மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான். கல்வி, போர்ப் பயிற்சி உட்படப் பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்த ராஜசேகரன், நடனத்தை மட்டும் பயிலவில்லை. அதை அவசியம் என்று அப்போது அவன் கருதவில்லை.
அதேக் காலத்தில் சோழ நாட்டை கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்தான். நடனக் கலை உட்பட அறுபத்துநான்கு கலைகளிலும் தேர்ந்தவன் அவன். ஒரு முறை பாண்டிய மன்னனைச் சந்திக்க, சோழனின் அரசவைப் புலவர் ஒருவர் மதுரைக்கு வந்தார். அவரை உற்சாகத்துடன் வரவேற்றான் ராஜசேகரன். அவர்களது உரையாடலின் நடுவே நடனக் கலை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ராஜசேகரனுக்கு நடனம் தெரியாது என்பதை உண்ர்ந்த புலவர் ஆச்சரியப்பட்டார். ‘‘நடனக் கலையை ரசிப்பதற்காகவாவது ஓர் அரசன் அதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்’’ என்று கூறினார் புலவர். மட்டுமின்றி, சோழ மன்னன் நடனக் கலையில் சிறந்தவன் என்றும் எடுத்துரைத்த பின்பு அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்.
‘நடனக் கலை தெரியாததால், சோழ மன்னனை விட நீ தாழ்ந்து விட்டாய்!’ என்று தன்னை இடித்துரைக்கவே, சோழநாட்டுப் புலவர் இவ்வாறு கூறியதாகக் கருதினான் ராஜசேகரன். எனவே, உடனே நடனக்கலை வல்லுநரை வரவழைத்து பயிற்சியில் ஈடு பட்டான். விரைவிலேயே அதில் தேர்ச்சியும் பெற்றான் ராஜசேகரன். ‘நடனம் எவ்வளவு சிரமமானது!’ என்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான்.
அதன் பிறகு ஆலயத்துக்குச் சென்ற ராஜசேகரன் வழிபாட்டின்போது வெள்ளியம்பலத்தில் ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும் பரமனைக் கண்டான். ‘பரமன் நீண்ட காலமாக ஒற்றைத் திருவடியைத் தூக்கி ஆடிய நிலையில் இருக்கிறார்! அவரின் திருவடிகள் எவ்வளவு துன்பப்படும்?’ என வருந்தினான். எனவே, இறைவன் முன் பக்திப் பரவசத்துடன் நின்று, ‘‘பரமேஸ்வரா… எத்தனை காலம், தாங்கள் ஒற்றைத் திருவடியைத் தூக்கி நிற்கிறீர்கள்… திருவடி நோகாதா? ஐயனே, தூக்கிய பாதத்தை தரையில் பதித்து கால் மாற்றி ஆடி, சிரமம் நீங்கக்கூடாதா?’’ என வேண்டினான்.
உடனே, தன் கால்களை மாற்றி நின்று திரு நடனமாடி ராஜசேகரனின் மனக்குறை போக்கினார் பரமன். இதனால் மகிழ்ந்த அரசன், ‘‘இந்தத் திருக்கோலத்துடனேயே எனக்கு என்றென்றும் காட்சி தர வேண்டும்!’’ என்று வேண்டினான்.
‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று அருளினார் பரமன்.
மதுரை வெள்ளியம் பலத்திலும் அருப்புக் கோட்டை அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் வலப் பாதம் தூக்கி ஆடும் நடராஜ மூர்த்தியை தரிசிக்கலாம்.
- வி. பாலு, கும்பகோணம்-1 – ஜூலை 2006
தொடர்புடைய சிறுகதைகள்
வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர்.
பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது.
ஒரு நாள்... நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி ...
மேலும் கதையை படிக்க...
மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு.
அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு வயதுச் சிறுவன் மறு புறம். சிறுவனைக் கண்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தான்... ‘மழலை மாறா முகத்துடன் விளங்கும் இந்தச் சிறுவனா ...
மேலும் கதையை படிக்க...
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
‘‘துரோணாச்சார்யரே... எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்.
‘‘கேளுங்கள் மன்னா!’’
‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார்.
‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர்.
‘‘தாங்கள் நல்லதோர் ...
மேலும் கதையை படிக்க...
தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்? எவ்வளவு நல்லது?
ஆனால், நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்... எப்படி?
காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரால் அருளி செய்யப்பட, மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது ...
மேலும் கதையை படிக்க...
சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான்.
தொடர்ந்து நூறாண்டுகள் வரை மாபெரும் வேள்வி ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பினான் மன்னன். இதுகுறித்து சிவனாரை வேண்டி கடும் தவம் மேற்கொண்ட ...
மேலும் கதையை படிக்க...
சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்... காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில்.
இந்தக் கோயிலுக்குத் திருத்தேர் ஒன்றையும் செய்ய விரும்பினார் பெரியமருது. பாகனேரி எனும் ஊரைச் சார்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரை வரவழைத்து அவரிடம் தேர்ப் ...
மேலும் கதையை படிக்க...
இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க முடியாத பக்தி கொண் டவர். இப்படிப்பட்டவர், தானே முன்னின்று வயலூர் முருகன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஆசிரியர் குறிப்பு: ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. அழகிய ஈழமணித் திருநாட்டின் மத்திய பாகத்திலிருந்து ஆறுகள் நானாபக்கமும் பாய்கின்றன. இந்த ஆறுகளிற் பெரியதும் பெருமை மிக்கதும் மகாவலி நதிதான்.
மாவலி என்றதும் கிழக்கு மாகாணமும்- குறிப்பாக அந்நதி ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில், தேவர்கள் அசுரர்களை வெற்றி பெற்ற சமயம். அசுரர்களை ஓட ஓட விரட்டி அடித்த சமயம் .
அப்போது, தேவர்களுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது . நம்மை போல் யாரும் இல்லை, நம்மை தோற்கடிக்க இந்த உலகத்தில் எவரும் எல்லை ...
மேலும் கதையை படிக்க...
தியானம் - 5
வேத வியாசரின் மனைவி ஒரு தெய்வீக குழந்தையை கருவுற்றாள். சுகதேவ் பிறந்தான். பிறந்தது முதல், தன் தந்தை வேத வியாசரை அரித்தான் குழந்தை சுகதேவ். “பிரம்ம ஞானத்தை எனக்கு இப்போதே உபதேசி !”
வேத வியாசரும், சுக தேவரை ( ...
மேலும் கதையை படிக்க...
யானைக்கும் தேவை நல்லொழுக்கம்!
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!
ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!
பசியால் வாடிய அருணகிரிநாதர்!
காவியம் கண்ட மாவிலித் தேவி
தியானம் செய்ய வாருங்கள் !