செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?

 

மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர். மூலே சாஸ்திரியின் நண்பர் புட்டி சாகேப். நாக்பூரில் வசித்து வந்த இவர், ஷீர்டி சாயிபாபாவின் பக்தர்.

ஒரு முறை புட்டி சாகேப்பை சந்திக்க விரும்பினார் மூலே சாஸ்திரி. அவர் ஷீர்டிக்குச் சென்றிருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்றார்.

பாபாஅங்கு, சாயிபாபாவை தரிசிக்க துவாரகா மாயீயிக்குக் (பாபா தங்கியிருந்த மசூதியையே துவாரகாமாயீ என்பர்) கிளம்பிக் கொண்டிருந்தார் புட்டி சாகேப். அவருடன் சேர்ந்து துவாரகா மாயீயிக்குச் சென்றார் மூலே சாஸ்திரி. அங்கு சாயிபாபா, தன்னை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பழங்களை விநியோகித்துக் கொண்டி ருந்தார். அவரின் கைரேகையைப் பார்த்துப் பலன் அறிய விரும்பினார் மூலே சாஸ்திரி. ஆனால், பாபா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வெளியே ஓரிடத் தில் அமர்ந்தார் சாஸ்திரி. புட்டி சாகேப் மட்டும் துவாரகாமாயீயின் உள்ளே சென்று பாபாவை தரிசித்து வந்தார். பிறகு, நண்பர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர்.

மறு நாள் காலை. வழக்கப்படி லெண்டித் தோட்டத்துக்கு உலாவப் புறப்பட்ட ஸ்ரீசாயிபாபா, மசூதி அன்பர்களிடம், ‘‘கொஞ்சம் ‘ஜெரு’ எடுத்து வையுங்கள். நான் இன்று குங்குமப்பூ நிற ஆடையை அணிய நினைத்துள்ளேன்!’’ என்றார். ‘ஜெரு’ என்பது, வெள்ளைத் துணியை செந்நிறமாக்கும் சிவப்பு மண்.

‘பாபா, ஏன் செந்நிற ஆடை அணிய வேண்டும்?’ என்று அன்பர்களுக்குக் குழப்பம். எனினும் அவரது உத்தரவை அப்படியே நிறைவேற்றினர்.

மதிய ஆரத்தி நேரம். புட்டி சாகேப்பை அழைத்த சாயி பாபா, ‘‘அந்த நாசிக் பிராமணனிடம் இருந்து தட்சணை வாங்கி வா!’’ என்று பணித்தார்.

உடனே விடுதிக்கு விரைந்த புட்டி சாகேப், தன் நண்பர் மூலே சாஸ்திரியிடம் சாயிபாபாவின் விருப்பத்தைக் கூறினார்.

‘சாயிபாபா போன்ற ஞானி, அக்னி ஹோத்ரி பிராமணனான என்னிடம் தட்சணை வாங்கி வரச் சொல்வது ஏன்?’ என்று குழம்பினார் மூலே சாஸ்திரி. எனினும், நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க அவருடன் துவாரகாமாயீயிக்குச் சென்றார்.

அதன் வாயிலை அடைந்ததும், ‘அக்னி ஹோத்ரத்தைச் சார்ந்த& புனிதமான கர்மானுஷ்டானங்களைச் செய்யும் நான், இந்த மசூதிக்குள் சென்று பாபாவை எப்படிச் சந்திப்பது?’ என்று யோசித்த மூலே சாஸ்திரி, நண்பர் புட்டி சாகேப்பின் ஆலோசனைப்படி அங்கிருந்தபடியே தான் வைத்திருந்த மலர்களை பாபாவை நோக்கி வீசினார்.

மறுகணம் அவர் ஓர் அற்புதத்தை உணர்ந்தார். உள்ளே வீற்றிருந்த ஸ்ரீசாயிபாபா, மூலே சாஸ்திரியின் குருவான ‘கோலப் ஸ்வாமி’யாக செந்நிற ஆடையுடன் காட்சி தந்தார் (கோலப் ஸ்வாமிகள் எப்போதும் காவி உடையே அணிந்திருப்பார்).

‘இறந்து போன ஸ்ரீகோலப் ஸ்வாமி, இங்கு எப்படி..?’ என வியந்த மூலே சாஸ்திரி, ஓடோடிச் சென்று குருவின் பாதக் கமலங்களில் விழுந்து நமஸ்கரித்தார். ஆரத் திப் பாடல் துவங்கியது. மூலே சாஸ்திரி தன் குருநாதரின் நாமப் போற்றிப் பாடல்களைப் பெருங்குரலெடுத்துப் பாடினார். ஆனந்தக் கூத்தாடினார். ஆரத்தி முடிந்தது. மீண்டும் குருவின் கால்களில் விழுந்து வணங்கிய மூலே சாஸ்திரி நிமிர்ந்து பார்த்தார்.

