பரமனை சோதித்த பார்வதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 48,184 
 

கைலாயத்தில் சந்தோஷமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும் பரமசிவத்தின் வாயில் ஒரு புன்முறுவல் தெரிந்ததைப் பார்த்தாள் பார்வதி. ’என்னிடத்தில் சொல்லாமல் என்ன காரணத்திற்க்காக இவர் புன்முறுவல் செய்கிறார்.என்னிடமும் சொல்லக்கூடாதா. என்னிடம் சொன்னால் நானும் சந்தோஷப் படுவேனே’ என்று நினைத்து தன் முகத்தை கொஞ்சம் கோவமாக வைத்துக் கொண்டு,பார்வதி பரமனைப் பார்த்து “என்ன காரணத்துக்காக நீங்கள் புன்முறு வல் செய்கிறீர்கள்.என்னிடம் சொல்லக் கூடாதா.நான் யாரோவா.உங்களில் நான் சரி பாதி இல்லையா” என்று கேட்டாள்.

உடனே பரமன் “அது ஒன்னும் இல்லை பார்வதி.ஒரு பரம பக்தர் என்னைப் பார்த்து ‘சகல லோக ஜீவ ராசிகளையும் நீங்கள் காப்பாற்றுபவர் இல்லையா’ என்று என்னை வர்ணித்தத்தைக் கேட்டேன். எனக்கு புன்முறுவல் வந்தது.அவ்வளவு தான்.வேறு ஒன்றும் இல்லே பார்வதி” என்று பதில் சொல்லி விட்டு இன்னும் புன்முறுவல் செய்துக் கொண்டு இருந்தார்.பார்வதி ஒரு பெண் இல்லையா.பரமன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு பொறாமையாக இருந்தது.உடனே தன் மனதில் ‘அப்படியா சமாச்சாரம். இது உண்மையாக இருக்குமா. நாம பரமனை சோதனைப் பண்ணிப் பார்க்க வேண்டும்’ என்று எண்ணினாள் பார்வதி.

உடனே பூலோகத்தைப் பார்த்தாள்.ஒரு ஏழை பிராமணர் தன் கிராமத்தில் இருப்பவர்கள் எல் லாம் ரொம்ப ஏழையாக இருந்ததால்,நான்கு வருடங்களாக தினமும் ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத் தில் இருந்த ஒரு சின்ன பணக்கார ஊருக்கு காட்டு வழியே நடந்துப் போய் பிச்சை வாங்கிக் கொண்டு வந்து தன் வயதான அப்பா, அம்மா, மனைவி, அவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளையும் காப் பாற்றி வந்தார்.அந்த பிராமணைர் தினமும் அவர் போன ஒரே வழியிலேயே போய் பிச்சை வாங்கிக் கொண்டு வந்து இருந்தார்.இதை பார்வதி தவறாமல் கவனித்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் பார்வதி பரமனைப் பார்த்து “நாதா,அந்த அந்தணரை பாருங்க.அவர் ரொம்ப ஏழை இல்லையா.அவர் தினமும் பத்து கிலோ மீட்டர் காட்டு வழியே அடுத்த ஊருக்கு நடந்து போய் பிச்சை வாங்கிக் கொண்டு தன் வயதான அப்பா,அம்மா,மனைவி,அவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தை களையும் காப்பாற்றி வருகிறார்.நீங்கள் அவர் தினமும் செல்லும் வழியிலே ஒரு தங்க காசு மூட்டையை வையுங்கள்.அந்த அந்தணர் அந்த தங்க காசு மூட்டையை எடுத்துக் கொண்டு,அந்த பணத்தில் தன் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் காப்பாற்றி வருவாரே.இருபது கிலோ மீட்டர் தினமும் நடந்து போய் விச்சை கேட்டு வர வேண்டாமே.இதை நீங்கள் எனக்காக செய்யக் கூடாதா” என்று கேட்டள்.

உடனே பரமன் ஒரு புன்முறுவல் செய்துக் கொண்டு பார்வதியைப் பார்த்து “பார்வதி, இந்த ஜென்மத்திலே அந்த அந்தணர் இப்படி தினமும் இருபது கிலோ மீட்டர் நடந்துப் போய் பிச்சை எடுத் து வந்து தான் அவர் குடும்பத்தை காப்பாற்றி வர வேண்டும் என்பது அவர் “தலை எழுத்து”.அதை யாராலேயும் மாற்ற முடியாது.நான் ஒரு தங்க காசு மூட்டையை அவர் போகும் வழியிலே வைத்தாலு ம்,அந்த தங்க காசு மூட்டை அவர் கைக்குக் கிடைக்காது.வேறே யாருக்கோ தான் கிடைக்கும்”என்று சொன்னார்.பார்வதிக்கு பரமன் சொன்னதில் நம்பிக்கை ஏற்படவில்லை.

உடனே பார்வதி “நாதா,நீங்கள் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.நீங்கள் அந்த அந்தணர் தினமும் நடந்து போகும் வழியிலே அந்த தங்க காசு மூட்டையை வையுங்கள்.அவர் நிச்சியமாக அத்த தங்க காசு மூட்டையை எடுத்துக் கொள்ளுவார்” என்று சொல்லி அடம் பிடித்தாள்.

