மாலிகன் மதி இழந்த கதை!

 

கிருஷ்ண பரமாத்மாவின் நண்பன்

கிரக தோஷத்தாலோ, விதி வசத்தாலோ… மனிதனின் புத்தி, சில தருணங்களில் பேதலித்து விடுகிறது. மாலிகனின் நிலையும் அப்படித்தான் ஆயிற்று! பேராசை யும் மமதையும் தலைதூக்க… சிறியவர்- பெரியவர் என்றில்லாமல், எல்லோரையும் அவமதித்து, பலவாறு துன்புறுத்தினான் மாலிகன்.

யார் இந்த மாலிகன்?

மாலிகன் மதி இழந்த கதை!யதுகுல நாயகனாம் கண்ணனின் நண்பன். கண்ணனின் தோழனாக இருப்பவன், சுபாவத்தில் நல்லவனாகத்தானே இருக்க வேண்டும்?! மாலிகனும் இயல்பில் நல்லவன்தான். யசோதை அன்னைக்கு நிகராக… கண்ணனிடம் அன்பைப் பொழிந்தவன்தான்!

எனவேதான் அவனுக்கு, சகல கலைகளையும் கற்றுத் தந்தான் கண்ணன். ஆயர்பாடியே வியக்கும் விதம்… தனக்கு நிகராக மாலிகனை உயர்த்தினான் அந்த மாயவன். ஆனால்?

கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் அவனை ஆட்டிப் படைத்தன. மமதையால் மதியிழந்து அலைந்தான் மாலிகன்! அனைத்தும் அறிந்த கண்ணன், இதை அறியாமல் இருப்பானா? அறிந்தும், ‘காலம் புத்தி புகட்டும்’ எனக் காத்திருந்தான்.

விரைவில்… மாலிகனின் வாழ்வில் விளையாடியது விதி. அது, விபரீத ஆசையாக அவனுள் புகுந்தது! ‘கண்ணனிடம் சக்ராயுதம் பிரயோகிக்கவும் பயிற்சி பெற வேண்டும்’ இதுவே அவனது ஆசை!

‘கண்ணன் என் நண்பனல்லவா? நிச்சயம் கற்றுத் தருவான்!’ என்ற எதிர்பார்ப்புடன் கண்ணனிடம் வந்து சேர்ந்தான். கவலையும் பரிவும் மேலோங்க நண்பனை எதிர்கொண்டார் கண்ணன்.

”வருக மாலிகா… உன்னைக் கண்டு எவ்வளவு நாளாகி விட்டது!”

”ஆம், நண்பா… நானும் உன்னைக் காணும் ஆவலுடன்தான் ஓடோடி வந்தேன். கூடவே… உன்னிடம் ஒரு வேண்டுதலும் உண்டு!” என்றான் மாலிகன். அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்டார் மாயக் கண்ணன். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”என்ன வேண்டும் மாலிகா? தயங்காமல் கேள்!” என்றார்.

மாலிகன் தொடர்ந்தான்: ”தோழா… நீ, எவ்வளவோ கலைகளை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய். ஆனாலும் ஒரு குறை…”

”குறையா… என்ன அது?”- அறியாதவர் போல் கேட்டார் அனந்தன்.

”மாதவா, எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த நீ, உனது சக்ராயுதப் பிரயோகம் குறித்து கற்றுத் தரவில்லையே!”

எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும் கண்ணன் சற்று துணுக்குற்றார். நல்லுரைகளால் மாலிகனின் மனதை மாற்ற நினைத்தார்.

”சக்ராயுதப் பிரயோகம் என்பது அபாயகரமானது எனவே, அந்த ஆசை உனக்கு வேண்டாம் மாலிகா” என்று புத்திமதி கூறினார். ஆனால், கண்ணனது இந்த நல்லுரைகளை மாலிகன் ஏற்கத் தயாராக இல்லை.

”தோழனே, அந்த வித்தையை நீ எனக்குக் கட்டாயம் கற்றுத் தர வேண்டும். எனக்கு எந்தவித ஆபத்தும் நேராது. கவலை வேண்டாம்!” என்றான். தன்னையே மறுத்துப் பேசும் அளவுக்கு மாலிகனிடம் அசுர குணம் மேலோங்கி விட்டதை உணர்ந்தான் பரந்தாமன். இனி, என்ன கூறினாலும் அதை ஏற்கும் மனோநிலையில் மாலிகன் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.

வேறு வழியின்றி சக்ராயுதப் பிரயோகப் பயிற்சிக்கு சம்மதித்தார். ஆனந்தக் கூத்தாடினான் மாலிகன். தனக்குக் கூடுதல் வல்லமை கிடைக்கும் என்ற சந்தோஷம் அவனுக்கு.

சற்று நேரத்தில் பயிற்சி ஆரம்பமானது!

”எனது சொல்லை மதியாமல், உனது ஆசையை நிறைவேற்றப் பார்க்கிறாயே! அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பாய்” என்ற கிருஷ்ண பகவான் சக்ராயுதத்தை விரலில் ஏந்தினார்.

