அவன் காயமுற்றான், அவள் கல்யாணமுற்றாள் – காதலாலே!

 

திருப்பூர் அருகே ஒரு அடிப்படை தன்னிறைவு பெற்ற, இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் சிற்றூர், “அலங்கியம்”. மசூதியும், கன்னிமேரி தேவாலயமும், மாரியம்மன் கோவிலும் ஒரே தெருவில் ஒன்றை ஒன்று பார்த்தவாறு, அமையப்பெற்றதே சமய ஒற்றுமை குடில் அலங்கியம். இதன் அருகே 10 மைல் தொலைவில் உள்ளது தாரை நகரம். உழு நிலங்களும், நீர் பாசனங்களும், குறைவின்றி சூழப்பட்டுள்ளது அலங்கியம். தமிழ்நாடு கலாச்சாரமும், இசுலாமிய மத பண்பாடும் ஒருங்கே பெற்ற ஓர் ஒழுங்கு கூடம் என்றும் கூறலாம்.
அப்படிப்பட்ட இவ்வூரில், ஒரு கருக்கல் பொழுது விலகிய நேரம் மக்கள் வாய்கள் விரைவாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. ரசீதா-காசிம் தம்பதியினர் வீட்டிற்க்கு மக்கள் இரங்கல் கூட்டம் நடத்தினர்.
மெல்ல மெல்ல பொழுது மங்கி மாலை நேரம் வெளிப்பட்டது, அப்போது தாரையிலிருந்து வந்த நம்பர்-3 கொண்ட பேருந்திலிருந்து இறங்கினர், ஜீலைகா மற்றும் பாரூக் இருவரும் ஜோடியாக.
இதை கேள்விப்பட்ட, ஜீலைகாவின் தந்தை காசிம் ஆத்திரத்தோடு அவளை கடைவீதி தெருவில் சரமாரியாக அடித்தார். அதை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த நேரம், அங்கு வந்தார், பாரூக்கின் தாய் மாமன் முஸ்தபா. பாரூக்கிற்க்கு தகப்பனார் கிடையாது. அவனின் குடும்பத்தை இதுவரை பார்த்து வருபவர் முஸ்தபா, பாரூக்கின் தங்கை ரூபினா திருமணம் வரை. இன்னும் பாரூக்கிற்க்கு ஒரு தம்பி உள்ளான், அபுதாஹிர் என்று.
முஸ்தபா சற்று நிதானமாக, குழுமியிருந்தோரிடம் பேசி சமாதனப்படுத்தினார். பின்பு விசயம் மசூதி தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அந்த முத்தவல்லி மற்றும் சக மசூதி நிர்வாகிகள் தங்களது இசுலாமிய சட்டத்தின் பிரகாரம் இப்படி ஒரு ஆணும், பெண்ணும் தனித்து ஓடிப் போவதும், ஒரு நாள் முழுவதும் தனித்து இருந்ததும் விபச்சார குற்றமெனவும் இதற்க்கு தண்டனை அவர்கள் இருவரும் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில், விபச்சரத்திற்க்குண்டான தண்டனைப்படி, இருவருக்கும் 80 கசையடிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் உரிய தீர்ப்பு கூறினர்.
இதன் பின்னர் இரு வீட்டினரும் பேசி திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவித்தனர். பின்பு ஓடிபோய் திரும்பி வந்த ஜோடிகளிடமும் முறைப்படியான சம்மதம் வாங்கிய பின்னர், இரு வீட்டினர் பெரியோர்கள் முன்னிலையில் திருமண நாள் குறிக்கப்பட்டது. அந்த விபரங்கள் முறையாக மசூதி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
பாரூக் – ஜீலைகா திருமணம், அந்த அசிங்க நிகழ்விற்க்குப் பின்னர் சில மாதங்களிலே நடந்துவிட்டது.

