பைபிள் ஒரு பணப்பயிர்

 

வீட்டு சேவல் கூவியது. விடிவெள்ளி மறைந்தது. அடிவானம் சிவந்தது. ஆதவன் உதித்தது. இருள் அகன்றது. இடியாப்பசத்தம் கேட்டது.

அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு வழக்கம் போல் வீடு சந்திக்கப் புறப்பட்டார் சபை போதகர் பொவனெர்கேஸ் கோபால்.

வாசல் பெருக்கி, முற்றம் தெளித்து,வரவேற்ற வீடு ஒன்றைக் கண்டு, காலிங் பெல் போட்டார் போதகர். ஓடி வந்து, கதவைத் திறந்து கனம் பண்ண முந்திக் கொண்டாள் வாலிபப்பெண் ஜமீல்ராணி. அண்ணன் ஆகாய் லவ்சன் இஞ்சினியரிங் கடைசி செமஸ்டர் தேர்வுக்காய் படித்துக் கொண்டிருந்தான்.

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்வது போல், நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே(ளே)” (3 யோவான் 2) என்று வாழ்த்தி ஜெபித்து ஆசீர்வாதங் கூறி விட்டு, வாலிபப் பிள்ளை களைப்பார்த்து, “படிப்புதான் சொத்து, நன்றாகப் படித்து முதல் வகுப்பில் பாஸ்பண்ணுங்கள்” என்று அறிவுரை கூறினார் போதகர்.

உடனே, வாலிபன் லவ்சன் குறுக்கிட்டு; ஐயா, இந்தக் காலத்தில் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் சம்பளம் கிடைப்பதில்லை. “விண்ணெட்டும் விலை வாசியில், ஏழாயிரம் ரூபாய் எந்த மூலைக்கு” என்று சோர்வுடன் சொன்னான் லவ்சன்.

போதகர் லவ்சனைப் பார்த்து, “கேளுங்கள், கொடுக்கப்படும்” (மத் 7:7) என்ற நற்செய்தி சொன்ன நாயகன் இயேசுவைஞாபகமூட்டினார்.

உடனே லவ்சன், நான் எவ்வளவு கேட்டாலும் இயேசு தருவாரா? என்று கேட்டான்.

அதற்குப் போதகர், ஆம்! தருவார். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? சொல் என்றார் போதகர்.

உடனே லவ்சன், எனக்கு மாதச் சம்பளம் ரூ. 30,000/- சம்பளப்படி ரூ. 7,000/- ஸ்கூட்டர் பெட்ரோல் செலவுக்கு ரூ. 800/- வேண்டும் என்று தன் கால்குலேட்டரில் போட்டுக்காட்டினான் லவ்சன்.

மாதச்சம்பளம் = ரூ. 30,000.00
சம்பளப்படி = ரூ. 7,000.00
ஸ்கூட்டர் படி = ரூ. 800.00
பாட்டிக்கு டானிக்பாட்டல் = ரூ. 18.00
ஆக மொத்தம் = ரூ. 37,818.00

போதகர் அந்தக் கால்குலேட்டரை வாங்கி, அதைத் தலைகீழாகக் காட்டி, லவ்சன் இதை வாசி. முதலாவது இதைப் படித்துவிட்டுப் பின்பு உன் பாடங்களைப்படி. நீ கேட்ட சம்பளம் உனக்கு கிடைக்கும். கர்த்தர் உன் குடும்பத்தை ஆசீர்வதிப்பார். குடும்பத்துக்கு பணப்பயிர் இந்தப் பரிசுத்த பைபிள்தான் என்று வாலிபனை சிந்திக்க வைத்தார் போதகர்.

“வெள்ளியும் என்னுடையது. பொன்னும் என்னுடையது” (ஆகாய் 2 : 8) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

லவ்சன் கால்குலேட்டரை வாங்கி வாசிக்கவும்,
37818
BIBLE

இப்போது BIBLE என்று மாறியிருப்பது கண்டு அசந்து, ஆச்சரியப்படவும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக்கடிகாரம் காலை 7 மணி அடித்து, பைபிள் மத்தேயு நற்செய்தி நூல் 6ம் அதிகாரம் 33ம் வசனம் சொல்லிற்று.

“முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு6:33)

உடனே லவ்சன் தன் நண்பனுக்கு போன் போட்டான். நண்பன் மொபைல்போன் ஓர் அழகான பாடல் பாடிற்று.

“இன்பம் சுரந்திடும் திருமொழிக்கேட்டு என்
இன்னல்கள் மறந்திடுவேன் ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தரும் எனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் ஆ! ஆ!”
- சிலுவை நிழலில்

(பெயர்கள் யாவும் கற்பனையே)

- சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன் ...
மேலும் கதையை படிக்க...
"என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன் நவீன். "சே! சே! இது எங்க அண்ண ன் கலியாணக் கார்டுடா. என் கலியாணக் கார்டு இப்படியாடா இருக்கும். என் கலியாணக் ...
மேலும் கதையை படிக்க...
"ஏங்க, நாம் பார்த்த மாப்பிள்ளைகளிலேயே, இதுதான் வாட்ட சாட்டமாகவும், முகம் லட்சணமாகவும், நடையும் உடையும் பார்த்தால், நம் சொந்தக்காரர்களே கண் போட்டுவிடும் அளவுக்கு சூப்பர் மாப்பிள்ளை ." "தொழில் அதிபர் என்ற உங்கள் அந்தஸ்துக்கும், ஆஸ்திக்கும் குடும்ப கௌரவத்துக்கும் ஏற்ற மாப்பிள்ளை ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. பனங்காட்டுப்புரம் என்கிற ஒரு குக்கிராமம். மதிய ஆராதனைக்கு 12 மணி க் கு , முதல் மணி அடித்தது. தெருத்திண்ணையிலிருந்த ஒரு பாட்டி, "அன்னா, கோயிலுக்கு மணி அடிச்சிட்டாகளே, சீக்கிரம் குளிச்சிச் சாப்பிட்டுப் புறப்படுங்க" என்று விரட்டும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஒரு புதுப்படம் ரிலீசானது. ஆட்டு மந்தை போல் ஆண்கள் கூட்டம் அலைமோதியது. அமைதிச்சீட்டு விலை ஆறு மடங்கு அதிகமாய் விற்றது. அப்படியிருந்தும் மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிறைந்து வழிந்தது. ஆர்வத்தோடு ஓடிவந்த வாலிபன் காட்சன், அரங்கத்தின் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் "ஹஷஸ்புள்" ...
மேலும் கதையை படிக்க...
முறை மாப்பிள்ளை
திடீர் கல்யாணம்
திடீர் மாப்பிள்ளை
மாப்பிள்ளை பெஞ்ச்
வாலிபர்கள் ஜாக்கிரதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)