அழகும், வயதுகேற்ற வாளிப்பும் உடைய அழகு தேவதை. கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆயிற்று, வேலைக்குச் செல்ல அனுமதியில்லை வீட்டில் ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நல்ல வரன் வந்தால்,திருமணம் செய்துவிடலாம் என்பது பெற்றோரின் விருப்பம்.
ப்ரியாவின், அப்பா பாங்கில் ...
மேலும் கதையை படிக்க...
செல்போன் கடையைத் திறந்து தூசி தட்டி ஒழுங்கு செய்தான் குமார். பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்துத் தலை சீவி, கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டான். இன்று மஞ்சு கட்டாயம் வருவாள். முழுப் பெயர் மஞ்சுளாதேவி. நேற்று மாலை கடைக்கு வந்தாள். தினமும் நேரம் ...
மேலும் கதையை படிக்க...
‘‘ஆயா, டி.வி சவுண்டை குறைங்க...’’
‘‘ஏய் அபி, நீ என்ன படிக்கவா செய்யுற? முதல்ல கம்ப்யூட்டர் கேம்ஸோட சவுண்டை குறை. நிம்மதியா ஒண்ணு பார்க்க முடியறதில்ல...’’
‘‘எனக்கும்தான் நினைச்ச பாட்ட கேக்க முடியுதா... எந்நேரமும் வில்லிங்க ராஜ்ஜியமும் அழுகாச்சி ஓசையும்தான்...’’
‘‘ரொம்ப வாயாடற. உங்கம்மா கண்டிச்சி ...
மேலும் கதையை படிக்க...
அபியும் ஆயாவும் – ஒரு பக்க கதை