அது அந்தக்காலம்

 

தேதி:2/01/1971

அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை, காப்பி சாப்பிட்டுவிட்டு காரம் கொஞ்சம் தூக்கல் என்று அந்தக் கூட்டத்தில் உமது அம்மையார் ஏதோ பெரிய விஞ்ஞானியைப்போல அறிவித்தார்களே அப்படி சத்தம் போட்டு சொல்லிவிட்டு என் அப்பாவிடம் ஏதோ இரகசியம் போல முணுமுணுத்துவிட்டு, உம்மையும் எழுப்பிவிட்டு கூட்டிசென்றார்களே, நீரும் செம்மறியாடு தலை குனிந்து போவது போல உம் அம்மையாரின் பின் சென்றீர்களே !

அந்த வீட்டில் கொலு பொம்மையாய் நின்று உமக்கும்,உம் அம்மையாருக்கும், மற்றும் சுற்றி உள்ள்வர்களுக்கும் என் முழங்கால் வலிக்க வணக்கம் தெரிவித்த இந்த பாக்கியலஷ்மி எழுதிய கடிதம் இது. ஒரு வாரமாய் பதிலொன்றும் சொல்லாமல் தேமே.. என்று இருக்கிறீர், என் வீட்டில் அடுத்த ஆளுக்கு என்னை மீண்டும் கொலு பொம்மையாக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ உம்மிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதாய் நினைத்து பிகு பண்ணாமல் உமது பதிலை விரைவில் தெரிவிப்பீராக..

இங்கனம்
உம்மிடம் பஜ்ஜி,சொஜ்ஜிக்கு காசு வாங்காத
பாக்யலஷ்மி.

தேதி:10/01/1971

உங்கள் கடிதம் கிடைத்தது, அன்று உங்கள் வீட்டில் வழங்கிய அந்த பஜ்ஜியின் விளைவால் எனது அம்மையார் மருத்துவமனைக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படி எனது அம்மையார் உங்கள் வீட்டு பஜ்ஜியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது நான் உன்னை பிடித்திருப்பதாக்கூறினால் எனக்கு தினந்தோறும் வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து வகையான வசதிகளும் நிறுத்தப்பட்டுவிடும்.அதற்காக பஜ்ஜியை காரணம் காட்டி வீட்டுக்கு வரும் பாக்கியத்தை விட்டுவிட நான் தயாராக இல்லை.தயவு செய்து ஒரு வாரம் பொறுக்க.

குறிப்பு: அன்று உமது தந்தையிடம் எனது அம்மையார் முணுமுணுத்தது பெண்பார்க்க வரும் வண்டி செலவை அவரே ஏற்றுக்கொள்வதாக தரகா¢டம் சொல்லிவிட்டு தராமல் வாயை மூடிக்கொண்டிருந்ததால் எனது அம்மையார் அவரிடம் ஞாபகப்படுத்தினார்.

உமது தந்தையார் இப்படி சொல்லிவிட்டு செய்யாமல் இருந்தது என்ன நியாயம்?

இப்படிக்கு
உங்கள் வீட்டு பஜ்ஜியால் பர்ஸ் காலியான
நாராயணன்.

தேதி:18/01/1971

உமது கடிதம் கிடைத்தது. உங்கள் அம்மையாருக்கு உடல்நிலை சா¢யில்லாமல் போனதற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் எங்கள் வீட்டு பஜ்ஜியினால்தான் உங்கள் அம்மையாருக்கு உடல் நிலை கெட்டதாக கூறியிருக்கிறீர், அதுதான் எனக்கு புரியவில்லை. நீரும் உமது அம்மையாரும் ஒரு முறை நான் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள காண்டீனில் நான்கைந்து பஜ்ஜியை முழுங்கிக்கொண்டு என்னைப்பற்றி விசாரித்திருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் கெடாத உடம்பு அதே காண்டீனில் செய்த பஜ்ஜியை பெண்பார்க்கும் அன்று சாப்பிட்டு எப்படி உடம்பு கெட்டுப்போகும்?.

இப்படியெல்லாம் எங்கள் வீட்டின் மீது வீண் பழி சுமத்தாதீர்.