பரமன் நிதானமாக மறுபடியும் “பார்வதி,நீ சொல்வது போல நான் அந்த அந்தணர் தினமும் நடந்து போகும் வழியிலே அந்த தங்க காசு மூட்டையை வைத்தாலும்,அந்த தங்க காசு மூட்டை அவர் கைக்குக் கிடைக்காது.வீணாக பிடிவாதம் பிடிக்காதே” என்று சொன்னார்.ஆனால் பார்வதி விடாமல் பிடிவாதம் பிடித்து வரவே,பரமன் வேறு வழி இல்லாமல் அந்த அந்தணர் தினமும் நடந்து செல்லும் வழியிலே ஒரு தங்க காசு மூட்டை வைத்து விட்டு பார்வதியைப் பார்த்து ”இப்போது சந்தோஷமா பார்வதி” என்று சொல்லி விட்டு ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தார்.

அன்று பார்த்து அந்த அந்தணர் ‘நாம நாலு வருஷமா இதே வழியிலே நடந்து போய் வறோமே, அந்த ஊருக்கு வேறே ஏதாவது ஒரு குறுக்கு வழி இருக்காப் பாப்போமே.இருந்தா அந்த வழியா நாம போய் சீக்கிரமா பிச்சை எடுத்துக் கொண்டு ஆத்துக்கு வரலாமே’ என்று யோஜனைப் பண்ணீக் கொ ண்டே வேறே ஒரு வழியிலே நடந்து போய்க் கொண்டு இருந்தார்.பரமன் வைத்த தங்க காசு மூட்டை அந்த காட்டு வழியாக வந்த இரண்டு திருடர்கள் கண்ணிலே பட்டு,அதை அவர்கள் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு கடவுளுக்கு நன்றி சொன்னார்கள்.பரமன் சொன்னது போல அந்த தங்க காசு மூட்டை அந்த அந்தணர் கையிலே கிடைக்கவே இல்லை.

இதைப் பார்த்த பார்வதிக்கு வெட்கமாக இருந்தது.

தன் மனதில் ‘இருக்கட்டும்.இந்த சோதனையில் அவர் வென்று விட்டார்.நாம் இத்தோடு விடக் கூடாது.வேறே ஏதாவது ஒரு சோதனை செய்து அவரை தோற்கடிக்க வேண்டும்’ என்று எண்ணி யோஜனை பண்ணி வந்தாள்.அவளுக்கு ஒரு நல்ல யோஜனை பிறந்தது.அதை நிறைவேற்ற நினை த்து பார்வதி அடுத்த நாள் ஒரு சின்ன டப்பாவை எடுத்து அதி காலையிலேயே ஒரு கட்டெறும்பைப் பிடித்து,அந்த டப்பாவிலே போட்டு,காற்று கூட போக முடியாமல் அந்த டப்பாவை இறுக்க மூடினாள். அந்த டப்பாவை தன் முந்தாணையிலே வெளியே தொ¢யாமல் மறைத்து வைத்துக் கொண்டாள்.

அன்று இரவு மணி ஏழு இருக்கும்.பார்வதி ‘இந்த சோதனையிலே அவர் நிச்சியமாக தோற்கப் போகிறார்’ என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே “நாதா,இன்று நீங்கள் எல்லா ஜீவ ராசிகளுக்கும் உணவு கொடுத்து காப்பாற்றி இருக்கிறீர்களா.இல்லை சில ஜீவ ராசிகளை மறந்து விட்டு இருக்கிறீர்களா” என்று கிண்டலாகக் கேட்டாள்.

பரமன் யோஜனைப் பண்ணி விட்டு “நான் எல்லா ஜீவ ராசிகளுக்கும் உணவுக் கொடுத்து இருக்கேனே.ஒரு ஜீவ ராசியும் பட்டினையாக இல்லையே” என்று சொன்னார்.உடனே பார்வதி “நாதா, நன்றாக யோஜனைப் பண்ணிப் பாருங்க.ஒரு ஜீவ ராசியும் பட்டினாயாக இல்லையா”என்று மறுபடியும் கேட்டள் பார்வதி.

“நான் நன்றாக யோஜனைப் பண்ணி விட்டேன் பார்வதி.ஒரு ஜீவ ராசியும் இன்று பட்டினியாக இல்லையே”என்று தீர்மானமாக சொன்னார்.ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்வதி “இல்லை நாதா,ஒரு கட் டெறும்பு இன்று பட்டினியாக இருக்கே.இதோ பாருங்க” என்று சொல்லி விட்டு தன் புடவை முந்தாணையிலே இருந்த டப்பாபை எடுத்து மூடியைத் திறந்தாள் பார்வதி.

அவளுக்கு ஆச்சரியம் தாங்க வில்லை.அந்த கட்டெறும்பு பக்கத்திலே மூன்று முழு அரிசியும், அதன் வாயிலே ஒரு பாதி அரிசியும் இருந்தது.

இந்த தடவையும் தோற்றுப் போனதால் பார்வதி வெட்கப் பட்டுக் கொண்டே “என்னை மன்னித்து அருள வேண்டும் நாதா.நான் உங்களை இரண்டு தடவை சோதித்துப் பார்த்து தோற்றுப் போய் விட்டேன்”என்று சொன்னதும் பரமன் பார்வதியை அணைத்துக் கொண்டு “பார்வதி,நீ என்னில் சரி பாதி இல்லையா.நீ தோற்று இருந்தால்,நானும் தோற்ற மாதிரி தானே.நான் ஜெயித்து இருந்தால், நீயும் ஜெயித்த மாதிரி தானே.இதனால் நீ தோற்கவும் இல்லை,ஜெயிக்கவும் இல்லை.இருவரும் தோற் றோம்.இருவரும் ஜெயித்தோம்” என்று சொன்னதும் பார்வதி பரமனின் பெருந்தனமை எண்ணி மகிழ்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *