நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!

 

ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போய், இறுதியில் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்.

மகாவிஷ்ணு நாரதரிடம், ”பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீயும் எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். சரி, உன் துயர் நீங்குவதற்கு ரிஷிகேசம் என்ற தலத்துக்குச் செல். துக்கத்தில் இருந்து நீ மீள்வாய்” என்று அறிவுரை கூறினார்.

அவ்வாறே நாரதரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டார். வழியில் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. அந்த மீனிடம், ”என்ன மீனே, நலமா?” என்று கேட்டார்.

”நாரத பகவானே! தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன்” என்றது மீன் சோகமாக.

இதைக் கேட்ட நாரதர், ”என்ன உளறுகிறாய், முட்டாள் மீனே! தண்ணீரில் இருந்து கொண்டே தாகத்தால் துன்பப்படுகிறாயா?” என்றார்.

”ஆனந்த அமிர்த வடிவான விஷ்ணு பகவானின் அருகிலேயே இருந்து கொண்டு தாங்கள் துன்பப்படுவதைவிட இது ஒன்றும் வியப்பில்லையே!” என்றது மீன்.

பகவானின் ஸாந்நித்தியத்தை தான் மறந்ததே தன்னுடைய துயருக்குக் காரணம் என்பதை நாரதர் உணர்ந்த மறுகணமே அந்த மீன், மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தது.

தன்னைச் சரணடைந்தவர்களைக் காத்து அருள்பாலிக்கும் கருணைக் கடலான பகவானின் தரிசனத்தால் நாரதர் துக்கத்தில் இருந்து விடுபட்டார்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.

-ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி (ஏப்ரல் 2009) 

தொடர்புடைய சிறுகதைகள்
தண்டனை எதற்கு?
அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ...
மேலும் கதையை படிக்க...
செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?
மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர். மூலே சாஸ்திரியின் நண்பர் புட்டி சாகேப். நாக்பூரில் வசித்து வந்த இவர், ஷீர்டி சாயிபாபாவின் பக்தர். ஒரு முறை புட்டி சாகேப்பை ...
மேலும் கதையை படிக்க...
அது 1960 ம் வருடம் என்று நினைவு... கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார். அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திர மஹிமை’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) குடிலுக்கு வெளியே மழை முற்றிலுமாக நின்றிருந்தது. அந்த வயதான பெண்மணி தன் கைப்பையில் இருந்து தோசை போன்ற பெரிய மொபைலை எடுத்து குதிரை வண்டிக்காரனை வரச்சொல்லி போன் செய்தாள். “அவன் ...
மேலும் கதையை படிக்க...
”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!” கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஒலிகள் அடுத்த சில நொடிகளுக்கு நிசப்தமாகி மீண்டபோது அவை தாறுமாறான கீச்கீச்சுகளுடன் சிறகடிக்கும் படபடப்பொலிகளாக மாறியிருந்தன. பச்சை போர்த்த மர ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் ...
மேலும் கதையை படிக்க...
மார்கண்டேய புராணம் ஞான பட்சிகளின் கதையோடு ஆரம்பமாகிறது. மகாபாரதக் கதை முழுவதும் வியாச பகவானிடம் கேட்டறிந்த ஜைமினி முனிவருக்கு சில சந்தேகங்கள் மீதமிருந்தன. அவற்றை வியாசரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினாலும் அதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு முறை ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா!! ஐயா!!" என்ற மாட்டுக்காரச் சிறுவனின் குரல் கேட்டவர் வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தார், அவன் "உங்கள தேடி பெரிய பெரிய ஐயமாருங்களாம் வராங்க" என்றான் "என்னது!! ஐயமாருங்களா?? என்ன தேடியா, என்னடா சொல்ற?" என்றபடி அவர் வாசலில் வந்து ...
மேலும் கதையை படிக்க...
சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!
ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச விரும்பினார் எமதர்மன். ராமனும் அனுமதியளித்தார். இதையடுத்து, முனிவர் வேடத்தில் அயோத்திக்கு வந்த எமதர்மன் அரண்மனைக்குச் சென்று ராமனை சந்தித்தார்: ''மகா பிரபு, தங்களது ...
மேலும் கதையை படிக்க...
புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் ஆனந்தமாக பயணிப்பதால் அவர்களுக்கு தலைச்சுமையும் தெரியவில்லை, நேற்று இரவு அவர்களது பயணக்குழு தங்கியிருந்த இடம் காடுசார்ந்த முல்லை நிலம் ஒன்றின் ...
மேலும் கதையை படிக்க...
தண்டனை எதற்கு?
செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?
பிரமிப்புகள்
காயத்ரி அஷரங்கள்
அமுதம்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை
ஞானப் பறவைகளின் கதை
புலியூரும் புளியூரும்
சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!
ஏது காரணம்!? ஏது காவல்!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)