பாண்டுரங்கனின் திருவிளையாடல்!

 

விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார் ராம் ராயர்.

அங்கு, அழகே உருவான ஸ்ரீபாண்டுரங்கனைக் கண்ட மன்னர் பேரானந்தம் அடைந்தார். ‘இவ்வளவு அழகு பொருந்திய விக்கிரகம் தலைநகரில் இருப்பதே சிறப்பு!’ என்று எண்ணியவர், ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகத்தை தலைநகர் ‘ஹம்பி’க்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். பண்டரிபுரம் மக்கள் செய்வதறி யாது பரிதவித்தனர்.

பாண்டுரங்கனின் திருவிளையாடல்விரைவில், ஹம்பியில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இந்த நிலையில் ஒரு நாள் இரவு, மன்னரின் கனவில் பாண்டுரங்கன் தோன்றினார்.

”ராம் ராயா… உனது அதீத பக்தி என்னை மகிழ்விக்கிறது. அதே நேரம்… அனுதினமும் என்னை ஆராதிக்கும் பண்டரிபுரம் மக்களின் வழிபாடுகள் பாதிக்கப்படும் என்பதை நீ மறந்து விட்டாய்! போகட்டும்… உனக்கு ஒரு நிபந்தனை. எனக்கோ, என் அடியவர்களுக்கோ நீ தீங்கிழைக்க நேர்ந்தால், அந்தக் கணமே நான் இங்கிருந்து சென்று விடுவேன்!” என்று கூறி மறைந்தார்.

ராம் ராயரின் காலத்தில் பண்டரிபுரத்தில் வாழ்ந்த மகான் பானுதாசர். ஸ்ரீபாண்டுரங்கன் விக்கிரகம் ஹம்பிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விஷயத்தை இவரிடம் கூறி வருந்தினர் பண்டரிபுர மக்கள்.

அவர்களை ஆறுதல்படுத்திய பானுதாசர், சற்று நேரம் கண்மூடி தியானித்தார். பிறகு கண் விழித்தவர், ”வெகு விரைவில், நல்ல தீர்வு கிடைக்கும். பாண்டு ரங்கன் அருள்புரிவான்!” என்று கூறி அனுப்பினார்.

உடனடியாக பண்டரிபுரத்தில் இருந்து கிளம்பிய பானுதாசர், ஹம்பியை அடைந்தார். அங்கிருந்த இறை வனைத் தரிசித்தவர், ”விட்டலா… பண்டரிபுரத்தை விட்டு வந்து விட்டாயே! அங்குள்ள மக்கள் மனம் வெம்பிக் கதறுகிறார்களே… அவர்களின் கண்ணீரைத் துடைக்க மாட்டாயா?!” என்று உள்ளம் உருகப் பிரார்த் தித்தார். அவர் முன் தோன்றிய பாண்டுரங்கன், ”வருந்தாதே பானுதாசா! இந்த ரத்தின மாலையை அணிந்து கொண்டு இங்கேயே இரு. வழி தானாகப் பிறக்கும்!” என்று ஒரு ரத்தின மாலையைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

மறு நாள், துங்கபத்திரா நதிக்குச் சென்று நீராடிக் கொண்டிருந்தார் பானுதாசர். அப்போது அங்கு வந்த காவலர்கள், அவரைக் கைது செய்தனர்!

”என்ன விஷயம்? ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்?” எனக் கேட்டார் பானுதாசர்.

”அதிகம் பேசாதே! திருட்டுக் குற்றத்துக்காக உன்னைக் கைது செய்கிறோம்!” என்றனர் காவலர்கள்.

”என்ன… நான் திருடினேனா?” _ பதைபதைத்தார் பானுதாசர்.

”நடிக்காதே! பாண்டுரங்கனின் ரத்தின மாலையைத் திருடியதுடன், அதை உன் கழுத்தில் வேறு அணிந்திருக் கிறாயே… என்ன தைரியம்?!” என்றவர்கள், பானுதாசரை இழுத்துச் சென்று மன்னரின் முன் நிறுத்தினர்.

