வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர்.
பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது.
ஒரு நாள்… நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
”நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கொல்ல வேண்டும்” என்ற அவர்களது பேச்சு, மகிலா முகனின் காதுகளிலும் விழுந்தது. இப்படி, திருடர்கள் யானைக் கொட்டடியில் பதுங்கி, தங்களுக்குள் பேசிக் கொள்வது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது.
தினமும், திருடர்களின் பேச்சைக் கேட்டு வந்த மகிலா முகன் யானை, ‘இவர்கள் நமக்காகவே போதிக்கின்றனர் போலும்!’ என்று எண்ணிக் கொண்டது.
ஒரு நாள், பாகன் ஒருவன் தன்னருகே வர… அவனை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்துக் கொன்றது மகிலாமுகன். பாகனின் உறவினர்கள், பிரம்ம தத்தரிடம் வந்து முறையிட்டனர்.
மன்னருக்கு அதிர்ச்சி! ‘சாதுவாக இருந்த மகிலாமுகன், திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன்?’ என்று குழம்பினார். முடிவில், அமைச்சர் போதிசத்து வரை வரவழைத்த மன்னர், அவரிடம் நடந்ததை விவரித்து, தகுந்த தீர்வு காணும்படி பணித்தார்.
யானைக் கொட்டடிக்கு வந்த போதிசத்துவர் மகிலா முகன் யானையைக் கூர்ந்து கவனித்தார். வியாதிக்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை.
உடனே அங்கிருந்த பாகர்களிடம், ”இங்கே புதிய ஆசாமிகள் எவரும் வந்தார்களா?” என்று கேட்டார்.
அவர்கள், ”ஆமாம் ஐயா! சில தினங்களாக நள்ளிரவில் சிலர், கொட்டடிக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்!” என்றார்கள்.
‘நள்ளிரவில் கூடுபவர்கள் தீயவர்களாகவே இருக்க வேண்டும்!’ என்று எண்ணிய போதிசத்துவர், மன்னரிடம் விவரங்களைக் கூறினார். அத்துடன், ”ஒழுக்கத்தில் சிறந்த சான்றோர்களை வரவழைத்து, கொட்டடிக்கு அருகில் அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றி பேசச் சொல்லலாம்!” என்றார். மன்னரும் சம்மதித்தார்.
அதன்படி நல்லோர்களும் அந்தணர்களும் யானைக் கொட்டடியில் கூடிப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நாள்தோறும் அவர்கள் நன்னடத்தைகள்- நீதிநெறிகள் பற்றி உரையாடினர்.
‘எவரையும் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும்’ என்பன போன்ற அவர்களது பேச்சுகளும் மகிலாமுகன் யானை யின் காதில் விழுந்தன. ‘நமக்காகவே போதிக்கின்றனர்’ என்று கருதிய யானை, படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. மன்னருக்கு ஆச்சரியம்! ”யானை மாறியது ஏன்? அது, பழைய நிலைக்குத் திரும்பியது எப்படி?” என்று போதிசத்துவரிடமே கேட்டார்.
”அரசே! எப்போதும் எல்லோரும் நல்ல கருத்து களையே பேச வேண்டும் என்று பெரியோர் கூறுவது இதற்காகவே! திருடர்களது தீய பேச்சுகளைக் கேட்ட யானை, அவற்றை ஏற்று அவ்விதமே செயல்பட்டது. பிறகு அந்தணர்களது நல்லுரைகளைக் கேட்டு, சாதுவாகவும் அன்பாகவும் மாறிவிட்டது” என்று விளக்கினார் போதிசத்துவர்.
அவரது சாதுர்யத்தைப் பாராட்டிய மன்னர், அவருக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
- எம்.பி. அர்ச்சுனன், கிருஷ்ணகிரி-1 (ஆகஸ்ட் 2008)
தொடர்புடைய சிறுகதைகள்
புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல.
விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம் பக்தியின் மேன்மையை வலியுறுத்துகிறது.
மற்றப் புராணங்களைப் போலவே இதிலும், உலக சிருஷ்டி போன்ற பல விஷயங்கள் வர்ணிக்கப் படுகின்றன.