இது இசுலாமிய சமூகத்திற்க்கு மட்டும் இல்லை, அந்த ஊரின் கலாச்சாரத்திற்கேவும் கூட கேடு என்றே பலரும் இசுலாமியர்கள் உட்பட பேசி வந்தனர் அவர்கள் ஓடிப்போன நாளில். பின்பு அனைவரும் சாந்தமுற்றனர் அவர்களுக்கு திருமணம் முடிந்த பின்னர்.
பாரூக் குடும்பத்தினர் அவனுடைய இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இப்படி இருவரும் ஓட நேர்ந்தது. ஆனாலும் பாரூக்கின் குடும்பத்தினர் மீதும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் ஜீலைகா நடத்தை அப்படி, அவள் முன்னவே ஒருவனை காதலித்து கொண்டிருந்தாள்.

அதற்க்கு ஊருக்குள் அவளின் மேல் ஒரு கரும்புள்ளி மதிப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவள் காதலித்தவனை விடுத்து பாரூக்குடன் ஓடிச் சென்றது, ஊராருக்கு மட்டும் அல்ல, ஜீலைகாவின் குடும்பத்தினருக்கேவும் கூட ஆச்சரியமாக இருந்தது.

பாரூக், ஜீலைகாவின் செயல்கள் தெரிந்தும் அவளை காதலித்தான், என்பதை விட காமம் கொண்டான் என்றே கூறலாம். ஜீலைகா அப்படி ஒரு அழகிய கட்டுடல் பெண். இந்த காமம் மோகத்தில்தான் பாரூக் அவளை காதலித்தான், அதனை அவனின் வீட்டார் மறுக்கவே, அவர்களோடு சண்டையிட்டு, அந்த கோபத்தினால் அவன் இப்படி செய்திட்டான்.

போனது போகட்டும், இருவரும் திருமணம் முடித்து நன்றாக வாழ்கின்றனர் என்ற திருப்தி ஜீலைகாவின் பெற்றோர்களுக்கும், பின் மெல்ல மெல்ல பாரூக்கின் குடும்பத்தினருக்குள்ளும் குடியேறியது…

இரண்டு மாதங்கள் கழிந்தன……

அன்று புதன் கிழமை, திருப்பூர் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்ப்பிக்கப்பட்டான் அப்துல்…

ஆம்…

அப்துல் 23 வயது வாலிபன்…

இவன் கதை பரிதாபத்திற்க்கு உரிய ஒன்று…

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு அலங்கியத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்க்கு ரமலான் குப்தா பண்டிகைக்கு வந்தான் அப்துல் தன் குடும்பம் சகிதம். இது அவனுக்கு வழக்கம் ஒவ்வொரு வருடமும் இப்படி வருவது. இருப்பது திருப்பூர் எனினும் பூர்வீகம் அலங்கியம் தான் அப்துலுக்கு.

அப்போது அவன் +2 படித்துக் கொண்டு இருந்தான். இந்த நேரம் அவன் நாலு தெரு தள்ளியிருக்கும் ஜீலைகாவை சில வருடங்களுக்குப் பின்பு பார்த்தான்.

இருவரும் பால்ய வயதிலிருந்தே பழகியவர்கள், ஆனால் இசுலாமிய கலாச்சாரப்படி பூப்பெய்திய பெண் படி தாண்டுவது கடினம் என்பதனால் அப்துலால் ஜீலைகாவை சில வருடங்களாக பார்க்க இயலவில்லை. ஜீலைகா அப்துலுக்கு சக வயதொத்தவள்.

