சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!

 

ராமபிரானின் அவதார காலம் நிறைவு பெற்று, அவர் வைகுண்டத்துக்குத் திரும்பும் வேளை வந்தது. எனவே, ராமனை தனிமையில் சந்தித்து பேச விரும்பினார் எமதர்மன். ராமனும் அனுமதியளித்தார்.

இதையடுத்து, முனிவர் வேடத்தில் அயோத்திக்கு

சிரச்சேதம் செய்யச் சொன்ன எமன்!வந்த எமதர்மன் அரண்மனைக்குச் சென்று ராமனை சந்தித்தார்: ”மகா பிரபு, தங்களது அவதாரம் குறித்து ரகசியமாகப் பேச விரும்புகிறேன். எனவே, தங்களைத் தவிர வேறு எவரும் இங்கு இருக்கக் கூடாது. ஒரு வேளை… நாம் பேசும்போது எவரேனும் உள்ளே நுழைந்தால், அவர்களை தாங்கள் சிரச்சேதம் செய்ய வேண்டும்!” என்றார்.

அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட ராமன், ”எவரும் உள்ளே வராதபடி சற்று நேரம் வாசலில் இரு” என்று தன் தம்பி லட்சுமணனைப் பணித்தார்.

அதன்படி, வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்தான் லட்சுமணன். சற்று நேரத்தில், அங்கு வந்து சேர்ந்தார் துர்வாச முனிவர். லட்சுமணன் அவரை வணங்கி வரவேற்றான்.

அவனிடம், ”ராமச்சந்திரனை உடனே பார்க்க வேண்டும்!”என்றார் துர்வாசர்.

லட்சுமணன் தர்ம சங்கடத்தில் நெளிந்தான்! ‘இப்போது, உள்ளே அனுமதித்தால், துர்வாசர் சிரச் சேதம் செய்யப்படுவாரே’ என்று யோசித்த லட்சுமணன், அவரை ஆசனத்தில் அமரச் சொன்னான்.

அவ்வளவுதான்! துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது. ”நான் ஓய்வு எடுப்பதற்காக இங்கு வரவில்லை. ராமனை இப்போதே பார்க்க வேண்டும். உள்ளே அனுமதிக்க முடியுமா? முடியாதா?” என்று ஆவேசத் துடன் கேட்டார்.

”ஸ்வாமி! உள்ளே… முக்கியமான ஒருவருடன் தேவ ரகசியம் பேசிக் கொண்டிருக்கிறார் ராமர். எப்போதும் அவருடனேயே இருக்கும் நானே வெளியில் நிற்கிறேன் என்றால் பாருங்களேன்!” என்று துர்வாசரின் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பேசினான் லட்சுமணன்.

ஆனாலும் துர்வாசரது கோபம் தணியவில்லை.

”என்னை விடவும் முக்கியமான வரா… யார் அவன்?! நான் இப்போதே ராமனைப் பார்த்தாக வேண்டும். உள்ளே செல்ல அனுமதிக்காவிட்டால் சபித்து விடுவேன். அயோத்தி நகரமே பற்றி எரியும்!” என்றார்.

வேறு வழியில்லாத நிலையில், துர்வாசர் வந்திருக்கும் தகவலைத் தெரிவிக்க ராமனின் அறைக்குள் நுழைந்தான் லட்சுமணன். அவனைக் கண்டதும் ராமனும், எமதர்மனும் தங்கள் உரையாடலை நிறுத்தினர்.

ராமனை ஏறிட்ட எமதர்மன், ”ஸ்வாமி, நீங்கள் வாக்கு தவறாத உத்தமர். லட்சுமணனால் நமது உரையாடல் தடைபட்டுவிட்டது… வருகிறேன்!” என்று கிளம்பிச் சென்றார்.

‘உயிருக்குயிரான தம்பியை சிரச்சேதம் செய்ய வேண்டுமா?’ என கலங்கினார் ராமன். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், துர்வாச முனிவரையும் சந்தித்துப் பேசி, அவரை வழியனுப்பி வைத்தார். அவர் சென்றதும் தம்பியை ஏறிட்ட ராமன் கண்ணீர் வடித்தார்.

”எப்போதும் என்னோடு இருக்கும் உன்னை, நானே கொல்வதா? அது என்னால் இயலாத காரியம். அதே நேரம்… வாக்குத் தவறுவதும் அதர்மம் ஆயிற்றே!” என்று புலம்பினார்.

செய்வதறியாமல் திகைத்த ராமன், குலகுருவான வசிஷ்டர் மற்றும் அமைச்சர்களை வரவழைத்து நடந்ததை விவரித்தார். தக்கதொரு தீர்வு சொல்லும்படி அவர்களிடம் வேண்டினார்.

ராமனை நன்கறிந்த வசிஷ்டர் பேச ஆரம்பித்தார்: ”ராமா, வருந்தாதே. எந்த பாதகமும் இல்லாத ஒரு வழி சொல்கிறேன் கேள்! நல்லவர்கள், நமது அன்புக்கு உரியவர்கள் மற்றும் உடன் பிறந்தோர் ஆகியோரைப் புறக்கணிப்பது, அவர்களைக் கொல்வதற்குச் சமம். எனவே, நீ உன்னிடமிருந்து லட்சுமணனை விலக்கி விடு!” என்று அறிவுறுத்தினார்.

