பரம்பரையின் மகத்துவம்

 

கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்
​ …​
இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும் வம்சாவளிக்கு அதிக பலத்துடன் கூடியதாகிறது. எனவே தான் ஒவ்வொரு பரம்பரையினரும் தம் பின் வரும் பரம்பரைகளுக்காகத் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு வயதானவர் ஒரு மாஞ்செடியை நடுகையில் வழிப்போக்கர் ஒருவர் பார்த்து சிரித்து, “தாத்தா! இந்தச் செடி வளர்ந்து மரமாகும் வரை நீ உயிருடன் இருப்பாயா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பெரியவர், “மகனே! எனக்குப் பிறகு உள்ளவர்கள் வளரும் போது இந்தச் செடியும் வளர்ந்து மரமாகி, நிழலையும் பழங்களையும் அளிக்கும் என்றே இதனை நடுகிறேன் ” என்று பதிலளித்தார்.

பெரியவர்கள் நமக்களிக்கும் செல்வங்களையே வாரிசுகளாக நாம் அடைகிறோம். வெறும் ஆஸ்தி அந்தஸ்து மட்டுமேயல்லாமல் தம் வரை வந்த பூர்வ ஆசாரங்கள், பழக்க வழக்கங்கள், கல்வியறிவு, தர்மங்கள், விஞ்ஞானங்கள் இவற்றைக் கூட நம் பின் வரும் வாரிசுகளுக்காக மீதம் வைக்க வேண்டும்.

இந்த பூமி மேல் வாழும் நாம் தாற்காலிக பயன்களுக்காக எல்லைக்குட்பட்ட பார்வையால், நிலைத்த நன்மைகளை கோட்டை விட்டு விடுகிறோம். சுற்றுச் சூழல் விஷயத்தில்- இப்போதைய நம் சௌகர்யங்களுக்காக மரங்களை வெட்டுவது, நீர்நிலைகளை அசுத்தமாக்குவாது, விஷ வாயுக்களால் வாயு மண்டலத்தை அசுத்தப்படுத்துவது
​ ​
இவ்விதம் எதிகால கண்ணோட்டம் இல்லாத சுயநலமான ஓட்டங்களில் ஈடுபடுகிறோம். பின், எதிர்கால சந்ததிகளின் நிலை என்ன? அவர்களுக்கு ஆரோக்யமான சூழலை மீத்து வைக்கப் போகிறோமா?

அதே போல், நம் மூதாதையர் நம் வரை எடுத்து வந்த கலாசாரத்தை காப்பாற்ற இயலாதிருக்கிறோம்.

சோம்பல், அலட்சியப் போக்கு, சுகவாழ்க்கை, அர்த்தமற்ற பிடிவாதங்களால் எத்தனையோ நல்ல சம்பிரதாயங்களை நாசம் செய்து விட்டோம்.

கடந்த சில பத்தாண்டுகளாக புதிய நாகரீக மோகத்தால் நம்முடையதான சில பூர்வ சம்பிரதாயங்களை ஏளனம் செய்வது ஒரு பேஷனாக மாறியுள்ளது. அப்போது நாம் மறுத்த பழக்க வழக்கங்களில் விஞ்ஞான அம்சங்கள் உள்ளனவென்று தற்போது நிரூபணமாகியுள்ளது. மீண்டும் அவற்றை மேல்நாட்டவர் முதற்கொண்டு அனவைரும் பின் பற்றுகிறார்கள். உதாரணத்திற்கு யோகம், ஆயுர்வேதம், தியானம்… போன்ற பழங்கால வழிமுறைகள்.

எனவேதான் தற்போது நமக்குப் புரியவில்லை என்பதால் எந்த கல்வியறிவையும் விட்டொழிப்பதும், காப்பாற்றாமல் விடுவதும் தகாது. நம்மை விட அறிவு மிகுந்த பிற்கால சந்ததியினர் அவற்றிலுள்ள மதிப்புகளை அறியக் கூடும்.

வித்யை, தர்மம், விஞ்ஞானம்…இவை வெறும் புத்தகங்கள் மூலமாக அன்றி, நடைமுறையில் கடைபிடிப்பதால் மட்டுமே பிற்கால சந்ததியினருக்குக் கிடைக்கும்.

‘எங்கள் தாய் இவ்விதம் செய்தாள் … என் தந்தை இவ்வாறு நடந்து கொண்டார்…’ என்ற அன்புடன் கூடிய அனுபந்தத்தோடு வரும் சம்பிரதாயத்தால் தான் அனேக ஆசார பழக்கங்கள் இன்றும் வாழ்கின்றன.

கங்கையை பூமிக்கு அளித்த பகீரதனின் கதையை ராமாயணத்தில் கூட விவரித்துள்ளர்கள். சகரர்களை உய்விப்பதற்காக கங்கையை பூமிக்கு எடுத்து வர வேண்டுமென்று அவருடைய புதல்வன் அம்சுமந்தன் தவம் செய்தான். ஆனால் தன வாழ்நாளில் அதை சாதிக்க முடியவில்லை.