துருவன், பிரஹலாதன், ஜடபரதர் போன்றவர்களின் ...
மேலும் கதையை படிக்க...
துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும் அவமதிக்காதவன்; விதிப்படி யாகங்களைச் செய்பவன்; புத்திமான்; வேதங்களை அறிந்தவன்; அந்தணர்களை மதிப்பவன்; வாக்கு தவறாதவன்; எல்லாவற்றுக்கும் மேலாக பராக்கிரமசாலி. இவனது ...
மேலும் கதையை படிக்க...
சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான ஆற்றலும் செல்வமும் வந்து சேரும். சியமந்தக மணி இருக்கும் இடத்தில் மாதம் மும்மாரி பெய்யும். சுபிட்சம் நிலவும். பகைவர்களால் எந்தத் ...
மேலும் கதையை படிக்க...
அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான்.
முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள பல தேசங்களை சார்ந்த ராஜ குமாரர்களும் வந்திருந்தனர். அவர்களில், கிருஷ்ணனின் புதல்வனான சாம்பனும் ஒருவன்.
அவன், எவரும் எதிர்பாராவிதம் ...
மேலும் கதையை படிக்க...
சிசுபால வதம் பாகம் ஒன்று
வசுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
பகவான் ஸ்ரீவிஷ்ணு உலகத்தைக் காத்து ரக்ஷிப்பதற்காக கிருஷ்ணாவதாரம் எடுத்து அருள் பாலித்தார். வசுதேவர், தேவகிக்கு புத்திரராக அவதரித்தார். பெருமை மிகு துவாரகாபுரியை ஆட்சி ...
மேலும் கதையை படிக்க...
பிரபஞ்சத்திற்கு மூலமாகவும், சாட்சியாகவும், சக்தியாகவும் இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தை பல விதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களை தியான சுலோகங்களாகவும் ஸ்தோத்திரங்களாகவும் நம் மகரிஷிகள் நமக்களித்துள்ளார்கள்.
அதிலிருந்து ஒரு தியான சுலோகத்தை ஆராய்ந்து பார்த்து, அதில் உள்ள தெய்வீக விஞ்ஞானத்தை அறிந்து கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின.
வான வீதியில் பறந்து கொண்டிருந்த பறவைகள் செயலிழந்து சிதறி விழந்தன. மேகக் கூட்டங்கள் கலைந்து பஞ்சாகிக் கரைந்தன.
லங்கேசன் ராவணனது குரலொலி இடி முழக்கம் ...
மேலும் கதையை படிக்க...
மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு ஆரம்பமாகிறது. மகாபாரதக் கதை முழுவதும் வியாச பகவானிடம் கேட்டறிந்த ஜைமினி முனிவருக்கு சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதற்கான அவகாசம் கிடைக்கவில்லை.
ஒரு முறை ...
மேலும் கதையை படிக்க...
மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற... கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக இருப்பினும், சகோதரர்கள் மற்றும் உறவினர்களைக் கொன்று கிடைத்த பதவியும் செல்வமும் தனக்குத் தேவையில்லை என்று மனம் கலங்கினார் தருமர்.
எனவே தன் ...
மேலும் கதையை படிக்க...
மிருகண்டு என்பவர் பெருந்தவ முனிவர். அவருக்கும் அவரது பத்தினியாகிய மித்ராவதிக்கும் புத்திரப்பேறு இல்லாதது பெருங்குறை. இருவரும் காசிக்குச் சென்று மணிகரணிகையில் நீராடி விஸ்வநாதரை நினைத்து தவமிருந்தனர். ஓராண்டு காலம் கடும் தவமிருந்தனர்.
தவத்தில் மகிழ்ந்து சர்வேஸ்வரன் அவர்கள் முன்தோன்றி “யாது வரம் வேண்டும்?” ...
மேலும் கதையை படிக்க...
மரணத்தை வென்ற இல்லறத்தான்!
இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
பலராமருக்கு பணிந்த துரியோதனன்!
இறைவனின் சொரூபம் – சாந்தாகாரம் புஜக சயனம்!
அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?