ஏழை மற்றும் எளியவர்களிடம் கருணை கொண்டு தான& தர்மங்கள் வழங்குவதில் பேர் பெற்றவர் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர். இதனால் அவர் மனதில், ‘தர்மம் செய்வதில் தனக்கு இணை யாருமே இல்லை!’ என்கிற கர்வம் படியத் தொடங்கியது. தருமரின் உள்ளத்தில் படிந்த இந்தக் கர்வத்தைப் போக்கத் திருவுளம் பூண்டார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
தருமரின் இருப்பிடத்துக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணன், தருமருடன் உரையாடியவாறே வெளியே நடந்தார். இருவரும் பாதாள லோகத்தை அடைந்தனர். பாதாள லோகத்தை பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்ரவர்த்தி ஆண்டு வந்தான். இவனும் தான& தர்மங்களில் அதிக நாட்டம் உள்ளவன்.
பாதாள லோகத்தின் முக்கியமான தெருக்கள் வழியாக கிருஷ்ணரும் தருமரும் நடந்து கொண்டிருந்தனர். நகரின் செல்வச் செழிப்பையும், வனப்பையும் கண்டு பிரமித்த தருமருக்கு ஒரு கட்டத்தில் தாகம் ஏற்பட்டது. அப்போது அருகில் வீடு ஒன்று தென்பட்டதால், தருமர் அந்த வீட்டுப் பெண்மணியிடம் தண்ணீர் கேட்டார்.
மறு கணம் அவள் தங்கக் கிண்ணம் ஒன்றில் குடிநீர் எடுத்து வந்து பவ்யமாகக் கொடுத்தாள். நீர் அருந்திய தருமர், பெண்மணியிடம் தங்கக் கிண்ணத்தை நீட்டி, ‘‘மிக்க நன்றி அம்மணி! இந்தக் கிண்ணத்தை பத்திரமாக எடுத்து வையுங்கள்!’’ என்றார்.
‘‘ஐயா… தாங்கள் எங்கள் ராஜ்யத்துக்கு இப்போதுதான் வருகிறீர்கள் போலிருக்கிறது. எங்கள் ராஜ்யத்தில் ஒரு தடவை உபயோகித்த பொருள் _ அது தங்கமாகவே இருந்தாலும் வீசி எறிந்து விடுவோம். எனவே, தாங்களே அந்தத் தங்கக் கிண்ணத்தை வீசி எறிந்து விட்டுச் செல்லுங்கள்!’’ என்றாள் நிதானமாக.
மகாபலிச் சக்ரவர்த்தி ஆளும் நாட்டின் செல்வச் செழிப்பையும், வாழ்க்கைத் தரத்தையும் எண்ணி மிகவும் வியப்பு அடைந்தார் தருமர். மீண்டும் பேசியவாறே ஸ்ரீகிருஷ்ணனும் தருமரும் மகாபலியின் அரண்மனையை அடைந்தனர். பொன்னால் ஆன மணிகள் பதிக்கப்பட்ட அரியணையில் மகாபலி வீற்றிருந்தான். அரண்மனைக்குள் நுழைந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் தருமரையும் முகம் மலர வரவேற்றான் மகாபலி.
‘‘மகாபலி… என்னுடன் நிற்கும் இவர் தருமபுத்திரர். குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு பேருக்காவது தவறாமல் அன்னதானம் செய்வது இவர் வழக்கம்!’’ என்று ஸ்ரீகிருஷ்ணன், தருமரை அறிமுகப்படுத்தினார்.
அவ்வளவுதான்! மகாபலியின் முகம் இறுகியது. ‘‘போதும்! இவரைப் பற்றி மேற்கொண்டு எந்த ஒரு செய்தியையும் என்னிடம் கூற வேண்டாம்! நிறுத்துங்கள்’’ என்று கோபமான குரலில் சொல்லி, தன் இரு கைகளாலும் செவிகளைப் பொத்திக் கொண்டான் மகாபலி.
‘‘மகாபலி, ஏன் இப்படிக் கூறுகிறாய்?’’ என்று பதற்றம் இல்லாமல் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவர் அறியாததா என்ன?!