ஆனால் இந்த முறை ஜீலைகாவை அவனால் பார்க்க முடிந்தது, அவள் தையற்ப் பள்ளி செல்லும் பொழுதுகளில். வீட்டுக்குள்ளே சும்மா இருக்க முடிவதில்லை எனும் ஜீலைகாவின் சினுங்கள்கலாள் அவளின் தந்தை காசில் இரண்டு மாதத்திற்க்கு முன்பு இப்படி தையல் பயில அனுப்பி வைத்தார். இவள் வீட்டிலிருந்து ஊரின் எல்லையில் உள்ளது தையற் பள்ளி. இவள் தினமும் நடந்துதான் செல்வாள். அப்படி அப்துல் இவளை பார்த்தான் பின்பு இவன் அங்கு தங்கியிருந்த 10 நாட்களுக்குள் இருவருக்கும் இடையே காதல் மையம் கொண்டது.
இதே காதல் அவன் திருப்பூர் சென்ற பின்னரும் செல்லிடப்பேசி வழியாக தொடர்ந்து கொண்டிருந்தது. தனது தந்தையின் செல்லத்தால் ஜீலைகா இப்படி சலுகைகளை பெற்றிருந்தால். ஆனால் அதை தவறுதலாக அவள் உபயோகிப்பது காசீமிற்க்கு தெரியாது.

மெல்ல நகர்ந்தது 6 மாதங்கள், அப்துல் +2 – பரீட்சை எழுதி அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றான். ஆனால் அவன் தன் அம்மா ஜீபைதாவின் விருப்படி பொறியியல் சேராமல், ஐ.டி.டிப்ளமா சேர்ந்தான். காரணம் “டிப்ளமா படித்தால்தான் படிப்பு சீக்கிரம் முடிந்து இரண்டு வருடத்தில் வேலைக்கு சென்றிடலாம், பின்பு நிக்காஹ் சீக்கரமா செய்து கொள்ளலாம்” என்ற ஜீலைகாவின் ஆசை வார்த்தைகள்.

இதை அப்படியே ஆமோத்தான் ஜீலைகாவின் அழகில் அடிமையான அப்துல்.

பின்பு அவன் டிப்ளமோ சேர்ந்தான் படித்தான் இரண்டு வருடங்கள் சென்றன, படிப்பு முடிந்து கோயம்பத்தூரில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலையில் சேர்ந்தான்.

ஜீலைகா – அப்துல் காதல் அழகாக சென்று கொண்டிருந்தது. ஆனால் அவளின் ஊரார் இதனை கண்டு ஜீலைகாவின் பெற்றோரிடத்தில் அவ்வப்போது முறையிட்டுக் கொண்டிருந்தனர்.

வாரம் ஒரு முறை அப்துல் அலங்கியம் வருவதும், அப்போது இவளை ஊரின் எல்லையில் தையற் பள்ளி அருகே சந்தித்து பேசிவிட்டுப் போவதும் வாடிக்கையான நிகழ்வு. இதுவே ஊராரின் கோபத்திற்க்கு காரணம். அவர்கள் பார்வையில் இது கலாச்சார சீரழிவு ஆக தெரிந்தது.
அப்துல் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவனின் பெற்றோரிடத்தில் தன் காதலை கூறி சம்மதமும் வாங்கிவிட்டான். ஆனால் அந்த வேளை காசிம் ஜீலைகாவிற்க்கு கடும் எச்சரிக்கைவிடுத்து வீட்டு காவலில் வைத்தார்.

இப்படிபட்ட சூழலில் ஜீலைகாவிற்க்கு தன் பக்கத்து வீட்டு பாரூக் உடன் தொடர்பு ஏற்ப்பட்டது. அது காதலாக மாறியது. அடக்கி வைக்கப்பட்ட அவளின் பெண்மை உணர்வுகள் ஒரு கட்டத்தில் தெறித்தெழ அவள் திட்டமிட்டு தன் வீட்டு பின்புறமாக பாரூக் உடன் ஓடிவிட்டாள்.
ஜீலைகாவின் வீட்டின் பின் வாசல் சுவரும், பாரூக் வீட்டின் பின் வாசல் சுவரும் உயரம் குறைவு அங்கிருந்து பார்த்தால் இரு வீட்டு நிலையும் நன்றாக தெரியும். இப்படியாகவே இந்த இருவருக்குள்ளும் காம மோகம் உருவாகியது.