”அடேய், திருடா! நீ பகவானை சேவிக்க வந்தாயா? இல்லை களவாட வந்தாயா?”- கோபம் பொங்கக் கேட்டார் மன்னர்.

”மன்னா… என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக் கிறீர்கள். நான் பகவான் பாண்டுரங்கனை பண்டரி புரம் அழைத்துச் செல்லவே வந்தேன்!” என்றார் பானுதாசர்.

இதை, மன்னர் ராம் ராயர் நம்பவில்லை!

”திருடனே… உனது பித்தலாட்டம் இனியும் செல்லுபடி ஆகாது!” என்றவர், காவலர்களை அழைத்து பானுதாசரை கழுவில் ஏற்றுமாறு உத்தரவிட்டார்.

அப்போது மந்திரி ஒருவர் குறுக்கிட்டு, ”அரசே! கண்ணால் காண்பதெல்லாம் உண்மையாகி விடாது. இவரைப் பார்த்தால் கள்வராகப் படவில்லை. எதையும் தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும்!” என்றார்.

மந்திரியின் கூற்றை மன்னர் ஏற்கவில்லை. ”இவனைப் போன்றவ னுக்கு நீதி விசாரணை தேவையில்லை. இவன் குற்றவாளி என்பதற்கு, கழுத்தில் கிடக்கும் ரத்தின மாலையே ஆதாரம். அதைப் பறிமுதல் செய்து விட்டு, தண்டனையை நிறைவேற்றுங் கள்!” என்றார் கடுமையாக.

பகவான் தம்முடன் வருவதற்கான வேளை வந்து விட்டது என்பதை உணர்ந்த பானுதாசர் புன்னகைத்தபடி, காவலர் களுடன் கிளம்பினார். கொலை களத்தை நெருங்கியதும் கழுமரத்தை உற்று நோக்கினார் பானுதாசர். மறு கணம், அந்த அதிசயம் நிகழ்ந்தது. கழுமரத்தில் பாதிப் பகுதி… இலை- கிளை பரப்பி, பூத்துக் குலுங்கியது! காவலர்கள் ஓடோடிச் சென்று மன்னரிடம் விஷயத்தைக் கூறினர். மன்னர் அதிர்ந்தார். கொலை களத்துக்கு விரைந்தார். அங்கு, பூத்துக் குலுங்கும் கழுமரத்தைக் கண்டவருக்கு தனது தவறு புரிந்தது. பானுதாசரின் கால்களில் வேரற்ற மரம் போல் வீழ்ந்தார். ”மன்னியுங்கள்” என்று கதறினார்!

அவரை ஆதரவாகத் தூக்கி நிறுத்திய பானுதாசர், ”நம் எல்லோ ரையும் மன்னிக்க வல்லவர் பகவான் பாண்டுரங்கனே!” என்றபடி மன்னரை அழைத்துக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பினார்.

அனைவரும் ஆலயத்தை அடைந்தனர். அப்போது ஓர் அசரீரி: ”மன்னா… பரம பக்தனான பானுதாசனை, கள்வன் என்று குற்றம் சாட்டியதால் நீ தவறிழைத்து விட்டாய்; எனது நிபந்தனையை மீறி விட்டாய். எனவே, இனி நான் இங்கிருக்கப் போவதில்லை. எப்போதெல்லாம் என்னைத் தரிசிக்க விரும்புகிறாயோ அப்போது பண்டரிபுரம் வந்து என்னை வழிபடு!” என்றது. அதன்படியே ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகத்தை பானுதாசரிடம் ஒப்படைத்தான் மன்னன். பரம பக்தர் பானுதாசரின் முயற்சியால் மீண்டும் பண்டரி புரத்தில் எழுந்தருளினார் பாண்டுரங்கன்.

