ஹனுமன் பிரம்மச்சாரியா?

 

“ஹனுமன் பிரம்மச்சாரிதானே! பிறகு ஏன் சுவர்ச்சலா தேவியை அவருடைய மனைவி என்று கூறுகிறார்கள்? இது ராமாயணத்தில் உள்ளதா? சூரியனின் பெண்ணான சுவர்ச்சலாவை அனுமன் திருமணம் புரிந்தாரல்லவா? குரு புத்திரியை திருமணம் செய்வது தகுமா? அனுமனுக்கு அநேக ரூபங்கள் உள்ளனவே, எதனால்?”. இது போன்ற பல சந்தேகங்கள் பக்தர்களுக்கு எழுகின்றன.

ராமாயணத்தில் அனுமனின் மனைவி பெயர்கள் இல்லை. சுவர்ச்சலா பற்றிய கதையும் ராமாயணத்தில் கிடையாது. இராமாயண சம்பந்தமில்லாதது என்பதற்காக அதை தள்ளிவிடக் கூடாது. சுவர்ச்சலா தேவி என்பது உபாஸனை சம்பந்தப்பட்ட விஷயம். மந்திரங்களின் வழியாக தேவதைகள் வர்ணிக்கப்படுகிறார்கள்.

மந்திர சாஸ்திரத்தில் மந்திரங்களின் அதி தேவதைகள் இருக்கிறார்கள். அதே போல் மந்திர சாஸ்திரங்களில் ஹநுமனுக்கு அநேக ரூபங்களும் அதோடு தொடர்புடைய மந்திரங்களும் நிறைய உள்ளன. அதில் ஒன்று ‘சுவர்ச்சலா ஆஞ்சநேயம்’ என்பது.

மந்திரத்தின் அதி தேவதையை சக்தியோடு சேர்த்து உபாசனை செய்ய வேண்டும். இது, லௌகீகமான விஷயம் அல்ல. மந்திர சக்தியோடு தொடர்புடைய மந்திரம். ஹனுமன் சூரியனின் சீடன் என்பது புராணம் கூறும் கதை. மந்திரங்களின் படி, ஹனுமனின் சக்தியை ‘சுவர்ச்சஸ்’ என்பர். தவத்தினால் கிடைக்கும் தேஜஸ் ‘வர்ச்சஸ்’ எனப்படும். அப்படிப்பட்ட சிறப்பான பிரகாசமே ஹனுமனின் சக்தியான ‘சுவர்ச்சஸ்’. இதனையே ‘சுவர்ச்சலா’ வாக உபாசனை செய்கிறோம்.

இது ‘சௌர’ சக்தி. சூரிய சக்தியால் பிரகாசிக்கும் தெய்வ சைதன்யமே ஆஞ்சநேயர். இந்த சக்தியோடு கூட பகவானை பூஜிப்பவருக்கு இந்த ‘வர்ச்சஸ்’ மூலம் அனைத்து பலன்களும் கிடைக்கின்றன. சூரியனின் சக்தி சிறந்த வர்ச்சஸ்ஸோடு கூடியது என்பதால் அதனை ‘சூரியனின் புத்திரி’ என்று வர்ணித்தார்கள். அவ்வளவு தானே தவிர, அது தந்தை, பெண் உறவு அல்ல.

சுவர்ச்சலாவும் ஆஞ்சநேயரும் லௌகீகமான கணவன் மனைவி அல்லர். இது சக்தியோடு கூடிய தேவதா உபாசனை சம்பந்தப்பட்டது. சக்தியோடு கூட சேர்த்து பார்ப்பதே கல்யாணத்தின் பரமார்த்தம். அவ்வளவே தவிர, இது சீதா ராமர், சிவ பார்வதி இவர்களின் கல்யாணம் போன்றதல்ல.