அதை ஏற்று, லட்சுமணனை நாடு கடத்துவதாக அறிவித்தார் ராமன். சகோதரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, சரயு நதிக்கரைக்குச் சென்று அங்கே தவமிருந்த லட்சுமணன் முடிவில் அந்த நதியிலேயே மூழ்கி அமரத்துவம் பெற்றான்.

பின்னர் ராமன், தனது அவதாரம் நிறைவு பெறும் வேளை வந்ததும், அதே சரயு நதியில் தன்னைச் சார்ந்தாருடன் மூழ்கி, வைகுண்டம் திரும்பினார்

(ஓர் கர்ண பரம்பரக் கதை).

- டி.ஆர். பரிமளம், திருச்சி-21 (ஆகஸ்ட் 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனார் அவர். 'அவலக் குரல்கள், அதிபயங்கர தண்டனைகள்- சித்ரவதைகள்... என்று நரகத்தின் கொடுமையைக் காணும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்தது எப்படி? ...
மேலும் கதையை படிக்க...
தர்மருக்கு பீஷ்மர் சொன்னது மகாபாரத யுத்தம் முடிந்தது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கண்டு, தர்மபுத்திரர் கதறினார். "எங்களுக்கெல்லாம் மேலானவரே! யுத்த களத்தில் உயிர் நீத்த துரியோதனன், நல்லவேளை.... இந்த நிலையில் உங்களைப் பார்க்க வில்லை. இதைக் காணும் நான்தான் பாவி. இதற்கு பதில், ...
மேலும் கதையை படிக்க...
"பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின் சிறப்பினை பல விதங்களில் நிரூபித்துள்ளது. பசுவின் பால், தயிர், நெய் சிறுநீர், சாணம் இவற்றை 'யக்ய திரவியங்களாக' உபயோகிக்கிறோம். 'பஞ்ச கவ்யம்' ...
மேலும் கதையை படிக்க...
நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!
பரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண விக்கிரகத்தை குரு பகவானிடமும், வாயு பகவானிடமும் சேர்ப்பித்தவர் உத்தவர். குரு, வாயு இருவராலும் ஸ்தாபிக்கப்பட்டதால், ‘குருவாயூர்’ என்று பெயர் பெற்றதாகப் ...
மேலும் கதையை படிக்க...
பேரழகி இந்த வார்த்தைக்கு ஏற்ற வனப்புடையவள் உலகில் ஒரே ஒருவள் தான், அவள் தான் அகலிகை. அழகு என்பது பெண்களுக்கே உரித்தான ஒன்று. பெண்ணின் ஒளிவீசும் கண்களை எந்த ஆடவனாலும் எதிர்நோக்க முடியாது. பெண் அதீத கனவுகளுடன் தான் வளர்த்தெடுக்கப்படுகிறாள். தான் ...
மேலும் கதையை படிக்க...
ராம - ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான். மகா மாயாவியான ராவணன், 'வித்யுஜ்ஜிஹ்வன்' என்ற மந்திரவாதி அரக்கனை அழைத்து சீதையின் மனதை சிதற அடிப்பதற்காக ஒரு ஆலோசனை செய்தான். அதன்படி, "அரக்கனே! ...
மேலும் கதையை படிக்க...
"சத்தியப் பிரமாணம் என்பது அளவுகோல். நான் என் வாழ்க்கைக்கு இந்த விழுமியங்களை அளவுகோலாகக் கொண்டு வாழ்வேன். இவற்றில் எதாவது ஒன்றையாவது தவறினேனானால் அந்த பாவம் என்னை தீவிரமாக பீடிக்கும்" என்றான் உத்தமன் பரதன். தான் எவற்றை அளவுகோல்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தானோ அவற்றையே ...
மேலும் கதையை படிக்க...
சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
''அம்மா... சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை. அதோ மேற்கில் மலை மீது இருக்கும் முருகப் பெருமான்தான் உன் குழந்தை. இன்றே அவன் சந்நிதிக்குச் செல். இனி, அவனையும் ...
மேலும் கதையை படிக்க...
இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை இழந்த புலவர் ஒருவர் இருந்தார். பாடல்கள் இயற்றுவதில் வல்லவரான அவரை, மக்கள் போற்றிக் கொண்டாடினர். நாளடைவில் அவரது புகழ் வேற்று நாடுகளுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!
வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம் சம்பாதித்து வந்தான். ஒரு நாள் பசியுடனும் களைப்புடனும் வனத்தில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான். இந்த மரக் கிளையில், நாடீஜங்கன் எனும் ...
மேலும் கதையை படிக்க...
தருமபுத்திரர் சொன்ன பொய்!
நல்லதுக்கும் கெட்டதுக்கும் கர்மமே காரணம்!’
பசுமாட்டு உருவில் பூமா தேவி
நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!
மோகத்தீ
சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு
பரதன் எடுத்த சபதம்
சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!
இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)