பின்பு அவர்கள் ஓடியது திரும்பி வந்தது, திருமணம் நடந்தது எல்லாம் முன்பே பார்த்த கதைதானே !

இவர்களின் இந்த காம வயப்பட்ட திருமண செய்தியை அப்துல் இரண்டு மாதங்கள் கழித்தே அறிந்தான். அந்த மன உலைச்சலில் அவன் தென்னை மரத்து மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டான். ஆதலால் இப்போது அவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில்….

ஆறு மாதங்கள் உருண்டோடின….

அப்துல் உயிர் பிழைத்துவிட்டான். ஆனாலும் அவன் பிணமாகவே வாழ்ந்து வருகின்றான். தாங்க முடியாதா துக்கத்தால் அவன் சுய நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக ஆகிவிட்டான்…

ஜீலைகா – பாரூக் தம்பதி பிரிந்துவிட்டது. இருவருக்கும் தாம்பத்திய வாழ்கை தொடங்கிய சில வாரங்களிலிருந்தே பிரச்சனை. ஜீலைகா அப்துலுடன் உறவு கொண்டாள் என்ற பாரூக்கின் சந்தேகமும் தொல்லைகளும் காரணம்.

இப்போது பாரூக் அவளை தலாக் (விவாகரத்து) செய்துவிட்டு தன் மாமான் முஸ்தபாவின் மகள் சுமையாவை திருமணம் செய்து வாழ்கின்றான் ஒரு மாதமாக…

பாரூக்கின் ஜீலைகா மீதான சந்தேகங்களுக்கும், தொல்லைகளுக்கும் பின்னனியாக அவனுடைய மாமா முஸ்தபாவும், தாய் ராபியாவும் ஆழமாக சதிவேலை செய்துள்ளனர்.

இன்று ஜீலைகா வாழ வெட்டியாக அவளது வீட்டில்….

அவன் காயமுற்றான், இவள் கல்யாணமுற்றாள்
இவள் காயமுற்றாள், அவன் கல்யாணமுற்றான்
காதலால் அல்ல காமத்தால் – காதலெனும்
போர்வை கொண்ட காமத்தால் ! 