- ராணிமணாளன், கிருஷ்ணகிரி-1 (அக்டோபர் 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
நட்பு பெரிதா? நாடு பெரிதா?
துரோணரும் துருபதனும்... துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப் புகழ் பெறக் காரணமானவர். இவரின் குருகுலத் தோழன் இளவரசன் துருபதன். குருகுலத்தில் துரோணரும் துருபதனும் நண்பர்கள். ஒரு நாள் துருபதன், ‘‘துரோணா, நான் ...
மேலும் கதையை படிக்க...
பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத் தன் தலை வனாக ஏற்ற கர்ணன், அவனாலேயே அங்க தேசத் துக்கு மன்னனாக முடி சூட்டப்பட்டான். அதே வேளையில், கர்ணன் மீது ...
மேலும் கதையை படிக்க...
தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட நேரமாகியும் காணாததால் தவித்தார் தருமன். துரியோதனன் வேண்டிக் கொண்டதன் பேரில் பாண்டவர்களைக் கொல்வதற்காக யாகம் நடத்தி அதன் மூலம் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
நாரதர் நடத்திய திருமணம்
மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம் கரங்களையும் அரிய வரங்கள் பலவற்றையும் பெற்றவன். ஆனால்... காலப்போக்கில் அவனிடம், 'தம்மை எதிர்க்க எவரும் இல்லை!' என்ற அகந்தையும் அதிகார மமதையும் ...
மேலும் கதையை படிக்க...
சீடராகச் சேர்ந்த வீர சிவாஜி!
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாசர். ராம தாசரின் இயற்பெயர் நாராயணன். சூர்யாஜிபந்த்& ரேணுபாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக கி.பி.1608&ஆம் ஆண்டு ஸ்ரீராம நவமியன்று இவர் பிறந் தார். இவருக்கு ஆறு வயதிலேயே ஆஞ்ச நேயர் அருளால் ஸ்ரீராமபிரானின் தரிசனம் ...
மேலும் கதையை படிக்க...
சூதாடிக்காக வாதாடிய எமன்!
சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு, விலைமாது ஒருத்தியின் வீட்டுக்குப் போனான். அதிகமான போதையால் பாதி வழியிலேயே தள்ளாடி விழுந்தான். நினைவு திரும்பியதும், ‘தான் செய்தது... செய்ய ...
மேலும் கதையை படிக்க...
பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?
குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் அருளியது பகவத் கீதை. தேரோட்டியான உத்தவனின் கேள்விகளுக்கு கண்ணன் கூறிய பதில்தான் ‘உத்தவ கீதை’! குரு«க்ஷத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பினான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவனை அழைத்து, ‘‘உத்தவா! உனக்கு ...
மேலும் கதையை படிக்க...
பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும். ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ''எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், ...
மேலும் கதையை படிக்க...
பலராமருக்கு பணிந்த துரியோதனன்!
அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள பல தேசங்களை சார்ந்த ராஜ குமாரர்களும் வந்திருந்தனர். அவர்களில், கிருஷ்ணனின் புதல்வனான சாம்பனும் ஒருவன். அவன், எவரும் எதிர்பாராவிதம் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை இயற்றி, பல நாடுகளில் பயணித்து, அறிஞர்கள் பலருடன் வாதிட்டு, வெற்றி பெற்றவர் அவர். அவரை வரவேற்று உபசரித்தார் கிருஷ்ணதேவ ராயர். மன்னருக்கு ...
மேலும் கதையை படிக்க...
நட்பு பெரிதா? நாடு பெரிதா?
இந்திரன் வியந்த கர்ணன்!
தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!
நாரதர் நடத்திய திருமணம்
சீடராகச் சேர்ந்த வீர சிவாஜி!
சூதாடிக்காக வாதாடிய எமன்!
பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?
ஏன் நிறைய கடவுள்கள்?
பலராமருக்கு பணிந்த துரியோதனன்!
பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)