குறிப்பு: பெண் பிடித்திருக்கிறதா இல்லையா என தெரிவிக்க காலம் கடத்தும் நீர் எதற்காக நான் வேலை முடிந்து பஸ ஏறிச்செல்வது வரை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்?

இப்படிக்கு
உமது புகாரால் பாதிப்படைந்த
பாக்கியலஷ்மி.

தேதி:28/01/1971

நான் ஒளிந்திருந்து தங்களை பார்ப்பதாக ஏதோ நோ¢ல் பார்த்த்து போல் எழுதியுள்ள பெண்ணே ! நான் எனது நண்பனுக்காக அங்கு காத்திருந்தேன் என்று சொன்னால் நம்பவா போகிறாய் ! நேற்றே உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லிவிட்டதாய் எனது அம்மையார் சொன்னார்கள். ஆகவே ஒளிந்திருந்து பார்க்கவேண்டிய அவசியம் இப்பொழுது எனக்கில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அன்று என் நண்பணுக்காகத்தான் காத்திருந்தேன் என்று எங்கு வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்கிறேன்.

வரும் பிப்ரவரியில் நீ எனது மனைவியாக ஆவதால் தற்பொழுது நான் தரும் அறிவுரை என்னவென்றால் பஜ்ஜியை உங்களது கேண்டீனில் வாங்கி வந்து எங்களுக்கு அளித்தது போல் மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது அளிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும்

உன்னை கட்டிக்கொள்ளப்போகும்
(அ)பாக்கியவான்.
நாராயணன்.

தேதி:02/02/1971

உமது கடிதம் கிடைத்தது. ஏதோ பஜ்ஜியினால் உமது குடும்பம் பாதித்தது போல் எழுதியிருக்கிறீர். கவலைப்படவேண்டாம், மாப்பிள்ளை விருந்துக்கு எங்கள் காண்டீன் பஜ்ஜி வைப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். ஆனால் அன்று எங்கள் கேண்டீனில் என்ன ஸ்பெசல் செய்திருந்தாலும் கண்டிப்பாய் உமது இலையில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்னும் பத்து நாட்களுக்குள் நீர் எனது கணவனாக பதவி உயர்வு பெறுவதால் நாளை மறுநாள்(4/02/1971) எங்கள் அலுவலக நண்பர்களுக்கு எங்கள் காண்டீனில் செய்யப்பட்ட இனிப்பு வழங்க உத்தேசித்துள்ளேன், அச்சமயம் நீரும் இங்கு வந்து உமது புன்னகை முகத்தை என் நண்பர்களுக்கு காட்டிச்செல்லவும் என்று அன்புடன்
ஆணையிடும் உங்கள்…..

வெட்கத்துடன்
பாக்யலஷ்மி.

இன்று:

என்னடி பண்ணிட்டு இருக்கறாரு உன் அப்பா, பீரோவை நோண்டி பழைய கடிதாசியெல்லாம் படிச்சிட்டு உட்கார்ந்திருக்கறாரு ! பேத்திய பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு கொஞ்சமாவது படபடப்பு வேணாம்மா.. போய் வாசல்ல நின்னு வர்றவங்களை வாங்கன்னு கூப்பிடச்சொல்லு. 