அவனுக்குப் பின் அவன் குமாரன் திலீபன் தவம் மேற்கொண்டான். அவனாலும் கூட சாத்தியப்படவில்லை. அதற்குப்பின் திலீபனின் தனயன் பகீரதன் தவம் செய்து கங்கையை அழைத்து வந்தான்.

கங்கையை சாதித்த பகீரதனிடம் வந்த பிரம்மா, “மகனே! உன் மூதாதையர் சாதிக்க இயலாததை நீ சாதித்து விட்டாய்” என்று புகழ்ந்தார். உடனே பகீரதன், “ஸ்வாமி! அது உண்மையல்ல. அவர்கள் செய்த தவம் என் வரை தொடர்ந்து வந்து என்னிடம் பலன் பெற்றது. அவ்வளவே. என் மூதாதையர் தவம் மேற்கொள்ளவில்லை என்றால், என்னால் மட்டுமே தவம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அது பலனளிப்பதற்கு மேலும் இரண்டு வம்சங்கள் பிடித்திருக்கும்.
​ ​
என் பூர்வீகர்கள் என் வரை எடுத்து வந்த தவ ரூபமான சூத்திரத்தை (நூலை) நான் பிடித்துக் கொண்டு சாதிக்க முடிந்தது” என்று பதிலளித்தான்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த பிரம்மா, “அற்புதமாகக் கூறினாய். உன் வினயமும் விவேகமும் உயர்ந்தவை. நீ கங்கையை க் கொண்டு வந்தது ஒரு சிறப்பு என்றால் உன் பதில் மற்றுமொரு சிறப்பு” என்று புகழ்ந்தார்.

தற்போது பலனற்றதாக, காரணமற்றதாகத் தோன்றுவது, காலக் கிராமத்தில் பலனளித்து, காரணத்தோடு கூடியதாகத் தோற்றமளிக்கும் என்பது நிச்சயம். எனவே தான் எந்த ஒரு சாதனையையும் விட்டு விடக் கூடாது. தொடர்ந்து செய்து வர வேண்டும். நடைமுறையில் அனுசரித்து வருவதன் மூலம் அதனைக் காத்து வர வேண்டும்.

“தவம்” என்னும் தர்மத்தை அம்சுமந்தன் மேற்கொண்டான். “தந்தை செய்தாரல்லவா!” என்று விசுவாசத்தோடு திலீபனும், அதன் பின் பகீரதனும் அனுசரித்தனர். பிரபஞ்சத்திற்கு கங்கையை அனுகிரகித்தனர்.

ஒரு சந்ததியிடமிருந்து அடுத்த சந்ததிக்கு “சமயக்ப்ரதானம்” – அதாவது ‘அழகாக, சிறப்பாக அளிப்பதே’ சம்பிரதாயம்.

- ​தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 

தொடர்புடைய சிறுகதைகள்
பிராணிகளின் பராமரிப்பு பற்றியும் அவற்றின் உரிமைகள் பற்றியும் இன்றைய தினம் நிறையவே பேசப்படுகிறது. ஆனால் உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் நாய்களைப் பற்றிய உயர்வான குறிப்புகள் காணப்படுகின்றன. தெய்வீகப் பசுக்களை போலவே தெய்வீக நாய்களும் தேவதைகளுக்கு சேவை செய்த்துள்ளன. ...
மேலும் கதையை படிக்க...
மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு ஆரம்பமாகிறது. மகாபாரதக் கதை முழுவதும் வியாச பகவானிடம் கேட்டறிந்த ஜைமினி முனிவருக்கு சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு முறை ...
மேலும் கதையை படிக்க...
தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான்... கொல்லையின் மத்தியில் இருந்த மாமரத்தில் நிறைய பிஞ்சுகள், கொத்துக் கொத்தாய். இந்த ஆண்டு மாம்பழமே வாங்க வேண்டாம் போலிருக்கிறதே! என் மகிழ்ச்சியைப் ...
மேலும் கதையை படிக்க...
நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும், கதைகளோடும் உப கதைகளோடும், உபதேசங்களோடும் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் சதுர்வித புருஷார்த்த சாதனமாக அளித்துள்ளார் வேத வியாச மகரிஷி. பிரஸ்தான த்ரயத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி ததும்பப் பாடுவான் என்பது திண்ணம்" என்று தீர்க்க தரிசனத்தோடு உரைத்தார் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அவர் வாக்கு பலித்தது. எண்ணற்ற இந்தியர்களின் ...
மேலும் கதையை படிக்க...
காரணமின்றி துன்புறுத்தினால் காரணமின்றியே அழிவு வரும்
ஞானப் பறவைகளின் கதை
விடுதலை… விடுதலை …
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்
கணவனைத் தேடிய கல்யாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)