தொடர்புடைய சிறுகதைகள்
ஏப்பா ஏய், யாருப்பா அது விசிலடிக்கறது, செத்த சும்மானு இருக்க மாட்டீங்களாய்யா? அட இங்க வா ரக்கும்பா. ஏன்? என்னவாம்? போப்பா ஏய், மண்டைய உடைச்சுப் போடுவேன் ஆமா. நான் கூப்பிடுல காசிம்ணே கூப்புடுறாப்புளா ரக்கும்பா. சித்த கன்னினுதேன் இரேன்பா. உங்களையோட ஒரே துன்பமா போச்சு. அப்போ டீ ...
மேலும் கதையை படிக்க...
செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை மரத்தின் நிழலில், தத்தம் முதுகுகளை இணைத்தவாறு எதிர் எதிரே அமர்ந்திருந்தது அந்த இளம் ஜோடி. கல்யானத்துக்குப் பின்னாடி நாம எங்கேயாதும் போயிடலாம். ...
மேலும் கதையை படிக்க...
வெயில் சுட்டெரிக்கும் ஒரு கிராமத்திலிருந்து, அழகிய ரம்மியமான மலைப் பிரேதஷமான மலைகளின் இராணி ஊத்தமண்ட் நகரில், எண்ணிலடங்கா கற்பனைகளோடும், வேற்று கிரகம் போன்ற ஊகிப்போடும் கால்களை பேருந்திலிருந்து விடுவித்து இறங்கினான் இமான். தனது பள்ளிப் படிப்பின் கோடை விடுமுறையில், ஒரு பலசரக்கு கடைக்கு ...
மேலும் கதையை படிக்க...
உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர வாழ்க்கையில் சங்கமிக்கின்றனர் மெல்ல, மெல்ல. அந்த சாலையோர நடைபாதயானது பெரும்பாலும் நடைப்பயிற்ச்சி, மெல்லோட்டம் மையமாகவே பயன்படும் காலையும், மாலையும். இரண்டு நபர்கள் ...
மேலும் கதையை படிக்க...
நாட்டு ஓடுகள் பொருத்தி, சற்று குழியும், மடிப்புமாக புறச் சுவர்கள் கொண்டு, தெற்கு நோக்கி ஒரு வாயிலும், கிழக்கு நோக்கி மறு வாயிற்புறமும் கொண்டிருந்து, இரு தெருக்களை இணைக்கும் முனையில் இருந்த அந்த வீட்டிலிருந்து வெளியேறினான், இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க ...
மேலும் கதையை படிக்க...
ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா? ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா! ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா இருக்கானு பார்த்துக்கனும் சரியா! சரிம்பா, நான் நின்னு பார்த்துக்கறேன். எப்பேர்பட்ட ஆளு மைய்யத்து, நீதான் அனுபவமான மோதி அதான் உன்கிட்ட இவ்வளவு படிப்படியா சொல்லிட்டு போறேன். என்று ...
மேலும் கதையை படிக்க...
மேடும், பள்ளமுமாக, வளைந்து நெளிந்து சரிவாய் காட்சியளிக்கும், தேயிலை தோட்டத்தை ஒட்டியதாகக் காணப்படும், கோத்தகிரியில் உள்ள பல்கீஸ் பாத்திமாவுடைய பங்களா வீடு. சூரிய வெளிச்சம் நன்கு பளிச்சிடுகிறது, ஆனாலும் குளிர் உடலை குத்தித் துளையிடும் நவம்பர் மாதம் அது. பங்களா வீட்டின் முன்பிருந்து ...
மேலும் கதையை படிக்க...
செங்கதிர்கள் வலையில் சிக்கிய காலை பொழுதில், பெருநகர வீதிகளின் வாகனச் சண்டையில் போராடி, ஒரு டீ-கடை ஓரமாக தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மெல்ல கடையை நோக்கி சென்று ஒரு கையில் செய்தி தாளை எடுத்து, வாசிக்கத் தொடங்கினான், உமர் ...
மேலும் கதையை படிக்க...
நல்லாதார் பட்டி எனும் ஊரின் புளியமரத்தடியில், தினாவும்-தீபிகாவும், நீண்ட நேர விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தனர். நீ சந்தேகப் பட்றடா……நான் அவ்ளோதான் சொல்வேன், என்றபடி பேச்சை நிறுத்தினாள் தீபிகா. அப்பறம் ஏன் நீ எனக்கு முன்ன மாதிரி போன் பண்றது இல்லை? க்ளாஸ்ல அடிக்கடி இருக்க ...
மேலும் கதையை படிக்க...
என்னப்பா அப்துல்லா இன்னைக்கு செய்தித்தாள பார்த்தயா? படிச்சயா? அதுக்குத்தானே இந்தப் பக்கம் ஒதுங்கறது ஆனந்த். சரி சரி நீ ஒரு டீ போடுப்பா. ஆமா அப்படி என்னப்பா சுவாரஸ்யமா இருக்கு இன்னைக்கு? அட எப்போதும் போல உங்க ஆளுக சமாச்சாரம்தானப்பா. உம்ம்ம் அதுவா, என்னத்த செய்ய? ...
மேலும் கதையை படிக்க...
ஊருக்கு உதவிக்காரன்
தன்மானத்தின் பலிகடா – சாரா
ஓர் எழுத்தாளனின் மறுபிறவி
இப்படியும் இருக்கலாம்!
ராசிக்கின் ரசனைகள்
கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்
வாழ்விழந்தும் விருந்து
இடஒதுக்கீடின் இறப்பு
குற்றத்தின் பின்னனி யார்?
மங்கிடும் யாவும் மரித்துவிடுவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)