தொடர்புடைய சிறுகதைகள்
மேசை ட்ராயரில் போட்டு வைத்த பணம் இவள் மனதை இம்சை படுத்தி கொண்டிருக்கிறது. ஒரு இலட்சம் ரூபாய் ஒரே கட்டாக இரண்டாயிரம் ரூபாய் தாளாக சுகமாய் படுத்து உறங்கி கொண்டிருக்கிறது. காலை பத்து மணி இருக்கலாம், இவள் அலுவலகத்தில் “கணிப்பொறியின்” முன்னால் உட்கார்ந்து ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸை விட்டு இறங்கி சேகர் தன் கையை திருப்பி மணி பார்த்தான்.அதற்குள் “உறைபனி” வாட்ச்சின் மீது மறைத்திருந்தது.வலது கையால் துடைத்துவிட்டு பார்த்தான்.மணி பத்தை தொட ஒரு சில நிமிடத்த்துளிகளை காட்டியது. இந்நேரத்திற்கு மேல் என்ன செய்வது?, பஸ் நிலையத்தில் தங்கவும் முடியாது. ...
மேலும் கதையை படிக்க...
உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு சார், கீழே உட்கார வச்சிருக்கேன். கணிணியில் அலுவலக வேலையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த அசோக் தலை நிமிர்ந்து யாருன்னு விசாரிச்சீங்களா? விசாரிச்சேன், மோகனா அப்படீன்னு சொல்லுங்க, அவருக்கு தெரியும்னு சொல்லுச்சு. அப்படி யாரும் எனக்கு தெரியாதே, ஆமா ...
மேலும் கதையை படிக்க...
ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரிலும், கதாநாயகன், நாயகி இருவர் உட்பட அனைவரையும் விட அந்த லைட்பாய் கவனத்தை கவர்ந்தான். சில நேரங்களில் நாயகியின் பார்வை அந்த பையனை நோக்கி செல்வதை கதாநாயகனாக நடிப்பவர் பொறாமையாக ...
மேலும் கதையை படிக்க...
பதினைந்து வருடங்களுக்குள் மூன்று, நான்கு முறை நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்த நூல் தோப்பில் முஹம்மது மீரானின் "அஞ்சு வண்ணம் தெரு" என் மனதின் ஓரத்தில் உறுத்தலாய் இருக்கும் கதாபாத்திரம் "மம்மதும்மா" அவள் தன்னை காப்பாற்றி கொள்ள போடும் வேஷமான, ஆங்கார ...
மேலும் கதையை படிக்க...
என்னைப்போல் ஒரு ஜோசியக்காரன் இந்த உலகத்தில் இப்பொழுது இல்லை. எதிர்காலத்தில் பிறக்கலாமோ என்னமோ, எனக்கு தெரியாது. ஏன் அதையும் கணித்து சொல்லலாமே என்று கேட்கிறீகளா? சொல்லலாம், நானும் கணித்து பார்த்தேன் இப்போதைக்கு யாரும் இல்லை, எதிர் காலத்தில் உருவாகலாம் கோள்களின் கணக்கை வைத்து ...
மேலும் கதையை படிக்க...
“வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன், பதிலை ஆங்கிலத்தில் சொல்லவே மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து சொல்ல யோசித்தான். மறூபடி அவள் அந்த கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, “இண்டர்வியூ”வுக்கு ...
மேலும் கதையை படிக்க...
சுரேஷ் அன்று பரவசமாய் காணப்பட்டான், அவனுடைய மகிழ்ச்சியை எப்படி சொன்னால் பொருத்தமாய் இருக்கும்? ம்.ம்.. முதன் முதலில் ஒரு இளம் பெண் ஒரு இளைஞனை அன்புடன் பார்க்கும்போது அந்த இளைஞனுக்கு ஏற்படும் ஒரு இன்ப அனுபவத்தை இதனோடு ஒப்பிடலாமா? அல்லது உறவினர் ...
மேலும் கதையை படிக்க...
ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு போசியில் கொஞ்சம் பழையதயும் போட்டுக்கொண்டு தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட கிளம்பியவந்தான் பசுமைகள் மறைந்து ...
மேலும் கதையை படிக்க...
நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன்.பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று கொண்டிருப்பதை பார்த்தார், தொலைவில் பார்க்கும்போது முகம் சரியாக தெரியவில்லை, ஆனால் ஆள் நல்ல கட்டு மஸ்தாக இருப்பது தெரிந்த்து. குரைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பணக்கட்டு
ஊட்டிக்கு பயிற்சிக்கு சென்றவன்
எலீசா..எலீசா..
இலட்சியமும் யதார்த்தமும்
எண்ணங்கள் வித்தியாசமாய்
தற்பெருமையில் கணிப்பு
வழி மாறிய சிந்தனை
அறிமுக எழுத்தாளனின் அவஸ்தை
வானம் எங்களுக்கும் வசப்படும்
முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்

அது அந்தக்காலம் மீது 2 கருத்துக்கள்

  1. Thirumalai says:

    Nice
    Nice

  2. நிலா says:

    கதை . நல்ல விறுவிறுப்பாக இருக்கிறது. அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)