ஒரே தேவதைக்கு பல ரூபங்கள் இருப்பதில் உள்ள உட்பொருள் என்னவென்றால் – அந்த தேவதையோடு தொடர்புடைய அநேக மந்திரங்களால் அநேக ரூபங்கள் ஏற்படுகின்றன. மந்திர சப்தங்களின் சேர்க்கையைக் கொண்டு தேவதைகளுக்கு ரூபங்கள் ஏற்படுகின்றன. ‘மந்திரம்-தேவதை’ இவற்றின் தொடர்பு பற்றி புரிதல் இருந்தால் இது புரிய வரும். எத்தனை மந்திரங்கள் உள்ளனவோ அத்தனை தேவதைகள் இருப்பார்கள். அத்தனை ரூபங்களும் இருக்கும். அவ்வளவுதானே தவிர, அத்தனை தேவதைகளின் ரூபங்களுக்கும் புராண கதைகள் இருக்காது. ஒரு வேளை இருந்தாலும் அவை மந்திரக் குறியீடுகளாக இருக்குமே தவிர நடந்து முடிந்த இதிகாசங்களாக இருக்காது.

அதே போல் பஞ்ச முக ஆஞ்சநேயர் கூட மந்திர உபாசனா மூர்த்தி. ராம கதையில் வரும் ஹனுமான் அந்த மந்திர மூர்த்தி எடுத்த ஒரு அவதாரம். ராமாயணத்தில் சுவர்ச்சலா பற்றிய விவரம் இல்லாவிட்டாலும் உபாசனைப்படி அது சிறந்த பிரமாணத்தோடு கூடியதே.

ரூபம் என்பது மந்திரச் சக்தியை வெளிப்படுத்தும் ஒரு சாதனம் மாத்திரமே. அந்த சக்தியை சப்த வடிவில் உச்சரிக்கும் போது அது ‘மந்திரம்’. காட்சியாக தரிசிக்கும் போது ‘ரூபம்’.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
(‘சமாதானம்’ என்ற நூலிலிருந்து, ருஷீபீடம் வெளியீடு)
தமிழில் – ராஜி ரகுநாதன்.
-தீபம், மார்ச் 5, 2017ல் பிரசுரமானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
புகழ் பெற்ற விதேக ராஜ்ஜியத்தின் அரசரான ஜனக மஹாராஜா உண்மை உணர்ந்த ஞானி. மிகப் புலமை வாய்ந்த மன்னரான அவர் அடிக்கடி தம் அரசவையில் தத்துவ விசாரணைகளை நடத்தி தர்க்கங்களையும் வாதங்களையும் ஊக்குவிப்பது வழக்கம். அதில் பங்கேற்கும் பண்டிதர்களுக்கு விலை உயர்ந்த ...
மேலும் கதையை படிக்க...
குழந்தைகளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியாகிவிட்டது. "சரிம்மா", என்று தலையை ஆட்டுகிறார்கள். நாளைக்கு அவர்கள் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள் ஜெயம். "நீ ஏன் அனாவசியமா அலட்டிக்கறே? வரப் போறது யாரு? எங்க அம்மா அப்பா தானே? தாத்தா பாட்டிகிட்டே ...
மேலும் கதையை படிக்க...
"இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி ததும்பப் பாடுவான் என்பது திண்ணம்" என்று தீர்க்க தரிசனத்தோடு உரைத்தார் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அவர் வாக்கு பலித்தது. எண்ணற்ற இந்தியர்களின் ...
மேலும் கதையை படிக்க...
​அபிராம் தன் பால்ய நண்பன் 'மஸ்கு' வைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். மகிழ்ச்சியோடு காட்டு வழியே நடந்தான். அவலும், பொரியும் நிறைந்த ஒரு சிறு துணி முடிச்சும், ஒரு சிறிய கோபால விக்ரஹமும் மட்டுமே அவனுடைய லக்கேஜ். அபிராமுக்குத் தாய் தந்தையர் இல்லை. பாட்டி ...
மேலும் கதையை படிக்க...
கலாசாரம், தர்மம், விஞ்ஞானம் ​ ...​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த ...
மேலும் கதையை படிக்க...
ஜனகரின் அவையில் நடந்த சுவையான நிகழ்ச்சி
பட்டால் தான் தெரியும்
கணவனைத் தேடிய கல்யாணி
ஒரு பிடி அரிசிச் சோறு
பரம்பரையின் மகத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)