பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

 

பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில் சிதிலம் அடைந்திருந்தது கண்டு கோபண்ணா மனம் வருந்தினார். ஆகவே, மக்களிடமிருந்து வசூலித்த வரிப் பணம் ஆறு லட்சம் வராகன்களைக் கொண்டு, ராமர் கோயிலுக்கு மராமத்துப் பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார்.

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்வரிப் பணத்தில் கோயில் பணிகள் செய்ததைக் கேள்விப்பட்ட மன்னன் தானீஷா, கோபண்ணாவைக் கைது செய்ய உத்தரவிட்டான். வீரர்களும் கைது செய்து அவைக்குக் கொண்டு வந்தனர். கோயிலுக்குச் செலவு செய்த வரிப் பணத்தைத் திரும்பத் தரும் வரை கோபண்ணா சிறையில் இருக்க வேண்டும் என்று மன்னன் தானீஷா கட்டளையிட்டான்.

சிறையில் கோபண்ணா மிகவும் துன்பப்பட்டார். அவருக்கு உப்பும் அரிசியுமே உணவாகக் கொடுக்கப் பட்டன. கசையடி தண்டனையும் வழங்கப்பட்டது. கோபண்ணா படும் துயரம் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர். ஆண்டுகள் பல உருண்டோடின. துன்பத்தைத் தொடர்ந்து தாங்க முடியாமல், ஒரு நாள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார் கோபண்ணா. அதற்கு முன், ராமரை தியானம் செய்தார்.

கோபண்ணாவின் நிலை கண்டு சீதா பிராட்டியின் மனம் நெகிழ்ந்தது. எனவே ராமபிரானிடம், ‘‘கோபண்ணா தங்களைப் போற்றும் சிறந்த பக்தன். அவனைத் தாங்கள் கஷ்டப்படுத்தலாமா?’’ என்று கேட்டாள். அதற்கு ராமர், ‘‘கோபண்ணா தனது சிறு வயதில் ஒரு கிளியைப் பிடித்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தான். அதற்குரிய தண்டனைதான் இது. அவன், தனது பாவத்துக்கான பிராயச்சித்தம் செய்து விட்டான். எனவே, மன்னன் தானீஷாவைச் சந்தித்து, கோபண்ணா தர வேண்டிய ஆறு லட்சம் வராகன்களை இன்று தந்து விடுவேன். அவன் விடுதலை பெறுவான்!’’ என்றார்.

உடனே சீதாதேவி, ‘‘கோபண்ணா நம் பக்தன். முதலில் அவனைப் பார்க்காமல் மன்னனைப் பார்க்கிறீர்களே… இதென்ன நியாயம்?’’ என்றாள்.

அதற்கு ராமர், ‘‘தானீஷாவும் முற்பிறவியில் சிறந்த பக்தனாக விளங்கியவன். அவன் ஆயிரம் குடங்களின் நீரை எனக்கு அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டான். 999 குடங்கள் வரை அபிஷேகம் செய்தவன், அதன்பின் பொறுமையிழந்து கடைசிக் குடத்தை அந்த விக்கிரகத்தில் போட்டு உடைத்தான். அதனால் போன பிறவியில் என் அருள் கிடைக்காத அவனுக்கு, இப்போது காட்சி அளிக்கப் போகிறேன்!’’ என்றார்.

அதன்பின் ராமரும் லட்சுமணனும், மாறுவேடத்தில் சென்று மன்னன் தானீஷாவைச் சந்தித்தனர். அவர்களிடம் மன்னன், ‘‘நீங்கள் யார்?’’ என்று விசாரித்தான். ‘‘என் பெயர் ராம்ஜி. இவர் லட்சுமண்ஜி. கோபண்ணா தர வேண்டிய பணத்தைச் செலுத்த வந்திருக்கிறோம்!’’ என்றனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட மன்னன், ஒப்புகைக் கடிதம் ஒன்றை எழுதி அவர்களிடம் கொடுத்தான். ராமரும் லட்சுமணனும் அந்தக் கடிதத்தைக் கோபண்ணாவின் பக்கத்தில் வைத்து, மறைந்து விட்டனர்.

அதன் பின்னரே பக்தன் கோபண்ணாவுக்காக கடவுளே மாறுவேடத்தில் வந்ததை மன்னன் உணர்ந்தான். அவரது பக்தியை வியந்து நடந்தவற்றுக்காகப் பெரிதும் வருந்தி, உடனேயே கோபண்ணாவை விடுதலை செய்தான்.

