யார் உண்மையான சீடன்?

 

புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர் அணுக்கத் தொண்டராக (எந்த நேரமும் குருவுடன் இருந்து, குறிப்பறிந்து அவருக்குத் தொண்டு புரிபவர்) வைத்துக் கொண்டதில்லை.

யார் உண்மையான சீடன்ஒரு நாள் புத்த பகவான் தன் சீடர்களைப் பார்த்து, ‘‘இது வரை எனக்கு அணுக்கத் தொண்டர் எவரும் இல்லை. இப்போது முதுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அப்படி ஒருவர் தேவை. அப்படி என்னுடன் இருக்க விரும்புகிறவர் உங்களில் யார்?’’ என்று கேட்டார்.

பெரும்பாலான சீடர்கள் ஆர்வத்துடன் எழுந்து நின்றனர். புத்தர் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரே ஒரு சீடர் மட்டும் ஒரு மூலையில் அமர்ந்து நிலம் நோக்கித் தலை தாழ்த்தியிருந்தார். புத்த பகவானின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. அவர் பெயர் ஆனந்த தேவர். உடனே மற்ற சீடர்கள் அதிர்ஷ்டசாலியான ஆனந்த தேவரைச் சூழ்ந்து கொண்டனர். ‘‘ஆனந்த தேவரே… புத்த பகவான் தங்களை அணுக்கத் தொண்டராக ஏற்க விரும்புவதாகத் தெரிகிறது. இது ஒரு பெரும் பேறு. உடனே பகவானிடம் தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்!’’ என்று கூறினர்.

ஆனந்த தேவர் தயக்கத்துடன் புத்த பகவானை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தலை குனிந்தார். இதை கவனித்த புத்த பகவான் புன்னகைத்தபடி, ‘‘ஆனந்தர், அவர் விருப்பப்படி நடந்து கொள்ளட்டும். யாரும் அவரைக் கட்டாயப்படுத்த வேண்டாம்!’’ என்றார்.

சட்டென்று பதறியெழுந்த ஆனந்த தேவர் தயக்கத்துடன் பேசினார்: ‘‘பகவானே… நான்கு விஷயங்களைத் தாங்கள் எனக்கு மறுக்க வேண்டும். மட்டுமின்றி, வேறு நான்கு விஷயங்களை எனக்கு அருள வேண்டும். அப்படிச் செய்தால் அடியேன் என்றென்றும் தங்கள் அணுக்கத் தொண்டனாக இருப்பேன்!’’ என்றார்.

‘‘சொல்லுங்கள் ஆனந்தரே… நான் எதை எல்லாம் மறுக்க வேண்டும்?’’ என்று கேட்டார் புத்த பகவான்.

‘‘புத்த பகவானே… ஒன்று: பகவானுக்குக் கிடைக்கும் நல்லுணவு. இரண்டு: அதேபோல் நல்ல துணிமணிகள். மூன்று: பகவானுக்கு அளிக்கப்படும் ஆசனத்தில் அடியேனுக்கு இடம். நான்கு: பகவானை பூஜை செய்ய யாரேனும் அழைத்தால் தங்களுடன் என்னையும் உடன் அழைத்தல்!’’ என்று ஆனந்த தேவர் கூறியதைக் கேட்ட புத்த பகவான், ‘‘நல்லது. தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறேன். நான்கு விஷயங்களை அருள வேண்டும் என்கிறீர்களே… அவற்றையும் சொல்லுங்கள்…’’ என்றார்.

பகவானைப் பணிவுடன் வணங்கிவிட்டு, ‘‘முதலாவது: பூஜை செய்ய எவரேனும் என்னை அழைக்கும் பட்சத்தில் அது எனக்கானதல்ல; தங்களுடையது. அதைத் தாங்களே ஏற்க வேண்டும். இரண்டாவது: பகவானை தரிசிக்க நான் எவரையேனும் அழைத்து வந்தால், தாங்கள் அவர்களுக்கு தரிசனம் தந்தருள வேண்டும். மூன்றாவது: நான் மனம் தடுமாறும் வேளையில் திசை மாறிப் போய்விடாமல் எளியேனைத் தேற்றித் தாங்கள் நல்வழிப்படுத்த வேண்டும். நான்காவது: அடியேன், தங்கள் அருகில் இல்லாதபோது மற்றவர்களுக்கு அருளும் உபதேசங்களை மீண்டும் அடியேனுக்கும் உபதேசித்தருள வேண்டும்!’’ என்று வேண்டினார்.