தனது விரலால் ஒரு சுழற்று சுழற்றி, இலக்கை நோக்கி ஏவினார். சுழன்று மேலெழும்பிய அந்த வீரச் சக்கரம் காற்றில் விரைந்து பயணித்தது. மிகச் சரியாக இலக்கைத் தாக்கிய பிறகு, மறுபடியும் கிருஷ்ணரின் விரலை வந்தடைந்தது.

சக்ராயுதத்தின் வேகத்தையும், கிருஷ்ணர் அதை ஏவிய லாகவத்தையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் மாலிகன்.

அடுத்து அவன் முறை!

கிருஷ்ணர் கொடுத்த சக்ராயுதத்தை மிகக் கம்பீரமாக ஏந்தியவன், அதைப் பிரயோகிக்க முனைந்தான். ஒரு சுழற்று சுழற்றினான். விண்ணில் எழும்பியது சக்கரம். குதூகலம் அடைந்தான் மாலி கன். ‘ஆஹா… சாதித்து விட்டோம். இனி, இரண்டு கண்ணன்கள். யது குலத்தை நானும் ரட்சிப்பேன்!’ – ஆணவம் தலை தூக்க… தன்னிலை மறந்தான்.

திரும்பி வரும் சக்ராயுதத்தை ஏற்க, விரலைத் தயாராக வைத்திருக்க வேண்டியவன், நிலையிழந்து… கரத்தை தனது முகவாயில் வைத்து நின்றிருந்தான்! இதனால், மாலிகனின் கரத்தை அடைய வேண்டிய சக்ராயுதம் அவன் கழுத்தை துண்டித்தது. தலை வேறு உடல் வேறாக மண்ணில் வீழ்ந்தான் மாலிகன். அவன் உடல் அருகே மண்டியிட்டு அமர்ந்தார் கிருஷ்ணர். கண்ணில் நீர் பெருக… அவர் வாய் முணு முணுத்தது:

”மாலிகா… உன்னை அழித்தது சக்ராயுதம் அல்ல. உனது ஆசையும் ஆணவமுமே உன் உயிரைக் குடித்தன!”

- ஆர்.அலமேலு, சென்னை-85 (ஆகஸ்ட் 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை மெய்ப்பிக்கும்! வாத நோயால் அவதியுற்ற நாராயண பட்டத்ரி, தன்னிடம் நேரில் பேசிய ஸ்ரீகுருவாயூரப்பனின் அனுக்கிரகத்துடன் எழுதிய ஒப்பற்ற நூலே நாராயணீயம்! பில்வ மங்களரும் ...
மேலும் கதையை படிக்க...
ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி. கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து நின்ற ...
மேலும் கதையை படிக்க...
நான்: நான் ஒரு டாக்டரா? - இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? - இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா? - இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா? - இல்லை நான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா? – இல்லை நான் கடவுளா - இல்லை பின் ...
மேலும் கதையை படிக்க...
அது புராண காலம். உச்சி வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மரங்களில் இலைகள் அசையாதிருந்தன. அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரை மனதில் நினைத்தபடி தன் குடிலில் அரை சயன நிலையில் படுத்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென பகவான் கிருஷ்ணர் அவன் முன் காட்சியளித்தார். அர்ஜுனன் பதறி எழுந்து நின்றான். “என்ன ...
மேலும் கதையை படிக்க...
மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!
மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான். கல்வி, போர்ப் பயிற்சி உட்படப் பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்த ராஜசேகரன், நடனத்தை மட்டும் பயிலவில்லை. அதை அவசியம் என்று ...
மேலும் கதையை படிக்க...
அட்சய திருதியையும் அன்னதானமும்!
அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்! 'அட்சயம்' என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது ...
மேலும் கதையை படிக்க...
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில் அமைச்சர்கள் புடை சூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது, மன்னனின் நெருங்கிய நண்பனும், ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமண கவியான ...
மேலும் கதையை படிக்க...
சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழாததுபோல, அவர் மறுபடியும் வளையம் வந்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!
சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்... காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்குத் திருத்தேர் ஒன்றையும் செய்ய விரும்பினார் பெரியமருது. பாகனேரி எனும் ஊரைச் சார்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரை வரவழைத்து அவரிடம் தேர்ப் ...
மேலும் கதையை படிக்க...
கெளசிக கோத்திரம் வந்த கதை!
இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்' என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன். சாம்பனின் தவ வலிமையைக் கண்டு இந்திரனே அவன் முன் தோன்றி, ''நானே உனக்கு மகனாகப் பிறப்பேன்'' என்று கூறினான். அதன்படி சாம்பனின் மனைவிக்கு, ...
மேலும் கதையை படிக்க...
குருவாயூரப்பா… அருள் புரிவாயப்பா!
புன் சிரிப்பு
இறப்பு
பக்தி
மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!
அட்சய திருதியையும் அன்னதானமும்!
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
ஜானகிக்காக மாத்திரமல்ல
ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!
கெளசிக கோத்திரம் வந்த கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)