கோபண்ணா இறைவனின் கருணையை நினைந்து மெய்சிலிர்த்தார். அதுமுதல் தன் பெயரை ராமதாசர் என்று மாற்றிக் கொண்டு கடைசிக் காலம் வரை ராம பக்தியில் சிறந்து விளங்கினார்!

- என். மணிமேகலை நெடுஞ்செழியன் சிதம்பரம்-1 

தொடர்புடைய சிறுகதைகள்
சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!
புலத்தியனின் பேரனும் விஸ்ரவசுவின் மகனுமான ராவணன், சிவ பக்தியில் உயர்ந்தவனாகப் போற்றப்படுபவன். பிரம்மனின் வழிவந்த வேதநெறியாளனான ராவணன், தனது சீரிய தவத்தால் பரமேஸ்வரனை மகிழ்வித்து ஏராளமான வரங்களைப் பெற்றவன். இவனது வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சி, கயிலை மலையைப் பெயர்த்தெடுத்ததுதான். சிவனுடைய திருவருள் பெற்று ...
மேலும் கதையை படிக்க...
சீதையாக வந்த பார்வதிதேவி!
பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ''ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் புறப்படலாமே?!'' என்றாள் தேவி. இதைக் கேட்டதும், ''தேவி... நம்மைத் துதிக்கும் அடியவர்களுக்கு அருள்வதில் தாமதம் கூடாது. ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, ...
மேலும் கதையை படிக்க...
அடியார்க்கு அடியார்!
கலிக்காம நாயனார் திருநட்சத்திரம் : ஜூலை 14 அந்த சேதியைக் கேட்டதும்... அரளி தோய்த்த குறுவாளை நெஞ்சில் பாய்ச்சியதுபோல் துடித்தார் கலிக்காமர்! யாரோ பரவை நாச்சியாராம்! சுந்தரருக்காக, இவளிடம் தூது சென்றாராம் திருவாரூர் தியாகேசர்! 'அடியவருக்காக ஆண்டவன் தூது செல்வதா?' கோபக் கனலால் பற்றியெரிந்தது ...
மேலும் கதையை படிக்க...
பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே உரித்தான ஒன்று. பெண்ணின் ஒளிவீசும் கண்களை எந்த ஆடவனாலும் எதிர்நோக்க முடியாது. பெண் அதீத கனவுகளுடன் தான் வளர்த்தெடுக்கப்படுகிறாள். தான் ...
மேலும் கதையை படிக்க...
இந்த சிறுவனா குற்றவாளி?
மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு. அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு வயதுச் சிறுவன் மறு புறம். சிறுவனைக் கண்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தான்... ‘மழலை மாறா முகத்துடன் விளங்கும் இந்தச் சிறுவனா ...
மேலும் கதையை படிக்க...
சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை. அவர் அடிக்கடி நினைவு இழந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள் . காலன் அவரை நெருங்கிக் கொண்டிருந்தான் ...
மேலும் கதையை படிக்க...
தெய்வ வழிபாடு செய்கிறோம்.விரதங்களை மேற்கொள்கிறோம். தீர்த்த யாத்திரைகள் செல்கிறோம். நல்லதுதான். செய்ய வேண்டிய கடமையே. தெய்வம் இருப்பதை எந்நேரமும் நம் நினைவில் வைத்திருக்க உதவும் சாதனைகளே இவை. ஆனால் தெய்வத்திற்குப் பிடித்தமான செயலை நாம் மறந்து விடக் கூடாது. அதுவே தர்மத்தை கடைப்பிடிப்பது. ...
மேலும் கதையை படிக்க...
அது 1960 ம் வருடம் என்று நினைவு... கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார். அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய ...
மேலும் கதையை படிக்க...
குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க முற்பட்டான்.உரிய வயதில் உன் புதல்வன் உன்னிடம் ...
மேலும் கதையை படிக்க...
சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!
சீதையாக வந்த பார்வதிதேவி!
தாரை
அடியார்க்கு அடியார்!
மோகத்தீ
இந்த சிறுவனா குற்றவாளி?
ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!
நந்திக்குப் பின் சிவன்
பிரமிப்புகள்
சரதல்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)