‘‘மதுசூதனா! எனது நாட்டில் கொள்வார் இல்லாமையால் கொடுப்பாரில்லை என்பது தாங்கள் அறியாததா? இங்கு தானம் பெற்று வாழும் நிலையில் எவரும் இல்லை. இவர் நாள்தோறும் ஐந்நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்றால், இவரது ராஜ்யத்தில் இன்னும் ஏழைகள் இருக்கிறார்கள் என்றல்லவா அர்த்தம்! இதிலிருந்தே இவர் அரசாட்சி செய்யும் லட்சணம் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒருவரைப் பார்க்கவோ, இவரைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ளவோ நான் விரும்பவில்லை!. இந்தக் கணமே இவரை இங்கிருந்து புறப்படச் சொல்லுங்கள்.’’
மகாபலியின் பேச்சு பொட்டிலறைந்தாற் போலிருந்தது தருமருக்கு.
அவர் மனதில் கர்வம் விஸ்வரூபம் எடுக்குமுன் அதை நீக்கிய திருப்தியுடன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அங்கிருந்து கிளம்பினார். மனத் தெளிவுடன் அவரைப் பின்தொடர்ந்தார் தருமர்.
- மே 2007
தொடர்புடைய சிறுகதைகள்
சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதன் பாடல்கள், எட்டு அடி கொண்டதால், ‘அஷ்ட பதி’ என்று வழங்கப்படுகிறது.
கீதகோவிந்தத்தில் ‘வதஸியதி’ எனத் துவங்கும் பாடலை இறைவனே ...
மேலும் கதையை படிக்க...
முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு, துர்வாச முனிவர் வருகை தந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர் முத்கலரின் குடும்பத்தார்.
துர்வாசரிடம், ''ஸ்வாமி, தாங்கள் இன்று இங்கு தங்கி, உணவருந்திச் ...
மேலும் கதையை படிக்க...
கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள்.
‘‘மகனே... முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் ...
மேலும் கதையை படிக்க...
மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம். குதூகலத்தில் பாண்டவர்கள் திளைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவின் முகத்தில் மட்டும் சோகத்தின் சாயல். பாண்டவர்கள் திகைத்தனர். அர்ஜுனன் அவரை ...
மேலும் கதையை படிக்க...
"இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சுட்டு டம்பளரை குடுங்கோ .மளமளன்னு அலம்பி வெச்சுட்டு கிளம்பணும் .ஏற்கெனவே, சுமி ரெண்டு தடவை ஃபோன் பண்ணி 'இன்னும் கிளம்பலையா'ன்னு கேட்டுட்டா..ஆமா"
பரபரப்புடன் பேசிய பானுமதியை கிண்டலுடன் ஏறிட்டார் பரசுராமன்.
"சரிதான்.இதோ, இங்கே இருக்கற வேளச்சேரிக்கு போக இத்தனை ஆர்ப்பாட்டமா ...
மேலும் கதையை படிக்க...
துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்?
எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ 'குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் ...
மேலும் கதையை படிக்க...
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
‘‘துரோணாச்சார்யரே... எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்.
‘‘கேளுங்கள் மன்னா!’’
‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார்.
‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர்.
‘‘தாங்கள் நல்லதோர் ...
மேலும் கதையை படிக்க...
மகன் வேதநிதியை நினைக்க நினைக்க பண்டிதருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு மகன்!' - மனம் வேதனையில் விம்ம... வீடு நோக்கி தளர் நடை போட்டார்.
பண்டிதரின் ஒரே மகன் வேதநிதி. பெற்றோரை மதிக்காமல், கற்ற ...
மேலும் கதையை படிக்க...
சீடனுக்கு வந்த சந்தேகம்
பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத் தோரணங்கள்... வாழைப் பந்தல்கள்... வண்ண அலங்காரங்கள் என கோலாகலமாகக் காட்சியளித்தது. குறுநில மன்னர்கள், மாமுனிவர்கள், கலைஞர்கள் மற்றும் சாஸ்திர மேதைகள் பலரும் ...
மேலும் கதையை படிக்க...
யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர்.
அவர்களின் தலைவன், ''முனிவரே... கொள்ளைக்காரர்கள் சிலர், இந்த வழியாக வந்தார்களா?'' என்று கேட்டான்.
முனிவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எரிச்சலுற்ற படைத் தலைவன், ''முனிவரே, ...
மேலும் கதையை படிக்க...
அம்பலப்படுத்த வந்த அந்தணர்!
‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’
உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!
குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
கயவன் வேதநிதி மோட்சம் பெற்ற கதை!
கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?