இப்போது குருநாதர் இருந்த இடத்தில், ஸ்ரீசாயிபாபா தம் இரு கரங்களையும் நீட்டி தட்சணை கேட்பதைக் கண்டார். பாபாவின் பேரானந்தமான ரூபத்தையும் ‘எல்லாம் நானே!’ என்ற சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரது சக்தியையும் உணர்ந்த மூலே சாஸ்திரி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். தான் கொண்டு வந்த தட்சணையை கோலப் ஸ்வாமிகளின் கைகளில்… இல்லை இல்லை… ஸ்ரீசாயிபாபாவின் கரங்களில் சமர்ப்பித்தார் மூலே சாஸ்திரி.

இதைக் கண்ட துவாரகாமாயீ அன்பர்கள் மெய்சிலிர்த்தனர். காலையில், ‘ஜெரு எடுத்து வையுங்கள்!’ என்று ஸ்ரீசாயிபாபா கூறியதற் கான பொருள், இப்போது அவர்களுக்குப் புரிந்தது.

- நந்தி அடிகள், சென்னை-4 (டிசம்பர் 2007) 

தொடர்புடைய சிறுகதைகள்
பாகம் நான்கு | பாகம் ஐந்து இவ்விதமாக கங்கை கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த நாணல் புதர்களுக்கு மத்தியில் குமரன் ஜனனம் நிகழ்ந்தது . கங்காதேவி குமாரனை நன்கு கவனித்து வளர்த்து வருகிறாள். ஒரு சமயம் சிவன் பார்வதியுடன் ஆகாய மார்க்கமாக பயணித்துக் கொண்டிருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், "இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாகக் கடவர்!"என்று சபித்தார். ...
மேலும் கதையை படிக்க...
சீதையாக வந்த பார்வதிதேவி!
பூலோக சஞ்சாரம் செய்யப் புறப் பட்டார் சிவனார். உடன் வருமாறு தேவியையும் அழைத்தார். ''ஸ்வாமி, தாங்கள் உபதேசித்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் புறப்படலாமே?!'' என்றாள் தேவி. இதைக் கேட்டதும், ''தேவி... நம்மைத் துதிக்கும் அடியவர்களுக்கு அருள்வதில் தாமதம் கூடாது. ...
மேலும் கதையை படிக்க...
வினைப்பயன் காரணமாக நரக லோகத்தில் கஷ்டப்படுபவர்களையும், துர்மரணம் ஏற்பட்டு முக்தி அடையாமல் அல்லாடுபவர்களையும் கடைத்தேற்ற பகவத் கீதையின் கர்ம யோகம் துணை புரியும். இந்தத் தகவலைச் சொல்லும் ஒரு கதை பத்ம புராணத்தில் உள்ளது. அந்தக் கதை இதுதான்: ஜடன் எனும் கௌசிக ...
மேலும் கதையை படிக்க...
ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?
சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான். ஒரு முறை, பிரம்மலோகம் சென்றிருந்தான் மகாபிஷக். பிரம்மனின் சபையில் தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கங்காதேவியும் இருந்தாள். அவளது மகிமையை எல்லோருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ராவணனைக் கொன்ற மாமனார்!
சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர் அபூர்வ கர்ண பரம்பரைக் கதை: ராவணனின் தாயார் சோகமாக அமர்ந்திருந்தாள். அவள் தினமும் வழிபடும் ஆத்மலிங்கம், ஆதிசேஷனின் சுவாசம் வழியே பாதாள ...
மேலும் கதையை படிக்க...
(கடவுளைக் காண முடியுமா? ஒரு ஆத்மார்த்தமான தேடலைப் பற்றிய கதை) நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப் பணிகள் முடிந்து விட்டன. மக்கள் திரளாக வர இன்னும் சில மணி நேரங்களாவது ஆகும் என்று மனதில் கணக்குப் போட்ட ஜான் டேவிட் ...
மேலும் கதையை படிக்க...
மன்னிக்கும் மனப்பாங்கு
திருடர்களுக்கு இரங்கிய ஜெயதேவர்! ‘கீதகோவிந்தம்’ என்றதும் நமக்கு, சிறந்த பக்தரான ஸ்ரீஜெயதேவரின் நினைவு வரும். அவர் ஒரு முறை தீர்த்த யாத்திரை புறப்பட்டார். வழியில் அரசர் ஒருவர், ஜெயதேவரை அரண்மனைக்கு வரவழைத்து மரியாதை கள் செய்து நிறையப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். ...
மேலும் கதையை படிக்க...
சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
''அம்மா... சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை. அதோ மேற்கில் மலை மீது இருக்கும் முருகப் பெருமான்தான் உன் குழந்தை. இன்றே அவன் சந்நிதிக்குச் செல். இனி, அவனையும் ...
மேலும் கதையை படிக்க...
பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின் புதல்விக்கே இந்த கதி ஏற்பட்டது. அவள் எப்படி அதனைச் சமாளித்தாள்? இதற்கு நம் புராணங்கள் கூறும் விமோசனம் என்ன? பார்ப்போமா? சிவ -பார்வதியின் ...
மேலும் கதையை படிக்க...
குமார சம்பவம்
ராவணன் ஏன் அசுரன்?
சீதையாக வந்த பார்வதிதேவி!
கடைத்தேற்ற உதவும் கர்ம யோகம்!
ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?
ராவணனைக் கொன்ற மாமனார்!
கண்டேன் கர்த்தரை!
மன்னிக்கும் மனப்பாங்கு
சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)