ஆனந்த தேவரின் குருபக்தி நிறைந்த வேண்டு கோள்களுக்கு இணங்கிய புத்தர்பிரான், அவரைத் தன் அணுக்கத் தொண்டராக ஏற்றுக் கொண்டார். அந்த விநாடியிலிருந்து புத்த பகவான் நிர்வாணம் அடையும் வரை அவரின் மனதுக்கு உகந்த, சிறந்த அணுக்கத் தொண்டராக விளங்கினார் ஆனந்த தேவர்.

_ என். மணிமேகலை நெடுஞ்செழியன், சிதம்பரம் 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது. 'ஜென்ம சாபல்யம்' கிடைக்கிறது. ஒவ்வொரு புராணக் கதையிலும் செய்திகளும் குறிப்புகளும் சேர்ந்து கதாபாத்திரங்களாக நம்மோடு உரையாடுகின்றன; நிகழ்ச்சிகளாக நம்மைச் சுத்தப்படுத்துகின்றன. இக்கதைகள் எல்லாம், ...
மேலும் கதையை படிக்க...
மணி ஒரு அரசாங்க அதிகாரி . பொது பணி துறை. சம்பளம் கொஞ்சம் . கிம்பளம் அதிகம். அரசை ஏமாற்றி , டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் , லட்ச லட்சமாய் சம்பாதித்தான். அவன் என்ன, அரசியல் வாதியா, கோடி கோடியாய் ...
மேலும் கதையை படிக்க...
மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில் மயங்கித் திகட்டாத இன்பத்துடன் தொடங்கிய வாழ்வு கசந்தவுடன், கணவன் ஜோசப் சுரேஷ், இன்னொரு பெண்ணின்மேல் மையல் கொண்டு ஓடிவிட்டான். இரண்டு வயது ...
மேலும் கதையை படிக்க...
பாண்டுரங்கனின் திருவிளையாடல்!
விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார் ராம் ராயர். அங்கு, அழகே உருவான ஸ்ரீபாண்டுரங்கனைக் கண்ட மன்னர் பேரானந்தம் அடைந்தார். 'இவ்வளவு அழகு பொருந்திய விக்கிரகம் தலைநகரில் இருப்பதே ...
மேலும் கதையை படிக்க...
கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்...​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான ஆற்றலும் செல்வமும் வந்து சேரும். சியமந்தக மணி இருக்கும் இடத்தில் மாதம் மும்மாரி பெய்யும். சுபிட்சம் நிலவும். பகைவர்களால் எந்தத் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சிரார்த்தம்’ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது). மஹரிஷி அகஸ்தியர் ஆபஸ்தம்பரிடம் பொறுமையாகச் சொல்ல ஆரம்பித்தார்: “அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப் படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட, வேத ...
மேலும் கதையை படிக்க...
அம்பலப்படுத்த வந்த அந்தணர்!
சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதன் பாடல்கள், எட்டு அடி கொண்டதால், ‘அஷ்ட பதி’ என்று வழங்கப்படுகிறது. கீதகோவிந்தத்தில் ‘வதஸியதி’ எனத் துவங்கும் பாடலை இறைவனே ...
மேலும் கதையை படிக்க...
"என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன் நவீன். "சே! சே! இது எங்க அண்ண ன் கலியாணக் கார்டுடா. என் கலியாணக் கார்டு இப்படியாடா இருக்கும். என் கலியாணக் ...
மேலும் கதையை படிக்க...
தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்
பாவ புண்ணியம்
கர்த்தரின் கருணை
பாண்டுரங்கனின் திருவிளையாடல்!
பரம்பரையின் மகத்துவம்
இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை
மஹரிஷிகள்
அம்பலப்படுத்த வந்த அந்தணர்!
திடீர் கல்யாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)